Saturday, May 30, 2020

கொரானா - மகள் வரைந்த ஓவியங்கள்


கொரானாவிற்கு ஊரடங்கு தொடங்கி நாளை (31.05.2020) மொத்தம் 68 நாட்கள் முடியப் போகின்றது. 

67 நாட்கள் - கற்றதும் பெற்றதும்





2013 ஆம் ஆண்டு 167 பதிவுகள் எழுதியுள்ளேன். 2019 ஆம் ஆண்டு 150 பதிவுகள் எழுதியுள்ளேன். ஆனால் 2020 முதல் ஐந்து மாதத்திற்குள் 122 பதிவுகள் வந்துள்ளது.  காரணம் கொரனா ஊரடங்கு. இந்த வருடம் 1000 ஆவது பதிவும் கூடுதலாகச் சேர்ந்துள்ளது. 
 

தினமும் இரண்டு பதிவுகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் நிஜமாகியுள்ளது.  இதன் காரணமாக வேறு எங்கும் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு கொரானா பின்னால் ஓடிக் கொண்டே இருந்த காரணத்தால் வேறு எந்தச் சொந்தக் கவலைகளுக்கும் இடமில்லாமல் போய்விட்டது.


மகள்களில் இருவர் பத்தாம் வகுப்பு என்பதால் நம் தமிழக அரசின் குளறுபடியான அறிவிப்புகளால் (ஒவ்வொரு மாணவர்களும்) நரகவேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.


மகளொருவர் 90 மணி பயிற்சியின் மூலம்,  வணிகம் சார்ந்த படிப்பை முடித்துள்ளார். இன்று அதற்கான இணைய வழியே பரிட்சை எழுதுகின்றார். இவர் ஓவியத்தில் அசாத்தியத் திறமை பெற்றவர். இயற்கையிலேயே இந்தத் திறமை இவரிடம் உள்ளது. எவரிடமும் பயிற்சி எடுக்காமல், கற்றுக் கொள்ளாமல் படம் வரையும் ஆற்றல் உள்ளது. இதில் உள்ள படங்கள் அனைத்தும் அவர் வரைந்தது. இது தவிர கைவினைஞர் செய்யும் காரியங்களில் ஈடுபாடு காட்டியுள்ளார்.


என் பல பழக்கங்கள் மாறியுள்ளது. உணவு சார்ந்த ஆசைகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.  குரல் வழிப் பதிவு ஒவ்வொரு ஞாயிறு அன்றும் வருகின்றது. ஆயிரம் பதிவுக்குப் பிறகு அடுத்த பாதையில் பயணிக்கின்றேன்.


அமேசான் மின் நூல் தளத்தில் வெங்கட், ஞானப்பிரகாசம் இவர்களைத் தொடர்ந்து ஜம்புலிங்கம் அவர்கள் வந்துள்ளார். தன் முதல் மின்னூலை வெளியிட்டுள்ளார். வாழ்த்துகள்.  தனபாலன் எப்போது வருவீர்கள்?


வலைபதிவில், ஃபேஸ்புக்கில் எழுதிய விசயங்களைத் தவிர இன்னும் வெளியிடாமல் தனிப்பட்ட முறையில் எழுதியிருக்கும் தகவல்களுடன் அந்த 68 நாட்கள் என்ற பெயரில் கொரானா வைரஸ் 2020 குறித்து ஒரு மின்னூல் வெளிவரும்.  முழுமையாக ஆவணமாக இல்லாவிட்டாலும் இந்தக் கால கட்டத்தில் என்ன தான் நடந்தது? என்பதனை அறிய ஆர்வம் உள்ளவர்களுக்கு (25 வருடம் கழித்து) இந்நூல் உதவக்கூடும்.  இது அமேசான் தளத்தில் 26 ஆவது மின்னூல்.  கிண்டில் மொழி என்ற நூலைத் தவிர 24 புத்தகங்களையும் இலவசமாக வாசிக்கக் கொடுத்துள்ளேன். மக்களின் ஆதரவு மகிழ்ச்சியைத் தந்தது.  கொரானா ஊரடங்கு இந்த விசயத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தது.



நாளை வரவிருக்கும் குரல் பதிவில் பாஜக மற்றும் அதிமுக அரசு என்ன செய்தது?  எடப்பாடியாரும், மோடியும் கோவிட் 19 காலத்தில் இந்தியர்களுக்கு, தமிழர்களுக்கு என்ன செய்தார்கள் என்பதனைப் பற்றி பேசியுள்ளேன்.  ஏற்கனவே புலம் பெயர்த் தொழிலாளர்கள் குறித்த பேச்சைக் கேட்டு விட்டு தமிழகப் பத்திரிக்கையாளர் ஒருவர் எங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லையே என்றார்.  அதே போல நாளை வரும் பேச்சும் ஆவணம் போலவே இருக்கும்.  நாளை காலை நேரம் இருப்பவர்கள் கேட்டுப் பார்க்கவும். நண்பர்களுக்கு வாய்ப்பிருந்தால் அறிமுகம் செய்து வைக்கவும் நன்றி.


கொரானா ஊரடங்கின் போது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. விஜய கார்த்திகேயன் தலைமையில் பல் வேறு அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து திருப்பூர் மக்களுக்குச் சிறப்பாக பணியாற்றினார்கள். பல சமயங்களில் வியந்து போகும் அளவிற்கு இருந்தது. எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சனைகளும் உருவாகவில்லை.


20 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஒரு கைதேர்ந்த ஓவியரின் நேர்த்தி தங்கள் மகள் வரைந்த படங்களின் வழி எட்டிப்பார்க்கிறது
தங்களின் அன்பு ஓவிய மகளுக்கு வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said...

அட்டகாசம்... அனைத்து ஓவியங்களும் அருமை... அன்பு மகளுக்கு வாழ்த்துகள் பல...

தலைப்புச் செய்தி அல்லது நாடு பதிவிற்கு, ஐந்தாவது படத்தை எடுத்துக் கொண்டிருப்பேன்... எனக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே...! வரும் பதிவில் யோசிக்கிறேன்...

Audible Kindle பரவலாகட்டும் அண்ணே... வருகிறேன்...

வெங்கட் நாகராஜ் said...

ஓவியங்கள் அனைத்தும் சிறப்பு. மகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். தொடர்ந்து வரையச் சொல்லுங்கள்.

பதிவில் என்னையும் குறிப்பிட்டு இருப்பதில் மகிழ்ச்சி.

G.M Balasubramaniam said...

பதிவுகளில் செய்திபத்திரிகை மற்றும் ஊடகங்களில்வரும் செய்திகள்தவிர வேறு உண்டா ஒப்பிட்டு நோக்க வில்லை

ஜோதிஜி said...

நன்றி நன்றி.

ஜோதிஜி said...

வாழ்த்துகள். குரல் கிண்டில் பக்கம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. சில நாட்களாக கேட்டுக் கொண்டு இருக்கேன்.

ஜோதிஜி said...

நன்றியும் அன்பும்.

ஜோதிஜி said...

என் பதிவுகளில் உள்ள பெரும்பாலான செய்திகள் ஊடகங்களில் வந்து இருக்க வாய்ப்பில்லை. சமூக வலைதளங்களில் வந்துள்ளது.

KILLERGEE Devakottai said...

தங்களது செல்வத்துக்கு வாழ்த்துகள் பயிற்சி பெறாமலேயே இவ்வளவு திறமை. சரியான பாதையை வகுத்துக் கொடுங்கள் ஜி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

என்னை நினைவுகூர்ந்தமையறிந்து மகிழ்ச்சி.
உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற ஓவியங்கள்..மகளுக்கு பாராட்டுகள்.

அது ஒரு கனாக் காலம் said...

Congratulations for your daughter...nice drawings...All the very best for the future.

Thulasidharan V Thillaiakathu said...

ஓவியங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன தங்கள் மகளுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்!

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

ஜோதிஜி வாவ்! உங்கள் மகளுக்குப் பாராட்டுகள்! பொக்கே! வாழ்த்துகள்! உங்கள் மகள் பயிற்சி இல்லாமலேயே இத்தனைச்சிறப்பாக வரைகிறாரே!! ஒவ்வொரு ஓவியமும் அத்தனை அழகாக இருக்கிற்து. மிகவும் ரசித்தேன் தாஜ்மகால் பென்ஸில் ஸ்கெச் நீரில் நிழலாகத் தெரிவது செமையா இருக்கு கரெக்ட்டாக ஆங்கிள் வைத்து வரைந்திருக்கிறார். ரொம்ப ரொம்ப துல்லியமான வரைதல...என்ன திறமை! மேலும் மேலும் வரையச் சொல்லுங்கள். ஒரு கண்காட்சி போல வைக்கலாமே.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஜோதிஜி வாவ்! உங்கள் மகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள். பொக்கே. வாழ்த்துகள். பயிற்சி எதுவும் இல்லாம்லேயே இத்தனை துல்லியமாக வரைந்திருக்கிறாரே! வியக்கிறேன். மிகவும் ரசித்தேன் ஒவ்வொன்றையும். அதுவும் அந்த பென்ஸில் ஸ்கெச் தாஜ்மகால் அதன் வடிவம் நீரில் நிழலாகத் தெரிவதும் அந்தச் செடிகள் இருப்பதும் என்ன துல்லியமான ஆங்கிளில் வரைந்திருக்கிறார். செம திறமை! மேலிருந்து 7 வது படம் அழகு. கார்ட்டூன் படங்கள் எல்லாமே சிறப்பு. மேலும் மேலும் நிறைய வரைய வாழ்த்துகள். ஒரு கண்காட்சி வைக்கலாமே. பாராட்டுகளைச் சொல்லிவிடுங்கள் அவரிடம்.

கீதா

ஜோதிஜி said...

ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளிலும் எழுதுங்க. உங்களால் முடியும்.

ஜோதிஜி said...

நிச்சயம் செய்து விடுவோம். நன்றி.

ஜோதிஜி said...

நன்றி சுந்தர்.

ஜோதிஜி said...

நன்றியும் அன்பும்.

ஜோதிஜி said...

சில தனிப்பட்ட திறமைகள் வியக்க வைக்கின்றது. பார்க்கலாம். கடைசி வரைக்கும் இந்த ஆர்வம் இருக்க வேண்டும்.

ஜோதிஜி said...

சொல்லிவிடுகிறேன். நன்றி.