Sunday, October 03, 2010

ஓராயிரம் பார்வைகளும் விடைபெறும் நேரமும்

ந்த கண நேர நிமிடத்தை என்னைப் போலவே கணக்கில் வைத்து காத்திருந்து பாசக்கார பய புள்ள ரவி முதல் என் தனிப்பட்ட வாழ்க்கையில் அக்கறை கொண்ட நண்பர்கள் பலரும் தொடர தொடங்கிய இந்த நட்சத்திர வாரம் முடியும் நேரம் இது.
ச்சரியப்படுத்திய மணி மகுடம் வரைக்கும் சூட்டிய தோழமைகளுக்கும் கூகுள் பஸ் வரைக்கும் லைக்கிய பெருந்தலைகளுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

து தான் எல்லை என்று எண்ணத்தில் வைத்துக்கொள்ளாமல் எப்பொழுதோ எங்கேயோ பெற்ற அனுபவம் அரசியல் சமூகம் வரைக்கும் அத்தனையும் எழுதிப் பார்த்தாகி விட்டது. கற்றுக் கொள்ள இன்னமும் ஆசையிருப்பதால் இந்த பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ழம் குறித்து உருவான ஆர்வமே இன்று வரைக்கும் என்னுடைய தேடலை அதிகப்படுத்தியிருக்கிறது.  இந்த குட்டித்தீவை யோசிக்கும் போது உருவான தாக்கம் தான் பலரும் கொடுத்த வாழ்த்துரைகள்.

ற்சாகமாய் உறவாய் பல பேர்கள் தொடர்ந்து வந்தார்கள்.  கட்டுரைகள் நீண்டதாய் இருந்தாலும் பல தளங்களை தொட்டு கொண்டு போனதற்கு முக்கிய காரணம் துளசிதளம் திருமதி துளசி கோபால்.  அவர்களுக்குத் தான் வாசிப்பாளர்கள் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் சொன்னபடியே உண்டு உறங்கி விடு. செரித்துவிடும் என்ற தலைப்பு பலருக்கும் பரவசத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  

என்னை யாரென்று தெரியாமல், முகமோ முகவரியோ அறிந்திராமல் என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் அவர்களைப்பற்றி நான் எழுதுவதை தேவியர்கள் என்றாவது ஒரு நாள் எழுதக்கூடும். என் அப்பா உருவாக்கிய தாக்கம் என்னை எழுத வைத்தது.  ஆனால் என் குழந்தைகள் தங்கள் எட்டு வயதிற்குள் வாழும் இந்த சுதந்திர வாழ்க்கை நான் அறியாத ஒன்று. 

கடைசி நான்கு கட்டுரைகள் இரட்டையரில் மூத்தவள் வெளியிட்டு விமர்சனத்தை தகுந்த நேரத்தில் வெளியிட்ட விதத்தை நான் எழுதி வைத்தால் நம்ப முடியாத ஒன்றாக பலருக்கும் தெரியும். பள்ளி விடுமுறையில் வீட்டுக்குள் சேர சோழ பாண்டிய போர்க்களத்தை உருவாக்கிய அவர்களை மாற்ற மனைவி எடுத்த இறுதி ஆயுதம் இது.  டீச்சர் நீங்கள் எளிதாக சொல்லி விட்டீர்கள்.  அடங்காதவரை அடக்க வந்த ஆயுதமென்று. ஆனால் சுந்தர் சொன்ன பெண் குழந்தைகள் தேவியின் மறு உருவம் என்பதை பல சமயம் பத்ரகாளியாய் காட்டுகிறார்கள்.

ன்றிக்கவனித்தல் என்பது எழுதத் தொடங்கியதற்கு பிறகு தான் அதிகம் பழக்கத்தில் வந்துள்ளது. இதுவே வாழ்க்கையில் சகிப்புத்தன்மையை அதிகம் உருவாக்கி பல சங்கடங்களில் இருந்து மீட்டெடுத்துள்ளது. இடுகை என்பதை எந்த மகாராசன் கண்டுபிடித்தாரோ அவருக்குத் தான் நன்றி என்பதை நாலு பதிவில் எழுதி வைக்கனும். கூகுள் தரும் வரைப்படத்தில் கடலுக்கு நடுவே இருக்கும் பெயர் தெரியாத அந்த குட்டித் தீவில் இருந்து கொண்டு இந்த இடுகையை எவரோ ஒருவர் படித்துக் கொண்டுருக்கிறார் என்பதை யோசிக்கும் போது ஆச்சரியமாய் இருக்கிறது. 

இதனாலேயே அதிக அக்கறை கொண்டு தூங்கும் நேரத்தை தியாகம் செய்ய வேண்டியதாய் உள்ளது.

ழுதிய சட்டம் என்பதை தமிழ்மணத்தில் இப்படி தெரிவித்து உள்ளார்கள்.             

" கடைசி பதிவை 12 மணி நேரத்திற்கு முன் வெளியிட்டால் அனைவருக்கும் சென்று அடையும் " .நண்பர் தவறு சுட்டிக்காட்டியபடி முள்ளிவாய்க்கால் பேரவலத்தை குறிப்பாக ஏப்ரல் 2009 பொதுமக்கள் பட்ட துயரத்தை வார்த்தை களாக கோர்த்து வைத்து இருந்ததை நிறுத்தி வைத்து விட்டேன். 

இந்த வாரத்தில் வெளியிட்டுள்ள எந்த கட்டுரைகளும் அவசரமாய் எழுதியது அல்ல. தமிழ்மண அழைப்பு வந்த போது பாதி முடித்து டீச்சரிடம் குட்டு வாங்கி கோர்த்து வைத்து இருந்தேன். ஈழம் தொடர்பான கட்டுரைகளைக்கூட திருப்பூரில் நடந்த இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது எழுதியது. வாக்கியத்தை மீள் ஆய்வு செய்ய முடியாமல் கந்தசாமி அய்யா சொன்ன பொருத்தமான எதிர்மறை விமர்சனம் வரைக்கும் அவசரப் பணிகளும், ஒத்துழைக்காத இணைய வேகமும் கடைசி வரைக்கும் படுத்தி எடுத்துவிட்டது.

ராளமான பார்வைகள்.  சாப்பாட்டில் வெஜ், நான்வெஜ் என்பது போல் வலைப்பூக்களில் இப்போது வினவு நான்வினவு என்பது போல இரண்டாக இருக்கிறது. நான் ஈழம் தொடர்பாக எழுதிய பல கட்டுரைகளுக்கு ஆதாரமான பல புத்தகங்களை அளித்தவர்கள் வினவுத் தோழர்கள்.  அந்த காலகட்டத்தில் தோழர்களை யாரென்றே தெரியாது. 

வலை தளத்தில் போட்டுருந்த கைபேசி எண்ணுக்கு அழைத்து என் எண்ணத்தை சொன்ன போது மூன்றாவது நாளில் நகல் எடுக்கப்பட்ட பத்தாண்டு கட்டுரைகள் என் வீட்டை வந்து அடைந்த போது என்னால் நம்ப முடியவில்லை.  அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி என்ற வார்த்தையை எழுதி வைக்கின்றேன்.  

சமீபத்தில் நண்பர் முகிலன் எழுதிய கட்டுரையில் இடையே இரண்டு வரிகள் வந்தது.  வினவு தளத்தின் கட்டுரைகள் சரியாக வாசகனை உணர வைக்கும்.. ஆனால் கடைசியில் கட்டுரை தடம் மாறி குறிப்பிட்ட காழ்புணர்ச்சியை  கொண்டு நிறுத்துவார்கள் என்று எழுதியிருந்தார்.  உண்மையும் கூட.  தோழர் களிடம் வாதாடி இருக்கின்றேன்.  வம்புச்சண்டை கூட போட்டு இருக்கின்றேன்
  
இப்போது தான் வெளியிடும் விமர்சனத்தில் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். இதைப் போலவே பலரும் சொல்லிக் கொண்டுருக்கும் தாக்கத்தை உணரக் கூடும்.   வெகுஜன ஊடகம் மறந்து கொண்டுருக்கும் பல விசயங்களை இன்று வலைதளத்தில் கொண்டு வந்து கொண்டுருப்பவர்கள் அவர்கள் மட்டுமே.   வினவு தளம் என்பதை சமூக விசயங்களை எழுதிப் பார்க்க வேண்டும் என்று நினைப்பு உள்ளவர்களுக்கு அதுவொரு என்சைக்ளோபீடியா. 

யோ என்று எழுதாமல் அதென்ன ஐய்யோ என்று ரதி வருத்தம் தெரிவித்து இருந்தார். உச்சரிக்கும் வார்த்தைகளில் ஒரு அழுத்தம் வர வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சின்னப்புள்ளத்தனமான விளையாட்டு. கூர்மையாக தலைப்புகளை கவனித்து வந்தவர்களுக்கு இந்த அரிச்சுவடி எழுதுக்கள் புரிந்துருக்கும்.

ரே பதிவில் சொல்லாமல் ஏன் இந்த நழுவல்?  ராஜநடராஜன் கேட்ட கேள்வியை மகளிடம் கேட்டேன். அவசரத்தில் மாறி வந்து விட்டது என்றார். ஆனால் அதுவே ஒரு முடிச்சு போல வாசித்தவர்களை மூச்சடைக்க வைத்துள்ளது. மகள் அவரை அறியாமல் உருவாக்கிய மாய வித்தை அது. தங்களுக்கு பிடித்த டோரா, சோட்டா பீன் தளங்களை ஒலி ஒளியாக பார்த்துக் கொண்டுருப்பவர்களுக்கு எதிர்காலம் எந்த மாதிரியான புரிந்துணர்வை வைத்துள்ளதோ?
ராயிரம் தளங்களை கடந்த 15 மாதங்களில் பார்த்து இருப்பேன். நூறு தளங்களை முடிந்த வரை உள்வாங்கியிருக்கலாம். எந்த இடத்திலும் பெயரை மறைத்துக் கொண்டு பின்னூட்டமிட்டது இல்லை. எவர் தளத்தில் மைனஸ் ஓட்டு போட்டதும் இல்லை. கருத்துக்களின் எதிர்மறை நியாயங்களை சரியான முறையில் எடுத்து வைக்க தயங்கியதும் இல்லை. அவர்களின் வசவு, வார்த்தைகள் எனக்குத் தேவை. வாங்கி இருக்கின்றேன். நான் வளர வேண்டுமென்றால் தர்க்க வாத பிரதிவாதங்கள் எனக்கு ரொம்பவும் முக்கியம்.

ஓளரங்கசீப் காலம் முதல் இன்றைய ராஜபக்ஷே காலம் மறைக்கும் தமிழினம் எதிர்பார்க்கும் மற்றவர்களுக்கு அடிமையாக இருந்து விடுவது சிறப்பு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கவில்லை. மனதில் உள்ள இந்த தமிழினம் குறித்த ஆச்சரிய வரலாற்று உண்மைகள் தமிழர் தேசம் என்ற நீண்ட நெடிய பயணம் ஏதோவொரு சமயத்தில் தொடங்கலாம். நம்மவர்கள் நம்மை ஆண்டால் தான் வெட்டு குத்து அடிதடி.  அடுத்தவன் என்றால் அத்தனை பேர்களும் அது தான் சரியென்று அட்டகாசமாக ஒத்துழைப்போம். 

என்னுடைய பார்வையில் மகாகவி பாரதி, தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை  பிரபாகரன்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கலைஞானி கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா தமிழனாக பிறந்தது அவர்களின் துரதிஷ்டம். மற்ற இனத்தில் பிறந்திருந்தால் அவர்களின் புகழும், அவர்களுக்கு கிடைத்துருக்க வேண்டிய அங்கீகாரமும் வெகு எளிதாக கிடைத்து இருக்கக்கூடும்

வேலுப்பிள்ளை பிரபாகரனை துரோகியாக சித்தரித்து எழுதப்பட்ட கட்டுரையில் ஒருவர் எழுதிய விமர்சனம் எனக்கு நிறையவே நம்பிக்கை அளித்தது.

" விம்பங்களுக்கப்பால் பிரபாகரனை தேடி, கட்டுரையாளர் எழுப்பியிருந்த கேள்வி பிரபாகரனால் தமிழினத்திற்கு ஏற்பட்ட நன்மை, தீமைபற்றி ஆராய முற்படுவதாக தெரிகிறது. கருத்து எழுதுபவர்கள், அவரவர் உணர்ச்சிகளுக்கும் மனப்பண்புகளுக்கும் ஏற்ப கருத்துக்களை வெளிப்படுத்துவது தொடர்கிறதே அன்றி, தமிழின விடுதலைக்கு வேண்டிய பாதையை சீர்படுத்துவதற்கோ. அன்றி புதிய பாதையை அமைப்பதற்கான யுக்திகளையோ வெளியிட்டு ஓர் ஆக்கபூர்வமான செயற்பாட்டிற்கு ஒன்றிப்போகும் இணக்கத்தை ஏற்படுத்துவதையோ காணமுடியவில்லை. திட்டமிட்டு மக்களை குழப்புவதற்கான கருத்துகள் எழுதுபவர்களையும் இங்கு தாரளமாக காணமுடிகிறது.

பிரபாகரனின் விடுதலைப்போராட்டம் இன்று அழிக்கப்பட்டுள்ளது. இப் போராட்டம் அழிக்கப்பட்டதனால் தமிழினத்திற்கு ஏற்பட்ட நன்மை என்ன, என்பது ஆராயப்பட வேண்டும். தீமைபற்றி தேவையில்லை பல ஊடகங்களும், இணையதளங்களும் அதுபற்றி நிறையவே எழுதிவருகின்றன. தமிழினத்திற்கு கிடைத்த நன்மையைப்பற்றி இதுவரை எந்த ஊடகமோ, அல்லது இணைய தளமோ செய்தி வெளியிடவில்லை. நன்மை என்றால் அதன் தன்மையை வெளிப்படுத்த ஏன் தயங்க வேண்டும் "

வைப் பாட்டி முதல் கண்ணதாசன் வரைக்கும் எத்தனையோ அறிவுரைகள், ஆலோசனைகள் நமக்கு தந்து இருந்த போதிலும் 3000 ஆண்டு கால தமிழர்கள் எப்போது விரும்பும் கலை ஆர்வம் மட்டும் இன்னமும் குறைந்தபாடில்லை. இணையத்தில் தமிழ் வார்த்தைகளை அடித்து சோதித்துப் பாருங்கள்.  வந்து விழும் 20 தலைப்புகளில் பத்து தலைப்புகள் திரைப்பட உரையாகவே இருக்கிறது.  

தமிழ்நாட்டின் பிரபல்ய சிமெண்ட நிறுவனத்தில் பணிபுரியும் உறவினர் சொன்ன கருத்துப்படி எப்படி கணக்குப் போட்டு பார்த்தாலும் ஒரு மூட்டை சிமெண்ட் 130 ரூபாய்க்கு மேல் விற்க வேண்டிய அவஸ்யமே இல்லை.  அதுவே கொழுத்தலாபம்.  

ஆனால் இன்றைய விலை 270 ரூபாய். உண்மையிலேயே நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தானே?  இதுவே எது வரைக்கும் கொண்டு செலுத்துகிறது?  அடுத்த மாநிலத்தில் இருந்த இங்கே கொண்டு வந்தவர்களை மிரட்டும் அளவிற்கு இருக்கிறது.  இப்போது சொல்லுங்கள் நாம் எது குறித்து கவலைப்பட்டு மனதை உடம்பையும் சோர்வடையச் செய்ய வேண்டும்?

அக்கன்னா என்று எழுதும் போதே அப்பாடா என்ற பெருமூச்சு வருகிறது.

உணவு, இருப்பிடம் இரண்டுக்கும் இடையே நமக்குத் தேவையான உடை என்று ஒன்று உண்டு. மூன்றுமே மனித வாழ்வில் முக்கியமானது.  பஞ்சு உற்பத்தி செய்பவர்களுக்கும் அதை விற்று கொழுத்த லாபம் பார்ப்பவர் களுக்கும் உள்ள வித்யாசம் என்ன தெரியுமா தோழர்களே?

அதிகமில்லை 14,000 ரூபாய்.  கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.  எத்தனை பொதிகள்.. எத்தனை ஏற்றுமதி சமாச்சாரங்கள்.  எங்கே யாரிடம் போய்ச் சேருகிறது இந்த கோடி கோடி சமாச்சாரங்கள்.  இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்து எதிர்ப்பை காட்டினார்கள். அதிலும் இங்கே அரசியல்.

காலம் முழுக்க தமிழர்களுக்கு புரியாத அரசியல். 
நடப்பு செய்திகளை முந்தி தந்துகொண்டுருக்கும் 4 தமிழ் மீடியாவுக்கு வணக்கம்&வாழ்த்துகள். அற்புத படங்கள் தந்தது மனமே வசப்படு.

விடைபெறும் நேரத்தில் வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாக குழுவினருக்கு நன்றியை தெரிவித்து, என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்திக் கொண்டுருக்கும் எழுத்தாளர் பா.ராகவன் வார்த்தைகளுடன் முடிக்கின்றேன்.

" புகழோடு வாழுங்கள். அதற்காக உழையுங்கள். விமர்சனத்தை மறுக்காதீர்கள். முறையற்ற விமர்சனத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவஸ்யமில்லை. வாழ்வின் இறுதிப் பகுதியில் நினைத்துப் பார்க்க ஏதோவொன்று தேவையாய் இருக்கக்கூடும். அதற்காகவாவது உங்களுக்குப் பிடித்த துறையில் உங்கள் கவனம் இருக்கட்டும்".

55 comments:

 1. இன்னும் ஒரு இடுகை போட்டிருக்கலாம். 12 மணி நேரக்கெடுதான் இருக்குன்னதும்..... இப்படிச் சட் னு முடிச்சுட்டீங்களே!!!!!

  இந்த வார இடுகைகள் முழுசையும் ஆழ்ந்து படிச்சுக் கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் நல்ல அருமையான வரமான (அப்படியும் சொல்லலாம்) வாரமாக இருந்தது. 'எல்லாத்தையும் கோடி காமிச்சுட்டேன். உள்வாங்கி இன்னும் தெரிஞ்சுக்கணுமுன்னா..... போய் வாசிங்கப்பா'ன்னு சொல்லாமச் சொல்லிட்டீங்க.


  இனிய பாராட்டுகள் ஜோதிஜி.

  ReplyDelete
 2. நட்சத்திர வாரத்தை மிகச்சிறப்பாக பயன்படுத்தி உள்ளீர்கள்.இனி எப்பொழுதும் இதே வேகத்தில் பதிவுகள் வெளிவர விரும்புகிறேன்.தொடரட்டும் இந்த பயணம்.

  ReplyDelete
 3. வீட்டுக்குள் சேர சோழ பாண்டிய போர்க்களத்தை உருவாக்கிய அவர்களை மாற்ற மனைவி எடுத்த இறுதி ஆயுதம் இது.

  பயனுள்ள திசை திருப்பல்.

  .வாழ்வின் இறுதிப் பகுதியில் நினைத்துப் பார்க்க ஏதோவொன்று தேவையாய் இருக்கக்கூடும். அதற்காகவாவது உங்களுக்குப் பிடித்த துறையில் உங்கள் கவனம் இருக்கட்டும்...

  உண்மை....

  அடுத்த் மகுடம் எப்போ..

  ReplyDelete
 4. மனதிற்கு நிறைவாய் உயிரெழுத்தில் அழகாய் பூச்சூடி முடித்திருக்கிறீர்கள்.

  ஈழம் பற்றிய உங்கள் நேசிப்பும், வாசிப்பும், தேசியத்தலைவர் வே.பிரபாகரன் மீதான மதிப்பும் உண்மையில் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. என் நன்றிகள்.

  ReplyDelete
 5. எந்த இடத்திலும் பெயரை மறைத்துக் கொண்டு பின்னூட்டமிட்டது இல்லை. எவர் தளத்தில் மைனஸ் ஓட்டு போட்டதும் இல்லை//ஒவ்வொரு பதிவரும் பின்பற்ற வேண்டிய பழக்கம்..உங்கள் அனுபவங்கள் பலருக்கும் உதவும் அருமையான அனுபவ பகிர்வு

  ReplyDelete
 6. எல்லா பதிவுகளையும் பதிவு போல் தொடர்ந்து படித்தேன் ... கடைசியில் பின்னூட்டம் இட முடியவில்லை ... இங்கு விடுமுறை நாட்களில் தான், என்னை போல் சில பேர் ரொம்ப பிசி... பூஜை , கோவில், குழந்தையின் நடன வகுப்பு , பூங்கா .... பின்னூட்டம் இட வில்லையே என நினைக்க வேண்டாம் ... திரு மு மு ஒரு மாமனிதர் தான், குருவின் பார்வை உங்களுக்கு இருக்கு . மறுபடியும் வாழ்த்துக்கள் ... நல்ல வாரம்

  ReplyDelete
 7. மனதிற்கு மிக நிறைவான வாசிப்புடன் கூடிய வாரம்..

  ReplyDelete
 8. உயிரோட்டமான இந்த நட்சத்திர வாரத்தை உயிரெழுத்துக்களால் நிறைவு செய்துள்ளீர்கள். குழந்தைகளுக்கு என் வாழ்த்துக்களையும் ப்ரியங்களையும் தெரிவிக்கவும். ஈழம் தொடர்பான கட்டுரைகளைத் தேடி உங்கள் தளத்தை வாசிக்க ஆரம்பித்தவன் நான். இன்னும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் தங்களது முழுமையான நூலுக்காக.

  மறக்கக்கூடாத ஆனால் மறக்கடிக்கப்பட்ட முத்து முருகேசனின் தடம்பற்றி ஈழம் பற்றிய செய்திகளை விதைத்துச் சென்றது அருமை.

  பிரபாகரனை துரோகியாகச் சித்தரிப்பவர்களும், அறிவுஜீவி அரசியல் பேசுவோரும் தத்தம் மனச்சாட்சியை ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொள்ளவேண்டும். அவன் விட்டுச் சென்ற தாக்கம் மறைய இன்னும் பல நூற்றாண்டுகள் பிடிக்கும். பிரபாகரன் பற்றிப் பேச எண்ணும்போதெல்லாம் எனக்குள் வெறுமையும், பெருமூச்சும் மட்டுமே எழுகின்றது.

  நட்சத்திரவாரத்தோடு நிறுத்திவிடாமல் இடுகைகளைத் தொடர வேண்டுகிறேன்

  ReplyDelete
 9. படித்தல், தேடல், எழுதுதல் நம்மை சந்தோஷப்படுத்துபவை. மகிழ்ச்சியுடன்சொல்கிறேன், உங்களுக்கு வாழ்த்துக்கள் - பா.ராகவன் அவர்களின் எண்ணங்களை வழி மொழிந்து.

  ReplyDelete
 10. மிகச்சிறந்த நட்சத்திர வாரம்..

  ReplyDelete
 11. சிறந்தவாரம்....வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. அனைத்தையும் படிக்கவில்லை. படித்தவைகள் மனதைத் தொடும் அளவு ஈர்ப்பு கொண்டிருந்தன. நன்றி ஜோதி ஜி. குழந்தைகளுக்கும் உங்கள் நட்சத்திர வாரத்துக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. இந்த வாரம் இனிய வாரமாகவே சென்றது. ஆனால் மீண்டும் பதிவுகளை படிக்க போகிறேன்!

  ReplyDelete
 14. உணர்வுகளை தூண்டும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் நீங்கள். உங்கள் எழுத்துக்கள் மென்மேலும் சிறக்க, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. ஜோதிஜி...மனம் நிறைவாக இல்லை என்றே சொல்வேன்.இன்னும் ஒன்றிரண்டு வாரங்கள் தந்திருக்கலாமோ உங்களுக்கு.இன்னும் நீங்கள் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கே.அங்கங்கு தொட்டுச் சென்றீர்களே தவிர முழுமையாய் இல்லாததுபோல உணர்கிறேன்.என்றாலும் நட்சத்திரமாய் ஒளிர்ந்து சிறப்பித்தீர்கள்.
  நித்திரையையும் தியாகம் செய்திருக்கிறீர்கள்.இனிக் கொஞ்சம் அமைதியாக நித்திரை கொள்ளுங்கள்.
  ஆனால் தொடர்ந்தும் பதிவுகளைத் தந்துகொண்டேயிருங்கள்.

  இங்கும் ஈழம் தொட்டே முடித்திருக்கிறீர்கள்.
  ஜோதிஜி...பிரபாகரன் அவர்களைத் போற்றுபவர்கள் தூற்றுபவர்கள் என்று நிறையவே இருக்கிறார்கள்.அது அவரவர் தனிப்பட்ட குடும்பங்கள் அல்லது அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்படவர்களாக இருப்பார்கள்.
  அதனாலேயே அந்த வெறுப்பும் விருப்பும் கலந்த விமர்சனம்.ஆனால் யுத்ததினால் சமபங்கில் நன்மையும் தீமையும் கண்முன் பார்த்துகொண்டுதான் இருக்கிறோம்.

  நேற்று விந்தையார் சொன்னதுபோல சூழலுக்கேற்றதுபோல வளைந்துகொடாத தன்மையே இன்றைய அழிவுகளுக்குக் காரணமும் ஒன்று.அதற்கு ஒருவேளை அவரிடம் மாற்றுவழித் திட்டங்கள்கூட இருந்திருக்கலாம்.ஆனால் இறுதிவரை இந்தியாவை நம்பியிருந்தார் தேர்தல் தருணத்தில் இந்தியாவின் கை தன் பக்கம் உதவிக்கு நீளும் என்று நம்பியே அவர் முள்ளிவாய்க்கால் பகுதியை விட்டு வெளியேறாமல் காத்திருந்தார் என்பதும் நிச்சயமும் மறுக்கமுடியாத உண்மையும்கூட !

  ReplyDelete
 16. கண்களுக்கு அகப்பட்டு
  மனதுக்கு பிடிக்க
  வாழ்த்துகளாய் வந்த
  வார்த்தைகள்

  சிரித்த முகமாய்
  உள்ளுக்குள் மகிழ்ந்து
  அடுத்த செயலின்வெற்றிக்கு
  உழைத்த உழைப்பு

  பல பேருடைய வாழ்த்துகளாய்
  தன் செயலின் போக்குகளில்
  கட்டுபாடுகள் எல்லாம்
  விதிகளாய்…

  விதிகளை மீற பயம்
  வாழ்த்துகளில் வாழ்ந்து
  விமர்சனங்களில் வாழ
  விதிகளை மீற பயம்

  அவர்அவர்களின்கண்பார்வை
  பார்க்கும் செயல்
  நினைக்கும் எண்ணம்
  மிகச்சரியாய்

  மனதின் எண்ணங்கள்
  இணைவாய் வாழ்த்து
  எண்ணங்கள் முரணாய்
  விமர்சனங்கள்.

  அன்புள்ள ஜோதிஜி என்னுடைய இக்கவிதையை (கவிதை மாதிரி) விமர்சனமாகவும் வாழ்த்துகளாகவும் சமர்ப்பிக்கிறேன். நன்றி...!

  ReplyDelete
 17. அருமையாக சென்றது இந்த வாரம்.........
  ஆனால் இது தேவியரை புதிதாக தொடர்பவர்களுக்கு.............
  மற்றவர்களுக்கு வழக்கம் போல ஆச்சிர்யம் கலந்த எழுத்துக்கள் எப்பொழுதும் போல............
  அடுத்த பதிவிற்காக காத்திறிக்கிறோம் நண்பா........
  வாழ்த்துக்கள்............

  ReplyDelete
 18. மிகச் சிறப்பான வாரம். முமு குறித்தத் தகவல்கள் ஆச்சர்யம் கலந்த அதிசயமாக இருந்தது. ஒரு வாரத்திற்குள் ஏகப்பட்ட களங்களில் விளையாடி இருக்கிறீர்கள்.

  இன்னும் உயரம் எட்ட உளமார்ந்த வாழ்த்துக்கள் :).

  ReplyDelete
 19. விட்டுப் போச்சு...படங்களும், சொற்றொடர்களும் மிக நன்று :)

  ReplyDelete
 20. ஜோதிஜி! உங்களின் கடந்த காலம், உழைத்து உயர்ந்த உங்களின் நிகழ்காலம் அறிந்த பின் ஒரு பிரமிப்பும், இளைய தலைமுறைக்கு நீங்கள் தரும் இன்ஸ்பிரேஷனும் அருமை. பெண் குழந்தைகள் பத்ரகாளிகள் தான். பெற்றோரை, உற்றோரை, தங்கள் வாரிசுகளை பத்திரமாகக் காக்கும் சக்தி ரூபங்கள். அவர்கள் சரியானபடி வளர்க்கப் படவேண்டும். எங்கள் குடும்பத்தில் பெண்குழந்தைகள் அதிகம். ஆண் குழந்தைகள் அதிகமுள்ள வீட்டை விட பெண்குழந்தைகள் இருக்கும் வீடு சொர்க்கம். தெரிந்தவர்களுக்குப் புரியும்.

  ReplyDelete
 21. அண்ணே ஒரு வேண்டுகோள், நட்சத்திர வாரத்தில் தினமும் ஒரு பதிவிட்டதைப்போல் தொடர்ந்து எழுத வேண்டும்..
  இந்த வார கட்டுரைகள், அனுபவங்கள் அனைத்திற்கும் என் வந்தனங்கள் ...

  ReplyDelete
 22. நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/

  ReplyDelete
 23. நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/

  ReplyDelete
 24. ///எந்த இடத்திலும் பெயரை மறைத்துக் கொண்டு பின்னூட்டமிட்டது இல்லை. எவர் தளத்தில் மைனஸ் ஓட்டு போட்டதும் இல்லை. கருத்துக்களின் எதிர்மறை நியாயங்களை சரியான முறையில் எடுத்து வைக்க தயங்கியதும் இல்லை.//

  கைகொடுங்கள் ஜோதிஜி. இதுவே தான் நானும். ஆனால், ஒரேயொரு வித்தியாசம். என் எதிர்மறை கருத்துக்களை சரியான முறையில் எடுத்துவைக்க என்னுள் பக்குவத்தையும், பொறுமையையும் இன்னும் வளரர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. அதை உங்களின் பதில்களிலிருந்து கற்றுக்கொள்கிறேன். நான் சொல்வதை யாராவது தவறாக புரிந்துகொண்டால் என்னை நானே கேட்டுக்கொள்வேன், is it me or the other person? என்று. நான் எழுதியதை திருப்பிப் பெறமுடியாவிட்டாலும் மறுபரிசீலனை செய்திருக்கிறேன்.

  நான் யாருடைய பதிவுக்கும் வாக்களித்ததும் இல்லை. இனிமேல் வாக்களிக்கப்போவதுமில்லை என்பது என் கொள்கை. :)

  சகோதரி ஹேமா, உங்களிடம் பேசவேண்டும் நேரமிருக்கும் போது உங்கள் தளத்தில் தொடர்கிறேன்.

  ReplyDelete
 25. அடப்பாவி

  இப்டி பொசுக்குன்னு நிலுத்திப்புட்டியே.

  கோட்டா மூஞ்சு போன மாதிரியல்லோ இருக்குது.

  பொட்டி போட்டவரிக்கும்போதும்.
  407 ரெடியா நிக்குது,தூத்துக்குடிக்கோ இல்ல கொச்சிக்கோ கொண்டு போயி சேக்கோணூமாக்கோ.

  ஏர்லே அனுப்பிச்சாலும் முளுசா வேணுஞ்சாமி.

  நோ டிஸ்கவுண்டு.

  ReplyDelete
 26. ஒரு புதிய கோணத்தில் வித்தியாசமான நல்ல பதிவு.

  ReplyDelete
 27. எல்லாம் சிறப்பாக இருந்தது, கடைசி இரு இடுகைகளை இன்னமும் படிக்க நேரம் வாய்க்கவில்லை. மற்றபடி இடுகைகள் குறித்த எனது கருத்து... ?

  துளசி அம்மா சொன்னதை வழிமொழிகிறேன்

  ReplyDelete
 28. Jothiji....you have done a great job....Keep rocking....

  ReplyDelete
 29. /அற்புத படங்கள் தந்தது மனமே வசப்படு./
  மனமே வசப்படுத்தியது photo.net இலே என்பதைச் சொல்லியிருக்காதே! :-(

  ReplyDelete
 30. உயிரெழுத்துகளால் இடுகைகளைக் கோர்த்து கொடுத்த சிறப்பான நட்சத்திர வாரம். நட்சத்திர வாரத்தில் உங்கள் குருவுக்கு செய்த மரியாதை சிறப்பு.

  //எந்த இடத்திலும் பெயரை மறைத்துக் கொண்டு பின்னூட்டமிட்டது இல்லை. எவர் தளத்தில் மைனஸ் ஓட்டு போட்டதும் இல்லை. கருத்துக்களின் எதிர்மறை நியாயங்களை சரியான முறையில் எடுத்து வைக்க தயங்கியதும் இல்லை.//

  மிகச்சிறந்த பண்பு... ஒவ்வொருடைய கருத்துகளும் அவரவர் குடும்பம், வள்ர்ந்த சூழல், படிப்பு, வேலை போன்றவற்றால் மாறுபடும். எனவே மாற்றுக் கருத்து கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

  மென்மேலும் பல உயரங்கள் தொட வாழ்த்துகள் நண்பரே!

  அன்புடன்,
  -ரவிச்சந்திரன்

  ReplyDelete
 31. நல்ல கருத்துக்கள்...
  புதிய கோணத்தில் ஒரு வித்தியாச பதிவு.

  ReplyDelete
 32. சார்...உங்க பதிவுகள தொடர்ந்து வாசித்தாலும் கமென்டிடுவதில்லை..உண்மையிலேயே உங்க எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் தலைப்பு சில சமயம் உங்க ஊர் - சுப்ரபாரதி மணியன் வகையில் இருக்குது..சில சமயம் மணிக்கொடி கால தலைப்புகள் மாதிரி இருந்தது(உ.தா: இரண்டு முகம்...ஹி..ஹி..வேற இப்படி சொல்றதுன்னு தெரியல..தப்பா எடுத்துக்காதீங்க)

  அப்பறம்..திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்கள் பத்தி நீங்க எழுதியிருக்கும் 'Tiruppur Life' மாதிரியான பதிவுகள இப்பதான் படித்துக்கொண்டிருக்கிறேன் ...சுப்ரபாரதி மணியன் கூட இந்த மாதம் உயிர்மையில் எழுதி உள்ளார்..

  ReplyDelete
 33. நினைத்த சிகரத்தில் இருக்கிறீர்கள் ஜோதிஜி .. அன்பு வாழ்த்துக்கள்.. பெருமையாய் இருக்கிறது உங்கள்உழைப்பும் அதன் மதிப்பும்..:))

  ReplyDelete
 34. ஜோதிஜி,

  "விடைபெறும் நேரம்" என்று ஒரேயடியாய் பதிவெழுதுவதிலிருந்து ஓய்வா? அல்லது, வேலைப்பளுவா?

  ReplyDelete
 35. ரதி

  ஈழம் தொடர் பாதியில் முடித்த போது கடைசி தலைப்புக்கு எப்போதும் போல நான் ஒவ்வொருவரும் தனித்தனியாக பதில் அளிக்க வில்லை.

  காரணம் ஈழம் என்பது ராஜபக்ஷே பேரன் ஆட்சிக்கு வரும் போது அது குறித்த விசயங்கள் இனவாதம் குறித்து எழுத நிறைய விசயங்கள் அப்போது எழுதுபவருக்கு கிடைக்க்கூடும்.

  இதன் காரணமாக இன்று வரைக்கும் அதற்கு பதில் அளிக்கவில்லை.

  இன்றும் பலரும் தோன்றிய கருத்துக்களை பின்னூட்டமாக கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

  அதைப் போலவே நடந்து வந்த பாதையில் கிடைத்த மர நிழல் இது.

  நேற்று நண்பர்கள் ஏன் எழுதுவதை நிறுத்தி விட்டீர்களா? என்றார்.

  எனக்கே சற்று வியப்பாக இருந்தது.

  இந்த மாதம் முழுக்க புத்தக வேலைகள் மீள் ஆய்வு சமாச்சாரங்கள் தொடர்ந்து கொண்டு இருப்பதால் சற்று இடைவெளி.

  மேலும் மக்கள் இதில் படிக்க வேண்டிய கட்டுரைகள் விசயங்கள் ஏராளமாக இருப்பதால் படித்து முடிக்கட்டும்.

  சற்று ஓய்வு எடுத்துக் கொள்வது மற்றொரு உருப்பாடியான தாக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக நான் எப்போதும் உருவாக்கும் இயல்பான பழக்கம் இது.

  ஈழம் தொடர்பான குறி சொல்லில் தேடிப்பார்த்த சமீப கால கட்டுரைகளில் விஜயராகவன் கட்டுரைகளில் நீங்கள் கொடுத்த விமர்சனம் அற்புதம்.
  நன்றி ரதி.

  ReplyDelete
 36. எல்லாத்தையும் கோடி காமிச்சுட்டேன். உள்வாங்கி இன்னும் தெரிஞ்சுக்கணுமுன்னா..... போய் வாசிங்கப்பா'ன்னு சொல்லாமச் சொல்லிட்டீங்க.

  முடியும் தருவாயில் முத்தான முதல் விமர்சனத்தை தந்து என்னை புரிந்து கொண்டமைக்கு நன்றி டீச்சர்


  வேண்டாம் நந்தா ஆண்டாள்மகன். மக்கள் பிழைத்துப் போகட்டும். ரொம்பவும் பயமுறுத்தக்கூடாது.

  மகுடமெல்லாம் வேண்டாம் கண்ணகி. எப்போது மனதை தொடும் எழுத்தாக இருந்தால் போதும். புத்தக வேலையின் போது என் எழுத்தை நானே முழுமையாக உணர்ந்து திருத்திக் கொள்வேண்டிய முறைகளை கற்றுக் கொண்டுருக்கின்றேன். மாற்றம் மூலம் உருவான எழுத்துக்கள் விரைவில் வரும்.

  ரதி சமகாலத்தில் வாழ்ந்த தலைவருடன் வாழ்ந்ததே எனக்கு பெருமையாக இருக்கிறது. போற்றுபவர்கள் தூற்றுபவர்கள் ஒரு பக்கம். என்னை முழுமையாக பல இக்கட்டடான சூழ்நிலையில் இருந்து வெளியே கொண்டு வரக்கூடிய தன்னம்மிக்கையை அளித்தவர் அல்லவா?

  ReplyDelete
 37. உங்கள் அனுபவங்கள் பலருக்கும் உதவும் அருமையான அனுபவ பகிர்வு

  நன்றி சதிஷ். மனிதர்களுக்கும் பேசும் வார்த்தைகளுக்கும் நடைமுறைக்கும் உள்ள பெரிய இடைவெளிகள் எனக்கு இன்று வரை தீராத ஆச்சரியம்.
  ஒவ்வொரு ஊரிலும் மயானங்கள் இருக்க மனிதர்களின் ஆசைகளும் குறைந்தபாடில்லை என்ற கவிதை வரிகளும் மனதில் வந்து போகின்றது.

  திரு மு மு ஒரு மாமனிதர் தான், குருவின் பார்வை உங்களுக்கு இருக்கு . மறுபடியும் வாழ்த்துக்கள் ...

  சுந்தர் அவர் குரு மட்டுமல்ல. ஆச்சரிய மனிதன். புத்தகத்தை அவர் வரிக்கு வரி படித்து முடித்து திருத்தி முடித்த போது அவரிடம் சொன்னது.........

  நீங்கள் இன்னமும் ஆரோக்கியதோடு இருப்பது எனக்காக தான் போலும்.......

  ReplyDelete
 38. பிரபாகரனை துரோகியாகச் சித்தரிப்பவர்களும், அறிவுஜீவி அரசியல் பேசுவோரும் தத்தம் மனச்சாட்சியை ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொள்ளவேண்டும். அவன் விட்டுச் சென்ற தாக்கம் மறைய இன்னும் பல நூற்றாண்டுகள் பிடிக்கும்

  மிகச் சரியான வார்த்தை ராசா........

  தமிழ் உதயம் நீங்களும் இதே போல் ஒரு நாள் வந்து நட்சத்திரமாய் ஜொலிப்பீர்கள். அந்த நாளுக்காக காத்து இருக்கின்றேன்.

  எஸ்கே, இஸமத் இருவருக்கும் நன்றி.

  சூழலுக்கேற்றதுபோல வளைந்துகொடாத தன்மையே இன்றைய அழிவுகளுக்குக் காரணமும் ஒன்று.

  ஹேமா இந்த வார்த்தை உண்மையென்றாலும் அரசியல் பாதையை பிரேமதாசா காலத்தில் உருவாக தயாராக இருந்த போதிலும் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் அதையும் கெடுத்து குட்டிச்சுவராக்கிவிட்டார். இது போல பல உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.

  அருணாசாலம், இராமநாதன்,தந்தை செல்வா ஏமாறத் தயராய் இருந்தார்கள். ஆனால் பிரபாகரன் ஒரு துளி கூட அதற்கு இடம் தரவில்லை என்பதும் குறிப்பிட்டத்தக்கது. எதிர்மறை நியாயங்களை புத்தகம் படிக்க வாய்ப்பு இருந்தால் புரிதல் கிடைக்கும்.
  நல்ல விமர்சனம் ஹேமா

  ReplyDelete
 39. தவறு

  கவிதை மாதிரி அல்ல. நல்ல கவிதை தான்.

  எழுதிய அத்தனை தலைப்புகளையும நான் பட்ட பாடுகளையையும் நாகரிகமாக சுட்டிக்காட்டிய விதம் சிறப்பு. பெயர் மட்டும் தான் தவறு.

  நன்றி சுடுதண்ணி. நீங்கள் இருக்க பயமேன்?

  ReplyDelete
 40. பெண்குழந்தைகள் இருக்கும் வீடு சொர்க்கம். தெரிந்தவர்களுக்குப் புரியும்

  சாந்தி லெஷ்மணன்

  ஆழமான ஆக்கபூர்வமான விமர்சனம். மேலே உள்ள வரிகள் உண்மையும். நானும் உணர்ந்தவன் தான். திருப்பூர் வாழ்க்கையில் பெண்கள் என்பவர்களை இயல்பான ஒன்றாக பார்க்க உதவியதே இந்த பெண்கள் குறித்த புரிதல் தான்.

  உங்கள் அக்கறைக்கு நன்றி.

  ரதி எப்படியோ ஹேமா வை பிடித்து ஒரு சாத்து சாத்துங்கள். ஹேமாவிடம் இரண்டு தளங்கள் உண்டு. உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கின்றேன். ஹேமா இனி உங்கள் பாடு என்ன ஆகப் போகிறதோ?

  நன்றி செந்தில்.

  ReplyDelete
 41. பெருசு

  உங்கள் அக்கறைக்கு ரொம்ப நன்றி. தொடருவோம். தொடருங்கள்.

  அப்புறம் வைகோ ஸ்டீம் நிறுவனத்தில் பேசிய பேச்சு முமு சொன்னதுடன் ஒப்பிட்டு பார்த்தீங்களா?

  நன்றி கந்தசாமி ஐயா.

  கண்ணன் நீங்க சொன்ன மாதிரி தான் நேற்று வரைக்கும் சில நண்பர்கள் இன்னும் இரண்டு கட்டுரை படிக்க வேண்டி இருக்கிறது என்றார்கள். அதற்குள் ரதி என் விரதத்தை கலைத்து விட்டார். தொடர் வாசிப்புக்கு நன்றி கண்ணன்.

  தொடர்ந்து வருகை தந்த ஆசிரியரே உங்களுக்கு வந்தனம்.

  ReplyDelete
 42. ஒவ்வொருடைய கருத்துகளும் அவரவர் குடும்பம், வள்ர்ந்த சூழல், படிப்பு, வேலை போன்றவற்றால் மாறுபடும்

  இந்த தெளிவு தான் ரவி உங்களை உயரத்தில் அமர வைத்துள்ளது. உங்கள் அக்கறைக்கு ஆதரவுக்கு தேவியர் இல்லத்தின் நன்றி.

  நன்றி குமார்.

  கொழந்த

  பெயரில் தான் குழந்தை. ஆனா நான் வாய் கொடுத்து மாட்டிக்க மாட்டேன். அப்புறம் இன்னோரு கலைஞர் குத்தல் நமக்கு தாங்காது.

  எப்படியோ உங்களை வெளிக் காட்டிக் கொண்டதுக்கு நன்றி தலைவா........

  (வயது 50 தானே(?) )

  ReplyDelete
 43. நினைத்த சிகரத்தில் இருக்கிறீர்க

  தேனம்மை எங்கும் எப்போதும் சிகரம் என்பது இல்லை. நம்முடைய பார்வையில் தான் எல்லாமே. உங்கள் ஆழ்ந்த அக்கறைக்கும் ஆசிர்வாதத்திற்கும் நன்றிங்க.

  இதுவும் கடந்து போகும்................

  ReplyDelete
 44. அருமை.சிறந்த பதிவர் ஆகி விட்டீர் ,வாழ்த்துக்கள்.

  ....>>>
  ஊன்றிக்கவனித்தல் என்பது எழுதத் தொடங்கியதற்கு பிறகு தான் அதிகம் பழக்கத்தில் வந்துள்ளது.>>.

  சத்தியமான உண்மை

  ReplyDelete
 45. வாங்க செந்தில்.

  நண்பர் சொன்னது போல் வாசிப்பு பழக்கம் என்பதே எழுதத் தொடங்கிய பிறகு தான் உணர்ந்து படிக்க வேண்டியதாய் உள்ளது. பத்து பக்கங்கள் கூட வேகமாக நகர முடியவில்லை. அது போலத்தான் சமூகத்தை கவனிக்கும் விதமும். உங்கள் தளம் எப்போதும் என்னை ஆசுவாசப்படுத்தும். இப்போது உங்கள் ஆதரவும். நன்றிங்க.

  ReplyDelete
 46. தமிழ்மணம் கொடுத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி கொண்டிர்கள் வாழ்த்துகள்...இதனால் தமிழ்மணத்துக்கும்,உங்கள் வாசகர்கள் என்று சொல்லிக் கொள்வதில் எங்களுக்கும் பெருமை, மகிழ்ச்சி நன்றி. தொடருங்கள்....

  ReplyDelete
 47. வாழ்த்துக்கள் ஜோதிஜி...
  வேலைப்பளுவின் காரணமாக உங்கள் நட்சத்திர வார பதிவுகளை படிக்கவில்லை... இன்றுதான் பார்த்தேன்....
  இந்தப் பகிர்வில் அ முதல் ஃ வரை அசத்தியுள்ளீர்கள் அதற்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 48. //ரதி எப்படியோ ஹேமா வை பிடித்து ஒரு சாத்து சாத்துங்கள்.
  ஹேமா இனி உங்கள் பாடு என்ன ஆகப் போகிறதோ?//

  ஆஹா, எப்பிடியெல்லாம் என் பெயரை கெடுக்க யோசிக்கிறாங்கப்பா!!!! நல்லாருங்கப்பா. நல்லாருங்க.

  நானு ரொம்ப நல்லவ.

  ReplyDelete
 49. நீண்ட வாசிப்பு தொலைப்பால் நான் மட்டுமே கடைசியாகப் பின்னூட்டம் போட வந்திருக்கிறேன்.அதுவும் 199 ஐ தேடி வந்த காரணத்தால்:)

  ReplyDelete
 50. நீங்க எதைச் சொன்னாலும் சுவாரசியம் குறையாமல் சொல்லுறிங்கள்

  ReplyDelete
 51. அருமை அய்யா......நீண்ட இடுகையாக இருந்தாலும் சுவாரசியம் சற்றும் குறையாமல் .......அருமை ....அருமை...

  ReplyDelete
 52. இணைய உலகில் உள்நுழைந்ததும் தேவியர் இல்லம் இன்றைக்கு என்ன எழுதியிருக்கிறது நாள் தவறாது ஒரு விசி்ட்.

  இது பதினெட்டாவது நாள்.

  ஏமாற்றம் அன்பின் ஜோதிஜி.

  ReplyDelete
 53. தவறு

  உங்கள் அக்கறைக்கு நன்றி. டாலர் நகரம் என்ற புத்தக வேலைகளும் ஈழம் தொடர்பான புத்தக வேலைகளுக்கிடையே ஓய்வில்லாத பணிகளும் இருப்பதால் வெகு விரைவில் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சிகின்றேன்.

  முத்து தியாவின் பேனா நன்றிங்க.

  நடராஜன் 199 என்னாச்சு?

  ReplyDelete
 54. சொல்ல வார்த்தைகள் இல்லை. எல்லாத்துக்கும் சேர்த்து I Love YOU - என் அன்பு அண்ணே
  :-)

  ReplyDelete
 55. ரோஸ்விக் மின் அஞ்சல் சோதிக்க. உங்களுக்கு நன்றி.

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.