Monday, May 30, 2022

நீங்கள் போடும் ஜட்டியின் அளவு என்ன?

நீங்கள் போடும் ஜட்டியின் அளவு என்ன?

சத்தியம் தொலைக்காட்சி அரவிந்த் ராட்சசனுக்கு (எழுத்துப்பிழையல்ல) ஒரு கடிதம்.

நான் ஏன் இப்படியொரு தலைப்பு வைத்தேன் என்பதனை கடைசி வரிகளில் பார்த்துப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.



அன்புள்ள அரவிந்த்

நீங்கள் தொடர்ந்து எழுதும் கடிதங்களுக்கு நான் தீவிர வாசகன். காரணம் பீடி வாங்க காசில்லாமல், வாங்கிக் கொடுக்க யாருமில்லாமல் தெருவோர குட்டிச்சுவரில் அமர்ந்து கொண்டு அருகில் உள்ள  சாக்கடையில் பன்றிகள் சுகமாக இருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இன்றைக்கு யார் சிக்குவார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது உங்கள் கடிதத்தைப் படிப்பேன்.  

நான் சந்தித்த பல பத்திரிக்கைத் துறையில் பணியாற்றிய பலரின் வாழ்க்கையையும்  நீங்கள் தற்போது ஊடகவியலாளர் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலையும் பொருத்திப் பார்த்துக் கொள்வேன். குளிர்சாதன தங்குமிட வசதியில் முன்பதிவு செய்து பல லட்சம் ரூபாய் வாங்கி உடல் சேவை செய்பவர்கள் என் நினைவில் வந்து போவார்கள். அவர்களால் நாட்டுக்கு எந்த கெடுதலும் இல்லை. ஆனால் உங்களைப் போன்றவர்கள் தெரிந்தே உண்மையை மறைப்பது, திரிப்பது, மாற்றுவது, எப்போதும் ஒவ்வொருவரையும் கட்சி கண்ணோட்டத்தில் பார்ப்பது என்று உங்களைப் போன்றவர்களால் மொத்த சமூகத்திற்கே பிரச்சனை என்பதனையும் நான் கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன்.

நீங்கள் உங்களை ஊடகவியலாளர் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டாலும் நீங்கள் அந்த பெயரை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பது சமூக வலைதளம் வந்த பின்பு வெட்ட வெளிச்சமாகி விட்டதே? நீராடியா உரையாடல் கேட்ட போது இந்திய ஜனநாயகம் புதைக்கப்பட்டு விட்டதே? அனைவருக்கும் தெரிந்தது தானே? இதில் இனி மறைக்க என்ன இருக்கிறது?

நான் என்ன தான் தற்போதைய ஊடக சூழல் என்பதில் உள்ள உண்மைகளை எழுதினாலும் உங்களைப் போன்றவர்கள் டிஷ்யூ பேப்பர் வைத்துத் துடைத்து விட்டு அடுத்த வாடிக்கையாளருக்குக் காத்திருப்பது போல நீங்களும் கடந்து செல்வீர்கள் என்று தெரிந்தே மன உறுதியுடன் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுத வேண்டும் என்று தோன்றியதற்கு முக்கியக் காரணம்.

காய்கறி விற்பவன் முதல் கருவாடு விற்பவன் வரை தன்னை தொழிலதிபர் என்று சொல்லிக் கொள்வதைப் போல தமிழகத்தில் தடுக்கிய விழுந்தால் பத்திரிக்கையாளர். இல்லையெனில் ஊடகவியலாளர். இதற்கு ஒரு சங்கம்.  கருத்துச் சுதந்திரத்தை நசுக்காதே என்ற கோஷம். மறைந்த அய்யா ராம்நாத் கோயங்கா போன்றவர்கள் எல்லாம் உங்களைப் போன்றவர்களைப் பார்த்தால் என்ன சொல்வார்? உங்களை எல்லாம் எக்ஸ்பிரஸ் அவன்யூ விற்குள் நுழைய அனுமதிப்பாரா?  

இந்தியாவில் இணையம் குறைந்த விலையில் கிடைக்க, இலவசமாகக் கிடைக்கும் யூ டியூப் ல் ஒரு கணக்கு தொடங்கி, புதிதாகப் புரட்சிப் பெயரைச் சூட்டி முடிந்தால் அதற்குப் பெயர் ஒரு சேனல்.

கூடவே வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் வாயை வைத்து விபச்சாரம் செய்கின்றவர்களைப்  பேச வைத்தால் அதற்குப் பெயர் விவாத மேடை.

பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்தால் இருக்கவே இருக்கிறது இந்து மதம்.

இந்து மத நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தி பார்வை யாளர்களைத் திகைப்படைய வைத்து தினமும் ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை வருமளவிற்கு உருவாக்கத் தெரிந்தால் அதற்குப் பெயர் பிரபல்யம். மறக்காமல் திமுக இல்லாவிட்டால் நமக்குத் திராவிட மாடல் ஆட்சியில் கிடைத்துக் கொண்டு இருக்கும் நன்மைகள் எதுவும் கிடைக்காமல் போய்விடும் என்ற புரட்டு புராணத்தை விடாமல் தொடர்ந்து தினமும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.  அதில் கிடைத்த நன்மை தான் என்ன? என்று கேடடால் கடுகளவு கூட அந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லிடக்கூடாது என்ற சத்தியத்தை வேறு காப்பாற்றியாக வேண்டும்.  என்னவொரு தர்மத்திற்கு வந்த சோதனை.

ஆனால் நீங்கள் தற்போது பணியாற்றும் தொலைக்காட்சி முதலாளியான தசமபாகம் கோஷ்டி குறித்து எந்த இடத்திலும் நீங்கள் மட்டுமல்ல. உங்களைப் போன்ற எந்த பொறுக்கிகளும் மன்னிக்கவும் பொறுக்கி எடுத்துப் பேசுவதில்லையே. காரணம் என்ன? சோற்றில் மண் விழுந்து விடும் என்ற அச்சம் தானே? ஜட்டி கழன்று விடும் என்ற பதட்டம் தானே?

மார்க்கத்தை நம்புகின்றவர்களை மறந்தும் விமர்சிப்பதில்லை. காரணம் அவர்கள் பாஜக போல மென்மையான போக்கை கடைபிடிப்பவர்கள் அல்ல. உங்கள் உள்ளுறுப்புகளை உருக்குலைத்து விடுவார்கள்  என்ற அச்சம் தானே?

உங்களைப் பார்த்து எனக்கு எப்போதும் கோபமே வந்தது இல்லை.  காரணம் உங்களை ஊடகவியலாளராகவே என்றுமே பார்த்ததும் இல்லை. அதற்கெல்லாம் உங்கள் பிஞ்சு மூஞ்சி சொட்டாகாது, அது வேற டிப்பார்ட்மெண்ட். நீங்க பார்த்துக் கொண்டிருப்பது வேற. இது அசிங்கம் பிடித்த சமாச்சாரம். 

உங்களைப் போன்றவர்களுக்கு அண்ணாமலை போன்ற நிஜ தலைவன் பதில் அளித்தால் அது  அவருக்குத் தான் அசிங்கம்.  அவர் எப்போதுமே சிங்கம் தான்.  உங்களைப் போல கவிச்சி கிடைக்கும் இடமெல்லாம் உற்சாகம் பொங்குதே என்று ஓடக்கூடியவர் அல்ல. அவர் பெரும் பொறுப்பை, சம்பளத்தை, கௌரவத்தை, வாழக்கையை விட்டு விட்டு தேச சேவைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.  இந்த வரிகளை வாசிக்கும் போது உங்களுக்கு எந்த அளவுக்குப்புரியும் என்பதே எனக்கு குழப்பமாகவே உள்ளது.  காரணம் தினமும் சாக்கடை அருகே வாழ்ந்து பழகியவனைப் பூக்கடை அருகே வாழ்ந்து பார் என்றால் அவன் திகைத்துப் போய்விட மாட்டானா?

நிஜமான பத்திரிக்கையாளர், ஊடகவியலாளர் என்றால் அதற்கென்று ஒரு தகுதி, தராதரம், தீர்க்கமான எண்ணம், நாட்டுப் பற்று போன்ற அனைத்தும் உங்களிடம் மட்டுமல்ல.  உங்களைப் போன்றே இங்கே வாய்ச் சவடாலில் ஒப்பேற்றிக் கொண்டு இருக்கும் எவரையும் நான் கண்டு கொண்டதே இல்லை.

உங்களையெல்லாம் நீங்கள் ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக் கொண்டால் 1990 வரை தமிழகத்தில் பல்வேறு பத்திரிக்கைகளில் ஒரே நிறுவனத்தில் 30 வருடங்களாக பணியாற்றி தமிழக கலை, இலக்கிய, அரசியல், சமூக வளர்ச்சியில் பங்கெடுத்த பல பத்திரிக்கையுலக ஜம்பவான்களை நான் எப்படி அழைப்பது? மிகக் குறைவான சம்பளத்தில் ஜிப்பா மற்றும் ஜோல்னாப் பையுடன் வாழ்ந்தவர்கள் தங்களிடம் இருந்த பேனாவை ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள்.

அவர்கள் அரசியல்வாதிகளுக்கு, அதிகாரிகளுக்கு தரகர் வேலை பார்த்ததாக நான் கேள்விப்பட்டதே இல்லை.  ஒரு தினசரி பத்திரிக்கையில் பணியாற்றும் நிருபருக்குப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரும் ஒன்று தான். இங்கே ஊழலின் ஊற்றுக்கண்ணாக வாழ்ந்து அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுத்த கருணாநிதி அவர்களும் ஒன்று தான். சொல்லப் போனால் அரசியல்வாதிகள் சாதாரண நிருபர்களைப் பார்த்துப் பயந்த காலம் தமிழகத்திலிருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களை அவமதித்து விட்டார். கருத்துச் சுதந்திரத்தின் எல்லைகளை மீறி விட்டார். அனைத்து ஊடகங்களும் அண்ணாமலை அவர்களைப் புறக்கணிக்க வேண்டும். பாடம் கற்பிக்க வேண்டும். பேனா முனையின் வலிமையைக் காட்ட வேண்டும் என்பது தானே உங்கள் ஆதங்கம். கோரிக்கை.

எங்களைப் போன்ற பாஜக தொண்டர்கள் தலைவர் அண்ணாமலை அவர்களிடம் என்ன  கோரிக்கை வைத்துக் கொண்டு இருக்கின்றோம் தெரியுமா?

தலைவரே நேற்று செய்த சம்பவம் போலத் தொடர்ந்து செய்யவும் என்று தான் உற்சாக குரல் எழுப்புவோம்.  நான் மட்டுமல்ல. தமிழகத்தில் தீயசக்திதிமுக என்ற கட்சி வேரடி மண்ணோடு தமிழக மண்ணில் புதைக்கப்பட வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொரு தேசியவாதிகளும் இப்படித்தான் பாஜக தலைவரிடம் கோரிக்கை வைப்போம்.

தீயசக்திக்கு நேரிடையாக மறைமுகமாக ஆதரவு அளிப்பவர்கள், மாமா வேலை பார்ப்பவர்கள்,  எந்த துறையிலிருந்தாலும் அவர்களை நாங்கள் மனிதர்களாகவே மதிப்பதே இல்லை? அப்புறம் எப்படி ஊடகவியலாளர்களாக மதிப்பளிப்பது?

அண்ணாமலை அவர்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் முதல் பாஜக தலைவர்கள் வரைக்கும் நீங்களும் உங்களைப் புலனாய்வு (கொட்டை எடுத்த) புளி போல விளக்கி என்னவோ சொல்லியிருக்கிறீர்கள்.

நான் அதைப்பற்றியெல்லாம் பேசி உங்களைப் பெரிய அறிவாளி என்று நம்பத் தயாராக இல்லை.  கடிதத்தை முடிப்பதற்குள் சில விசயங்கள் மட்டும் உங்களிடம் கேட்க விரும்புகின்றேன்.

1. கடந்த ஒரு வருடத்தில் அண்ணாமலை அவர்கள் தீயசக்தி திமுக மேல் பல துறை சார்ந்த ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இருக்கின்றார். நீங்கள் தமிழன் என்றால் தமிழக வளர்ச்சியில் அக்கறையிருக்கும் பட்சத்தில் என்றாவது ஒரு நாள் உங்கள் தொலைக்காட்சியில் விவாதம் நடத்தி இருக்கின்றீர்களா?

2. சத்தியப் பிரமாணம் எடுத்து அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய ஒரு முதலமைச்சர் ஏன் தீபாவளி வாழ்த்துகள் மட்டும் சொல்வதில்லை என்பதனை உங்களால் கோபாலபுரம் சென்று கேட்டு பேட்டி எடுத்துப் போட முடியுமா?

3. தமிழகத்தில் உள்ள அச்சு ஊடகம், காட்சி ஊடகங்களில் பணிபுரிகின்ற எவரும் இதுவரையில் எவரிடமும் கைநீட்டிக் கவர் வாங்கியதில்லை என்பதனை உறுதியாகச் சொல்ல முடியுமா? 

இந்த மூன்றுக்கும் நீங்கள் நேர்மையாகப் பதில் அளித்தால் நீங்கள் ஆண்மையுள்ள ஆண்மகன் அணிந்திருக்கும் ஜட்டி கம்பீரத்தைத் தருகின்றது என்று நம்புவேன்.  இல்லையெனில் தொளதொள வள வள என்றால் 

நான் பதில் சொல்ல விரும்பவில்லை.  

தயவு செய்து கோபாலபுர புழக்கடை வழியாக எச்சில் இலைகளைப் பொறுக்கித் தின்னும் ஆண்மையில்லாத உங்களைப் போன்றவர்கள் அண்ணாமலை போன்றவர்களின் பாதையில் குறுக்கிடாதீர்கள்.

இப்படிக்கு

அக்மார்க் தமிழன்

28/05/2022


1 comment:

நெல்லைத் தமிழன் said...

நல்ல பதிவு. அண்ணாமலை அவர்கள் தைரியமாக இதைப் பற்றிப் பேசினார். அரசின் தவறுகளை போலீஸின் மூலம் அவர்கள் செய்யும் அராஜகங்களை, மரணங்களை, குடிப் பிரச்சனைகளை....என்று எதைப்பற்றியும் எழுதாமல் முட்டுக்கொடுக்கும் ஊடகங்கள் காசு வாங்காமலா இதனைச் செய்கிறார்கள்? எனக்குப் புரியாதது, எந்த தொலைக்காட்சி/பத்திரிகையைச் சேர்ந்த நிருபர் எந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள் என்று ஏன் காட்டுவதில்லை? ஏன் மறைந்துகொண்டு இவர்கள் தங்கள் எஜமானர்களுக்காக வேலை செய்கிறார்கள்?