Sunday, November 12, 2023

2023 தீபாவளி

 2023 தீபாவளி

தீபாவளி என்பதனை வட இந்தியர்கள் கொண்டாடுவது ஒரு மாதிரி. தென் இந்தியா கொண்டாடிக் களிப்பது வேறு மாதிரி. ஒரு பக்கம் பகலில் மறு பக்கம் இரவு தொடங்கும் போது அவர்கள் கொண்டாடத் தொடங்குகின்றார்கள்.  ஆன்மீகம் சார்ந்த பண்டிகை என்றாலும் இந்தியா முழுமையும் (பரம ஏழைகள், ஏழைகள், கீழ் நடுத்தர வர்க்கம், நடுத்தர வர்க்கம் உயர் நடுத்தர வர்க்கம் உயர்குடிகள்) அனைவரையும் ஒருங்கிணைப்பதும், ஒன்றாகச் சந்தைப் பொருளாதாரத்தில் கலக்க வைக்கும் ஒரே பண்டிகை தீபாவளி மட்டுமே.

பொங்கல் முதல் மற்ற பண்டிகைகள் வரை மாநிலத்திற்கு மாநிலம் வேறு படும். வியாபாரச் சந்தையின் போக்கும் வித்தியாசமாகவே இருக்கும்.  ஓணம் பண்டிகையின் தாக்கம் தமிழகத்தில் மிக மிகக் குறைவு.   ரம்ஜான், கிறிஸ்மஸ் என்றாலும் சந்தைப் பொருளாதாரத் தாக்கம் மிகக் குறைவே.

சில உதாரணங்களைத் தருகிறேன்.

1. ஐ போன் அய்யா டிம் குக் அவர்கள் தெரிவித்துள்ள கருத்தின்படி ஐ போன் இந்திய விற்பனை என்பது இதுவரையிலும் எங்கும் சாதிக்காத சாதனை. காலாண்டில் விற்ற ஐபோன் எண்ணிக்கை என்பது சாதனை ப்ரேக் என்கிறார்.  ஓர் ஐ போன் குறைவான விலை என்பது 65 000 தான்.  ஒன்றரை லட்சம் வரைக்கும் உள்ளது.  இந்தியாவில் பாதி ஜனத்தொகைக்கு ஆறு மாதம் சம்பளம்.  (உயர் நடுத்தர வர்க்கம்) (தேவை & விநியோகம்)

2. நேற்று ராஜமாணிக்கம் கிருஷ்ணா ஸ்வீட்ஸ்  கடையில் வாங்கிய மைசூர்பா வாங்கிய போது இனிப்பு வழங்கும் பையன் அண்ணா 70 பேர்களைத் திருப்பி அனுப்பி விட்டேன். இன்னும் 7 பேருக்கு பார்சல் செய்கிறேன். இருந்தால் தருவேன் என்கிறார்.  (கிலோ 1500 ரூபாய் அருகே வருகின்றது) (நடுத்தர வர்க்கம்)  (தேவை ....விநியோகம்)

இந்த இரண்டு சந்தைகளும் மனிதர்களைத் தேர்ந்தெடுக்கின்றது. அனைவருக்குமான சந்தையல்ல. விளம்பரம் தேவையில்லை. கௌரவம் என்பது கண்களுக்குத் தெரியாது கீரிடம் போன்றது. சாதிப் பெருமை போல.. என்ன பிரயோஜனம்? யாருக்கு லாபம் என்பதெல்லாம் பேச்சல்ல.வாய் வார்த்தை மூலமே பரவுகின்றது.  இந்த வருடம் ஐ போன் வாங்கினேன் என்பது தான் விளம்பரம். அடுத்து உங்க ஃபேக்டரியில் கிருஷ்ணா ஸ்விட்ஸ் பாக்கெட் கொடுத்தார்களா? குப்தா ஸ்வீட்ஸ் கொடுத்தார்கள்?

3. கல்லூரி மாணவிகள் தற்போது மீசோ ஆப் என்ற செயலியை அதிகம் பயன்படுத்துகின்றார்கள். எளிய விலை முதல் உச்சபட்ச விலை வரைக்கும் மிகச் சிறப்பாகவே பயன்படுத்துகின்றார்கள். 300 ரூபாய்க்கு நீங்கள் தரமான ரெடி மேட் சுடிதார் எடுத்துவிட முடியும்.  வீடு தேடி வந்து விடுகின்றது. வேறு எந்தச் செலவும் செய்யத் தேவையில்லை.  கீழ் நடுத்தரவர்க்கம் ரூபாய் 1500 இருந்தால் தீபாவளி கொண்டாடி விட முடிகின்றது.

இந்தச் சந்தைக்குள் எந்த வர்க்கம் வேண்டுமானாலும் நுழையலாம். அவரவர் தகுதி பொறுத்து உள்ளே நுழையலாம். வெளியே வரலாம். சிக்கனமாகப் பயன்படுத்தும் வர்க்கத்திற்குரிய அருமருந்து இது.

4. கடந்த ஒரு வாரமாகச் சாலையின் இருபுறமும் இரண்டாம் தரப் பொருட்கள் அதிகம் விற்பதைப் பார்த்தேன். அது மற்றவர்கள் பயன்படுத்தியதா? ? அல்லது உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் ரிஜெக்ட் செய்தவற்றை எடுத்துச் சரி செய்து விற்கின்றார்களா? என்பது தெரியாது.  ஒரு மழைக்கான முழு கோட் என்பது ரூபாய் 200.  அந்த கோட் போட்டுக் கொண்டு ஹிமாச்சல் பிரதேசத்திற்குக் கூடப் போகலாம்.  அந்த அளவுக்கு அதன் சிறப்பு அருமையாக உள்ளது.   மூன்று மணி நேரத்திற்குள் மொத்தமும் காலியாகிவிட்டது.

நேற்று  தெருக்கள் ஒவ்வொன்றும் மனிதக் கடலாக இருந்தது. நேற்றைய முன் தினம் மனித அலை கடலாகவே இருந்தது. அதிகாலை பத்து மணிக்கு வேலையை முடித்து விட்டு கூட்டுக்குள் வந்து விடும் பழக்கம் உள்ள எனக்குக் கடந்த இரண்டு நாளும் அதிகப்படியான ஆச்சரியம். (மாதம் பத்தாயிரம் சம்பளம் வாங்கும் மக்களுக்கான சந்தையிது)

5. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரைக்கும் அணியக்கூடிய சட்டைகள் மூன்று அளவுகளில் எந்தச் சட்டை எடுத்தாலும் ரூபாய் 100 என்பது இப்போது அதிக அளவில் பிரபல்லியமாகிக் கொண்டே வருகின்றது.  துணிக்கான தொகையும் தையல் கூலி என் இரண்டையும் சேர்த்தால் இது எப்படிச் சாத்தியம் என்றே குழப்பம் வருகின்றது.  கடைசி வர்க்கத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் இது ரேமண்ட்ஸ் போல.  ஆடைகளின் தரமும் சிறப்பாகவே உள்ளது.

இறுதியாக

இந்த வருடத் தீபாவளிக்காக உத்திரப்பிரதேசத்தில் வாரணாசியில் இருபத்தி ஐந்து லட்சம் அகல்விளக்குகள் ஏற்றும் வைபவம் நடக்கவுள்ளது.  மண் சட்டி, விளக்கு, எண்ணெய், திரி இது சார்ந்த பூஜைப் பொருட்கள் என மேலே சொன்ன வர்க்கத்தில் சேர்க்கவே முடியாத முறை சாரா தொழிலில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை இந்த நிகழ்ச்சி பொருளாதார ரீதியாக எப்படி மேம்படுத்தும் என்பதனை சற்று யோசித்துப் பாருங்கள். 

இந்தியாவில் அனைத்து மதங்களின் சார்பாக வரக்கூடிய பண்டிகைகள் மட்டுமே அது சார்ந்து இயக்கும் பொருளாதாரச் சுழற்சியே அனைத்து மனிதர்களையும் சமமாகப் பாவிக்கின்றது. வாய்ப்பளிக்கிறது. வாழ வைத்துக் கொண்டு இருக்கின்றது.

இந்தியாவின் சந்தை உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் விரும்பக்கூடியது.  பகைத்துக் கொள்ள விரும்பாததற்குக் காரணம் இதுவே.  இந்தச் சந்தை தாங்கள் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் பேச்சை மட்டும் இந்தியா கேட்க வேண்டும் என்று மேற்கித்திய நாடுகள் திமிருடன் ஒரு காலத்தில் இருந்ததற்கு காரணம் இதுவே.  இப்போது ஆப்பு சொருகப்பட்டக் காரணத்தால் வரிசையில் வா, இது தான் எங்கள் சட்ட திட்டம், உனக்கு இது வேண்டுமானால் அதை எனக்குத்  தா என்று ஒவ்வொருவரையும் பார்த்துப் பார்த்து அனுமதிப்பதால் மனதளவில் வெறியோடு இருக்கின்றார்கள்.


Saturday, November 11, 2023

திருப்பூர் இனி வரும் காலங்களில் இடம் பெறுமா ?

ஒரு ஆசிரியை தொழில் சார்ந்த பல கட்டுரைகள் எழுதுவீர்கள்? ஏன் இப்போது எழுதுவதில்லை? என்று கேட்டு எழுதியுள்ளார்.

நான் நம்பக்கூடிய நல்ல பழகிய தெரிந்த புத்திசாலிகள் அனைவரும் இணையம் என்பதனை லுச்சா தனமான செயல்பட்டுக்கு மட்டும் என்று உறுதியாகவே நம்பி செயல்படுகின்றார்கள். என்னை விட அவர்கள் பல விசயங்களில் வல்லுநர்கள். ஆனால் எதையும் எங்கேயும் கடந்த விரும்பாத இரும்பு மனம் படைத்தவர்களாக இருப்பதையும் பார்த்து வருகிறேன். இதன் காரணமாகத் தொழில் சார்ந்த விசயங்களில் எழுத விரும்புவதில்லை என்றேன். அவர் வேறொரு விசயத்தையும் சுட்டிக் காட்டியிருந்தார். வேறு சிலர் எழுதிய சில பதிவுகள் வாயிலாக திருப்பூர் ஏன் வளரவில்லை? என்பதற்குப் பின்னால் உள்ள காரணிகளை அலசியிருந்தார்கள். அது குறித்து உங்கள் பார்வையைச் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பாலியல் ரீதியாகப் பேசி பெண்களை இழிவுபடுத்தி விட்டார்

 21 நாட்கள் ஒன்றைத் தொடர்ந்து செய்தால் அதுவே பழக்கமாக மாறிவிடும். அதனையே தொடர்ந்து செய்து வந்தால் இயல்பான குணமாகிவிடும் என்கிறார்கள். மிகச் சாதாரண செக்யூரிட்டி பதவியில் இருப்பவர்கள் முதல் பெரிய நிலையில் உள்ளவர்கள் வரைக்கும் முழுமையாக உள்வாங்கி கவனித்துள்ளேன்.  தத்தமது வேலை நீடிக்க ஒவ்வொருவரும் என்ன முடிகின்றதோ அதைக் கற்றுக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.  உழைக்கவும் தயாராக இருக்கின்றார்கள்.



Thursday, November 09, 2023

துப்பினால் துடைத்துக் கொள்வார்கள்

 எ வ வேலு குறித்து என்ன எழுதினாலும் அவருக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் உதவியவர்கள் இரண்டு பேர்கள்.   ஒன்று உடன் பணியாற்றிய அதிகாரிகள். எந்தப் பாதையில் செல்ல வேண்டும். எப்படி அணுக வேண்டும். எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.  அதற்கான கூலியைப் பெற்றுக் கொண்டு அவர்கள் பணி ஓய்வு வரைக்கும் சென்று இறுதிக் காலம் வரைக்கும் வாழ்ந்து மறைந்து விடுகின்றனர்.

அடுத்து பத்திரிக்கைகள். ஊடகங்கள். தற்போது யூ டியூப் மற்ற சமூக வலைதளங்கள்.



அநியாயங்கள் தெரிந்தாலும் காரண காரியத்தோடு மக்களிடம் சென்று சேராமல் தங்கள் பணியைச் சிறப்பாகவே செய்து விடுகின்றார்கள். கடைசியில் திருடியவன் துப்பாக்கிக் குண்டு முழங்க மெரினாவில் அடக்கம் ஆகின்றான்.


ஸ்ரீராமர் ஆலயம் உருவாக்கப் போகும் மாற்றங்கள்: ஜோ கட்டுரைகள் (நவம்பர் 2023) (Tamil Nadu Political History) (Tamil Edition) Kindle Edition

பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிக்கை நிறுவனம், பத்திரிக்கை மற்றும் ஊடக உரிமையாளர்கள். இதற்குள் எந்த காலத்திலும் பல பிரிவுகள் உண்டு. பல சித்தாந்தங்கள் கொள்கைகள் கொண்டவர்கள் ஒன்றாகவே பணிபுரிந்தனர். அனைவரின் கருத்துக்களையும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் உங்களால் படித்து இருக்க முடியும். இப்போது ஒரே கூட்டம். ஒரே கொள்கை. பாஜக தமிழகத்திற்குள் மட்டும் வந்து விடக்கூடாது. நம் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்ற நோக்கத்தில் அனைவரும் ஒரே மாதிரியாகவே கூச்சமின்றிச் செயல்படுகின்றார்கள். 

கடந்த மூன்று தலைமுறை தமிழர்களின் மூளையை மழுங்கடித்தவர்களின் முக்கியமானவர் தினத்தந்தி. இன்று வரையிலும் தினத்தந்தியில் வரும் ஒரு தகவல் கூட உங்களைக் கோபப்படுத்தாது.  நாசூக்காக உங்களை மொக்கராசுவாக மாற்றுவதில் கில்லாடி.  முடிதிருத்தகம் கடைகளில் தினத்தந்தி காகிதத்தில் சவரம் செய்த பின்பு வழித்து எடுக்கும் அந்தச் சவர அழுக்கைத் தடவப் பயன்படுத்துகின்றார்கள்.  இது நிஜம்.  கட்சிக்காக நடத்தும் பத்திரிக்கை முதல் கழிசடைத்தனத்தை கூச்சமின்றித் தரும் பத்திரிக்கை வரைக்கும் எதையும் காசாக்கலாம் என்று தைரியத்தில் தான் இன்று வரைக்கும் இங்கே கோலோச்சுகின்றார்கள்.

ஆனந்த விகடன் சீனிவாசன் முன்பு ஒரு முறை தங்கள் நிறுவனத்தில் மொத்தமாகப் பணியாற்றியவர்களைத் திடீரென்று வெளியே அனுப்பினார். அப்போது பெரிய சலசலப்பு உருவாகவில்லை. அவர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள்.  ஆனால் இந்த முறையும் சில மாதங்களுக்கு முன்பு ஒரே கொத்தாகப் பலரையும் வெளியே அனுப்பினார்.  இப்போது சலசலப்பு இலேசாக உருவானது.  அவர் கில்லாடி.  இப்படி உருவானால் அரசின் ஆதரவு வேண்டும் என்று கலைஞர் என்று பெயர் சூட்டி அவர் நல்லவர் வல்லவர் என்று எதையோ எழுதி புத்தகமாக்கி எப்போதும் போல விலை ரூபாய் ஆயிரம் என்று கொண்டு வந்து அதையும் முதல்வர் கையால் வெளியிட வைத்து.........  முடிந்தது ஜோலி.  

அரசாங்கத்தைத் திருப்தி செய்தாகிவிட்டது. முதல்வரின் குட்புக்கில் இடம் பெற்றாகிவிட்டது. புத்தக லாபம் பணி. பணியிலிருந்து தூக்கியவர்கள் மூலம் நிறுவன லாபம் தனி.

இனி யாரும் இவரைப் பார்த்து எதுவும் கேட்டு விட முடியுமா?

சோழர்கள் என்றொரு புத்தகம் வந்தது. ஒருவரால் எழுதப்பட்டது அல்ல. அது தொகுப்பு. பலரும் எழுதியுள்ளனர்.  ஆனால் நான் எழுதினாலும் நீங்கள் நம்ப முடியாத தொகையை வாங்கி வென்றவர் சமஸ்.  அவருக்கும் முதல்வர் அலுவலக முதல் வட்டத்தில் இருப்பதால் பத்திரிக்கை நிறுவன முதலாளிகளுக்குத் தேவைப்படும் நபராகவே உள்ளார்.  

ஏற்கனவே பிடிஆர் பேட்டியை அருஞ்சொல் தளத்தில் அதிகமாகப் போட்டுக் கொண்டு இருந்தார்.  இப்போது தேடிப் பாருங்களேன்.

திரைப்பட உலகத்தைப் பாழுங்கிணறு என்று நண்பர்கள் என்னிடம் பலமுறை எச்சரித்துள்ளனர்.  அதே போல இன்றைய பத்திரிக்கையுலகம் என்பது 2000 க்கு முன் பின் என்பதாக மாறிவிட்டது என்பேன்.

ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் வெவ்வேறு நண்பர்கள் உறுதிப்படுத்த முடியாத தகவல்களைத் தனிப்பட்ட முறையில் பேசும் போது சொல்கின்றார்கள்.

ஒன் டைம் பேமெண்ட் 

தேர்தல் வரைக்கும் பகுதி பகுதியாகப் பிரித்து வழங்குதல்

2024 தேர்தல் முடிந்த பின்பும் சட்டமன்றத் தேர்தல் வாக்கு செலுத்தும் நாள் வரைக்கும் மாதம் ஒரு தொகை.  

இப்படித்தான் நீங்கள் நம்பும் விரும்பும் ஆதரிக்கும் நேசிக்கும் பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்களுக்கு அங்காளியும் பங்காளியும் பாய் போட்டுப் பந்தி பரிமாறிக் கொண்டிருக்கின்றார்களாம்.

காரணம் 2024 பாராளுமன்றத் தேர்தல் எந்த எல்லைக்குச் செல்லும் என்பதனை யூகிக்க முடியாததாகவே உள்ளது.  வெறித்தனமாக ஒவ்வொரு பக்கமும் செயல்படுகின்றார்கள்.  என்ன காரணம் என்பதே தெரியவில்லை. நம்பவே முடியாத காரியங்கள் எல்லாம் வெளியே தெரியாமல் நடந்து கொண்டு இருக்கின்றது.

ஒரு நடிகர் ஒரு படத்தில் நடித்து, ஒரு இயக்குநர் இயக்கி அதிரிபுதிரி ஹிட் அடித்தவுடன் அவர்கள் வழங்கும் பேட்டி முழுக்க தில்லையாடி வள்ளியம்மையுடன் பாடுபட்டு சுதந்திரம் வாங்கித் தந்த கதைகள் போலவே இருக்கும்.

நான் சாலையோர ப்ளாட்பார்ம் ல் படுத்து உறங்கினேன்.

கோயம்பேடு சந்தையில் காய்கறி தூக்கிக் கொடுத்து வயிறு கழுவினேன்.

உணவகத்தில் தட்டு கழுவினேன்.

ஆனாலும் கலைத்தாகம் என்னுள் கொழுந்து விட்டு எறிந்து கொண்டேயிருந்தது என்று தமிழகம் எங்கும் ஒழுங்காகப் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களைத் தெருவில் வந்து நிற்கும் வேலையைத் தன் வாயால் செய்து முடிப்பார்கள்.  

அப்படித்தான் தற்போதைய யூ டியூப் சேனல்கள் அனைத்தும் செய்து கொண்டு இருக்கின்றது.

அதே போல 

இன்றைய நட்சத்திர ஊடகவியலாளர்களாக உள்ளவர்களான

நக்கீரனில் தன் பணியைத் தொடங்கினார் கார்த்திகைச் செல்வன்.

குணசேகரனும்   அடியாழத்திலிருந்து தான் வந்தார்.

புதிய தலைமுறை கார்த்திகேயன் தொடங்கி தினமலரில் பணியாற்றிய பாண்டே வரைக்கும் தங்கள் கால் நூற்றாண்டுக் காலத்தைக் காசு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் . கனவுகளுடன் மட்டுமே வாழ்ந்தவர்கள். அதிகாரத் தாழ்வாரத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டு இன்று எடிட்டர் கேட்டால் எந்தச் செய்தியைக் கொடுத்துச் சமாளிப்பது என்று ஏக்கத்துடன் காத்திருந்தவர்கள் தான்.

இவர்களும் இன்று நம்பிக்கையூட்டும் பேச்சாளர்களாகவும் மாறியுள்ளனர். இளைய தலைமுறையினருக்கும் லட்சியங்களைப் பற்றி அடுக்கு மொழியில் பேசி அசத்த அதற்கும் சில லட்சங்களை நிகழ்ச்சி நடத்துகின்றவர்களிடம் பெற்று விடுகின்றார்கள். 

கட்சி சார்ந்த பேட்டிக்கு ஒரு ரேட்.  

கட்சி நிகழ்ச்சிகளைத் தங்கள் சேனலில் கொண்டு வர ஒரு ரேட் என்று உணவகப் பட்டியல் போலவே இன்று பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் ரொம்பவும் பிசியாகவே உள்ளனர்.  நிறுவன முதலாளிக்கு அறுத்த கறியின் மொத்தக் கிலோ கணக்கு தொகை வந்து விட வேண்டும்.  அறுத்த போது அருகில் இருப்பவர்களுக்குச் சிதறும் துணுக்குகள் முக்கியம்.

ஆனால் இன்று

நடிகர் ரஜினி விஜய் ஆறு மாதம் நடித்து வாங்கும் சம்பளத்தை அசால்ட்டாக அள்ளுகின்றார்கள்.

எங்கே எப்படி வருகின்றது தான் யோசிக்க வேண்டிய ஒன்று.

ரொம்பவும் உணர்ச்சி வசப்படாதீர்கள். அவர் பிராமணர் என்பதற்காகவோ, அவர் இவரை ஆதரிக்கக்கூடியவர் என்பதனை மனதில் கொண்டே எவரையும் உங்கள் இதயகமலத்தில் ஏற்றி அமர்த்தி வைத்துக் கொள்ளாதீர்கள்.

ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள் ஸ்ட்ரக் ஆகி நிற்கும் போது உங்களுக்கு அதிகபட்சம் பேஸ்புக் நண்பர்கள் வழங்குவது ஓம் ஷாந்தி என்ற வார்த்தையை மட்டுமே.

அதிகார கோபுரத்தின் மேலே செல்லச் செல்ல ஏறிச்சென்ற அரசியல்வாதி கடைசியில் பார்ப்பது வெறுமையை மட்டுமே. அவரால் அதனை வாய் விட்டு வெளியே பகிர்ந்து கொள்ளவும் முடியாது.

யாரோ எதற்காகவோ கொடுத்த ஒன்டைம் பேமெண்ட் மூலம்  அல்லது மாதம் மாதம் கையேந்தி பெறும் பணத்தின் மூலம் வாழும் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம். வெறும் யூ டியூப் சேனல் நடத்திக் கொண்டே தங்கள் அலுவலகத்தை ஆயிரம் கோடி வரவு செலவு கணக்கு காட்டும் இந்திய அளவில் பிரபல்யமான கார்ப்பரேட் தலைமை அலுவலகம் அமைப்பு பாணியில்  அமைத்துக் கொள்ளலாம். தவறில்லை.

வாழ் நாள் முழுக்க கூனிக்குறுகி வெளியே சொல்லிக் கொள்ள முடியாத தனக்குள்ளே மறுகிக் கண்ணி வெடியில் சிக்கியவன் போலவே வாழ்ந்தாக வேண்டும்.   எவன் எதிரி? எவன் நண்பர்? எதன் மூலம் பேசினால் ஒட்டுக் கேட்காமல் இருக்க முடியும் என்று ஆராய்ந்து யோசித்து யோசித்துப் பேச வேண்டிய கொடுமைகளைச் சந்திக்க வேண்டும்.

மக்கள் மாமன்றம் முதல் மக்களின் நாடித்துடிப்பு அறியும் நிகழ்ச்சி வரைக்கும் கூட்டம் இருக்கும்.

அந்தக் கூட்டத்திற்கு நிச்சயம் தெரியும் நீங்கள் யார் என்று? 

அது உங்களுக்கும் எனக்கும் கண்களுக்குத் தெரியாது.

வெளியே துப்பினால் நாஞ்சில் சம்பத் போலத் துடைத்துக் கொள்வார்கள். ஆனால் பல லட்சம் மக்கள் மனதிற்குள்ளே துப்பும் போது அவர்களுக்கு எப்படித் தெரியும்?

Sunday, November 05, 2023

E.V.Velu எ.வ.வேலு

டொனால்ட் ட்ரம்ப் முதல் முறையாக அமெரிக்க அதிபருக்குப் போட்டியிட்ட போது அவரை சர்வதேச ஊடகங்கள்  கட்டுமானத் தொழிலில் இருக்கும் சக்ரவர்த்தியாக வர்ணித்தன. மும்பையில் கூட ட்ரம்ப் டவர் உள்ளது. ஆனால் அது உண்மையல்ல. அவரின் உண்மையான தொழில் கிளப். சூதாட்டம். மிக மிகப் பெரிய கோடீஸ்வரர்.  எல்லாமே சூதாட்ட விடுதி  வழியாகவே சம்பாதித்தது. அமெரிக்காவில் அது அங்கீகரிக்கப்பட்ட தொழில்.  இந்தத் தொழிலுடன் தொடர்புடைய அனைத்துத் தொழில்களும் நிழல் உலக தொடர்புகள் வரைக்கும் முடியும்.  நீங்களும் நானும் உள்ளே செல்ல முடியாது. மன்மதக் குஞ்சாகவே இன்னமும் ட்ரம்ப் இருப்பதற்கு அவர் தொழில் பழக்கமும் ஒரு காரணம். பணத்தாலே பேசுவார். பேச வைப்பார். ஆட்களைப் பின்னால் வர வைப்பார். நோ செண்டிமெண்ட். ஒன்லி மணி.




Friday, November 03, 2023

தேசிய கட்சி தொண்டரும் மாநில கட்சி அடிமைகளும்

 தேசிய கட்சிகளில் செயல்பட உங்களுக்குத் தனித் திறமை வேண்டும்.  

சாதி, பணம், திறமை என் இந்த மூன்றுக்கும் அப்பாற்பட்ட விசயங்களில் உங்கள் பெயர் டெல்லி வரைக்கும் எட்டியிருக்க வேண்டும். முகங்களின் அறிமுகம் வேண்டும். அறிமுகமான முகங்கள் முக்கியமான முகமாக இருக்க வேண்டும். உங்களுக்கு நிஜமான வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.  அப்பன் மகன், தாத்தன் பேரன் என்ற எல்லையைக் கடப்பது கடினம் தான். வாரிசு அரசியல் இல்லாத இடமேது?  இந்தக் கொள்கை தமிழகத்தில் இங்கே வர வேண்டும் என்று நம் திருப்திக்காகக் கடைசி வரைக்கும் செயல்பட்டால் எந்த ஏமாற்றமும் இருக்காது.