Tuesday, June 08, 2021

அடிப்படை அரசியல் சூத்திரம்

எழுதினார்கள் வென்றார்கள்,

தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தார்கள். சின்னச் சின்ன துண்டு அறிக்கைகள் முதல் திரைப்பட வசனம் வரைக்கும். பேசிக் கொண்டேயிருந்தார்கள்.

தெருமுனைக்கூட்டம் முதல் லட்சக்கணக்காக மக்கள் முன்னிலையில் தங்கள் திறமைகளை வெளிக்காட்டிக் கொண்டேயிருந்தார்கள். வெயில், மழை, குளிர்காலம் எதையும் பார்க்கவே இல்லை. தினசரி கடமையாகவே செய்தார்கள். மக்களுக்குப் புரியுமா? புரியாதா? விரும்புவார்களா? மாட்டார்களா? நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள்? ஒதுக்குவார்களா? ஓரம் கட்டி விடுவார்களா? அடிக்க வருவார்களா? அரவணைப்பார்களா? ஆதரவு தருவார்களா? நம்புவார்களா? நமக்கு(ம்) அதிகாரத்தில் வாய்ப்பு தருவார்களா? எதைப்பற்றியும் கவலைப்படாமல் பேச்சையும் எழுத்தையும் கலையாக ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 1967 முதல் 2016 வரைக்கும் ஏதோவொரு வகையில் அறுவடை செய்து கொண்டே இருந்தார்கள். 

ஒரு தலைமுறை உழைத்த உழைப்பு பத்துத் தலைமுறைக்குப் பலனாக மாறியது. இதைப் பார்த்துச் சோர்ந்து போனவர்கள், வெறுத்துப் போனவர்கள், போராட முடியாதவர்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்தவர்கள் அத்தனை பேர்களும் ஒன்று காணாமல் போனார்கள் அல்லது சரணாகதி அடைந்தார்கள். இதை வைத்து இன்று வரையிலும் எதிர்த்த அத்தனை பேர்களும் இப்போது எங்கே இருக்கின்றார்கள்? என்று கொக்கரிக்கின்றார்கள்? வாய்ப்பு இருக்கும் வரைக்கும், நேரம் கிடைத்த பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று நினைத்து 2021 சட்டமன்றத் தேர்தலின் போது இணையத்தில் தொடர்ந்து எழுதினேன்.

பொய்களைத் தைரியமாகக் கூசாமல் பேசுகின்றார்கள். தொடர்ந்து அதனைப் பேசியே உண்மை என்று நம்ப வைக்கின்றார்கள். நம்பக்கூடியவர்களின் மனதில் வேறு எதையும் நினைக்க முடியாத அளவுக்கு ஆழமாக ஊடுருவுகின்றார்கள். உண்மைகளைப் பேசக்கூடியவர்கள் அனைவரும் பைத்தியக்காரன் போலப் பார்க்கப்படுவதால் களத்தில் அவர்கள் மட்டுமே இருப்பதாகத் தோற்றம் உருவாகத் தோல்வி பயத்தில் ஒவ்வொருவரும் காணாமல் போய்விடுகின்றார்கள். இது தான் இங்கே இத்தனை நாளும் நடந்து கொண்டிருக்கின்ற அடிப்படை அரசியல் சூத்திரம்.

இலவசமாக தரவிறக்கம் செய்து படிக்க

https://www.amazon.in/dp/B09477X7DF/ref=cm_sw_r_wa_apa_glt_987NMVTK9D8G7JE0AF5P

Monday, June 07, 2021

புதிய பாராளுமன்ற கட்டிடமும் கதறும் ஓநாய்களும்

13 டிசம்பர், 2001

இந்த தேதி உங்களுக்கு நினைவில் உள்ளதா? அப்சல் குரு என்பவனால் இந்தியாவின் இதயமான பாராளுமன்றக் கட்டிடம் தாக்கப்பட்ட நாள். இந்தியாவின் பாதுகாப்பைக் காங்கிரஸ் எப்படிக் கையாண்டார்கள் என்பதற்கு இது போல பல உதாரணங்களைச் சுட்டிக் காட்ட முடியும். ஆனால் அவர்கள் தான் இப்போது புதிதாக கட்டப்பட்டு வருகின்ற பாராளுமன்ற கட்டித்தைப் பற்றித் தொடர்ந்து அவதூறுகளை, கற்பனைகளை, கட்டுக்கதைகளைப் பரப்பிக் கொண்டு வருகின்றார்கள்.

உண்மைதான் என்ன?


Sunday, June 06, 2021

பிரதமர் மோடி அரசின் ஏழு ஆண்டுகள் மொத்தப் பார்வை - இந்தியாவின் மாற்றங்கள்...

On 30 May, the National Democratic Alliance (NDA) led by Prime Minister Narendra Modi completed seven years in office.

பிரதமர் மோடி அரசின் ஏழு ஆண்டுகள் மொத்தப் பார்வை அதன் மூலம் இந்தியாவின் மாற்றங்கள்........

மே 30

பிரதமர் மோடி அவர்களின் ஆட்சி ஏழாண்டுகளை நிறைவு செய்தது.

முன்பு பிரதமராக இருந்த நரசிம்மராவ் க்குப் பிறகு இந்திய புதிய மாற்றங்கள், நோக்கங்கள் என்று உருமாறும் இந்தியாவாக மாறியது. காரணம் பாஜக அரசின் நீண்ட காலத் திட்டங்கள். செயல்பாடுகள். குறிப்பாக இந்திய உள்கட்டமைப்பு வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்தியதும் முக்கிய காரணமாக உள்ளது.