Friday, December 05, 2014

பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான்.

"சார் உங்க மாதிரி ஆட்களிடம் எங்கள மாதிரி ஆட்கள் வேலை செய்வதே பாவம் சார். இதற்கு மேலே நான் ஏதாவது பேசினால் ரொம்பச் சங்கடமாகப் போயிடும். எனக்குக் கணக்கு முடிச்சு குடுங்க. நான் போயிடுறேன்" 

ராஜாவுக்கும் எனக்கும் ஒரு வெள்ளிக்கிழமை மதிய நேர உரையாடல் இப்படித்தான் முடிவுக்கு வந்தது. 

ராஜா என்பவன் பல விதங்களில் ராஜா தான். அகத்தியர் உயரத்தில் தான் இருப்பான். ஆனால் செயலாக்கத்தில் கம்பீரமானவன். மற்றவர்களை விட எதையும் தனித்தன்மையுடன் செய்யக் கூடியவன். அவனின் வயது இருபத்தி மூன்றே தவிர அகாயச் சூரன். காசு விசயத்தில் கெட்டி. அதே சமயத்தில் உழைப்பில் வீரன். தனக்குச் சேர வேண்டிய ஒரு ரூபாயைக்கூட அடுத்தவன் எடுக்க அனுமதிக்க மாட்டான். அதே சமயத்தில் அடுத்தவரின் ஒரு பைசாவை அபகரிக்க வேண்டும் என்று எண்ணத்தில் கூட நினைக்க மாட்டான். 

அவனிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்து விட்டு நாம் நிம்மதியாகத் தூங்கப் போய்விடலாம். ஆனால் அவன் எதிர்பார்த்த பணம் சரியான நேரத்தில் வரவில்லை என்றால் பெரிய பதவியில் இருந்தாலும் நேருக்கு நேராக நின்று கிழித்துத் தோரணம் கட்டி விட்டு தான் நகர்வான். நான் இருந்த நிறுவனத்தில் FINISHING DEPARTMENTல் ஒப்பந்தக்காரராக இருந்தான். 

இந்தத் துறையில் வந்த பிறகு தான் தைத்த ஆடைகள் தரம் வாரியக பிரிக்கப்பட்டு முழு வடிவம் பெறுகின்றது. வெளிநாட்டுக்காரர்கள் எதிர்பார்க்கும் ஆயத்த ஆடைகள் அழகு வடிவம் பெறுகின்றது. ராஜாவுக்குக் கீழே ஒரு படை பட்டாளம் உண்டு. இவனுக்குக் கீழே பணிபுரிபவர்கள் அதனைத் தேய்த்து, பாலிபேக்கிங் செய்து ஒரு வடிவத்திற்குக் கொண்டு வருகின்றார்கள். +++++++++++++++++++++


வருகின்ற 09 டிசம்பர் அன்று எனது ஐந்தாவது மின் நூல் வெளியாகின்றது. முதல் வருடம் மிகச் சிறப்பாக மின் நூல் தளத்தை வழிநடத்திய இளையர் பட்டாளத்திற்கு இந்த மின் நூலை காணிக்கையாக்குகின்றேன்.

மின நூல் தளத்திற்கு தங்களை அர்ப்பணித்துள்ள இளையர் குழுவினர் பற்றி அறிந்து கொள்ள (அடுத்த பதிவில்)


இதுவரையிலும் வெளிவந்துள்ள என் மின் நூல்கள் 

1. ஈழம் -- வந்தார்கள் வென்றார்கள்

ஈழம் என்ற நாடு என்று உருவானது என்பதில் தொடங்கி தமிழர்கள் எப்படி அரசியல் அதிகாரத்தை விட்டு துரத்தப்பட்டார்கள் என்பது வரைக்கும் உண்டான சரித்திர நிகழ்வுகளை அலசும் தொடர்.  


தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 26,924

வெளியிட்ட தினம் 19.12.2013

2. வெள்ளை அடிமைகள்

இந்தியாவில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பத்தாண்டுகளில் படிப்படியாக மேலைநாடுகளுக்கு இந்தியா எப்படி அடகு வைக்கப்பட்டது என்பதைப் பற்றியும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பராம்பரியம் உள்ள தமிழர்களின் வரலாற்றை அலசும் தொடர் 


தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 6,458

வெளியிட்ட தினம் 29.01.2014

3. தமிழர் தேசம்

தமிழ் மன்னர்களான சேர சோழ பாண்டியர்களின் வரலாற்றுக்கதையை சுருக்கமாக பேசி, நான் பிறந்த இராமநாதபுரம் மாவட்டம் படிப்படியாக எப்படி மாறியது என்பதை சரித்திர பின்புலத்தில் அலசும் தொடர்.


தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 7,631

வெளியிட்ட தினம் 28.02.2014

4. கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு

தமிழ்நாடு மற்றும் இந்தியா இது தவிர நான் வாழ்ந்து கொண்டிருக்கும் திருப்பூரில் நான் பார்த்து வந்து கொண்டிருக்கும் சுற்றுப்புற சீர்கேடுகளைப் பற்றி அனுபவத் தொடர் வாயிலாக அலசும் தொடர்.  மேலும் எதிர்காலத்தில் உணவு தட்டுப்பாட்டை உருவாக்கப் போகும் மரபணு மாற்றம் குறித்து பேசியிருக்கின்றேன். 

முழு விபரங்களைப் படிக்க தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்களேன்.


தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை 10,928

வெளியிட்ட தினம் 27.03.20147 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ராஜா = நேர்மை...

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா
தங்களின் மின்நூல் வெளியீடுகள் தொடரட்டும்

கிரி said...

ஜோதிஜி இன்று தான் உங்களின் நான் படிக்காத அத்தியாயங்களை படிக்க முடிந்தது. வழக்கமான பதிவாக படித்து விடக் கூடியது அல்ல என்பதால், பொறுமையாகப் படிக்கலாம் என்று தள்ளி தள்ளி வந்து கட்டுரை எண்ணிக்கை அதிகமானதால் கூடுதல் நாட்கள் ஆகி விட்டது.

உங்களின் வாழ்க்கை அனுபவ குறிப்புகள் பல எனக்கு உதவியாக இருக்கும். இதில் கூறியுள்ள சில விசயங்கள் சிலவற்றை நான் முன்பே உணர்ந்து இருந்தாலும், நாம் நினைத்ததை இன்னொருவர் கூறும் போது அதற்கான கவனிப்பும் அதிகமாகிறது. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு அத்தியாயத்தில் குறிப்பிட்டு இருந்த சிலரை பாராட்டினால் ஊதிய உயர்வு எப்போது என்று கேட்பார்கள் எனவே நம் இயல்பை கூட சில நேரங்களில் மாற்றிக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது என்று கூறி இருந்தது ரசிக்கும் படி இருந்தது.

நாம் மேலதிகாரிகளிடம் பேசும் போது எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றியும், வார்த்தைகளில் இருக்க வேண்டிய கவனமும் பற்றி கூறியது அருமை. பல நேரங்களில் பல பிரச்சனைகளுக்கு நாம் அவசரப்பட்டுக் கூறும் வார்த்தைகளே முக்கியக் காரணியாக இருக்கிறது. சில நொடி வார்த்தை பிரயோகம் நம்மை பெரும் சிக்கலில் விடும். எனக்கு இதில் அனுபவம் இருக்கிறது. கோபத்தில் அவசரப்பட்டு ஒரு மின்னஞ்சலை அனுப்பி அதனால் கடும் நெருக்கடியை சந்தித்து இருக்கிறேன்.

இதில் குறையாக நான் நினைப்பது ஒரு சம்பவத்திற்கு நீங்கள் கூறும் பெரும் விளக்கம். இது சில நேரங்களில் நீங்கள் இதை எதற்காக கூறிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதற்கான காரணத்தையே மறக்க வைத்து விடுகிறது. கூறிக்கொண்டு இருக்கும் சம்பவத்தில் இருந்து நீண்ட தூரம் விலகி விடுகிறீர்கள். உதாரணத்திற்கு ரம்யா சம்பவமே எடுத்துக்கொள்ளலாம். ஒரு அத்தியாயமே காரில் பயணம் செய்கிறீர்கள். ஒரு சம்பவத்திற்க்கான விளக்கத்தை தெரிந்து கொள்ளவே இரண்டாவது அத்தியாயம் தேவைப்படுகிறது எனும் போது சலிப்பு வருகிறது.

அடுத்த தொடர் எழுதும் போது இதைக் கருத்தில் கொள்ளுங்கள். ஏனென்றால் படிப்பவர்கள் அடுத்தது என்ன என்பதைத் தான் எதிர்பார்ப்பார்கள். விளக்கம் நல்லது என்றாலும் அதிகளவான விளக்கம் ஓவர் டோஸாக போய்விடக் கூடிய வாய்ப்புத் தான் அதிகம். இதை யாரும் உங்களுக்கு சுட்டினார்களா என்று தெரியவில்லை.

மற்றபடி உங்களின் எழுத்து பல மடங்கு உயர்ந்துள்ளது. இது போல தொடர்கள் தான் உங்களின் எழுத்துத் திறமையை கூர் படுத்தி இருக்கின்றன என்பது என் கருத்து. சில வரிகளின் விவரிப்பு நாம் ஏன் இது போல எழுத முயற்சிக்கவில்லை என்று நினைக்கத்தோன்றியது. வர்ணனைகள் மிகவும் நன்றாக இருந்தது.

உங்களின் அடுத்த மின் நூலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் (அதில் வாழப் "ப்" வர வேண்டும் என்று நினைக்கிறேன்)

ஜோதிஜி said...

நன்றி கிரி. குறிப்பாக பயத்தோடு வாழப் பழகிக் கொள்ள ப் விசயத்தை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

நீங்கள் சொன்ன விமர்சனத்தை புரிந்து கொண்டேன். இந்தத் தொடரின் நோக்கம் இந்த துறையில் உள்ள இண்டு இடுக்குகளை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என் மூலம் அல்லது நான் அறிமுகப்படுத்தும் கதாபாத்திரம் மூலம் வாசிப்பவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதால் சில இடங்களில் வேண்டுமென்றே நீண்டதாக கொண்டு சென்றேன்.

ezhil said...

புதிய இ-புத்தகத்திற்கு வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

அன்றே வாசித்தேன்... வலைப்பூவில் பிரச்சினை...
இப்போ சரியாயிருச்சு அண்ணா...
தொடர்ந்து வாசிக்கிறோம்...
ஐந்தாவது மின்னூலுக்கு வாழ்த்துக்கள் அண்ணா...

Ranjani Narayanan said...

இப்போதுதான் விட்ட அத்தியாயங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
புதிய மின்னூலுக்கு வாழ்த்துக்கள்!