கோவை சிங்காநல்லூரில் இயங்கும் ’சாந்தி சோஷியல் சர்வீஸஸ்’ பற்றி லதானந்த்
சாதம், முருங்கை சாம்பார், ரசம், கீரைக்கூட்டு, முள்ளங்கிப் பொறியல், கோவைக்காய்ப் புளிக்குழம்பு, பாசிப்பயறு குருமா, சப்பாத்தி, ஜவ்வரிசிப் பாயாசம், தயிர் இந்த மெனு கொண்ட அன்லிமிடட் மீல்ஸ் இன்றைய தேதியில் எவ்வளவு விலை இருக்கும்? அதுவும் மிக உயர்ந்த சுகாதாரச் சூழலில், சுவையோடு வழங்கப்படும்போது? நூறு அல்லது நூற்ற்றிருபது ரூபாய் இருக்கும்தானே? வெறும் இருபதே ரூபாய்தான்! நம்புங்கள். எங்கே? கோவை சிங்காநல்லூரில் இருக்கும் சாந்தி சோஷியல் சர்வீஸ் நடத்தும் உணவகத்தில்தான்!
பெட்ரோல் விலை நள்ளிரவு முதல் அமலுக்கு நடைமுறையாகும் என்ற அறிவிப்பு வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த நாள் விடியற்காலையில் பெட்ரோல் போட்டாலும் அதிகரிக்கப்பட்ட விலையில்தானே கிடைக்கும்? ஆனால் இப்படி ஓர் அறிவிப்பைப் பார்த்திருக்கிறீர்களா?
“பழைய ஸ்டாக் இருக்கும்வரை பழைய விலையிலேயே (அதாவது விலையேற்றத்துக்கு முந்தைய குறைந்த விலையிலேயே) விற்கப்படும்.” ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? எங்கே இந்த அதிசயம்? கோவை சிங்காநல்லூரில் இருக்கும் சாந்தி சோஷியல் சர்வீஸ் பெட்ரோல் பங்கில்தான். தரமான பெட்ரோல் போடுவதுடன் தேவைப்படும் வாகனங்களுக்குக் கட்டணம் இல்லாமல் நைட்ரஜன் கேஸ் பிடித்தும் தருகிறார்கள்.
இவைமட்டும் அல்ல… இன்னும் பல ஆச்சரியங்களை உள்ளடக்கியது இந்த நிறுவனம்.
