Wednesday, August 18, 2010

மாண்புமிகு அமைச்சர் (அஞ்சாப்பு பெயில்)

ஊர்லலேயிருந்து வந்த
ராசு சொன்னான்.

ஜெயக்குமார் ஒன்றியமாம்.
முத்துக்குமார் நகரமாம்,
சோனைமுத்து மாவட்டத்துக்கு
கைத்தடியாம்,

பட்டினியா பள்ளிக்கூட
வந்தவனுங்க
இப்ப
காபி குடிக்கக்கூட ஸ்கார்பியோவாம்.

அஞ்சு பாடத்லேயும்
கூட்டினா
அம்பது மார்க்கு கூட தேறாது,

சீக்கிரம்
அமைச்சரா வந்துடுவானுங்க.

இவனுங்கள உதைச்ச
சண்முகம் ஆசிரியர்
நடையா
நடந்துக்கிட்டுருக்காராம்.

பென்ஷன் வாங்க சிபாரிசு கடிதம் கேட்டு.

                                                                                    
நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை,

30 comments:

 1. இதன் உட்பொருளை மிக ரசித்தேன்.
  கவியரசர் சொன்னாரே!"காலேசுக்கு போகாமலே கல்வி மந்திரியானார்; காப்பி ஓட்டல் நடத்தியவர் உணவு மந்திரியானார்.
  அந்த வாக்கு இப்போ பலித்துள்ளது.
  தீர்க்கதரிசி....கவியரசர்.

  ReplyDelete
 2. நிதர்சனம்.

  என் அப்பாவிடம் டிரைவராக வேலை பார்த்தவர், கட்சியில் சேர்ந்து பெரிய ஆளாக ஆன பிறகு “சார் ! எந்த ஊருக்கு உங்களுக்கு டிரான்ஸ்பர் வேணும் சொல்லுங்க” என்று கேட்டது நியாபகத்துக்கு வருகிறது.

  ReplyDelete
 3. இன்னிக்கு நடப்பது அப்படியே அப்பட்டமாய்!!!!!!!

  ரசித்தேன் வேதனையோடு:(

  நாடு உருப்பட்டாப்பலெதான்!

  ReplyDelete
 4. ஆகா ... பின்றீங்க ... அருமையான நக்கல் கவிதை ...

  ReplyDelete
 5. அஞ்சு பாடத்லேயும்
  கூட்டினா
  அம்பது மார்க்கு கூட தேறாது,


  உண்மைதான்..

  நயம்!!!!!!

  ReplyDelete
 6. இவனுங்கள உதைச்ச
  சண்முகம் ஆசிரியர்
  நடையா
  நடந்துக்கிட்டுருக்காராம்.

  பென்ஷன் வாங்க சிபாரிசு கடிதம் கேட்டு.


  உண்மையான உண்மை..

  ReplyDelete
 7. என்னன்னு சொல்றதுங்க. தனக்கொன்னு ஆவனும்னா எதுவும் செய்யுற அரசாங்கமா இருக்கே...

  ReplyDelete
 8. அந்த வாத்தியாருக்கு நல்லா வேணும்.......!!!


  ======

  இதையா.. அதிர்ச்சின்னு சொன்னீங்க? ராத்ரி ஒழுங்கா தூங்கக் கூட இல்லீங்க. கனவுல கூட நீங்க எதோ பதிவெழுதி பழி வாங்கின மாறியே இருந்துச்சி! கவுத்திட்டீங்களே தல!!!!!! :) :) :)

  ReplyDelete
 9. அருண் எப்படியோ உள்ளே வந்துட்டீங்க. முதல் நன்றி.

  தல உங்களப் போயி பழிவாங்க முடியுமா? அட நீங்க வேற அவரு உங்கள விட உங்க சமாச்சாரத்ல கிங்கா இருக்காரு. படிச்சுருப்பீங்க தானே? என்ன பட்டறை ஓனரக் காணோம்.

  பாலாசி நீங்க சொல்லியிருக்ற விசயத்த வைத்தே நிறைய எழுத முடியும் போலிருக்கே.

  முனைவரே நீங்கள் பெற்ற தாக்கம் உணர முடிகிறது.
  நன்றி உங்களுக்கு.

  என்ன செந்தில் இப்படிச் சொல்லீட்டீங்க. நீங்க கௌப்புற பிசிர்ல இதெல்லாம் சும்மா... இது நக்கல் அல்ல. உண்மையும் கூட.

  ReplyDelete
 10. டீச்சர்

  பொண்டாட்டி பேரூராட்சித் தலைவர், புருஷன் நகரம், தம்பி ஒன்றியச் செயலாளர்., அப்பா எல்லா பக்கமும் வசூல் செய்பவர். இத்தனைக்கும் அப்பா ஓய்வு பெற்ற உடற்பயிற்சி ஆசிரியர். நண்பன் வந்து சொன்ன போது உங்களைப் போன்ற மனோநிலை தான் எனக்கும்.

  ReplyDelete
 11. யோகன் பாரீஸ் உங்கள் ஆழ்ந்த சிந்தனைக்கு நன்றி.

  நன்றி ராம்குமார். பலவிசயங்களில் சேம் சேம்.

  ReplyDelete
 12. நல்ல கவிதை ரசித்தேன்.. நச்சுன்னு நடுமண்டையில ஆணி அடிச்சமாதிரி...! Really excellent!

  ReplyDelete
 13. //அஞ்சு பாடத்லேயும்
  கூட்டினா
  அம்பது மார்க்கு கூட தேறாது,//

  எனக்கும் அமைச்சராகும் தகுதி இருக்குங்றேன்!!

  // நீங்க வேற அவரு உங்கள விட உங்க சமாச்சாரத்ல கிங்கா இருக்காரு//

  இது எந்த சமாச்சாரம்னு சொன்னீங்கன்னா போட்டிக்கு தயார். 18+ ன்னா அடிச்சிக்க ஆளில்லைங்கறேன். :) :)

  சும்மா தல. தமாசுக்கு!! என்னைப்பத்தி என்னென்னமோ நீங்களும் அவரும் நினைச்சி வச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

  நெசமா.. நான் வொர்த் இல்லீங்க தல! அவருகிட்ட சொல்லுங்க!! :)

  ReplyDelete
 14. தல

  நீங்க ஏற்கனவே அறிவு ரௌடியா பார்ம் ஆகி ரொம்ப நாளாச்சு. இனி தப்ப முடியாது?

  அமைச்சரானா நான் தொடுப்பு சரிதானே? தொடுப்பு என்ன வேலை செய்வாங்கன்னு தெரியும் தானே?

  ReplyDelete
 15. நல்லா இருக்கு . ஏன் படிக்கலைன்ன அரசியல்வாதியா ஆகாகூடாதா?

  ReplyDelete
 16. ஐயோ தராளமாக அரசியல்வாதியாக ஆகலாமே? டெல்லிக்கு போறவுங்க ஆங்கிலம் ஹிந்தி தெரியாம என்ன சாதிப்பார்கள்.

  கோட்டையில உமா சங்கர் போன்றவர்கள் கொடுக்கும் கோப்புகளை எப்படி படித்து புரிந்து கொள்ளவார்கள். ஒவ்வொன்னுக்கும் அல்லக்கை நொல்லக்கைன்னு கூட்டம் இருந்தா என்ன நடக்கும்ன்னு யோசித்துப் பாருங்க.

  காமராஜரை இவங்ளோட சேர்க்காதீங்க நந்தா.

  ReplyDelete
 17. நச் சென்ற நக்கல், நயமான நடை, நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. சோ மொட்டை போட்டும் நக்கல் சொன்னவைகளுக்கு எதிரான விளைவுகளே இதுவரை நிகழ்ந்திருக்கு.

  வந்ததற்கு உமாசங்கருக்கு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறேன் இங்கே.

  ReplyDelete
 19. தலைப்பு, "மாண்புமிகு அமைச்சர் (அஞ்சாப்பு பெயில்)", ரசிக்க, சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கிறது. கவிதையை விட தலைப்பு தூக்கல், ஜோதிஜி.

  ReplyDelete
 20. ராஜ நடராஜன்

  வருகை நம்பமுடியவில்லை. ஆதரவுக்கு நன்றி. சோ இப்பவெல்லாம் த்தோ த்தோ ங்ற கதைதான்.

  ரதி

  நீங்கள் எதார்த்தமாக சொன்ன(அஞ்சாப்பு பெயில்) பாராட்டு கடந்த 20 வருட கூட்டாளி மக்களையும் நினைக்க வைத்தது. இது குறித்து எழுத வேண்டும்.


  ஆசிரியரே பிரேவோ யோசித்து அர்த்தம் கண்டு கொண்டேன். நன்றி.

  நன்றி சம்பத்.

  பாலாஜி ஐயா இவனுங்கள நைய புடைய வேண்டும். நம்மால முடியாது. நையாண்டியாத்தான் எழுத முடியும். உங்கள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 21. அஞ்சாப்பு பெயில் - இப்போ அஞ்சாப்பு பாஸ்ங்கிற அளவுக்கு மாறி இருக்கு. நடுநிலைப்பள்ளி வரை யாரையும் பெயிலாக்க இனி வாய்ப்பு இல்ல. நல்ல கவிதை. இந்த நிலை மாற எத்தனை தலைமுறை பிடிக்குமோ.

  ReplyDelete
 22. கிரிமினல்கள் நாட்டை ஆளக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பதிவு போட வேண்டியது தானே? வேட்பாளருக்கு கல்வித் தகுதி நிர்ணயம் செய்யச் சொல்லிப் ஒன்றாக பதிவு போடுங்கள். மீடியாவில் உள்ள ஏகாதிபத்யத்தை,ஊழலைப் பற்றி எழுதுங்கள். இங்கு எல்லோருக்கும் நாடு ஓவர் நைட்டில் திருந்தி நன்றாக மாறிவிட வேண்டும் என்று ஏக்கமாக இருக்கிறது. ஆனால் அதற்கு தேவையான அவசியமான ஒன்றைப் பற்றிய வழிமுறைகளை சிந்திப்பதில் கூட ஆர்வமில்லை. பொதுவாகவே தமிழர்கள் அனைவரும் எமோஷனல் ஏமாளிகளாக இருப்பதால்தான் இன்னும் நம் மேல் சவாரி செய்கிறார்கள். நம் அடிப்படை மனோபாவம் மாறாதவரை நம் நாடு ஊழலில் தான் திளைத்திருக்கும் இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும். டெக்னாலஜியும் , தண்டனைகளும் தான் ஓரளவு தவறுகள் குறைய உதவி செய்யும். அதற்கு அறிவு தேவை. அறிவுக்குக் கல்வி தேவை. அந்தக் கல்வி அளிப்பதற்கு வசதி வாய்ப்புகள் தேவை. அந்த வசதி வாய்ப்புகளை பகிர்ந்தளிக்க மனசு தேவை. இந்த இடத்தில் தான் சறுக்குகிறோம். சுயநலம் என்கிற திரை அதை மறைத்திருக்கிறது. தான் , தன்க்கு மட்டும் என்கிற மனோபாவத்தை எல்லோரும் ஒன்று கூடி அகற்றினாலே இது சாத்தியம்.

  நன்றி ரெட்டைவால் (ஒரு விமர்சனத்தின் மூலம் எடுத்த பகுதி இது)

  ReplyDelete
 23. இரண்டு வாரம் இணையத்திலிருந்து வெளியிலிருந்தேன்.என்னென்ன ஆச்சர்யம் எல்லாம் நடந்திருக்கு ஜோதிஜி.

  யாரையோ...இல்லாட்டி பக்கத்தில இருக்கிறவங்களைக்கூட வலிக்காம அடிச்சிருக்கீங்க.அப்பாடி...கவிதையா இது.
  நக்கல் நளினம் !ஆனால் இன்றைய யதார்த்தம்.
  அஞ்சாப்பு பெயில் ...ரசித்தேன்.

  ReplyDelete
 24. அருமையான யதார்த்தமான கவிதை ஜோதிஜி..:))

  ReplyDelete
 25. கவிதை அருமை.
  நிதர்சன வரிகள்.

  ReplyDelete
 26. ரொம்ப முன்னேறிட்டீங்க.....நச்சுன்னு இருக்குது...

  ReplyDelete
 27. //இவனுங்கள உதைச்ச
  சண்முகம் ஆசிரியர்
  நடையா
  நடந்துக்கிட்டுருக்காராம்.

  பென்ஷன் வாங்க சிபாரிசு கடிதம் கேட்டு//

  கவிதை அருமை. அதிலும் கடைசி வரிகள் உண்மையை கண்ணாடியாக பிரதிபலிக்கிறது. வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.