Thursday, May 07, 2020

கொரனா படங்கள் -- ஊரடங்கு ஏப்ரல் 2020

சுய ஊரடங்கு 3.0 - 38
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)

தமிழக அரசு அறிவித்த நோய் சக்தியை அதிகரிக்க கடை பிடிக்க வேண்டியவை.



இதற்கு தனியாக விமர்சனம் எழுத தேவையில்லை.  கொரானா காலம் உருவாக்கிய மறைமுக அன்பு.  நிச்சயம் 2021 மக்கள் தொகைப் பெருக்கம் சற்று அதிகமாகவே இருக்கும்.


திருப்பூரில் நடக்கும் ஒவ்வொரு திருமணமும், அதன் செலவுகள் மட்டும் சர்வ சாதாரணமாக பல கோடிகளைத் தாண்டும்.  இந்த கொரானா காலத்தில் அனைத்தும் மிச்சமாகியுள்ளது.  இருபது பேர்கள் மத்தியில் ஒவ்வொரு திருமணமும் நடந்தது.

தமிழ்நாட்டில் கொரானா என்ற பெயருடன் தப்லிக் என்ற பெயரும் நிரந்தரமாக சொல்லும் அளவிற்கு அரசும் உருவாக்கிவிட்டது.  அதே போல அவர்களும் நடந்து கொண்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு இரண்டு பக்கமும் குடுமிப்பிடி சண்டையாகவே கடந்த சில வாரங்களாக நடந்து கொண்டிருந்தது.




இது கேரளாவில் எடுக்கப்பட்ட படம்.

சொன்னபடி முகமூடி அணிந்தாகிவிட்டது. ஆனால்? எப்படி நிற்கின்றார்கள்? அங்கு மட்டுமல்ல இன்று காலை சந்தைக்குப் போய் வந்த பிறகு நான் பார்த்த பல காட்சிகள் இதே போலத்தான் உள்ளது.  மக்களுக்கு வைரஸ் தொற்று என்பது புரியவே இல்லை. என் பக்கத்து வீட்டு பெண்மணி் என்னிடம் இப்போது வரைக்கும் சொல்லும் வாசகம்.

"சும்மாயிருங்க தம்பி. ரொம்ப பயமுறுத்திக்கிட்டே இருக்காதீங்க. அந்த கொள்ளை நோயெல்லாம் நம்மள மாதிரி ஆளுகளுக்கு வராது. பாவம் செய்தவர்களுக்குத்தான் வரும்".





ஊரடங்கு உத்தரவு நிலையில் உணவு கிடைக்காதவர்கள் பசியாற இலவசமாக எடுத்துக் கொள்ளும்படி அடைக்கப்பட்டுள்ள கடைகள் முன்பு வாழைப்பழதார்களை கட்டி தொங்கவிட்டுள்ள நெல்லை மாவட்டத்தில் உள்ள
கொங்காந்தான்பாறை கிராம இளைஞர்கள்


கோவையில் ஆளுங்கட்சியினர் ஏற்படு செய்த சிறப்பு கொரணா பரப்புமுகாமில் கட்சி நிர்வாகிகள் ,பொதுமக்கள் , பத்திரிக்கையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு சிறப்பாற்றினர்












ரூ.500 விலையில் 19 வகை மளிகைப் பொருட்கள்

2 comments:

Rathnavel Natarajan said...

அருமை

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு தொகுப்பு.