Sunday, December 09, 2012

காரைக்குடி உணவகம் - அளவில்லா சாப்பாடு



எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடனும். 
எப்பொழுது வேண்டுமானலும் சாப்பிடனும். 
எல்லாவ்ற்றையும் சாப்பிடனும். 

ஆனால் ஆரோக்கியத்தில் குறையேதும் வந்து விடக்கூடாது.

இதுதானே நாம் அனைவருக்கும் இருக்கும் ஆசை?. 

ஆனால் எதார்த்தம் என்பது எல்லா இடங்களிலும் தலைகீழாகத்தானே இருந்து தொலைக்கின்றது.

என் தாத்தா இறந்த போது வயது 84. இரண்டு ஈடு இட்லி சாப்பிட்டு முடித்த பிறகு தான் எதிரே இருப்பவர்களிடம் பேசத் தொடங்குவார்.  அடுத்து வேகம் மட்டுப்படுமே தவிர குறையாது. ஒரு ஈடு என்பது எட்டு என்ற எண்ணிக்கை கொண்டது. சாம்பார் சட்னி போன்ற சமாச்சாரங்கள் என்றால் தூக்கி கடாகி விடுவார். அம்மியில் அரைத்த மிளகாய் துவையல். செக்கில் ஆட்டிய நல்லெண்னெய். கலந்து கொண்டு குழப்பிக் கொண்டு தின்பதைப் பார்ப்பவர்களுக்கு பேதி வந்து விடும். ஆனால் காலையில் அருகே இருந்த ஊரணிக்கரையில் ஏழெட்டு சுற்று வந்து விடுவார்.  மாலையில் 4 கீலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலுக்கு தினந்தோறும் சென்று வருவதை பார்த்து இருக்கின்றேன். தூங்கும் போது சொல்லிவிட்டு தான் படுத்தார். காலையில் எழுந்த அவர் உடம்பு இருந்தது. உடம்பில் மூச்சு இல்லை.

அப்பாவுக்கு 60வது வயது முடியும் வரைக்கும் உணவு விசயத்தில் அப்பனுக்கு தப்பாத பிள்ளையாக இருந்தார். அசைவ வெறியர் என்றே அழைகக்லாம். ஆனால் கடைசி காலத்தில் வந்த சர்க்கரை நோயை அவர் பொருட்படுத்தவே இல்லை.

பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளை கவனித்துப் பாருங்கள்.  சர்க்கரை நோய் வந்துள்ளது என்று தெரிந்ததும் மருத்துவரிடம் செல்லத் தொடங்குவர். தினந்தோறும் மருத்துவர் சொல்லும் மருந்துக்களையும் எடுத்துக கொள்வர்.  ஆனால் நாளுக்குள் நாள் உடம்பு இளைத்துக் கொண்டேயிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருப்பார்.  

அப்படி என்றால் உண்ட மருத்தின் பலன் தான் என்ன? வைத்திருந்த கட்டுப்பாடுகள் என்ன தந்தது என்றால் மிஞ்சுவது ஒன்றுமே இல்லை. இதற்குப் பினனால் உள்ள மருத்துவ தண்டவாளங்களை புட்டுப்புட்டு வைத்துக் கொண்டிருக்கின்றார் சென்னையில் உள்ள ஒரு இஸ்லாமிய மருத்துவர். மருந்தில்லா மருத்துவம் என்ற பெயரில் சென்னை, கோவை போன்ற இடங்களில் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார். அதைப் பற்றி அடுத்த வாரம் எழுதுகின்றேன்.

எனக்குத் தெரிந்து அரசியல்வாதி வைகோ ஒருவர் தான் சர்க்கரை நோயை எப்படி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதையும், உடல்நலத்தையும் எப்படி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதை நடைமுறை சார்ந்த விசயங்களில் சாதிதது காட்டிக் கொண்டிருப்பவர்.  

இதைப் போலத்தான் அப்பாவும் மருத்துவர் கொடுத்தனுப்பும் எந்த மருந்துகளையும் உண்ண மாட்டார். அதுவொரு மூலையில் கிடக்கும்.  காரணம் சாப்பாடு மேல் கைவைத்து விடுவார்கள் என்ற பயம்.  மாரடைப்பில் தான் மரணம் அடைந்தார். எளிதான முறையில் இயல்பாக பேரூந்தில் வந்து கொண்டிருந்த போது தான் இறந்தார்.  ஆனால் கடைசி ஒரு வருடத்தில் தான் நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது.  உணவு தான் அவரை மனிதனாக சுறுசுறுப்பான இளைஞராக கடைசிவரையிலும் கொண்டு செலுத்தியது. 

20 வயது வரைக்கும் நாம் சாப்பிட்ட சாப்பாட்டின் அளவுக்கும் 40 வயது ஆனதும் மாறிப்போவதற்கான ஒரே காரணம் நமது உழைப்பின் அளவும் தன்மையும் மாறிவிடுவதே. 

கடநத நான்கு வருடங்களாக நான் ஒரே எடை அளவு. அதே தன்மை. குடும்ப நோய்கள் எதுவும் இதுவரையிலும் அண்டவில்லை. எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை. பலசமயம் அவசர வேலையின் பொருட்டு அதிகாலை 4 மணிக்கு வெளியே செல்லும் போது  பருத்த உடம்பை தூக்கிக் கொண்டு மூச்சு வாங்கிக் கொண்டு நடைபயிற்சி என்று பலரும் செல்வதை பார்த்துக் கொண்டே செல்வதுண்டு. 

என் கட்டுப்பாடு. என் ஆரோக்கியம். என் விருப்பம்.

கட்டுப்பாடு இருந்தால் வாழ்க்கை. கட்டவிழ்த்து விட்டால் கருமாதி. இதுதான் எளிய தத்துவம்.

ஆனால் நானும் சாப்பாட்டு ராமன் தான்.  

கட்டுப்பாடு என்று எத்தனை வைத்துக் கொண்ட போதிலும் சமயம் கிடைத்தால் விளாசி தள்ளிவிட்டு அப்புறம் அய்யோ அம்மாவென்று தடுமாறுவதுண்டு. இருந்தாலும் என்னை மாற்றிக் கொள்ள எண்ணமில்லை என்பதை விட மனமில்லை என்பது தான் உண்மை. ஆனால் உடம்பில் எதையும் தங்கவிடுவதே இல்லை. 

காலையில் நீங்கள் கழிப்பறை சென்று உட்கார்ந்தவுடன் குறுகிய நேரத்தில் வெளியே வந்து விட முடிந்தால் நீங்க லட்சாதிபதி. அங்கே போய் முக்கல் முனங்கலுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டியிருக்குது என்றால் உடல் மன ஆரோக்கியத்தின் தன்மையை அதிகப்படுத்த வேண்டும் என்று அர்த்தம். 

இரவில் படுத்த அதிகபட்சம் அரைமணி நேரத்திற்குள் ஆழ்ந்த தூக்கம் உங்களை தழுவிக் கொள்கின்றதா?  நீங்க தான் கோடீஸ்வரன். ஆனால் இங்கே பலருக்கும் கனவில் வருபவர்கள் தான் உதவி புரிகின்றார்கள்..

காரணம் உண்பது உறங்குவது இந்த இரண்டுக்குள் தான் நம் அத்தனை பேர்களின் வாழ்க்கையும் இருக்கிறது.

பெரிய நாம் நினைத்தே பார்க்க முடியாத என்று ஏராளமான காரியங்களை மனதில் வைத்திருப்போம். ஆச்சரியமான சாதனைகள் என்று எத்தனை நாம் கடந்து வந்தாலும், கடக்க நினைத்தாலும் அடிப்படையில் இரவு வந்தால் படுத்தவுடன் தூக்கம் வர வேண்டும்.  மூன்று வேளையும் பசியெடுத்தால் தான் சாப்பிட முடியும்.  வயிறு தொடர்ந்து பொருமிக் கொண்டேயிருந்தால் சீக்கிரம் நாலு பேர்கள் நம்மை தூக்கப் போகின்றார்கள் என்று அர்த்தம்.

பல சாதனைகள் செய்து விட்டு தனது உடம்மை வேதனையாக வைத்துக் கொண்டால் என்ன ஆகும்? 

வாழ்க்கை முழுக்க சோதனை தான். 

இஞ்சித்தேன்.

சென்னைக்கு சென்ற போது பலாப்பட்டறை ஷங்கருடன் பேசிக் கொண்டிருந்த போது தான் இந்த இஞ்சித்தேன் அருமையை உணர்ந்து கொண்டேன். அதன் பிறகு வலைதளங்களில் பார்த்த போது தங்கம் பழனி என்பவர் அருமையாக பல விசயங்களை எழுதிக் கொண்டு வருவதையும் பார்க்க முடிந்தது.  பல நண்பர்களுடனும் இது குறித்து பேசி கடைசியாக இஞ்சித் தேன் மூலம் நாலைந்து மாதமாக குடும்பத்தில் பறந்து கொண்டிருந்த காந்தித்தாத்தாவை தற்போது தான் நிறுத்த முடிந்ததுள்ளது.

இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி (சிலர் காய வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.  ஆனால் இஞ்சியை காய வைத்தால் சுக்கு என்று மாறி அதன் தன்மையும் மாறி விடும் என்றும் சொல்கின்றார்கள்) அதனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.  இஞ்சியில் கழுவிய தண்ணீர் பதம் சென்றதும் இஞ்சியின் அளவுக்கு மிதக்கும் அளவுக்கு சுத்தமான தேனில் மூன்று நாட்கள் ஊறவைக்க வேண்டும். மூடியுள்ள பாத்திரத்தை வெயிலில் வைத்து விடுங்க. மூன்று நாளில் இஞ்சி தேனை நன்றாக ஊறிஞ்சி விடும். 

காலையில் பல்துலக்கி விட்டு வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி தேனுடன் எடுத்து (தேனும் இஞ்சியும் சேர்ந்து இருக்க வேண்டும்) சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள்?.

முக்கியமான நோய் எதிர்ப்புசக்தி உருவாகும். எதிரிகளை சமாளிக்க பணத்தைப் போல மனமும் உடலும் உறுதியாகத்தானே இருக்க வேண்டும். 

பருவநிலை மாற்றத்தில் வரும் சளித் தொந்தரவு காணாமல் போய்விடுகின்றது.

எதை வேண்டுமானாலும் உங்கள் வாழ்வில் விரும்பி சேர்த்துக் கொள்ளுங்க. ஆனால் சளியை உடம்பில் சேர்க்கத் தொடங்கினால் சனி பகவான் சிநேகம் பிடிக்க வருகின்றார் என்று அர்த்தம். விரும்பாமலேயே உள்ளே வந்து விடும். பிறகு நீங்களே விரும்பினாலும் வெளியே செல்லாது. 

தேன் இஞ்சி உண்ணும் பழக்கத்தை தினந்தோறும் பயிற்சியில் கொண்டு வரும் போது தான் நன்றாக பசியெடுக்கும். தேனின் மருத்துவ குணங்களை பக்கம் பக்கமாக எழுதலாம். இது நாங்கள் அனுபவத்தில் கண்டு கொண்டிருக்கும் உண்மை. 

அதியமானுக்கு ஔவையார் கொடுத்த நெல்லி

அடுத்து அனைவரும் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ள வேண்டியது நெல்லி.  இப்போது இதுவும் தேன் நெல்லி என்கிற ரீதியில் வந்து கொண்டிருக்கின்றது. காசைக் கொடுத்து ஏமாறாமல் நாமே முழு நெல்லிக்காய் வாங்கி வந்து நறுக்கி தேனில் ஊறவைத்து சாப்பிடலாம். அல்லது அப்படியே தினந்தோறும் ஒன்றாக பச்சையாக சாப்பிடலாம்.  குழந்தைகளுக்கு சாறாக மாற்றி தினந்தோறும் அரை டம்ளர் கொடுத்து வரலாம்.

இதிலும் முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி. இதிலும் கதை கதையாக எழுத வேண்டிய ஏராளமான சமாச்சாரங்கள். இயற்கை மருத்துவம் குறித்து ஏராளமான வலைப்பூக்கள் உள்ளது. தேடிப்பாருங்கள்.

நாம் சாப்பிடும் சாப்பாட்டில் அளவு தேவையில்லை. எதுவும் சாப்பிடலாம். எப்போதும் சாப்பிடலாம். ஆனால் அது உடம்பில் தங்கிவிடக்கூடாது என்பதை கவனத்தில் வைத்திருக்க வேண்டும். சக்தியாக மாற்றப்பட்டு இருக்க வேண்டும்.  பணத்தை வீட்டில் சேர்த்து வைத்தால் வெகுமானம்.

செரிக்காத சமாச்சாரத்தை உடம்பில் சேர்த்து வைத்தால் என்னவாகும் என்பது தெரியும் தானே?  செரித்தால் நல்லது. செரிக்காவிட்டால்? 

வாயை பொத்திக் கொண்டு இருப்பது அதை விட நல்லது.

இது ரெண்டு மட்டும் தான் இன்றைக்கு உள்ள காரைக்குடி உணவத்தின் சாப்பாடு. 

சாப்பாட்டு ராமன்கள் இந்த இரண்டையும் தினந்தோறும் செய்து வந்தாலே  மகிழ்ச்சியாக விரும்பியதை சாப்பிட்டலாம். ஆனால் நிச்சயம் நம்மிடம் உள்ள காந்தி தாத்தா சிரிக்கும் பணம் பையிலிருந்தபடியே நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பார்.

இன்னும் கொஞ்சம் போடும்மா என்று குழந்தைகள் ஒரு கட்டு கட்டுவதை வேடிக்கை பார்த்தபடியே நாமும் நைஸாக இன்றைக்கு ரொம்ப நல்ல சமைச்சருக்கே என்று  கேட்டு வாங்கி சாப்பிடலாம்.

ஒரு நிறுவனத்தின் முதலாளியின் முக்கிய வேலை என்ன தெரியுமா?

மூன்று வேளையும் தான் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து மாத்திரைகளை வரிசைப்படி எடுத்துக் கொடுக்க ஒருவரை தனியாக வைத்துள்ளார்.  நிறுவன வேலை பாதி.  இந்த வேலை மீதி.

 எப்பூடி?

அந்த மளிகைச் சீட்டு போலவே இருந்த பட்டியலைப் பார்த்து பயந்தே போய்விட்டேன்.

ஆனால் கடந்த ஒரு வருடமாக அதே நோய்கள், மேலும் மேலும் வீர்யமான மருந்து மாத்திரைகள்.

எங்கே நிம்மதி தான் என்ற வாழ்க்கை தான்.

இயற்கை மருத்துவம் தாமதமாகத்தான் பலன் தரும். ஆனால் நிரந்தரமாக நோயிலிருந்து விடுபட்டு விடலாம். அண்டை வீட்டுக்காரர் நம்மைப் பார்த்து பொறாமைப்பட ஒனிடா டிவி தேவையில்லை. நெல்லியும் இஞ்சியுமே போதுமானது. 

அசைவ உணவு பிரியர்கள் மட்டும் இந்த தலைப்பை படிக்கவும்.


Photo : 4Tamil Media.Com

44 comments:

கோவை நேரம் said...

அருமையான பகிர்வு....ஒரு குறிப்பிட்ட வய்துக்கு மேல் போய் விட்டால் நாக்கை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்...அது முடியுமான்னு தெரியல்யே...

Anonymous said...

anaivarukkum payanulla padhivu, padhivittamaikku nandri
surendran
surendranath1973@gmail.com

அப்பாதுரை said...

காலப்போக்கில் நம் உடலும் சூழலுக்கேற்ப மாறுகிறது என்றே நினைக்கிறேன். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வசதிகள்.. இன்றைய வசதிகள்.. அன்றைய வேகம்.. இன்றைய வேகம்.. எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கையில் இரண்டு ஈடு இட்லியெல்லாம் இந்நாளில் நடக்கிற காரியமா என்று அதிசயிக்க வைக்கிறது. அச்சமாகவும் இருக்கிறது. என் உறவினர் ஒருவருக்கு எண்பது வயதாகப் போகிறது - அவர் சாப்பிடுவதைப் பார்த்தால் எனக்குப் பயமே வந்துவிடும். இருபது வயதில் கூட நான் அப்படிச் சாப்பிட்டதில்லை.

ஒருபோது யோகியே என்ற வழக்குக்கு அண்மையில் போக விரும்புகிறேன். பார்க்கலாம்.

ஜோதிஜி said...

போனவன் போக விரும்பும் உங்களை வருக வருக என்று வரவேற்கின்றேன்.

தி.தமிழ் இளங்கோ said...

//தேன் இஞ்சி உண்ணும் பழக்கத்தை தினந்தோறும் பயிற்சியில் கொண்டு வரும் போது தான் நன்றாக பசியெடுக்கும். தேனின் மருத்துவ குணங்களை பக்கம் பக்கமாக எழுதலாம். இது நாங்கள் அனுபவத்தில் கண்டு கொண்டிருக்கும் உண்மை.//

காரைக்குடி உணவகத்தில் அனுபவ வைத்தியம். சுத்தமான இயற்கைத் தேன் கிடைக்க வேண்டும். எல்லா இடத்திலும் செயற்கைத் தேன்தான் கிடைக்கிறது.


ஜோதிஜி said...

நன்றி சுரேந்திரன்

ஜோதிஜி said...

முடியாவிட்டால் முக்கல் முனங்கல் தான்.

ஜோதிஜி said...

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கின்றது. அவர்களிடம் தெளிவாக சொல்லி வாங்கவும். காதி வஸ்திராலயம் போன்ற கடைகளிலும் கிடைக்கின்றது. நல்ல தேன் என்பதை எப்படி சோதிப்பது என்பதை தெரிந்து கொண்டு அதன் படி முயற்சித்துப் பாருங்கள்.

CS. Mohan Kumar said...

மிக அருமை ஜோதிஜி. எழுத்து நடையும், சொல்கிற விஷயமும் அற்புதம்

இஞ்சிதேன் உள்ளிட்ட நல்ல விஷயங்களை வீட்டம்மாவிடம் காட்டுகிறேன் ; எங்கள் வீட்டிலும் முடிந்தால் பின்பற்றலாம் ! பார்ப்போம்

கூடல் பாலா said...

பயனுள்ள தகவல்கள்!

Raja said...

//இஞ்சியில் கழுவிய தண்ணீர் பதம் சென்றதும் இஞ்சியின் அளவுக்கு மிதக்கும் அளவுக்கு சுத்தமான தேனில் மூன்று நாட்கள் ஊறவைக்க வேண்டும். //
இஞ்சி கழுவிய தண்ணிரில் தேனை கலக்க வேண்டுமா?
சரியாக புரியவில்லை ..விளக்குவீர்களா

வவ்வால் said...

ஜோதிஜி,

தேனில் ஊறிய இஞ்சி, நெல்லிக்காய் எல்லாம் முன்னரே சாப்பிட்டு இருக்கிறேன், ஆனால் தொடர்ந்தது இல்லை, கடையிலும் விற்கிறார்கள்.

அதே போல பேரிச்சையை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் உடலில் இரும்பு சத்து கூடம், அதிக ஆற்றலும் கிடைக்கும்.

ஹி...ஹி நான் எல்லாம் ஒரு தடவை முயற்சிப்பதோடு சரி தொடர்வதில்லை.

துளசியும் தேனும் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா இன்னும் சிலவற்றுக்கு நல்லதாம், பிளாக் டீயில் துளசி போட்டு சாப்பிடுவதுண்டு. உங்க பதிவை படிச்சதும் தான் நினைவு வருது ஒரு கட்டு துளசி ஃப்ரிட்ஜில் வாங்கி வைத்து நான்கு நாளாச்சு , எடுத்து பயன்ப்படுத்தனும்.

ஜோதிஜி said...

இஞ்சியை வாங்கி வரும் போது அது தூசியாக, அழுக்கும், பல சமயம் சகதி போன்ற அழுக்கும் சேர்ந்து இருக்கும். அதற்காக அதனை சுத்தமாக கழுவ வேண்டும். அதை உடனடியாக சிறுசிறு துண்டுகளாக நறுக்கும் போது அதன் ஈரப்பதம் அப்படியே இருக்கும். சில சமயம் உடனடியாக அதனை தேனில் போடும் போது தேன் கெட்டுவிடும். இதன் காரணமாக கழுவிய இஞ்சியை சற்று உலரவைத்து விட்டு அதன் பிறகே சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதனை தேனில் ஊறவைக்க வேண்டும்.

புரிந்த விபரம் தெரிவிக்கவும். நன்றி

ஜோதிஜி said...

பார்த்தீர்களா? குழந்தைகள் பதிவில் ஆளே வர மாட்டேன் என்று காணாமல் போன வவ்வாலுக்கு ஏதோவொரு வகையில் உதவி புரிந்ததே இந்த பதிவின் நோக்கமாக அமைந்து விட்டது. நன்றிஜீ.

ஜோதிஜி said...

நாம் இதை அன்றாட வாழ்வில் பயன்படுத்தினால் மட்டுமே இது பயன் உள்ள தகவல். நன்றி பாலா.

ஜோதிஜி said...

வாங்க மோகன். பார்க்கின்றேன் என்பதல்ல. நானும் நிச்சயம் செய்கின்றேன் என்பதே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். காந்தி தாத்தாவை காப்பாற்ற வேண்டும் அல்லவா?

semmalai akash said...

கட்டுப்பாடு இருந்தால் வாழ்க்கை. கட்டவிழ்த்து விட்டால் கருமாதி. இதுதான் எளிய தத்துவம்.


முதலில் இந்த பழமொழிக்கு பாராட்டுகள்.

மிகவும் அருமையானப் பதிவு, இஞ்சி,நெல்லிக்காயுடன் தேன் கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளையும், உங்களுடைய அனுபவத்தையும் மிக மிக அற்ப்புதமாக சொல்லிருகிறீர்கள். மிகவும் பயனுள்ளவை நன்றி.

Raja said...

நன்றி ஜோதிஜி.
முற்றாக புரிந்தது.
செய்ய தேவையான ஆயத்தங்களை தொடங்கியாயிற்று.தங்களின் இம்மாதிரியான பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.எனது குழந்தைக்கு இப்பொழுது தன 2 மதங்கள் ஆகிறது.அதற்காகவே அடி ஓடி இதுமாதிர்யான தகவல்களை செகரிக்கேறேன் :)

Tamil seiythigal said...

மிக நல்ல பதிவு.
பல பயனுள்ள தகவல்களி பகிர்ந்தமைக்கு நன்றி

Avargal Unmaigal said...

மிகவும் அருமையானப் பதிவு. எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது முக்கிய காரணமாக இருந்தாலும் எப்படி சாப்பிடுவது என்பது மிக அவசியம்... நாம் சாப்பாட்டை மிகவும் ரசித்து சுவைத்து நன்றாக மென்று சாப்பிட்டாலே அதன் அளவு ஆட்டோமெடிகாகவே குறைந்துவிடும் அதே போல சாப்பிடும் போது டிவி பார்ப்பது வேறு ஏதாவது பேசி அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிடுவதால் நம்மை அறியாமலே அதிகம் சாப்பிட்டுவிடுகிறோம் அதனால் தான் அந்த கால பெற்றோர்கள் சாப்பிடும் போது பேசாதே என்று கூறுவதை அந்த கால ஆட்கள் நன்கு அறிவார்கள். ஆனால் இந்த காலத்தில் குடும்பத்தில் உள்ளவர்கள் பேசிக் கொள்ளும் இடம் டைனிங்க் டேபிள் மட்டுமே என்பதாகிவிட்டது அதுபோல பிசிக்கல் வொர்க் என்பது இந்த காலத்தில் மிகவும் குறைந்துவிட்டது

ஜோதிஜி said...

வாங்க நண்பா.

ஏலேய் கொன்னு கொலை எடுக்காதே? என்று நண்பர்களுக்குள் சொல்லி கேட்டு இருப்பீங்களே? இங்கே நம்ம வீட்ல வந்து பாருங்க. சாப்பிடும் போது மூணு பேரும் அடிக்கிற லூட்டிக்கு அளவேயில்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது.

ஜோதிஜி said...

வருக நன்றி.

ஜோதிஜி said...

பழமொழி என்றுமே வாழ்க்கை அனுபவங்கள் தரும் மொழி தானே.

ஜோதிஜி said...

நிலக்கடலை, சம்பா கோதுமை, பொட்டுக்கடலை

ஒரு பொதுவான அளவு பார்த்து கிண்ணம் எடுத்துக் கொள்ளவும். இந்த கிண்ணத்தை எப்போதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாற்றி விட வேண்டாம்.

இந்த கிண்ணத்தின் அளவில் ஒன்னரை கிண்ணம் அளவு கோதுமை எடுத்துக் கொள்ளவும். பொட்டுக்கடலை அரை கிண்ணம். கால் அளவு நிலக்கடலை.

மூன்றையும் வாங்கி பதமான அளவில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

நிலக்கடலையின் தோல் நீக்கி விட வேண்டும்.

மிகஸியில்போட்டு நன்றாக பொடி செய்ய வேண்டும். இதை நன்றாக உறுதிப்படுத்திக் கொள்ளவும். நன்றாக மாவு போல வரவேண்டும்.

இதை அப்படியே ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தையின் மூன்று மாதம் கழித்து ஆரம்பிக்கலாம்.

குழந்தை எந்த அளவுக்கு சாப்பிடும் என்ற அளவு நமக்குத் தெரியும். அந்த அளவுக்கு மாவு எடுத்துக் கொண்டு அந்த மாவுடன் ஜீனி மற்றும் பசும்பால் சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

நன்றாக பால் போல வரும். குழந்தை தண்ணீர் போல சாப்பிட விரும்பினால் அப்படியே செய்து விடலாம். அல்லது மாவு போல உருண்டையாக சாப்பிட வைக்கலாம். எது வசதியோ அப்படியே செய்யலாம்.

நாலைந்து மாதங்கள் கொடுத்துக் கொண்டு வரும் போது எடை முதல் எதிர்ப்பு சக்தி வரைக்கும் குழந்தைககு எளிதில்கிடைக்கும்.

அதற்கு மேலாக கடைகளில் கிடைக்கும் கண்ட மாவு சமாச்சாரங்கள் வாங்கி நாம் ஓட்டையாண்டியாக மாறுவதையும் தடுக்க இயலும்.

உங்கள் புரிதலை தெரியப்படுத்துங்க. நாங்கள் செய்த காரணத்தை இங்கு உங்கள் குழந்தைக்காக எழுதி வைக்கின்றேன். நன்றி ராஜா. குழந்தைக்கு எங்கள் வாழ்த்துகள்.

Unknown said...

great going.

Raja said...

நன்றி ஜோதிஜி.

மருத்துவர்கள் முதல் 6-7 மதம் வரை தண்ணீர் கூட குழந்தைக்கு கொடுக்க தேவையில்லையென கூறியுள்ளனர்.தாய்பால் மட்டுமே குழந்தைக்கு போதுமானதென கூறியுள்ளனர்.தங்கள் கூறியுள்ளதை கட்டாயம் 6-7 மதங்களுக்கு பிறகு கடை பிடிக்கேறேன். அத்துடன் கம்பு மற்றும் கேழ்வரகையும் சேர்த்தால் இன்னும் சத்தானதாக வரும் என நினைக்கிறேன்.சசர்க்கரைக்கு மற்றக வெல்லம்/கருப்பட்டி சேர்த்தல் மேலும் நலம் பயக்கும்.

மாட்டுப்பால் குழந்தைக்கு தேவை இல்லை (தாய் பால் புகட்டல் முடிந்த பிறகு ) மேலும் அது கெடுதலை உண்டாக்கும் என பல்வேறு தளங்களில் கூறப்பட்டுள்ளது. அதை பற்றிய தங்களின் கருத்தை எதிர் பார்க்கிறேன். (நான் இருக்கும் இடத்தில் பதபடுத்தபட்ட பாக்கெட் மட்டுமே சாத்தியம் )

கடை மாவு (cerelac etc) நம் பர்சை பதம் பார்க்கும் என்பதை முற்றாக ஏற்கிறேன்.

ஜோதிஜி said...

தாய்ப்பால் அது மட்டுமே போதுமானது. தற்போதைக்கு வேறு எதுவுமே தேவையில்லை. நான் சொல்லியதும் மெதுவாக ஆரம்பிக்கலாம். குழந்தையைப் போல உங்கள் மனைவியையும் குழந்தையாக கவனித்து கொள்ளுங்க. அது போதும். நன்றி.

manivannan said...

வாழ்த்துகள்

இராஜராஜேஸ்வரி said...

ஆரோக்கியம் சிறக்க அளித்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

Raja said...

நன்றி ஜோதிஜி.

மனைவி தினம் முளைகட்டிய பயறு உண்டு வருகிறார்.அத்தோடு பேரீச்சை மற்றும் இதர பழங்களையும் சேர்த்து வருகிறார்.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

எப்போதும் உங்கள் எழுத்தில் ஒரு ஆய்வு பார்வை , ஒரு படிப்பவனை பற்றி ஒரு அக்கறை இருக்கும் என்பது அனைவரும் அறிந்தது .அதையும் தாண்டி படிப்பவனை பற்றி உடல் அக்கறை என்பது நன்றி சொல்லவேண்டிய பதிவு .அருமை சார்

ஜோதிஜி said...

வருக கிருஷ்ணமூர்த்தி, இராஜராஜேஸ்வரி மற்றும் மணிவண்ணன்.

Unknown said...

மிகவும் சிறப்பாகபதிவுகளை வெளியீடுசெய்தமைக்காக பாராட்டுகிறேன்

Anonymous said...

படிப்பதற்க்கும்,பயன்படுத்துவதற்கும் ஏற்ற நல்ல ’தீனி’ பதிவு,நன்றி!!!!!--
சு.மூர்த்தி.

ஜோதிஜி said...

வாங்க மூர்த்தி. உங்கள் விமர்சனமும் ரசனையாய் இருந்தது.

ஜோதிஜி said...

தொடர் வருகைக்கு நன்றிங்க.

cheena (சீனா) said...

அன்பின் ஜோதிஜி - பயனுள்ள பதிவு - ஆனால் கடைப்பிடித்தால தான் பயனுள்ள பதிவு - விபரங்கள் அத்தனையும் தேவைப் படும் அள்விற்கு அளிக்கப் பட்டிருக்கின்றன. நன்று நன்று. நல்வாழ்த்துகள் ஜோதிஜி - நட்புடன் சீனா

ஜோதிஜி said...

இன்றைய உங்களின் காலைப் பொழுது முழுவதையும் நானே திருடிக் கொண்டேன் போல. போட்டு தாக்குறீங்களே? நன்றி.

கிரி said...

ஜோதிஜி இஞ்சித்தேன் விசயம் செமையா இருக்கு.. இங்கே வாய்ப்பில்லை.ஊருக்கு சென்றால் தான் முயற்சிக்க வேண்டும்.

தூக்கம் எனக்கு என்றுமே பிரச்சனையாக இருந்ததில்லை. படுத்து அதிக பட்சம் ஒரு நிமிடத்தில் தூங்கி விடுவேன்.. பல நேரங்களில் ஐந்து நொடி அவ்வளவு தான்.

ஜோதிஜி said...

சிறப்பான ஆத்மா என்று அர்த்தம். ஊரில் செய்து எடுத்துக் கொண்டு அங்கே சென்று விடுங்க.

ஜோதிஜி said...

முதல் வாழ்த்து உங்களிடமிருந்தா. நன்றிங்க. உங்களுக்கும் தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

உடல், மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்து இருக்க நல்ல பதிவு.

நெல்லிக்காய் சீஸனில் நெல்லிக்காய் ஊறுகாய், துவையல், நெல்லிக்காய் சாதம் என்று செய்வது உண்டு.
சிறு வயதில் பச்சையாக நிறைய நெல்லிக்காய் சாப்பிட்டு இருக்கிறேன்.
இஞ்சி உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வேன்.
இஞ்சி, தேன் போட்டு ஒரு முறை பயன் படுத்தி இருக்கிறேன்.
நல்ல பதிவுக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

பகிர்வு படித்தேன் அண்ணா...
இஞ்சித் தேன் சாப்பிட ஆரம்பிக்கிறேன்...

SRMOULDTECH said...

Lot of much needed good info. Thanks for sharing.

Please review : https://srmouldtech.wordpress.com/
Appreciate your support.