Showing posts with label தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் செய்யும் கொரானா அரசியல்.. Show all posts
Showing posts with label தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் செய்யும் கொரானா அரசியல்.. Show all posts

Sunday, May 03, 2020

ஆலோசனை சொல்ல நீங்கள் என்ன மருத்துவர்களா..? - முதல்வர் பழனிசாமி | EPS | ...


சுய ஊரடங்கு 3.0 - 31

Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


இன்றைய தின எடப்பாடி அவர்களின் பேட்டியை முழுமையாகக் கேட்கவும்.

எதிர்க்கட்சி, எதிரிக்கட்சிகள், எதிர்க்கும் கட்சிகள், அரசியல் செய்ய நினைக்கும் கட்சிகள் என்று பாரபட்சமின்றி  துப்பி விட்டார்.

•••••••

"தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதே அரசின் கடமை யாகும். பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த காரணத்தால் ஏராளமானோர் குணமடைந்து வீடு திரும்பி செல்வதை காணமுடிகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கடுமையாக போராடி வருகிறோம். 

இதனால் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை அரசு பொருட்படுத்துவது இல்லை. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது. உயிரோடு விளையாடுவது எல்லாம் சரியல்ல. எதிர்க்கட்சி தலைவர் என்றால் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். தினந்தோறும் ஏதாவது அறிக்கை விடுவது, இந்த அரசை குற்றம் சொல்வது.

அனைத்து அதிகாரிகளும் இரவு பகல் பாராமல், தன் குடும் பத்தை விட்டு, தன் உயிரை துச்சமென மதித்து, மக்களுக்காக பணியாற்றி கொண்டிருக்கின்ற இந்த வேளையிலே, குற்றம் சொல் கின்ற நேரமா இது?. உயிரை காக்க வேண்டிய நேரம். அதை காப்பதற்கு வழிமுறை சொன்னால் நல்ல கருத்து. அதைவிட்டுவிட்டு, அங்கு ஒரு குறை, இங்கு ஒரு குறை, அப்படி சுட்டிக்காட்டுவது என்ன பொருத்தமாக இருக்கும் என்பதை நீங்களே உணர வேண்டும்.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது தான் எங்களது தலையாய கடமை. நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய நல்லவிதமான கருத்துகளை தெரிவித்தால் அதை ஏற்று செயல்படுவோம். இந்த காலக்கட்டத்தில் இதையெல்லாம் பேசுவது உகந்ததா? எந்த மாநிலத்திலும் இதுபோல் பேசுகிறார்களா?. தமிழ்நாட்டில் தான் இப்படிப்பட்ட அரசியல் நடக்கிறது. தயவு செய்து எதிர்க்கட்சிகளை வேண்டி கேட்டுக்கொள்வது, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங் கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நில்லுங்கள். அது தான் என்னுடைய வேண்டுகோள்".

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

17/04/2020




சுய ஊரடங்கு 3.0