Sunday, August 30, 2020

ஜிஎஸ்டி - சில குறிப்புகள்.


எனக்கும் தனிப்பட்ட முறையில் ஜிஎஸ்டி குறித்து ஏராளமான வருத்தங்கள் இருந்தது. காரணம் நாம் கட்டிய தொகை நம் உடனே வருவதில்லை. அதற்கான வலைத்தளத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தணிக்கையாளர்கள் புலம்பல்கள் மற்றொரு புறம். இதுவரையிலும் நேரிடையாக எதையும் பார்க்காமல் கேட்காமல் உறுதிப் படுத்திக் கொள்ளாமல் இவையெல்லாம் அரசின் தவறு என்றே நேற்று வரையிலும் நினைத்திருந்தேன். இன்று எங்கள் பகுதி உயரதிகாரியைச் சந்தித்து இருக்காவிட்டால் இதை எழுத வாய்ப்பு அமைந்திருக்காது.


Friday, August 28, 2020

முதல் விமர்சனம் - ராபின்சன் பூங்கா முதல் திருக்கழுக்குன்றம் வரை (பிகேஆர்)

வாழ்க்கை என்பது பலர் நினைப்பது போல முழுவதும் வெண்மையாகவோ அல்லது கறுப்பாகவோ இருப்பதில்லை. இரண்டும் கலந்த சாம்பல் நிறத்தில்தான் அது உள்ளது. அதுபோல்தான் எந்த ஒரு செயலும் எல்லோருக்கும் நலம் தருவதாகவோ அல்லது அனைவருக்கும் பிரச்சனையை உண்டு செய்வதாகவோ இருப்பதில்லை. எந்த அளவிலான நல்லதைச் செய்யவேண்டும் என்று நினைத்துச் செய்யப்படும் செயலும் சிலருக்குத் துன்பம் விளைவிக்கவே செய்யும். தனிமனிதர்களின் வாழ்விலேயே இதுதான் இயற்கையின் நியதி என்றால் பல கோடி மக்களின் வாழ்க்கையை முடிவு செய்யும் இடத்தில் இருக்கும் அரசியல் தலைவர்களின் முடிவுகள் மட்டும் இந்த விதிக்குக் கட்டுப்படாமலா இருக்கும்? 



Thursday, August 27, 2020

பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம்

கடந்த இரு வாரமாக எஸ்பிபி தொடர்பான செய்திகளை படித்து வருகிறேன். எம்.ஜி.ஆரிடம் நிருபர் ஒரு கேள்வி கேட்கிறார். 

"எத்தனை நாளைக்கு மக்கள் உங்களை நினைவு வைத்திருப்பார்கள்?" 

"என் கடைசி பிலிம் சுருள் இருக்கும் வரைக்கும் அவர்களுடன் நான் இருப்பேன்" என்றார். 

இன்று அலைபேசியில் அவர் படங்களைப் பாடல்களைப் பார்க்கும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அவர் இப்படி உலகம் மாறும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அது போலத்தான் எஸ்பிபி அவர்களும். அவருக்கு அஞ்சலியோ வாழ்த்துகளோ ஆறுதலோ தேவையில்லை.