சுய ஊரடங்கு 3.0 - 34
Corona Virus 2020
(மாா்ச் 25 முதல் மே 17 வரை)
கடந்த மாதம் இதே நாள் ( மார்ச்.22 ம் தேதி-மக்கள் ஊரடங்கு நாள்) நாடு முழுவதும் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 329 பேர்.
இன்று ஏப்ரல்22 ம் நாள், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை: 19,984 ஆக உள்ளது.
ஒரே மாதத்தில் நாடு முழுவதும் 60 மடங்காக நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் எனக்கணக்கிட்டால் கூட
கடந்த மாதம் இதே நாள் ( மார்ச்.22 ம் தேதி) கொரோனா தொற்று வெறும் 6 பேருக்கு தான் இருந்தது.
இன்று தமிழ்நாட்டில் மட்டும் 1596 பேருக்கு தொற்று உள்ளது.
தமிழக அளவில் 266 மடங்கு நோய் தொற்று அதிகமாகி உள்ளது.
ஊரடங்கை தளர்த்தினால் நோய் அதிவேகத்தில் பரவும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஆனால் கடந்த மாதம் இருந்த எச்சரிக்கை உணர்வு, அச்ச உணர்வு பொதுமக்களுக்கு குறைந்து தான் போய் விட்டது.
இன்னமும் கறிக்கடைகளில், மீன் கடைகளில், காய்கறி கடைகளில் என தள்ளு முள்ளு செய்து கொண்டிருக்கிறோம்.
இன்னொருபுறம் இலவச அரிசி, உணவுப்பொருட்களுக்காக அதே பாணியில் கூட்டம் சேர்ந்து கொண்டிருக்கிறோம்.
ஊரடங்கை நீட்டியுங்கள் ஆனால் எங்களுக்கு உணவுக்கு வழி செய்யுங்கள் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விட்டு, நண்பர்களுடன் சேர்ந்து தோட்டங்களில் கிடா விருந்தும், நாட்டுக்கோழி விருந்தும் நடத்திக் கொ்ண்டு இருக்கிறார்கள்.
அதற்கு சுவாரசியம் கூட்ட 100 ரூபாய்க்கு விற்ற மது பாட்டில்களை கள்ள மார்க்கெட்டில் 1000 ரூபாய்க்கு வாங்கி குடித்து விட்டு, கூட்டமாய் பதிவு போட்டு சிக்கிக் கொள்கிறார்கள். கள்ளச்சாராயமும் காய்ச்சப்பட்டதாக தகவல்கள் வருகிறது.
நோய் பரவல் இன்னமும் சமூகத்தொற்றாக மாறவில்லை என அரசு கூறுகிறது. அப்படி மாறி விட்டால் எவ்வளவு மோசமான விளைவுகள் இருக்கும் என நாம் சிந்திக்க மறுக்கிறோம்.
ஊரடங்கை முழுமையாக நாமே கடைப்பிடிக்க வேண்டும். இன்னும் சில மாதங்கள் கூட ஆகலாம்.
இருக்கும் பணத்தில் சிக்கனமாக வாழ பழகிக்கொள்வது நல்லது.
இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் அள்ளிக்கொடுப்பது அனைத்திலும் நல்லது.
4 comments:
வரும் ஏழாம் தேதி முதல் குறைந்து விடலாம்...
டெல்லி விசயத்திலும் கோயம்பேடு விசயத்திலும் உடனடி நடவடிக்கை எடுத்திருக்கலாம்..
இன்று தமிழகம் முழுக்க மதுப் பிரியர்களின் அட்டகாசங்களை புகைப்படங்களாக தொகுத்துள்ளேன். அதை தனியாக வலையேற்றுகிறேன். வரலாறு முக்கியம் அல்லவா?
டாஸ்மாக் 7 ந் தேதி செயல்படுகின்றது என்று அறிவிப்பு வெளியிட்டு எந்த அளவுக்கு உழைத்துள்ளார்கள் என்பதனைப் பார்க்கும் இவர்களின் தரம் புரிகின்றது.
Post a Comment