Saturday, February 20, 2021

வங்கிகளின் EMI உலகம்

தன்னுடைய 16 வயது வரைக்கும் சிறந்த குழந்தை மருத்துவராக மாற வேண்டும் என்று எண்ணம் கொண்டு இருந்த ஸ்வாதி மோகன் என்ற இந்திய வம்சாவளிப் பெண் ( எந்த மாநிலம் என்று எந்தப் பத்திரிக்கையும் எழுதவே இல்லை?) செவ்வாய்க் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் இயந்திரத்தை இறக்கி சாதனை புரிந்துள்ளார். 

பிப்ரவரி 18, வியாழக்கிழமை இரவு 20.55 ஜி.எம்.டி நேரப்படி செவ்வாயில் தரையிறங்கியது. குறைந்த ரெசல்யூஷன் கொண்ட பொறியியல் கேமராக்களால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கோளின் இரண்டு படங்களை அனுப்பியது 




பெர்சவரன்ஸ் ரோவர். பூமியிலிருந்து செவ்வாய்க் கிரகத்திற்கு 9000 மைல்கள் என்பதனை நினைவில் வைத்திருங்கள். ஆறு சக்கரங்களைக் கொண்ட இந்த பெர்சவரன்ஸ் ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குச் செவ்வாய்க் கோளின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடவிருக்கிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய்க் கிரகத்திற்கு ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளக் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் ரோவர்களை அனுப்பி வருகிறது. 

இதுவரை 5 ரோவர் வரை நாசாவால் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு முறையும் புதிய கண்டுபிடிப்புகள் கிடைக்கப்பெற்றவுடன் அதன் அடுத்த வடிவத்திலான ரோவர்களை நாசா அனுப்பும் அந்தவகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு கியூரியாசிட்டி என்கிற அதிநவீன ரோவரை நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. அதன் மூலம் அங்கு பல ஆண்டு காலத்திற்கு முன்பு ஆறுகள் ஓடியதற்கான தடயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கியூரியாசிட்டியை விட மேம்படுத்தப்பட்ட அதிநவீன பெர்சிவரன்ஸ் எனும் ரோவரை கடந்தாண்டு ஜூலை 30 அன்று நாசா அனுப்பியது. 

மார்ஸ் 2020 திட்டத்தில் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு இயக்கத்தின் தலைவர் (Guidance & Controls Operation Lead) என்கிற முக்கிய பொறுப்பை ஸ்வாதி மோகன் தான் ஏற்று வழிநடத்தினார். மார்ஸ் 2020 விண்கலம் விண்வெளியில் சரியான திசையில் பயணிப்பதை உறுதி செய்வது, மார்ஸ் 2020 விண்கலத்தைத் தேவையான இடத்துக்குக் கொண்டு செல்வது எல்லாம் இவருடைய பொறுப்பு தான். குறிப்பாக மார்ஸ் 2020 விண்கலத்தைச் செவ்வாய்க் கிரகத்தின் எல்லைக்குள் நுழையச் செல்வது தொடங்கி தரையிறக்குவது வரை இவரது பங்கு மிகவும் முக்கியமானது. 

கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பிரிவில் இயந்திரவியல் மற்றும் ஏரோஸ்பேஸ் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். அதன் பின் எம்.ஐ.டியில் ஏரோனாட்டிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பிரிவில் முதுகலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். "எனக்கு இயற்பியலில் ஆர்வம் உருவாகக் காரணமே எனக்குக் கிடைத்த நல்ல ஆசிரியர் தான். 

அப்போது தான் பொறியியலை ஒரு வழியாகப் பயன்படுத்தி, விண்வெளி துறையில் பணியாற்றலாம் எனத் தோன்றி என் பயணம் மாறியது" என்று நாசாவின் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்வாதி மோகன். 

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்
போற்றுவோம் வாழ்த்துவோம்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...