Sunday, November 21, 2010

பெண்கள் சு...... தந்திரம்

ஏன் இப்படி?

இந்த கேள்வி ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்து முடிந்தபிறகு தான் நம்மை பலவிதமாக யோசிக்க வைக்கும்.

அடுத்த பதிவைக் காணவில்லையே என்று யோசித்தவர்களுக்கு மட்டும்?

திடீரென்று என்னுடைய ஒரு விரலுக்கு வந்த பிரச்சனை எனக்கு பல விதங்களிலும் உதவியது.  


கலாச்சாரம் குறித்த அத்தனை எழுத்துக்களையையும் வாசிக்க முடிந்தது. ஆனால் மொத்தத்திலும் என்னை ரொம்பவே ஆசுவாசப்படுத்தியவர் நசரேயன்.  ஹாலிவுட் பாலாவிற்குப் பிறகு அவரின் பணியை இவர் எடுத்துக் கொண்டு கலக்கிக் கொண்டுருக்கிறார். 

பெண்கள் குறித்த தலைப்பு எழுத காரணமாக இருந்தவர் ரதி கனடா.    ஆனால் முகுந்த அம்மா நான் எழுதியதை படித்து முடித்தவுடனேயே அவர் ஒரு இடுகையாகவே போட்டு விட்டார். ஆனால் சகோதரி ஜெயந்தி கலாச்சாரத்தை மட்டும் பிடித்துக் கொள்ள பதிவுலகத்தில் புயலும் சூறாவளியுமாய் மாறி அது ப்ரியமுடன் வசந்த கொடுத்த தலைப்பு வரைக்கும் வந்து நின்றது.  இன்னமும் தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்கிறது.

திருப்பூருக்குள் விடாமல் கலங்கடித்துக் கொண்டுருக்கும் மழையைப் போலவே இன்னும் கரையை கடக்காமல் பயமுறுத்திக் கொண்டுருக்கிறது. "நல்லவேளை நாளை பிழைத்துக் கொண்டேன்" என்று பாட வேண்டும் போலுள்ளது.  விந்தை மனிதன் என்ற ராசா மட்டும் இதை தெளிவாக கண்டுபிடித்து நீங்க தொடங்கி வைத்தது என்று "இனம் கண்டு கொண்டு" அழைத்துச் சொன்ன போது தான் தாமதமாக புரிந்து கொண்டேன். 

எப்போதும் தேனம்மை அவசரமாக வந்து செல்பவர் கூட ரொம்ப சிந்திக்க வைத்த பதிவு என்று தடவி கொடுத்து விட்டு நாம் என்ன நீதிபதிகளா? என்று நங்கெண்று ஒரு கொட்டு வைத்து விட்டு இரண்டு மூன்று நாட்கள் யோசிக்க வைத்துவிட்டார்.

அதிக நபர்கள் விமர்சனம் அளித்து ஒவ்வொருவரும் கடைபிடித்த நாகரிகம் ரொம்பவே வியக்க வைத்தது.  பயணமும் எண்ணங்களும் இதை வேறொரு பாதையில் விடாப்பிடியாக அவரின் புரிதல்லைகளை மிகத் தைரியமாகவே இடுகையிலும் பல பின்னூட்டங்களிலும் துணிச்சலுடன் தெரியப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்.

இந்த இடுகை கேள்வி பதில் போல கொண்டு போக முடியும். ஆனால் அதை கடைசியாக வைத்துக் கொள்வோம். 

தெகா வசிக்கும் அமெரிக்காவில் உள்ள ஒரு மாநிலத்தைப் பற்றி ஒரு சிறப்புக்கட்டுரை இங்குள்ள ஒரு பத்திரிக்கையில் வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.  அமெரிக்காவை பார்க்காத எனக்கு அது ஒரு செய்தி மட்டுமே. கூர்ந்து படிப்பவர்களுக்கு எழுதியவரின் வார்த்தை ஜாலங்களை மனதில் குறித்து வைத்துக் கொள்ளமுடியும்.  ஆனால் அந்த மாநிலத்தில் நீண்ட காலம் இருந்தவர்களுக்கு அந்த கட்டுரையில் கொடுக்கப்பட்ட நம்பகத்தன்மை எளிதில் புரிந்து விடும். இந்த உதாரணத்தை வைத்துக் கொண்டு கலாச்சாரம், சுதந்திரம், பெண்கள் போன்ற வார்த்தைகளை மனதில் கொண்டு வாருங்கள். ராஜ நடராஜன் கூட ஒரு பதிலில் நீர் ஆகாரம் சாப்பிட்டு வந்து இருக்கின்றேன். நீங்க அசைவத்தைக் காட்டி பயமுறுத்துறீங்களே? என்றார். ஏன் வெளிநாட்டில்  வந்து செட்டிலாகிவிட்டேன். நான் பர்கர் மட்டும் தான் சாப்பிடுவேன் என்று பீலா விட வேண்டியது தானே? உள்ளும் புறமும் ஒரே மாதிரி வாழ வேண்டும் என்று நினைப்பவர்களின் வார்த்தைகளில் தெளிவு இருக்கும். 

இல்லாத போது?

நண்பர் சொன்னமாதிரி கூகுள்காரன் காசு கேட்காத வரைக்கும் தோன்றியவற்றையெல்லாம் எழுதி "சேவை" செய்து கொண்டுருக்க வேண்டியது தான்.

வெளிநாட்டில் வாழ்ந்தாலும் பலருக்கும் அடிப்படையான குணாதிசியங்கள் ஏன் மாறமாட்டேன் என்கிறது. காரணம் நம்முடைய வேர்கள் எவ்வாறு ஊன்றி இருக்கிறதோ அது தான் இந்த கலாச்சாரம்,பெண்கள் சம்மந்தப்பட்ட புரிதல்கள்.

நான் இருக்கும் நாட்டில் எத்தனை புரிந்துணர்வுடன் இருக்கிறார்கள்? கொஞ்சம் மேலே வாங்கப்பா? என்று சொல்லிக்கொண்டுருப்பவர்களுக்கு மட்டும் ஒரு செய்தி.

சற்று நேரத்திற்கு முன் குழந்தைகளுடன் தொலைக் காட்சியில் பிதாமகன் படத்தை பார்த்தேன். பல முறை பார்த்திருந்த போதிலும் ஒவ்வொரு முறையும் புதிதாக பார்ப்பது போலவே இருக்கும். குழந்தைகள் படத்தில் வந்த சூர்யா இறந்து போனபிறகு வரும் காட்சி தொடர்பாக மூன்று பேர்களும் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே யிருந்தார்கள்.  இறப்பு, துக்கம், சடங்கு, எறியூட்டல், மயானம், பிணம், மனித வாழ்க்கை போன்ற பல விசயங்களை பொறுமையாக புரியவைத்தேன். 

சில மாதங்களுக்கு முன்பு வன்முறை காட்சிகளை பார்த்து விட்டு குழந்தைகள் மாறி மாறி நடு இரவில் அலறிய நிகழ்ச்சிகளும் நடந்ததுண்டு.  அவர்களின் சுதந்திரத்தை தடை செய்ய விரும்பாமல் அதே சமயத்தில் அசந்தர்ப்பவிதமாக பல விதங்களிலும் அவர்கள் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாலும் அந்த காட்சிக்குப் பின்னால் நடிப்பவர்கள் எந்த விதமாக தங்களை தயார் படுத்திக் கொள்கிறார்கள்? நடிப்பு என்பது என்ன?  அவர்களுக்கு கிடைக்கும் சம்பளம்?  நாம் ஏமாறுவது எப்படி? போன்ற பல விசயங்களை புரியவைத்த பிறகு இப்போது சற்று மட்டுப்பட்டு இயல்பாக பார்த்துக் கொண்டே அப்பா டூப்பு சாயத்தை போட்டுக் கொண்டு தானே நம்மை ஏமாற்றுகிறார்கள்? என்று சிரித்துக் கொண்டு சொல்லும் அளவிற்கு அவர்களை மாற்ற முடிந்ததுள்ளது.  

இவர்களே மறுநாள் பள்ளியில் குழந்தைகளுகளுடன் உரையாடும் போது இதில் பெரிதான பிரச்சனை வர வாய்ப்பு இருக்காது.  ஆனால் மேலை நாட்டினரைப் போல நானும் என் குழந்தைகளுக்கு பாலியல் விசயங்களை புரியவைக்கின்றேன் என்று முயற்சிக்கும் போது?

அவர்களுக்கு புரிகின்றதோ இல்லையோ அவர்கள் எத்தனை பேர்களுடன் உரையாடி இதனால் எந்த விதமான பிரச்சனைகள் உருவாகும் என்பதை நினைத்துப் பார்க்கமுடிகிறதா?  குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட விசயங்களை புரிந்து கொண்டாலே போதுமானது. 

எல்லாவற்றையும் புரிய வைக்க முயற்சிக்கும் போது தலைகீழ் விதிகள் தான் இடுகை வரைக்கும் வந்து நிற்கும்.

காரணம் இது தமிழ்நாடு.

இங்குள்ளவர்களைப் பற்றி, இங்குள்ள வாழ்க்கை நடைமுறைகளைப் பற்றி யோசிக்கும் போது எல்லாவிதங்களையும் யோசித்துதான் எழுத வேண்டியதாய் இருக்கிறது.  பெரும்பாலும் மனதில் வக்கிர சிந்தனைகள் அதிகமாக இருப்பவர்கள் தங்களை பரிசுததமானவர்களாகத்தான் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் மட்டும் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை. இதைப் போலத்தான் கலாச்சாரம் என்ற கருமாந்திரமும்.

ஒவ்வொருவரும் பதிவின் வாயிலாக இப்படி சொல்லியுள்ளார்கள் என்பதை விட என் பார்வையில் என்னுடைய குழந்தைகளுக்கு கல்வி அறிவைப் போல வாழும் சமூகத்தோடு எவ்வாறு இசைந்து வாழ பழகிக் கொள்கிறார்கள் என்பதில் அவர்களின் வெற்றியும் இருக்கிறது என்பதை பல விதங்களிலும் 
புரிய வைக்க முயற்சிக்கின்றேன்.


அவர்களின் வாழ்க்கை எந்த நாடு என்பதில் பிரச்சனையில்லை? அவர்களின் அடிப்படை வேர்களை புரிந்து இருந்தால் வாழும் வரைக்கும் பிரச்சனை இல்லை.  குறிப்பாக பெண்களுக்கு இது முக்கியமானது. இதில் ஆணாதிக்கம் என்ற அரைவேக்காட்டுத்தனத்திற்கு என்னிடம் பதில் இல்லை.

கெட்டுச் சீரழிய புதிதாக எவரேனும் சொல்லிக் கொடுக்கத்தான் வேண்டுமா? 

வாழ்ந்த கிராமத்தில் ஒரு விதமாகவும் வந்து சேர்ந்த தொழில் நகரத்தில் ஒரு விதமாகவும் வாழ்ந்து கொண்டுருக்கும் பல ஆயிரம் பெண்களை பார்த்துக் கொண்டு இருப்பதால் இதை எழுதி வைக்கத் தோன்றுகிறது.

ரதி நீங்கள் கேட்ட" உங்கள் பார்வையில் பட்ட பெண்கள் என்றால் இந்த கட்டுரை சிறப்பானது" என்று கலாய்த்த விதத்திற்கு இவ்வாறு தான் என்னால் யோசிக்க முடிகின்றது.  நான் வாழ்ந்து கொண்டுருக்கும் ஊரின் மற்றொரு சிற்ப்பு என்ன தெரியுமா? 

இந்தியாவில் உள்ள மொத்த மாநில மக்களையும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மக்களையையும் பார்த்துக் கொண்டுருப்பது மட்டுமல்ல. தொழில் சார்ந்த நடவடிக்கைகளில் பல சமயங்களில் பல ஆயிரக்கணக்கான மக்களுடன் பழகி வர வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றேன். இங்கு சமீப காலமாக பெண்களை மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்வது  என்பது ஒரு கலாச்சாரமாக மாறிக் கொண்டுருக்கிறது. 

எங்கெங்கு காணிணும் பெண்களே" என்பது போல ஒவ்வொரு ஏற்றுமதி நிறுவனங்களும் பெண்களால் நிரம்பி வழிந்து கொண்டுருக்கிறது. . ஒரு பத்திரிக்கையாளர் தேடிச் சென்று பெறுகின்ற அனுபவத்தை அன்றாட வாழ்க்கையில் இவர்கள் இத்தனை பேர்களும் எனக்கு தந்து கொண்டுருக்கிறார்கள். இதன் தாக்கம் தான் பெண்களைப் பற்றி யோசிக்க உதவியது. இதைவிட உரைகல் வேறு எதுவும் வேண்டுமா? 

இது குறித்து பல விசயங்களையும் கடைசியாக பேசுவோம். 

சென்னையிலிருந்து திருப்பூருக்கு வருவதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். முன் பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டி திறப்பதற்கு இன்னும் அரைமணி நேரம் இருந்தது. என் கையிலிருந்த புத்தக சுவாரஸ்யத்தில் என்னருகே வந்து அமர்ந்த பெண்னை நான் கவனிக்க வில்லை. வினோதமான நறுமணம் என் நாசியைத் தாக்க மெதுவாக நிமிர்ந்து பார்த்தேன். அவருடைய இளமையும் முக வசீகரமும் கவர்வதாய் இருந்தது. அவரை நிமிர்ந்து பார்த்த போது லேசாக முறுவலித்தார். நானும் புன்னகைத்து விட்டு மறுபடியும் புத்தகத்தில் மூழ்கிப் போனேன். இடைவிடாமல் கைபேசியில் பேசிக் கொண்டேயிருந்தார்.


அவர் வைத்திருந்த இரண்டு தொலைபேசிகளிலிருந்தும் மாறி மாறி அழைப்புகள் அவருக்கு வந்தபடியே இருந்தது.  என்னுடைய முழுக் கவனத்தையும் வாசிப்பில் கொண்டு போக முடியவில்லை. எனக்கு அறிமுக மில்லாதவர்களுடன் பேசும் பழக்கமில்லை. அவரை அசுவாரஸ்யமாக கவனித்துக் கொண்டேயிருந்த என்க்கு திருப்பூரிலுள்ள குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரை சொல்லி " அவர்கள் எப்போது நம்முடைய சாம்பிள் பீஸ் தருவார்கள்?" என்ற போது தான் அவரை முழுமையாக கவனிக்கத் தொடங்கினேன். நான் கையில் வைத்திருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு வேறு பக்கம் திருப்பி வேடிக்கை பார்ப்பது போல் அவர் உரையாடலை கவனிக்கத் தொடங்கினேன்.

தொடர்ந்து அவர் பேசிக் கொண்டுருந்த தொலைபேசி உரையாடலில் திருப்பூரில் உள்ள குறிப்பிட்ட டையிங் நிறுவன பெயரை சுட்டிக் காட்டி பேசிய போது நேரிடையாகவே அவருடன் பேசிவிட வேண்டுமென்ற ஆவல் உருவானது. பெண் என்பதால் யோசித்துக் கொண்டுருந்த போது ரயில் பெட்டி திறக்கப்பட என்னுடைய படுக்கை இருக்கையில் போய் அமர்ந்த போது மற்றொரு அதிர்ஷ்டம் என்னைப் பார்த்து சிரித்தது. அந்த பெண்ணின் இருக்கையும் எனக்கு நேர் பக்கம் இருந்தது.

அவர் மடிக்கணினியை திறந்து அரைமணி நேரம் பார்த்து முடித்து விட்டு அலைபேசிகளை கொண்டுவந்திருந்த பையில் வைத்து விட்டு என்னை நோக்கினார். நீங்களும் திருப்பூரா? என்ற அவரின் கேள்வி எனக்கு திகைப்பாய் இருந்தது.  என்னுடைய பதிலை எதிர்பார்க்காமலேயே " நீங்கள் மனைவியுடன் உரையாடியதை வைத்தே கண்டு கொண்டேன்.  காரணம் அந்த நேரத்தில் திருப்பூரில் மட்டுமே இந்த ரயில் நிற்கும்." என்றார்.  

எனக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியுமாய் இருந்தது.  தன்னுடைய வேலைகளை கவனித்துக் கொண்டே தன்னருகே சுற்றிலும் உள்ள விசயங்களையும் கூர்மையாக கவனிக்கும் அவர் எனக்கு சற்று வினோதமாக தெரிந்தார். 

பாலு மகேந்திரா கதாநாயகிகளைப் போல இயல்பான கருப்பு நிறமும் வெள்ளை நிற சுடிதாருமாய் பக்கத்து விட்டு பெண்மணி போலவே தெரிந்தார். உடைகளில் பேச்சில் தெளிவும் நாகரிகமும் இருந்தது.  என்ன பேசுவது என்று யோசித்துக் கொண்டுருந்த போதே அவரே உரையாடலை தொடங்கினார்.  

38 comments:

Thekkikattan|தெகா said...

ம்ம்ம்... தொடருங்க, ஜி... வாசித்துக் கொண்டே வருகிறேன். இப்பொழுது சாப்பிட்டது இட்லியும் அயீர மீன் குழம்பும் :) - சும்ம தகவலுக்காக!

Thekkikattan|தெகா said...

இன்னொன்னும் சொல்ல விட்டுப்போனது - நேத்து மதிய உணவிற்கு வெளியில சாப்பிட்டேன் அது சிக்கன் சாண்ட்விச் வித் கர்லீ ஃப்ரைஸ் இரண்டுமே செரிக்கிது, சோ நான் குளோபல் குடிமகனாகிட்டேனோ ;-) ...

Bibiliobibuli said...

Uh....M..M...M ..... அசத்துங்க, அசத்துங்க!!!!!

உங்கள் விரல் அடிபட்டதுக்கு கீழே இருக்கிற model/diagram பார்த்தேன். பெண்கள், கலாச்சாரம் குறித்த உங்கள் வாசிப்பு, புரிதல், விரலுக்கு நேர்ந்த கதியோடு..... Mission, consistency, involvement, adaptability......External Focus, Intenal Focus... இவ்வளவு சீரியஸாக சொல்லியிருக்கிறீர்கள். :)))

vinthaimanithan said...

சுவாரஸ்யமா இழுத்துட்டு போயி சட்டுனு ப்ரேக் போடுறீங்க ஜி!

vinthaimanithan said...

திருப்பூரை மையமாக வைத்து ஒரு சிறுகதை சீரிஸ் எழுதுங்களேன். உங்களால் முடியும்.

ஹேமா said...

ஜோதிஜி...கை சுகாமயிடிச்சு போல !

"வாழ்க்கை எந்த நாடு என்பதில் பிரச்சனையில்லை? அவர்களின் அடிப்படை வேர்களை புரிந்து இருந்தால் வாழும் வரைக்கும் பிரச்சனை இல்லை.குறிப்பாக பெண்களுக்கு இது முக்கியமானது."

சரியாகத் தொடங்கி ஏன் அநியாயமா முடிச்சிருக்கீங்க இந்த வசனத்தை?ஏன் ஆண்களும் அடிப்படை வேர்களை நினைக்கத்தானே வேணும்.கொஞ்சக் காலமா ரொம்பக் கோவமா இருக்கீங்க பெண்கள்மேல !

ஜோதிஜி said...

ஹேமா ரதி

நீங்கள் கொடுத்துள்ள விமர்சனம் அடுத்து வருபவர்களுக்கு அல்வா துண்டு போல வேறு பக்கம் நகர்த்தி விடும் என்பதற்காக இந்த பதிலுரை.

இந்தியாவில் சமீப அரசியல் தலைப்பு செய்தியாக ஒரு ஜீ ஓடிக்கொண்டுருக்கிறது. என்ன ஜீ என்று தெரிய வேண்டுமென்றால் உண்மைத் தமிழன் இடுகையை படித்துப் பாருங்கள். இதில் உள்ள ஊழல் விசயங்களை விட மற்றொரு விசயத்தை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

திருமதி கனிமொழி. தெரியும் தானே?

கடந்த ஒரு வருடங்மாக இங்குள்ள எந்த முதலாளிகளிடம் பேச உட்கார்ந்து பேச ஆரம்பித்தாலும் எல்லாவற்றையும் பேசி முடித்ததும் இவரின் பெயரில் வந்து முடித்து பல விதங்களையும் தாங்கள் நேரிடையாக பார்த்தது போல பேசத் தொடங்குவார்கள். நானும் பொறுமையாக கேட்டு விட்டு பதில் பேசாமல் நகர்ந்து விடுவேன்.

அதென்ன அரசியலில் அல்லது ஒழுக்கத்தில் ஆண் பெண் என்ற பாகுபாடு? முன்னால் ஆண்ட பெண்மணியே மகள் மனம் கவர்ந்தவர் என்று லஜ்ஜை இல்லாமல் பொதுக்கூட்டத்திலும் பேசினார்.

இப்போது சொல்லுங்க. பெண்களுக்கு யார் முதல் எதிரி? அப்புறம் எங்கே போய் சுதந்திரம்? வெறும் தந்திரமாகத்தான் தெரிகிறது.

ஆண்களின் அயோக்கியத்தனத்தை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்வதேயில்லை. அவன் ஆம்பிள்ளை என்று ஒற்றைச் சொல்லில் கொண்டு போய் நிறுத்திவிடுகிறார்கள்.

அதே சமயம் பெண் என்றால்?

ஜோதிஜி said...

தெகா உங்க நக்கலுக்கு அளவேயில்லையா?

அயிரை மீன் உதாரணம் சரியில்லை. அதை எந்த வகையிலும் பொட்டலமாக அமெரிக்காவிற்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை. ஒரு வேளை இருந்தால் தெரியப்படுத்துங்களேன் (?)

இயற்கை நேசி|Oruni said...

அட! ஜோதிஜி, கிடைக்குதுங்க (frozen fish coming from Kerala) நம்புங்கங்க. அவ்வ்வ்வ்... உண்மையாவே சாப்பிட்டேன். :)

ஜோதிஜி said...

தெகா மற்றொரு தளமா? மற்றொரு தொழில் வாய்ப்புக்கான அரிச்சுவடியை கொடுத்து இருக்கீங்க. இது குறித்து மீண்டும் பேசுவோம்.

Bibiliobibuli said...

ஜோதிஜி,

உங்கள் பதிவையோ விமர்சனத்தையோ திசை திருப்பும் நோக்கம் எனக்கு அறவே கிடையாது. ஹேமாவுக்கும் அப்படி எண்ணம் இல்லை என்றே நம்புகிறேன்.

//உங்கள் விரல் அடிபட்டதுக்கு கீழே இருக்கிற model/diagram பார்த்தேன். பெண்கள், கலாச்சாரம் குறித்த உங்கள் வாசிப்பு, புரிதல், விரலுக்கு நேர்ந்த கதியோடு..... Mission, consistency, involvement, adaptability......External Focus, Intenal Focus... இவ்வளவு சீரியஸாக சொல்லியிருக்கிறீர்கள். :)))//

உங்கள் விரலில் அடிபட்டதிற்கு இப்படி model போட்டு சீரியசாக சொல்லியிருக்கிறீங்க என்பதுதான் நான் சொல்ல நினைத்தது. எப்படியோ அது தவறான புரிதலை கொடுத்துவிட்டது.

I apologize for that.

எண்ணங்கள் 13189034291840215795 said...

சுவாரஸ்யமா வாசித்துக்கொண்டிருக்கும்போது ஏன் பிரேக் போட்டீங்க.. சீக்கிரம் தொடருங்க..

உங்க புரிதலில் , பார்வையில் எதிர்பார்ப்பில் உங்க கருத்து நன்றே...ஏனெனில் நீங்கள் சந்திக்கும் பெண்கள் , அவர்தம் நிலை அப்படி..

"பயணமும் எண்ணங்களும் இதை வேறொரு பாதையில் விடாப்பிடியாக அவரின் புரிதல்லைகளை மிகத் தைரியமாகவே இடுகையிலும் பல பின்னூட்டங்களிலும் துணிச்சலுடன் தெரியப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்."

நன்றி ஜோதிஜி..இன்றும் எழுதினேன் சில விபரத்தோடு..

http://punnagaithesam.blogspot.com/2010/11/3.html

நம் கலாச்சாரம் மேலை நாட்டை விட பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்ககூடியதாகவே இருந்தது.. சங்க காலத்திலும்.. இன்னும் பழங்குடியிலும்..

ஜெயந்தி said...

இன்ட்ரஸ்ட்டா போகுது தொடர். ஹேமா சொன்னது சரியே. பெண் மட்டுமே வேரைப்புரிந்துகொண்டு அவள் ஒரு கலாச்சாரத்திலும் ஆண் புரிந்துகொள்ளாமல் வேறுவிதமாக வாழ்ந்தால் அது எப்படி சரியான வாழ்க்கையாக இருக்க முடியும். வண்டியின் இரண்டு மாடும் சரியாக சென்றால்தான் ஊர்போய்ச் சேர முடியும்.
மீதியும் அறிய ஆவல்.

Unknown said...

மீண்டும் சொல்கிறேன், திருப்பூரில் ஒரு நான்கைந்து மாதங்கள் குப்பை கொட்டி பாருங்கள் உங்கள் அனைவரின் கருத்தும் ஜோதியின் கருத்தோடு ஒன்றி போகும்.

Thomas Ruban said...

//இங்குள்ளவர்களைப் பற்றி, இங்குள்ள வாழ்க்கை நடைமுறைகளைப் பற்றி யோசிக்கும் போது எல்லாவிதங்களையும் யோசித்துதான் எழுத வேண்டியதாய் இருக்கிறது.//

புரியுது சார்...

http://thavaru.blogspot.com/ said...

வாழ்வின் தேவை பொருள் ஆதார இடர்பாடுகளே பெண்களும் வேலைக்கு செல்லவேண்டிய நிர்பந்தம்.
தங்கள் கையில் காசு புரள ஆரம்பித்தவுடன் நிறையபெண்கள் தன்னுடைய சுதந்திரத்திற்கு தவறான அர்த்தங்கள் கற்பித்து கொண்டுவிடுகிறார்கள். விதி விலக்கும் உண்டு.

பெண்கள் பற்றியோ அல்லது பெண்கள் சுதந்திரம் பற்றியோ தாங்கள் எந்த கருத்தை சொன்னாலும் ஆதரவாக பத்து என்றால் எதிராகவும் பத்து இருக்கத்தான் செய்வார்கள்.

எனக்கு என்னவோ பெண்களுடைய புரிதல்களில் தான்

தவறு இருப்பதாக தெரிகிறது அன்பின் ஜோதிஜி.

தொடருங்கள்...

இளங்கோ said...

மீதிய சீக்கிரம் எழுதுங்க ஜோதிஜி..
வெயிட் பண்ணிட்டு இருக்கோம் :)

எஸ்.கே said...

தொடருங்கள்!

Unknown said...

தொடருங்கள்....நாங்களும் உஙகளுடன் சேர்ந்து சிந்திக்கிறோம்..

Ravichandran Somu said...

முக்கியமான விசயத்தை பத்தி பேசுறீங்க... நானும் கேட்டுக்கொள்கிறேன்:)

வழக்கம்போல் சிந்தனையைத் தூண்டும் எழுத்து!

லெமூரியன்... said...

:) :) :) :)
பாவம் நண்பா அந்த புள்ள..(ஹேமா)
ரொம்ப சீண்டி விட்ராதீங்க....
அப்புறம் இன்னொரு சுத்து எல்லாரும் பதிவு போட வேண்டி வந்தாலும் வரலாம்.......
:) :) :) :) :) (சும்மா கலாய்க்கிறேன்..தயவு கூர்ந்து யாரும் தப்பா எடுத்துகிட்டு பதிவு போட கெளம்ப வேணாம்)

நண்பா??? அழகான ரயில் பயணம்...எதிர்ல அழகான பொண்ணு வேற...!
எதிர்பார்ப்பை கூட்டிட்டு இப்டி நிறுதித்னா நியாயமா????
:) :) :)

லெமூரியன்... said...

கை நல்லயிருச்சா நட்பு???

Unknown said...

அப்புரம் அந்த அம்மா கிட்ட இலங்கை பிரச்சன்னை பத்தி பேசினீங்களா?

'பரிவை' சே.குமார் said...

அசத்துங்க..!
அசத்துங்க..!!

கை சரியாகிவிட்டதா..?

Thenammai Lakshmanan said...

பெரும்பாலும் மனதில் வக்கிர சிந்தனைகள் அதிகமாக இருப்பவர்கள் தங்களை பரிசுததமானவர்களாகத்தான் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் மட்டும் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை. இதைப் போலத்தான் கலாச்சாரம் என்ற கருமாந்திரமும்//

உண்மை ஜோதிஜி..

Thenammai Lakshmanan said...

தொடரும் போட சரியான இடம்.. ஏன் அப்பு நீங்க திருப்பூரைப் பத்தி ....சந்திச்சு வரும் ஆயிரக்கணக்கான மக்கள் பத்தி ஒரு டெலிதொடர் எழுதலாமே.. நிறைய தெரிந்து இருப்பது ., மற்றும் நிறைவாக பகிரத் தெரிவது.. உங்கள் பலம்

ராஜ நடராஜன் said...

லிவிங்க் டு கெதர் கலாச்சாரத்துக்கு வத்தி வச்சது நீங்கள்தானா?அவ்வ்வ்வ்வ் போட்டுக்கிறேன்.

சுடுதண்ணி said...

//பெரும்பாலும் மனதில் வக்கிர சிந்தனைகள் அதிகமாக இருப்பவர்கள் தங்களை பரிசுததமானவர்களாகத்தான் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் மட்டும் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை. இதைப் போலத்தான் கலாச்சாரம் என்ற கருமாந்திரமும்//

பண்பட்ட மனதென்பதே வக்கிரங்களை அடக்கி, அவை இல்லாதது போல் இருப்பது தான் :D.

ரொம்ப சிக்கலான விஷயத்தைத் தொட்டு எழுதிருக்கீங்க.. என்ஜாய் தங்கமணி...


விரலும் விரல் சார்ந்த தகவல்களையும் தெரிவிக்கவும் :).

எண்ணங்கள் 13189034291840215795 said...

பண்பட்ட மனதென்பதே வக்கிரங்களை அடக்கி, அவை இல்லாதது போல் இருப்பது தான் :D.//

well said..

THOPPITHOPPI said...

தலைப்ப பார்த்தவுடன் ஏதோ ஆதிகாலத்தில் இருந்து வரும் பெண் சுதந்திரம் போல என்று நினைத்தேன்.

ஹாலிவுட் பால என்ன ஆனார்?

ஜோதிஜி said...

தொப்பி தலைப்பு எப்போதும் கொழந்த சொல்வது போல ஒரு மார்க்கமாகவே அமைந்து விடுகின்றது. பாலா இப்போது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறார். காரணம் வலையில் இருந்து மீண்டு உருப்படியான வேலைகளில் கவனம் செலுத்திக் கொண்டுருப்பதால்.

பயணமும் எண்ணங்களும்

சுடுதண்ணி வலைதளத்தை வாசித்துப் பாருங்கள்.

நண்பா நலமே விழைவு. விரலும் விரல் சார்ந்த விசயங்களுக்கு என்ன காரணம்? எல்லாமே பெண்களின் சாபம் போல(?) மீண்டும் வந்த உங்களுக்கு ரத்தினக்கம்பள வரவேற்பு. தொடர்ந்து எழுதுங்க........

ராஜ நடராஜன் பல சமயம் நாம் எழுதுவது ஒரு புதிய பாதைக்கு அடிகோலிவிடுகின்றது. வலைதளத்தில் அரசியல் வியாதி என்ற வார்த்தையை ஆரம்பம் முதல் அதிகம் எழுதிக் கொண்டுருந்தது இப்போது அதுவே ஒரு சொற்றோடர் போலவே மாறியுள்ளது.

ஜோதிஜி said...

தேனம்மை அப்புன்னு ஆரம்பிச்சு சரியா ஆப்பு வைக்கிறீங்களே? புத்தகம் என்ற புதைகுழிக்குள் சிக்கி தவிப்பது நீங்கள் அறியாதது? அடுத்து டெலி தொடரா?

பாதைகள் உணர்த்தும். காலங்கள் பல சமயம் விரும்பாவிட்டாலும் வழிகாட்டியாய் இருக்கும்.

நன்றி குமார். சரியாகிவிட்டது. அசந்து போய்விட்டேன் குமார்.

வினோத் படித்தவுடன் சிரித்து விட்டேன். ஒரு முடிவோட தான் இருப்பீங்க போல. உண்மையிலேயே அவங்களுடன் அது பற்றி மட்டும் தான் பேசவில்லை.

ஜோதிஜி said...

லெமூரியன்

எதிரே அழகான பொண்ணு.............

ம்ம்ம்................ புத்தி தானே ஆணுக்கும் பெண்ணுக்கும் முதல் அழகு??????????

நன்றி ரவி. வர வர பட்டாசு கிளப்புறீங்க...... தங்கர்பச்சான் இயக்கிய பள்ளிக்கூடம் படம் பார்த்தீங்களா? உங்கள் எழுத்து பாதி விசயங்கள் அதில் வருவது போலவே எதார்த்தமாய.......

ஜோதிஜி said...

எஸ் கே, நந்தா தங்கள் வருகைக்கு நன்றிங்க.

இளங்கோ மொத்தமும் படித்து முடிதத பிறகு என்னை கொல்ல வரப்போறீங்க.......

இரவுப்பறவை, பெருசு போன்ற நண்பர்களுக்குப் பிறகு தவறு நீங்க பட்டய கிளப்புறீங்க..

எனக்கு என்னவோ பெண்களுடைய புரிதல்களில் தான்
தவறு இருப்பதாக தெரிகிறது

ஏறக்குறைய என் நோக்கமும் இப்படித்தான் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டு போகின்றது. மாற்றத்தை எதிர்பார்த்து இறுதியில் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. இதைத்தான் இரவு வானம் வழி மொழிந்துள்ளார். தாமஸ் ரூபன் நன்றிங்க

ஜோதிஜி said...

ஜெயந்தி ஒரு சூறாவளியை கிளப்பி விட்டு பூ போல ரொம்ப சுவாரஸ்யமா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கீங்களே........ மொத்தத்தில் பெண் இந்தியான்னு அறிமுகம் செய்துகிட்டு எந்த அளவிற்கு கலக்குறீங்க........

வண்டியின் இரண்டு மாடும் சரியாக சென்றால்தான் ஊர்போய்ச் சேர முடியும்

அற்புதமான பார்வை. இங்க 6000 ரூபாய்க்குள் வாழும் பல பெண்கள் தான் என்னுடைய ஆதர்ஷணமானவர்கள். நான் எதிர்பார்க்கும் அத்தனை வலுவும் வலிமையும் இவர்களிடம் பார்க்கும் போது பலமுறை வியந்து போயிருக்கின்றேன். ஆண் என்பவன் அயோக்கியதனத்தின் ரூபமாகத்தான் இருக்கிறார்கள். இந்த ஆண்களை சகித்துக் கொண்டு இது போன்ற பெண்கள் ஒற்றை மாட்டு வண்டி போல பாரம் சுமந்து இழுத்துக் கொண்டுருக்கிறார்கள்.

Unknown said...

அடடா பிரமாதம்.. பிரமாதம் ... சுவராஸ்யம்..வசீகரம் .. தேர்ந்த பார்வை ....

Seiko said...

தலைப்பில் மட்டும் தான் பெண்கள் சுதந்திரம். உள்ளே ஒரே "புரிதல்கள், புரிய வைத்தல்கள்".
சத்தியமாய் எனக்கு தலைப்பு புரியவில்லை.
ஆனால் இவை நச்
//உள்ளும் புறமும் ஒரே மாதிரி வாழ வேண்டும் என்று நினைப்பவர்களின் வார்த்தைகளில் தெளிவு இருக்கும். //
//குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட விசயங்களை புரிந்து கொண்டாலே போதுமானது. //
//வாழும் சமூகத்தோடு எவ்வாறு இசைந்து வாழ பழகிக் கொள்கிறார்கள் என்பதில் அவர்களின் வெற்றியும் இருக்கிறது //
நன்று. நன்றி.
//அவர் எனக்கு சற்று வினோதமாக..// ஏன் "ஆச்சரியமாக" இல்லை?

ஜோதிஜி said...

நன்றி செந்தில்

சீகோ இது போன்று ஒரு பெயரில் என்னுடைய வலைதளத்தில் சைன் இன் செய்து உங்களின் பெயரை (தமிழ்) இடுகையை ஒன்றை உருவாக்குங்க.

இதன் மூலம் தொடர முடியும்.