Saturday, December 13, 2014

கடைசி அத்தியாயம்

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்..... 

அத்தியாயம் 20 

துணிவே துணை 

"வெளிச்சத்திற்குப் பின்னால் இருள் நிச்சயம் உண்டு" என்பதனை நீங்கள் நம்புகின்றீர்களோ? இல்லையோ திருப்பூர் வாழ்க்கையில் நான் உணர்ந்ததும் அதிகமாய் யோசிப்பதும், ஆச்சரியப்படுவதும் இதே தான். கடந்த இருபது வருடத்தில் சிறிய மற்றும் பெரிய முதலாளிகளுடனும் அதே சமயத்தில் மிகப் பெரிய செல்வாக்கு உள்ள முதலாளிகள் என்று பலதரப்பட்ட பேர்களுடன் பழகி வந்துள்ளேன். பழக்கம் என்பது ஒரு நிறுவனத்தில் அவர்களுடன் நிறுவனம் சார்ந்து செயல்பட்ட விதம் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். ஒரு நிறுவன முதலாளியின் தனிப்பட்ட குணாதிசியங்கள், அவர் குடும்பம் சார்ந்த செயல்பாடுகள், அவரின் வெவ்வேறு முகங்கள் என்று தொடங்கி அவருக்கு எங்கிருந்தெல்லாம் நிதி ஆதாரங்கள் வருகின்றது என்பது வரைக்கும் பல விசயங்களைக் கவனித்துள்ளேன். 

சில நிறுவன முதலாளிக்குப் பின்னால் அரசியல் பின்புலங்கள் போன்ற பலவற்றையும் பார்த்துள்ளேன். அனைத்துச் சாதகப் பாதக அம்சங்கள் எனப் பலவற்றையும் கூர்ந்து கவனித்து வந்துள்ளேன். ஒவ்வொரு நாளும் ஆச்சரியம் படத்தக்க வகையில் பல நிகழ்வுகளைக் கடந்து வந்து உள்ளேன். இன்று அனைத்தையும் திரும்பிப் பார்க்கும் போது மனதில் ஒரு விதமான வெறுமையே எனக்குள் உருவாகின்றது. 

பல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளேன். நானே சொந்தமாகத் தொழில் தொடங்கியும் இருக்கின்றேன். என் தோல்விகளையும் நான் அடைந்த வெற்றிகளையும் வைத்து யோசித்துப் பார்த்தாலும் கூட இந்தத் தொழில் எவ்வித திருப்தியையும் எனக்குத் தந்ததில்லை. எனக்கு மட்டுமல்ல. இந்தத்துறையில் பணிபுரியும் எவரிடம் கேட்டாலும் இதே தான் பதில் வரும். ஒரு துறையில் குறிப்பிட்ட காலம் ஒருவர் பணியில் இருந்தால் பணிபுரிந்தவர்கள் குறிப்பிட்டத்துறையில் அடுத்தக் கட்டத்திற்கு நகர்வது வாடிக்கை தானே? ஆனால் ஆயத்த ஆடைத்துறையில் பணிபுரிந்தவர்களில் பெரும்பாலோனோர் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்ததே இல்லை. நகர்ந்து வந்தாலும் அவர்களால் நீடித்து இருந்ததும் இல்லை. ஏன்? 

இங்கே பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமல்ல இந்தப் பிரச்சனை. முதலாளிகளும் இதே தான் பிரச்சனையாக உள்ளது. மற்ற துறைகள் என்றால் முதலாளிகள் அடுத்தடுத்து விரிவாக்கத்தில் தான் கவனம் செலுத்துவார்கள். ஆனால் இங்கிருப்பவர்களோ இருக்கும் தொழிலை காப்பாற்றிக் கொள்ளத் தினந்தோறும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரே காரணம் இத்துறை பெரும்பாலும் மனித உழைப்பை நம்பித்தான் உள்ளது. அவர்களை அனுசரித்துப் போனால் மட்டுமே வேலைகள் நடக்கும் என்ற சூழ்நிலையில் உள்ளது"பயத்தோடு வாழப் பழகிக் கொள்"  புதிய மின் நூலை தரவிறக்கம் செய்ய

13 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா
ஒரு தொழிற்சாலை வெற்றி கரமாக இயங்குவதற்கு
முக்கியத் தேவை தலைமைப் பண்பே என்பதை
தங்களின் அனுபவ எழுத்தால் நிரூபித்துள்ளீர்கள் ஐயா
எவ்வளவு கடினமான வேலைகளையும் இதமான வார்த்தைகளால்,
இன்சொற்களால் சாதித்துக் காட்டிட இயலும் என்பது அற்புதமான
வார்த்தைகள் ஐயா.
இன்றைக்கு எந்த ஒரு நிறுவனமாயினும், தலைமை ஏற்றிருப்போர்
அதிகாரம் செலுத்தியே ஆள நினைக்கின்றனர். அவர்களது தோல்விக்கு
அதுவே காரணமாய் அமைந்து விடுகிறது ,
நன்றி ஐயா

திண்டுக்கல் தனபாலன் said...

எவ்வித திருப்தியையும் தரவில்லை என்றாலும் தொடர்ந்து தான் ஆக வேண்டுமே...!

எம்.ஞானசேகரன் said...

ஆணவத்தோடு கூடிய அதிகாரம் என்றுமே ஜெயித்ததாக சரித்திரம் இல்லை. அதற்கான தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். இருபது வாரங்களாக திருப்பூரின் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறீர்கள். வெறுமனே தோழில் பற்றிக்கூறாமல் மனித மனங்களையும், சமூக அவலங்களையும் உங்கள் எழுத்துக்கள் தொட்டுச் சென்றிருக்கின்றன. இத்தனை வேலைப் பளுவிற்கிடையிலும் உங்களின் உழைப்பும், இதை பதிவு செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்பும் பிரமிக்க வைக்கிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜோதிஜி அவர்களே.

Rathnavel Natarajan said...

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்..... - கடைசி அத்தியாயம் - ஜோதிஜி - அருமையான, ஆழ்ந்து படிக்க வேண்டிய பதிவுகள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் திரு ஜோதிஜி.

srinivasan said...

அனுபவமே பாடம் அதை சொந்த அனுபவத்தை விட மற்றவர்களின் அனுபவம் தக்க சமயத்தில் கை கொடுக்கும்.உங்கள் அனுபவம் துணி சார்ந்த துறைக்கு நிச்சயம் இது வழிகாட்டும். உழைக்காமல் வருகிற பணம் ஊதாரி தனமாகத்தான் செலவு செய்ய சொல்லும்.நல்ல தொடர் ! விரைவில் மற்றொன்றை எதிர்பார்க்கிறோம் .

'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா,,,

கிரி said...

ஜோதிஜி சிறப்பா எழுதி முடித்து விட்டீங்க.. :-) கொஞ்சம் டக்குனு முடித்தது போல இருந்தது. இந்தத் துறையில் உள்ளவர்களுக்கு உங்களின் அனுபவங்கள் அறிவுரைகள் நிச்சயம் பயன் தரும் என்பதில் சந்தேகமில்லை. தங்களின் நிலையை நீங்கள் கூறுவதுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம், தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை.

மீண்டும் ஒரு புதிய தொடரோடு சந்திப்போம்.

minnal nagaraj said...

நாயர் பிடித்த புலிவாலை போன்றது இந்த தொழிலும் தொழிற்ச்சாலையும் ...ஒன்றையும் விட முடியாது .அதை வெகு அழகாக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறீர்கள் .ஆளுமை பண்புள்ளவர்கள் நன்றாக நிர்வாகம் செய்யமட்டும்தான் முடியும் .ஆனால் முதலாளிகளால் அதைவிட நன்றாக தகிடுதத்தம் செய்ய முடியும் .அதை திருப்பூர் முதலாளிகளால் மட்டுமே முடியும் ,அதை நாசுக்காக சொல்லி காட்டியுள்ளீர்கள் நன்று

Thulasidharan V Thillaiakathu said...

"வெளிச்சத்திற்குப் பின்னால் இருள் நிச்சயம் உண்டு" என்பதனை நீங்கள் நம்புகின்றீர்களோ? இல்லையோ திருப்பூர் வாழ்க்கையில் நான் உணர்ந்ததும் அதிகமாய் யோசிப்பதும், ஆச்சரியப்படுவதும் இதே தான். //

அனுபவம் பேசிகின்றது!!! அருமையாக, உண்மைகளை வெளியில் தைரியமாகச் சொல்லிய்ச் சென்ற விதம் அருமை! நண்பரே! மிகவும் சிறப்பான தொடர்!

மிக்க நன்றி! அடுத்த தொடர் எப்போது நண்பரெ!

Thulasidharan V Thillaiakathu said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்புடனும், நட்புடனும்

துளசிதரன், கீதா

'பரிவை' சே.குமார் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா...

எம்.ஞானசேகரன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

yathavan64@gmail.com said...

"அன்பும் பண்பும் அழகுற இணைந்து
துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

வலைப் பூ நண்பரே!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr