Saturday, May 09, 2020

திருப்பூர் மூன்று நாட்கள் முழு அடைப்பு - ஏப்ரல் 2020

சுய ஊரடங்கு 3.0 - 42
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 17 வரை)


கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள 3 நாட்கள் முழு ஊரடங்கு திருப்பூரில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் மருந்து வாங்க செல்வதாக கூறிக்கொண்டு வெளியில் செல்வதை தடுக்கும் வண்ணம் மருந்தகங்கள் மூன்று நாட்களும் முழுமையாக அடைக்கப்பட்டன. பொதுமக்களும் பெரும்பாலோனோர் வீடுகளில் முடங்கி இருப்பதால் கடந்த 30 நாள் ஊரடங்கை விட இன்று திருப்பூர் மிகவும் அமைதியான நகரமாக இருந்தது.

திருப்பூரில் கறிகடைக்காரர்கள் நேற்று இரவிலிருந்து அதிகாலை வரை கடைகள் வைத்து வியாபாரம் செய்தனர். வீடுகளுக்கு இறைச்சி டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், போன் செய்தாலும் யாரும் இறைச்சி டெலிவரி செய்யவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். 

மருந்துக்கடைகளும் மூடப்பட்டு இருந்ததால், மருந்து வாங்க கூட ஆட்கள் வராமல் திருப்பூர் முழு அமைதி கொண்டிருந்தது.  கீழே உள்ள படங்கள் நண்பர் பத்திரிக்கையாளர் மணி அவரது தமிழ் அஞ்சல் இணைய தளத்திற்காக எடுக்கப்பட்டது. நன்றி.



கொரோனாவின் பரவலை தடுக்க அரசு அறிவித்த முழு ஊரடங்கால் திருப்பூர் மாநகரம் அமைதிகொண்டு இருந்தது. வாகனச்சத்தமின்றி ஆங்காங்கே காக்கை குருவிகளின் சப்தம் கேட்டுக்கொண்டு இருந்தது.  மொத்தத்தில் எந்த நேரமும் உழைக்கும் திருப்பூர் மக்களை அடங்க வைத்து விட்டது இந்த கொரோனாவும்.. அதை தவிர்க்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கும்...
















2 comments:

G.M Balasubramaniam said...

திருப்பூரிலொழுங்கு முறை தேவலாமோ

வெங்கட் நாகராஜ் said...

முழு ஊரடங்கு - அதனால் பலன் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

படங்கள் நன்று.