நாம் ஒரு படைப்பை எளிதாக உருவாக்க முடியும். ஆனால் நம் படைப்பு வெற்றி என்பது அதனை உள்வாங்குபவர்கள் அளிக்கும் விமர்சனம் தான் அதற்கு மகுடம் சூட்டும். நான் எப்போதும் "வலையுலக சுஜாதா" என்று கொண்டாடும் முரளி அளித்த விமர்சனமிது.
***
நாம் ஒரு படைப்பை எளிதாக உருவாக்க முடியும். ஆனால் நம் படைப்பு வெற்றி என்பது அதனை உள்வாங்குபவர்கள் அளிக்கும் விமர்சனம் தான் அதற்கு மகுடம் சூட்டும். நான் எப்போதும் "வலையுலக சுஜாதா" என்று கொண்டாடும் முரளி அளித்த விமர்சனமிது.
***
மதம்,சாதி,கட்சி என்பதற்குள் நின்று ஆடவேண்டிய களம் ஃபேஸ்புக். கூட்டம் அதிகம். உணர்தல் குறைவு. அழுத்தம் தாங்கமுடியாது என்பவர்கள் இன்னமும் வலைபதிவுகளை விட்டு வெளியே வரவில்லை. யூ டியூப் சமாச்சாரம் ஆழ்கடலில் இருட்டுக்குள் நின்று பவளப்பாறையைக் கண்டடைவது போன்றது. நடிகர், நடிகைகள், இது தவிர சட்டமன்றத் தேர்தல் அருகே வந்து கொண்டிருப்பதால் அதகளமாக களமாக மாறியுள்ளது. (நடிகையின் மச்சம் மறைந்த மாயம்?. சட்டமன்றத் தேர்தலில் வெல்லப்போவதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் சேர்த்த சொத்துக்கள்)
கவர்ச்சித் தலைப்புகள் தலைதெறிக்க நம்மைப் போன்றவர்களை ஓட வைக்கின்றது. அது தான் பலரையும் ஓடி வரவும் வைக்கின்றது.
திடீர் தொழில் நுட்ப வல்லுநராக உருமாறியுள்ள மகளார் அவர்களை ஒரு புண்ணியவான் Ramachandra Krishnamoorthy கொடுத்த அறிவுரையை வேதாவாக்காக பற்றிக் கொண்டு எனக்கு இனி ஒரு யூ டியூப் செய்து முடிக்க முன் பணம் இவ்வளவு தேவை என்று கறார் காட்டுவதால் கொரானா பயத்தின் காரணமாகப் பலவிதங்களில் வெளியே அலைய வேண்டிய பயணத்தைக் குறைத்துக் கொண்டிருப்பதைப் போல மகளைச் சமாளிக்க முடியாமல் என் பர்ஸ் வேகமாகக் காலியாகிவிடுகின்றது. என் வேகம் அவருக்கு லாபம்.
கடவுள் இந்த ஏழை எளிய தமிழ்ப்பிள்ளையின் மேல் கருணை காட்டி ஆஸ்திரேலியாவிலிருந்து Swamy Madike ஒருவரைப் பேச வைத்து வழிகாட்டி இந்தப் பக்கம் திருப்பினார். நானே ராஜா நானே மந்திரி. என் வேகத்திற்கு உகந்த எளிய தொழில் நுட்பம்.
மேலை நாட்டுக் கிறிஸ்துமஸ் என்பது திருப்பூருக்கு வசந்த காலம். ஆனால் முழுமையான கொரானா பயம் விலகாத காரணத்தாலும், அரசு மருத்துவமனையில் உள்ள கூட்டம் தரும் அச்சம், தனியார் மருத்துவமனைகள் செய்யும் "பணச் சேவை"கள் அனைத்தும் பயணத்தை, வேலைகளைக் குறைத்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்கிற நிலையில் முடங்க வைத்துள்ளது. அலைபேசி உரையாடல் வழியே அனைத்தையும் முடித்து ஆக வேண்டிய நிலைக்கு வாழ்க்கை மாற்றியுள்ளது.
பத்தாண்டுகளுக்கு முன்னால் ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கிய இந்த ஆங்கிலப் பொக்கிஷப் புதையலை (புத்தகப் பட்டியலைக் கீழே கொடுத்துள்ளேன்) மகள்களுக்கு அறிமுகம் செய்து வைத்த போது மீள் வாசிப்பு செய்து பார்த்தேன். பத்து நிமிடமாகத் தொடர் வாசிப்பாக இதனை இளையர்களுக்குக் கொடுத்தே ஆக வேண்டும் என்று இன்று முதல் தொடங்கியுள்ளேன்.
மாநிலத்தில் தர்மயுத்தம் நிலைமை நாளை மதியம் தெரியும்.
மத்தியில் அக்கா தம்பி பாசத்தின் அடுத்த நிலை விரைவில் தெரியும்.
நடப்பதைப் பற்றி உண்மைகளைப் பேசினால் எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாகும். ஆனால் காந்தி பெயர் கொண்டவர்களுக்கு காந்திக்கும் உண்டான வித்தியாசங்களை இந்தப் பேச்சு மூலம் பலவிதமாக உங்களால் உள்வாங்க முடியும். சுவாரசியமாக கிராமத்து மொழியில்.
மறைக்கப்பட்ட இந்தியச் சுதந்திர வரலாற்றின் அடி முதல் நுனி முதல் ஐந்து ஐந்து பேச்சாக ஒரு நாள் இடைவெளி விட்டு இந்தத் தளத்தில் வெளிவரும். ஒவ்வொன்றும் பத்து நிமிடப் பேச்சு.
இதில் Follow Button உள்ளது. எத்தனை நாட்களுக்குத் தான் அரசியல் விவாதங்களைத் தொடர்ந்து கேட்டுக் கண்காணித்துக் கவலைப்பட்டு மன அழுத்தம் உருவாகி, மீளமுடியாமல் ஆரோக்கியம் இழந்து.....
சரித்திரம் இங்கே அனைவரையும் பதிவு செய்யும்.
காலச்சக்கரம் நிகழ்வுகளை மறைக்காது. ஒழித்து வைக்கவும் விடாது.
என் கடன் பணி செய்து கிடப்பதே. Passion என்பது நம் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. மன அழுத்தத்தைத் தீர்க்கும் மாமருந்து.
இந்தியச் சுதந்திரம்:- மறைக்கப்பட்ட உண்மைகள் - Hidden truth details about India's Independece Story 1-2-3-4-5
ஆனந்த ரங்கம் பிள்ளை டைரிக் குறிப்புகள் புத்தக வடிவில் வந்துள்ளது. இப்போது பதினோராம் வகுப்பில் தமிழ்ப் பாடத்தில் ஒரு பாடமாக வந்துள்ளது. நேற்று மகளுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது பல ஆச்சரியங்களை உள்வாங்க முடிந்தது. ஏறக்குறைய தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 25 வருடங்கள் அவர் எழுதியது தான் தென்னிந்திய வரலாற்றின் பதினெட்டாம் நூற்றாண்டின் முழுமையான சித்திரத்தை ஓரளவுக்கு உள்வாங்க முடிகின்றது. ஆனால் இன்று நாம் பெற்றுள்ள தொழில் நுட்ப வளர்ச்சியில் நாம், நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், மாற்றங்கள் என்பதனை பதிவு செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளது.
ஆனந்தரங்கம் பிள்ளை அடுத்த 300 வருடத்திற்குப் பின்பு பேசப்படுவோம் என்று நினைத்து எழுதியிருக்க மாட்டார். அவர் தன் சுயத் திருப்திக்காகவே, மன உளைச்சலை போக்குவதற்காகவே எழுதியிருப்பார் என்றே நினைக்கிறேன்.
பேச்சுக்கலையை விரும்புபவர்களுக்கு நிச்சயம் இதன் பலனளிக்கும். ஆப்பிள் ஐ போன் வரைக்கும் இந்தப் பேச்சு சென்று சேர்கின்றது இதன் தனித்தன்மை.😇