Showing posts with label ஆழம். Show all posts
Showing posts with label ஆழம். Show all posts

Saturday, February 25, 2012

"ஆழம்" - " கிழக்குப் பதிப்பகம்" புதிய பத்திரிக்கை


நண்பர்களே நலம் தானே?

எப்போதும் போல இணையத்தை விட்டு வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றேன்.  ஆனால் இம் முறை வேடிக்கை பார்க்க கூட முடியாமல்,. மொத்தமாக எட்டிப் பார்க்க கூட முடியாமல் கடுமையான வேலைப்பளூவில் பயணித்துக் கொண்டு இருக்கேன்.  

இப்போது எனக்கு கிடைத்துக் கொண்டு இருக்கும் அனுபவங்களை ஏதோவொரு சமயத்தில் எழுத வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

சில மாதங்களுக்கு முன்பு கிழக்குப் பதிப்பகத்தில் இருந்து திரு. மருதன் 

"நாங்கள் புதிய பத்திரிக்கை ஒன்று தொடங்கப் போகின்றோம் ஒரு கட்டுரை ஒன்று வேண்டும்" என்று சொல்ல பெட்ரோல் குறித்து எழுதி கொடுத்து இருந்தேன் தற்போது கிழக்குப் பதிப்பகத்தில் இருந்து "ஆழம்" என்ற பெயரில் மாத (தற்போதைக்கு) வெளி வந்துள்ளது.


இந்த பெட்ரோல் குறித்த முழுமையான கட்டுரையை இரண்டு பகுதியாக அடுத்து வெளியிடுகின்றேன்.

இது குறித்து கிடைத்த கொஞ்சூண்டு நேரத்தில் கூகுள் ப்ள்ஸ் ல் எழுதியது.



"கிழக்கு பதிப்பகம்" சார்பாக "ஆழம்" என்றொரு புதிய இதழ் வந்துள்ளது.
ஏறக்குறைய புதிய தலைமுறை வார இதழ் போலவே. ஆனால் ஆழம் மாத இதழாக வரும் என்று நினைக்கின்றேன். ஆண்டு சந்தா ரூபாய் 300. இந்த தனி இதழின் விலை இன்னும் போடவில்லை. அடுத்த மாதம் வரும் இதழ் கடைகளுக்கு வருமென்று நினைக்கின்றேன். பொறுப்பாசிரியர் மருதன் தலைமையில் அட்டகாசமான வடிவமைப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் அதைவிட தரமான காகிதம், நேர்த்தியான முறையில் 80 பக்கங்கள் என்று பக்காவான வடிவமைப்பில் வந்துள்ளது. 

இது பிப்ரவரி மாத முதல் இதழ். கடைக்கு வந்து இருக்காது என்று நினைக்கின்றேன். தனிப்பட்ட நபர்களுக்கு அனுப்பி உள்ளார்கள். எனக்கும் மருதன் அனுப்பி உள்ளார். காரணம் ஏற்கனவே மருதன் என்னிடம் எழுதி வாங்கிய "ஊரெல்லாம் பெட்ரோல் வாசம்" என்ற கட்டுரையும் வெளியாகி உள்ளது. சாயப்பட்டறை பிரச்சனை குறித்து "புதிய தலைமுறை" அட்டைப்பட் கட்டுரைக்குப் பிறகு இரண்டாவது முறையாக வெகுஜன ஊடகத்தில் பெட்ரோல் விலைவாசிக்கு பின்னால் உள்ள விசயங்களை எழுத வாய்ப்பளித்த நண்பர் மருதனுக்கு நன்றி. இதே தரத்துடன் இந்த பத்திரிக்கை தொடர்ந்து ஒரு வருடம் வரும் என்றால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு. பத்ரி என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை?

இப்போது மின் தடை காரணமாக பெரும்பாலும் இருட்டு வாழ்க்கை வாழ பழக வாய்ப்பளித்த அதிமுக அரசாங்கத்திற்கு ஒரு வகையில் நன்றி. காரணம் பெண்களை நெடுந்தொடர் போதையில் இருந்த காப்பாற்றியதைப் போல இணையத்தின் பக்கமே போகாதே என்று சொல்லியுள்ள ஆத்தாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆழம் பக்கங்களை வலையேற்றுவதற்குள் எத்தனை முறை மின் தடை வருமோ என்று கணினி பக்கமே வர பயமாக உள்ளது.