சுய ஊரடங்கு 3.0 - 37
Corona Virus 2020
(மாா்ச் 25 முதல் மே 17 வரை)
ஊரடங்கில் வீட்டில் முடங்கியுள்ள பொதுமக்களுக்கு உதவ ரூ.500 விலையில் 19 வகை மளிகைப் பொருட்கள் கொண்ட தொகுப்பை ரேஷன் கடைகள், கூட்டுறவு சங்கக் கடைகள் மூலம் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.
இதையடுத்து பொதுமக்களுக்கு வசதியாக ரூ.500 விலையில் 19 வகையான வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தார்.
டி.யு.சி.எஸ் நிறுவனத்தின் மூலம் மளிகைப் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு இணைப்பில் கண்டவாறு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இதற்கான விற்பனையை இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள 23,486 நியாய விலைக்கடைகள், கூட்டுறவு அங்காடிகள், அம்மா கூட்டுறவு அங்காடிகள், நகர பசுமை அங்காடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு வர உள்ளது.
597 ரூபாய் மதிப்புள்ள 19 வகையான மளிகைப் பொருட்களை ரேஷன் அட்டை இல்லாதவர்களும் நியாய விலைக்கடைகளில் ரூ.500 கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
19 வகை பொருட்களின் விலைப் பட்டியல்
விவரம் அளவு விலை - வெளிசந்தை விலை
துவரம்பருப்பு 1/2கிலோ 57.50 - 65
உளுந்தம்பருப்பு 1/2 கிலோ 64.70 - 75
கடலைப்பருப்பு 1/4 கிலோ - 22 27
மிளகு 100 கிராம் 42.70 - 50
சீரகம் 100 கிராம் 25.60 - 30
கடுகு 100 கிராம் 9 - 12
வெந்தயம் 100 கிராம் 8.60 - 11
தோசை புளி 250 கிராம் 35.50 - 42
பொட்டுக் கடலை 250 கிராம் - 22 - 25
நீட்டு மிளகாய் 150 கிராம் 25.50 - 30
தனியா 200 கிராம் - 24 - 30
மஞ்சள் தூள் 100 கிராம் 12.90 -16
டீ தூள் 100 கிராம் 24 - 28
உப்பு 1 கிலோ 8 - 10
பூண்டு 250 கிராம் 50 - 70
சன்பிளவர் ஆயில் 200 கிராம் - 25 - 29
பட்டை 10 கிராம் 3 - 5
சோம்பு 50 கிராம் 6.50 - 10
மிளகாய்த்தூள் 100 கிராம் 25 - 32
மொத்தம் 491.50 - 597
இதைத் தவிர பொருட்கள் போடுவதற்கான பை ரூ.3.60, வேலை செய்யும் ஊழியர்களுக்கு கூலி ரூ.4.90 என மொத்தம் ரு.500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 comment:
500 ரூபாயில் 19 பொருட்கள் - நல்ல விஷயம். 100 ரூபாய் காய்கறி கூட நல்ல விஷயம். திருச்சியில் 100 ரூபாய் காய்கறி வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் வீட்டு வாசலிலேயே கிடைக்கிறது.
Post a Comment