உங்களுக்கு அதியமான் என்பவரைத் தெரியுமா?
முன்னொரு காலத்தில் வினவு தளத்தில் பின்னூட்ட களத்தில் தனி ஒருவராக
வாள் சுழற்றிக் கொண்டிருப்பார். எம்.ஜி.ஆர். நம்பியார்
போலவே களம் சூடாகவே இருக்கும்.
எதிரிகள் ஒரு பக்கம் இரண்டு பக்கம் இருந்து தாக்குவதில்லை. எட்டுப் பக்கமும் வந்து தாக்கிக்
கொண்டேயிருப்பார்கள். அத்தனை பேர்களும்
கருத்தியல் ரீதியான எதிரிகள் மட்டுமே.
ஆனால் நம்ம கதாநாயகன் அதியமான் அசர மாட்டார். அவர் இதுவரைக்கும் வெள்ளை மாளிகை தளத்தின்
இணைப்பைத் தவிர உலகத்தில் உள்ள அத்தனை லிங்குகளையும் அள்ளித் தெளித்து விடுவார்
அவர் அள்ளி வழங்கும் லிங்கு எல்லாமே ராக்கம்மா கையைத் தட்டு என்கிற ரகமாக இருக்கும். கடினமான கருத்தியல் சார்ந்த பொருளாதார மேதைகள் படிக்க வேண்டிய அறபுதமான தளமாக இருக்கும். ஆனால் வலைபதிவில் அதற்கு மதிப்பு இருக்குமா? சொடுக்குவார்களா? மாட்டார்களோ?
ஆனால் நம்ம கதாநாயகன் கவலைப்படவே மாட்டார். மீறிப் பேசுவர்களின் வாயை அடைக்க அடுத்தடுத்து மேலும் இரண்டு தளங்களை இலவச இணைப்பாக வழங்குவார். பாதிப் பேர்கள் கழன்று கொள்வர். மீறிப் பேசுவர்கள் பாதையை மாற்றுவர். ஆனால் அசர வேண்டுமே?
எது குறித்தும் கவலைப்படுவதில்லை.
அவரின் எழுத்தில் விமர்சனத்தில் சொந்த பெயரில் வலைதளங்களில் உலாவும் வீரம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவரின் ஆங்கில அறிவும் அதைவிட ரொம்ப பிடிக்கும். அவர் இந்நியா நாட்டின் மேல் வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையும் எனக்கு
பிடிக்கும்.
ஆனால் உலகம் முன்னேறியது, இந்தியா முன்னேறப்வோவது எப்போதும் நம்ம முதலாளிக்ளால்
மட்டுமே என்ற அவரின் கொள்கையை தான் பஞ்சர் கடையில் பார்க்க வேண்டியிருக்கும் என்று அவருடன் காரசாரமாக விவாதிப்பேன். .
ஆனாலும் நாங்கள் இருவரும் ரொம்ப நாளா டிகிரி தோஸ்த். அதற்கு மேலும் அவர் வீட்டில் அவரின் வீட்டில் வளர்ந்து கொண்டிருக்கும் இரண்டு பையன்களும் இரட்டையர். அதிலும் கொடுமையுண்டு. ஒருவர் ரஜினி ரசிகராம். மற்றொருவர் கமல் ரசிகராம். பாருங்க பசங்கள கூட 30 வருடத்திற்குப் பின்னால் கொண்டு போய் வச்சுக்கிட்டு இவரும் மட்டும் சூர்யா மாதிரி 7வது அறிவு போல யோசிக்கின்றார். ஆனா நம்ம வீட்ல நடிகர் விஜய் கூட வரவர சரியில்லப்பா என்கிறார்கள்.
கடந்த
இரண்டு வருடங்களுக்கு மேலாக நண்பர் அதியமானைத் தெரியும். எழுத்துக்கு அப்பாற்பட்டு
பரஸ்பரம் குடும்ப விசயங்களைக் கூட பேசும் அளவிற்கு நெருக்கமானவர். அதியமானுக்கும்
எனக்கு விவாதம் தொடங்கினால் அதில் பாதிக்கும் மேலே நகைச்சுவை காட்சிகளாகவே
இருக்கும். ஆனால் அவரின் குரல் எப்போதும் உயர்ந்தே இருக்கும். உலகத்தில் உள்ள
கொட்டேஷன் அத்தனையும் மேற்கோள் காட்டி பேசுவார்.
நான் கலாய்த்துக் கொண்டே காலை வாரிவிட்டுக் கொண்டேயிருப்பேன்.
அவர் பேச்சில் முற்றுப்புள்ளியே இருக்காது. எல்லா இடத்திலும் கமா மட்டுமே இருக்கும். அவர் கோபத்தை கூட்ட வேண்டுமென்றால் வேலுப்பிள்ளை பிரபாரகன் போல இனி என் வாழ்நாளில் வேறொருவரின் சரித்திரத்தை படிக்க முடியாது என்று சொல்லிவிட்டு நிறுத்தி விடுவேன். ஒரு நூற்றாண்டு கதையை அப்படியே மூச்சு விடாமல் சொல்லி என்னை தாளித்து விடுவார்.
நாங்கள்
பேசிக் கொள்வதை எவராவது க்ராஸ் டாக் ல் கேட்டால் ரெண்டு பேரும்
அடித்துக் கொள்கிறார்களா? இல்லை பேசிக் கொண்டு இருக்கிறார்களா? என்ற குழப்பம் வந்து விடும் அவரும் மூச்சு விடாமல் பேசிக் கொண்டே போவார்.
நானும் இடையில் கட்டையை போட்டுக் கொண்டேயிருப்பேன். கடைசியில் நீங்க முதலாளியாக இருந்து கொண்டு
முதலாளித்துவத்தை குருட்டாம் போக்கில் எதிர்க்கலாமாஈ என்று முடித்து வைப்பார்.
தொழிலுக்கு அப்பாற்பட்டு பல விசயங்களை அவர் மூலம் தான் ஒவ்வொரு முறையும் நான்
தெரிந்து கொள்வதுண்டு. வலையுலகில் அறிமுகமான வகையில் நான் பார்த்த சிலரில் அதியமானும்
சிறந்த புத்திசாலி தான். சந்தேகமே இல்லை.. இருவரும் ஒரே வயது என்பதால் கூடுதல் உரிமையில் அவரிடம் என் அறிவுக்கு எட்டாத விசயங்களை பல சமயங்களில் கேட்டு கற்றுக் கொண்டு இருக்கின்றேன்.
நானும்
இந்தியாவை முன்னேற்ற புத்திசாலிகள் தான் வேண்டும் என்ற கொள்கையில் தான்
இருந்தேன். மன்மோகன் சிங் ஆட்சிக்கு வந்த
பிறகு அவரைச் சுற்றிலும் உள்ள புத்திசாலிகளை அவர்களின் செயல்பாடுகளை பார்த்தபிறகு நாம்
இனி வாழ் நாள் முழுக்க முட்டாளாகவே இருந்துவிடலாம் என்று தோன்றுகின்றது
நண்பர்
அதியமான் மூலம் தான் எனக்கு எழுத்தாளர் ஞாநி நேரிடையாக அறிமுகமானர். அது வரைக்கும் அவரின் எழுத்துக்கு தீவிர வாசகனாக மட்டுமே இருந்துள்ளேன். அதுவரையிலும் ஞாநி அவர்களுடன் தனிப்பட்ட முறையில் எந்த வகையிலும் அவருடன்
தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை. காரணம் பிரபல்யம் என்ற நிலையில் இருப்பவர்களின் பணிச்சூழல் என்பதை அறிந்தே காரணத்தால் பெரும்பாலும் நானே தேடிச் செல்வதில்லை. மின் அஞ்சல் வழியே உறுதிப்படுத்துதல் இல்லாதபட்சத்தில் மறந்து விடுவதுண்டு.
அதியமான்
ஞாநி அவர்கள் திருப்பூர் புத்தக கண்காட்சிக்கு வருவதாக அழைத்துச் சொன்ன போது அவரை
உபசரிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அலுவலக நெருக்கடியான சூழ்நிலையில் எங்களின்
உரையாடல் மிகச் சுருக்கமாகவே இருந்தது.
சென்னை
சென்று இருந்த போது ஞாநி அவர்களின் வீட்டுக்கு நண்பர் ராஜராஜனுடன் சென்றேன். ராஜராஜன் தான்
பயந்து கொண்டே வந்தார். காரணம் பிரபல்யம் என்ற வட்டத்திற்குள் இருந்தவர்களை அவர்
பார்த்த அனுபவங்கள் அந்த மாதிரி இருந்தது.
ஆனால் நான் தயக்கமில்லாமல் ஞாநி அவர்களின் வீட்டில் அவருடன் உரையாடியது,
பழகியது, அந்த பெரிய வீட்டில் அதிக நேரம் இருந்தது, கேணி நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து நானும் அதியமானும் கட்டிப் புரளாத குறையாக விவாதம் செய்தது என் என் சொந்த வீடு போல உரிமை எடுத்துக் கொண்டு இருந்ததை பார்த்த ராஜராஜனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரும் மெதுவாக கூட்டத்தில் ஐக்கியமானார்.
ஞாநி
அவர்களின் இயல்பான பேச்சு பழக்க வழக்கத்தைப் பார்த்து ராஜராஜன் திரும்பி வரும்
போது பல முறை ஆச்சரியமாக கேட்டார்.
"என்ன இந்த
மனுஷன் இந்த அளவுக்கு அநிநியாத்திற்கு நல்லவராக இருக்கின்றாரே?" என்றார்.
அப்போது நான் அவரிடம் சொன்னது "எண்ணமும்
சொல்லும் ஒரேமாதிரியாக இருப்பவர்களின் வாழ்க்கை எப்போதும் இப்படித்தான்
எதார்த்தமாக இருக்கும்" என்றேன். இன்று வரையிலும் அதே புரிந்துண்ரவு ஞாநி அவர்களுடன் நீடிக்கின்றது. தைரியமாக தயக்கமின்றி அழைக்கலாம். மின் அஞ்சல் அனுப்பினால் அன்றே பதில் வந்து விடும். ஆலோசனை என்பதை எப்போதும் அளவாக கொடுத்து நமக்கு எதார்த்தத்தை புரியவைப்பார். எழுத்துக்கள் மூலம் மட்டுமல்ல அவர் தனிப்பட்ட வாழ்க்கை கொள்கையிலும் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கின்றேன்.
அன்று
சென்னையில் புத்தக கண்காட்சியில் சுப்ரபாரதி மணியன் என்ற பெயர் போட்டுருந்த ஒரு
புத்தகத்தை வாங்கி வந்தேன். பெய்ர தண்ணீர் யுத்தம். இவர் வலைதளத்தை திருப்பூர்
சேர்தளம் அமைப்பில் பார்த்து இருந்த போதிலும் பெரிதான கவனம் செலுத்தியதில்லை.
ஆனால் அந்த புத்தகத்தை ரயிலில் வந்த போதும், வீட்டுக்கும் வந்த போதும் படித்து
முடித்த போது வெயிலான் ரமேஷ் அவர்களிடம் இவரின் அலைபேசி எண் வாங்கி ஒரு
மாலை வேளையில் அவரை அழைத்த போது எனக்கு அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது.
அந்த
புத்தகம் ஒரு சிறுகதை தொகுப்பு. குறிப்பாக இயற்கை சூழ்நிலை, பாதிப்புக்கள்
குறித்து பலவித தாக்கங்களை, கேள்விகளை எழுப்பியது. ஆனால் அதற்கு மேலும் 90 ஆம்
ஆண்டுகளில் திருப்பூரில் நிலவிய தண்ணீர் பஞ்சத்தினை மிக நுணுக்கமாக அதன்
புள்ளிவிபர ஆதாரத்தோடு எழுதியிருந்ததைப் பார்த்து மனதில் வைத்துக் கொண்டே அவரிடம்
பேசினேன்.
ஆனால்
அவர் இருப்பது தொலை தொடர்பு துறையில் உயர் அதிகாரியாக மத்திய அரசு ஊழியாக இருப்பது
தெரிய வந்தது.
இன்னமும் என்னுள் ஆச்சரியம்
அதிகமானது. ஒரு நல்ல தொடர்பு உருவானது. தொடர்ந்து பேசுவதுண்டு. அவரும் அழைப்பார்.
அத்துடன்
திருப்பூருக்குள் நடக்கும் இலக்கியம் சார்ந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து
குறுஞ்செய்தி மூலம் எனக்கு தெரிவிப்பார். பெரும்பாலும் என் வேலை நேர நெருக்கடியில்
போக முடியாது. ஆனாலும் ஒவ்வொருமுறையும் கடமை போல அனுப்பி வைப்பார். எப்போதும் போல இன்று மாலை தமயந்தி அவர்களின்
புத்தக வெளியீட்டு விழாவுக்கு வாங்க என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
அப்போது
தான் திருப்பூரில் டைமைண்ட் திரையரங்கம் அருகே ஒரு இலக்கிய கூட்டத்திற்காக ஒரு
நூலக கட்டிடம் இருக்கிறது என்பதே எனக்குத் தெரிய வந்தது. புதிய தலைமுறையில்
தற்போது பணிபுரியும் தமயந்தி அவர்களின் புத்தகம் அந்த எளிய விழாவில் அறிமுகம்
செய்து வைத்து சுப்ரபாரதிமணியன் பேசினார். அந்த விழாவில் மற்றொரு ஆச்சரியத்தையும்
எனக்குத் தந்தார். நினைவுப் பரிசை என் கையில் கொடுத்து தமயந்தி அவர்களிடம் வழங்கச்
செய்தார்.
சின்ன
உரையாடல், நாலைந்து முறை பேசிய அனுபவம் மட்டுமே, ஆனால் பரஸ்பரம் ஒரு புரிந்துணர்வு
இருவரையும் ஒன்று சேர்த்தது. ஆனால் அவரின் இலக்கிய வட்டமும், நாடுகள்
கடந்து பல இடங்களில் அவரின் ஆளுமையை கண்ட போது மனதிற்குள் ஒரு சின்ன வியப்பு
வந்தது.
என்னடா இந்த மனுஷன் இம்புட்டு இயல்பாக இருக்கிறாரே? என்று.
தமிழ்ச்செடி
விழா என்று முடிவானவுடன் தம்பிகள் இருவரிடமும் இவரைப் பற்றி சொல்லி இவரை அழைப்போம்
என்று சொன்னேன்.
ஆனால் உண்மையிலேயே இவரின்
முழு திறமையும் அப்போது கூட எனக்குத் தெரியாது. ஆனால் பசங்க பின்னங்கால் பிடறி
தெறிக்க ஓடினார்கள். ஆனால் நான் சமாதானப்படுத்தி நீங்க வேணா பாருங்க.
ஆச்சரியப்படுவீங்க என்றேன்.
எப்போதும்
போல அலைபேசியில் விழா குறித்த விபரம் சொல்லி ஞாயிற்றுக் கிழமை வர முடியுமா? என்று
ஒரு நாள் முன்னதாகத் தான் அழைத்து சொன்னேன்.
"நான்
வருகின்றேன். ஆனால் அன்று நெருங்கிய உறவினர் திருமணம் இருக்கிறது. விழா குறிப்பிட்ட
நேரத்திற்குள் முடிந்தால் அங்கிருந்தபடியே சென்று விடுவேன்" என்றார். ஆனால்
விழாவிற்கு வந்தவர் நிகழ்ச்சியை மாற்றிக் கொண்டு விட்டேன் என்று சொல்லி விட்டு
விழாவிற்கு முன்பும் பின்பும் பசங்களுடன் ஒன்றாக கலந்து விட்டார்.
விழா முடிந்து
பசங்க அனைவருமே "சார் ரொம்ப நல்லவரா இருக்காரு என்று சொல்ல நானும்
உங்ககிட்டே சொல்லிக்கிட்டே இருந்தேன்" என்றேன்.
காரணம்
அவர் இதுவரை பெற்ற விருதுகளின் பட்டியல்களை பார்த்து விடவும்.
அறிய சாதனை புரிந்த எளிய மனிதர்
7 நாவல்கள்,
15 சிறுகதைத் தொகுப்புகள்,
2 குறுநாவல் தொகுப்புகள்
,2 கட்டுரைத் தொகுப்புகள்(வெளிநாட்டுப் பயண
அனுபவ நூல் உட்பட) எழுதியுள்ளார்.
சிறந்த சிறுகதைக்கான இந்திய
சனாதிபதி வழங்கிய கதா பரிசு(1993),
சாயத்திரை என்கின்ற
நாவலுக்கான தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு குமுதம் ஏர் இந்தியா நடத்திய
இலக்கிய போட்டியில் சிறந்த குறுநாவலுக்கான பரிசு பெற்று இங்கிலாந்து,ஐரோப்பிய நாடுகளுக்கு
சுற்றுப் பயணம் சென்றிருக்கின்றார்
கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 2002ம் ஆண்டின் சிறந்த
நாவலுக்கான பரிசு. “பிணங்களின் முகங்கள்” என்கின்ற நாவலுக்காக.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கிய பெருமன்றம் வழங்கிய பரிசுகள்
திருப்பூர் தமிழ்ச்சங்க பரிசு
இவருடைய எழுத்துகள்
ஆங்கிலம்(சாயத்திரை). இந்தியிலும் மளையாளம்,
கன்னடம்
போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
படைப்புகள் பல பல்கலைக்கழகங்களில்
பாடநுல்களாகி உள்ளன. மளையாளம்,தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், மற்றும் ஹங்கேரியன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கனவு இலக்கிய இதழை 25 வருடமாக நடத்தி வருகிறார்.
குறுப்படங்கள் திருவிழா, சோற்றுப்பொட்டலம், சுமங்கலி அதுமட்டுமின்றி சாகித்ய அகடாமியின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும்
உள்ளார்
தாய்த்
தமிழ் மழலையர் பள்ளி ஒன்று நடத்திக் கொண்டிருப்பதாக கேள்விப்ட்டு அவர்
வீட்டுக்குச் சென்றேன். அவர் வசிக்கும்
பகுதியில் மிக குறைவான கட்டணத்தில் எளிய மக்களின் குழந்தைகளுக்கு மழலையர் வகுப்பு
முதல் ஐந்தாம் வகுப்பு வரைக்கும் தமிழ்வழி கல்வி பள்ளிக்கூடத்தை பல ஆண்டுகளாக
நடத்திக் கொண்டு வருகின்றார்.
நான் பார்த்தவரைக்கும் புதுக்கோட்டை ஞானாலயா
நூலகத்தைப் போலவே இவரின் வீடு முழுக்க தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து
வரும் அரிய தனி இதழ்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. வீடு முழுக்க புத்தகங்கள்.
ஆனால் அலுவலக வேலை முடிந்து பெரும்பாலும் அத்தனை இதழ்களையும் ஒன்று விடாமல்
வாசித்தும் விடுகின்றார். புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள எழுத்தாளர்களிடம்
இண்க்கமான தொடர்பில் இருப்பதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும் புதிய புதிய
அறிமுகங்கள் அனுபவங்கள் இவருக்கு கிடைத்துக் கொண்டேதான் இருக்கின்றன.
ஆனால் சிலர் வாழ்க்கை எப்போதும் திறந்த புத்தகமாக இருக்கின்றது. எழுதும் எழுத்துக்கள் போலவே அவர்களின் வாழ்க்கையும் எளிமையாக இருக்கின்றது. அந்த வகையில் ஞாநியும், சுப்ரபாரதிமணியன்
அவர்களும் எனக்கு தனிப்பட்ட முறையில் கற்றுத் தரும் ஆசிரியர்களாகவே தெரிகின்றார்கள்.
20 comments:
அன்பார்ந்த ஜோதிஜி,
நீங்கள் தொலைபேசியில் தெரிவித்து தேவியர் இல்லத்திற்குள் நுழைந்து வரச் சொன்னவுடன், உண்மையிலேயே முதல் பிம்பமான அதியமானை தாண்டிச் செல்ல இயலாமல், நகைச்சுவை எழுத்து கண்ணில் நீர் வரும்வரை சிரிக்க வைத்தது. நட்பு என்பது மிக அற்புதமான ஒன்று, அதில் மட்டும்தான் தனக்கு தவறு என தெரிவதை நேரடி தாக்குதலாக நண்பனிடமே தெரிவிக்க இயலும். அந்த வகையில் அதியமானை தாக்கு தாக்கு என கலாய்த்திருக்கிறீர்கள்.
//எதிரிகள் ஒரு பக்கம் இரண்டு பக்கம் இருந்து தாக்குவதில்லை. எட்டுப் பக்கமும் வந்து தாக்கிக் கொண்டேயிருப்பார்கள். அத்தனை பேர்களும் கருத்தியல் ரீதியான எதிரிகள் மட்டுமே. ஆனால் நம்ம கதாநாயகன் அதியமான் அசர மாட்டார். அவர் இதுவரைக்கும் வெள்ளை மாளிகை தளத்தின் இணைப்பைத் தவிர உலகத்தில் உள்ள அத்தனை லிங்குகளையும் அள்ளித் தெளித்து விடுவார்//
நான் பார்த்தவரை swaminamics link தான் அதிகம். உங்கள் எழுத்து நிறைய நட்புகளை பெற்றுத் தந்திருக்கிறது, அந்த வகையில் திரு ஞானி மற்றும் திரு சுப்ரபாரதிமணியன் அவர்களைப் பற்றி விரிவாக எழுதியமைக்கு நன்றி. அதே போல் நீங்கள் எனக்கு அறிமுகப்படுத்திய கிழக்கு பதிப்பக குழுமத்தை சேர்ந்த திரு மருதன் கங்காதரன் அற்புதமான நண்பர். நண்பர் அதியமானும் என்னிடம் சில முறை பேசியிருக்கிறார். திரு மருதனிடம் அதியமான் கட்டுரை வந்ததும்,அதற்கு முற்றிலும் எதிர்வினையாக ஒரு கட்டுரை எழுதுவேன் பிரசுரிக்க இயலுமா என கேட்டதும், கண்டிப்பாக- உடனே அனுப்புங்கள் என்றார் நேற்றிரவு 11 மணிக்கு அனுப்பினேன், இன்று காலை இன்சூரன்ஸ் துறையில் மாநில அளவிலான தொழிற்சங்க தலைவராக இருக்கும் சென்னை திரு சுவாமிநாதன் அவர்களிடமிருந்து எனது எதிர்வினை கட்டுரையை தமிழ்ப் பேப்பரில் பார்த்துவிட்டு பாராட்டு போன் வந்தது. என்னுடைய எழுத்தை சிறிதும் சேர்க்காமல், குறைக்காமல் வெளியிட்டு இருந்தார். கண்டிப்பாக நன்றி பாராட்ட வேண்டும். வலைச்சரம் ஆசிரியர் சீனா (தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் கட்டுரையை பார்த்துவிட்டு பேசினார்) இந்த நிகழ்வுகளெல்லாம் இன்னும் நிறைய எழுதவேண்டும், விவாதிக்க வேண்டும் என்ற ஆவலை அதிகரித்துள்ளது. தொடரட்டும் உங்கள் மற்றும் நமது நட்பு.
வடமொழி எழுத்து வேண்டாம் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. பெயரில் இனிஷியலை எஸ் என போடாதீர்கள்,தமிழில் போடுங்கள் என நீங்கள் அடிக்கடி தெரிவிப்பதால் வடதமிழில் போட்டுள்ளேன்.
சம்பத்.ஸ்ரீ(னிவாசன்)
வணக்கம் ஜீ.
அதியமான் அவர்களை என் முதல் சந்திப்பில் இருவரும் சேர்ந்து அவரை கடுப்பு ஏற்றிவிட்டு அவர் கண்கள் சிவக்க, மூச்சு விடாமல் பேசியதும், அவரை மேலும் மேலும் வம்பு இழுத்ததும் நிழலாடுகின்றது.
இரண்டாவது சந்திப்பில் அவர் என்னை என் வாழ்வின் அதிதீவிரமான பொருமையை கைகொள்ள வைந்து, என் மூக்கு விடைக்க, கண்கள் சிவக்க ஊமையாக இருக்க வைத்தது எனக்கு பல நேரங்களில் எனக்குள் தெறித்து விழும்.
உங்களுடன் வந்து ஞாநி-யை பார்ந்த நியாபகங்கள் வருகின்றது.... அதற்கு பிறகு நான் அவர் வீட்டுக்கு செல்லவே இல்லை..... போகனும்.........
ஆமா... இன்றுதான் ரோம்ப நாட்களுக்கு பிறகு உங்கள் தளத்தை நிதானமாக பார்த்தேன், நிறைய மாறி இருக்கு நானும் படிக்க புதிதாய் நிறைய இருக்கு.
'மறக்க முடியாத நினைவுகள்'. நண்பர்கள் கூ வரம் என்பதுதான் இல்லையா? பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு அடுத்து நம்மை வழிநடத்துபவர்களில் நண்பர்களுக்கும் முக்கிய இடம் உண்டுதானே ஜோதிஜி!
நமக்கெல்லாம் யாரையுமே தனிப்பட்ட முறையில் தெரியாது (பிரபலங்களும் சரி, சாதாரண பதிவர்களும் சரி), அதனால மனதில் பட்டதை அப்படியே கூசாமல் சொல்லிப்புடுறது.. என்ன இது ஒரு கருத்துச்சண்டைதான்..அதியமான் மற்றும் ஞாநியை சில வாதங்களில் சந்தித்ததுண்டுதான். வெறும் பிரதிவாதியாக மட்டும்தான்! :)நம்முடம்ன் எதிர்வாதம் செய்பவர்கள் உண்மையிலேயே "உயர்ந்தவர்களாக" "நற்பண்பு உள்ளவர்களாக"வும் இருக்கலாம் என்பது நிச்சயம் தெரியும். என்னைப் பொறுத்தவரையில் கருத்துச் சண்டை, எதிர் கருத்து, விவாதம் என்று வரும்போது தெரிந்தவர், நண்பர், நல்லவர் என்பவை ஒரு மாதிரியான தடைக்கற்கள்தான். அவை இல்லாமல் இருப்பது எந்ஹ்ட ஒரு விவாதத்திற்கும் நல்லது. விவாதம் என்பது பல உண்மைகளை அள்ளிப்போட்டு அலசுவது. அதன் முடிவில் நமக்குக் கிடைப்பது பல உண்மைகள். வாதிட நாம் தோண்டி எடுத்தது. நம் அறியாமையைப் போக்க எதிர்வாதம் செய்பவர் தோண்டி எடுத்ததும். அம்புட்டுத்தான்.
அதே சமயத்தில் நாம் அபப்டி விவாதிக்கும்போது பிரபலங்களையும் பதிவர்களையும் தடிப்பட்ட முறையில் நன்கு அறிந்தவர்கள் வந்து "மறைந்திருந்து வேடிக்கை பார்க்கும்போது" நாம் தாறுமாறாக எதிர்வாதம்/விமர்சிப்பது கண்டு நம்மேல் எரிச்சலும், கோபமும் ஏன் தர்மசங்கடமும் வரலாம்தான்! :) "It is not personal, just a debate!" என்கிற புரிதல் நம்மிடம் இருப்பது பல சமயங்களில் அவர்களுக்குப் புரியாது! Blog life is sort of complicated I would say! :-)
தமிழ்ச்செடி விழாவில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சியெ...
வில்லாதி வில்லன் நீங்க. எம்பூட்டு விசயங்களை உங்கள் தளத்தில் எழுதிவிட்டு பேசச் சொன்னால் மட்டும் பம்முறீங்க. அடுத்த முறை உங்களுக்கென்றே ஒரு தலைப்பு ரெடியா இருக்கு சாமீயோவ்.
கொள்கை ரீதியாக கடினமாக இருப்பவர்கள் தனிப்பட்ட முறையில் மிகத் தெளிவான புரிதலுடன் இருக்கிறார்கள் வருண். நான் பார்த்தவரைக்கும். தெளிவான நீண்ட விமர்சனத்திற்கு நன்றி வருண்.
நண்பர் சொன்னது போல உறவுக்குள் கூட அதிகம் பேச முடியாது. அது பிரச்சனையில் தான் முடியும். ஆனால் நட்புக்குள் எல்லை என்பதே இல்லை தானே. பரஸ்பரம் புரிதல் தான் அதன் எல்லை. நன்றிங்க.
என்ன ஆச்சு? எழுதிக் கொண்டிருப்பது முடிவுக்கு கொண்டு வந்தாச்சா?
அதியமான் என்றாலே ஆழமான நட்பு என்று அர்த்தம் சம்பத். மகளுக்கு என் வாழ்த்துகள்.
அருமையான பதிவு.
நன்றி. வாழ்த்துகள்.
ஜோதிஜி,
அதியமான், போல விவாதம் செய்வது எளிது :-))
சில ஆங்கில காபி& பேஸ்ட்கள்,சுட்டிகள்,சொன்னதையே திரும்ப சொல்லிக்கிட்டு இருப்பார்,அதனால் தான் யாரும் இப்போ அவரோடு பெரிதாக விவாதம் செய்வதில்லைனு நினைக்கிறேன்.
அவரோடு சில சமயம் பதிவில் விவாதம் செய்துப்பார்த்துவீட்டு, அரைச்ச மாவை அரைக்கும் தொழில்நுட்பம் நமக்கு சரி வரலைனு விட்டாச்சு.
ஜோதிஜி,
அனைவருடனும் உங்கள் அனுபவங்களை நன்றாக சொல்லியுள்ளீர்கள், நீங்க ரொம்ப பொறுமை சாலின்னு நினைக்கிறேன்.
அருமையான பகிர்வு...
வாழ்த்துக்கள்...
நீங்க எந்த அர்த்தத்தில் எழுதியிருந்தாலும் இந்த வருடம் பெற்ற கற்றுக் கொண்ட மிகப் பெரிய சொத்து இது வவ்வால். வருடத்தின் இறுதியில் இதைப்பற்றி எழுதுகின்றேன்.
நன்றி குமார்
நன்றிங்க
Vavval,
That is your opinion while Jothi and others differ. I can easily use the same words for your posts !!! I prefer informed debates to shallow rhetoric.
vavval :
try my post here at :
http://www.tamilpaper.net/?p=4130
then prove that i am repeating my arguments.
நன்றி அதியமான். வவ்வால் நம்ம பங்காளி தான். நோ டெஞ்சன்.
Post a Comment