Monday, February 15, 2021

விளம்பரத்திற்குள் மிதக்கும் மனிதர்கள்

"நேற்று சாப்பிட்ட சாப்பாட்டில் மீதம் கஞ்சியாக உள்ளது. துவையல் ஏதும் வேண்டுமா? ஊறுகாய் போதுமா"? என்று மனைவி கேட்டால் அதற்குப் பெயர் உங்கள் பொருளாதாரத்தை மிச்சப்படுத்தி உங்களை வளர்த்து வாழ வைக்கும் "நிதானக் காதல்". 




"சூடான இட்லி தயாராக உள்ளது. உங்களுக்குப் பிடித்த மிளகாய் காரச் சட்னி உள்ளது. செக்கு எண்ணெய் ஊத்திக்கிங்க. நேற்று இரவு முழுவதும் இருமிக்கொண்டே இருந்தீங்க" என்று மனைவி கேட்டால் "நிரந்தரக் காதல்".

"இன்றைக்கு நண்டு எடுத்துக்கிட்டு வாங்க. கொஞ்சம் சூப் வைக்கிற மாதிரி சின்ன சைஸ் நண்டும் பார்த்து எடுத்துக்கிட்டு வாங்க" என்று சொல்லி தாராளமாகப் பணத்தைக் கொடுத்து வழியனுப்பி வைத்தால் "நிதர்சனக் காதல்". 

"ஞாயிற்றுக்கிழமை இன்றைக்கு ஒரு நாள் என்னை நிம்மதியாகத் தூங்க விடுங்க. ஒரு வாரம் தின்று செரித்தது போதும். வயசானால் வாயைக்கட்டுங்க" என்றால் "ஆரோக்கியக் காதல்". 

ஃபேக் ஐடின்னு தெரியாமல் "டோலி உங்க பதிவு ஆஸம்" என்று நூல் விட்டுக் கொண்டிருந்தால் அது "நாய்க்காதல்" 

நீங்க எந்தக் காதல் வகையைச் சேர்ந்தவர் பாஸ்?🥰

 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

எங்கேயும் எப்போதும் :- வெற்றி நடை போடும் தமிழகமே...!