Friday, May 29, 2020

குடிகார கொரானா அவஸ்த்தைகள்

சுய ஊரடங்கு 4.0 - 71


Corona Virus 2020


(மாா்ச் 25 முதல் மே 31 வரை)

தமிழகத்தில் சென்னை மாவட்ட காவல்துறைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை தவிர மற்ற பகுதிகளில் கடந்த 16ம் தேதி 3,600 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.

கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டு மதுவிற்பனை செய்யும் நடைமுறையை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் வழங்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வந்தது. மணிக்கு 70 டோக்கன்கள் வீதம் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனால், பெரும்பாலான கடைகளில் இந்த நடைமுறையை ஊழியர்கள் பின்பற்றவில்லை. இதேபோல், டோக்கன் உள்ள நபர் எவ்வளவு வேண்டுமானலும் மதுபானம் வாங்கிக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்ததால் கடைகளில் சரக்கு விரைவில் விற்றுத்தீர்ந்தது. இந்தநிலையில், இதை சரிகட்டவும், வருவாயை மேலும் அதிகரிக்கவும் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை காலை 10ல் இருந்து இரவு 7 மணி வரையில் நீட்டித்தது.

இதேபோல், 500 டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது 750 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நேர நீட்டிப்பை தொடர்ந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகத்தில் 109.3 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. அதன்படி, அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் - 28.6 கோடி, திருச்சி மண்டலத்தில் - 27.4 கோடி, சேலம் மண்டலத்தில் - 24.3 கோடி, கோவை மண்டலத்தில் - 22.5 கோடி, சென்னை மண்டலத்தில் 6.5 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

5 நாட்களில் விற்பனை எவ்வளவு?
7ம் தேதி 172.59 கோடி
8ம் தேதி 122 கோடி
16ம் தேதி 163.5 கோடி
17ம் தேதி 130.1 கோடி
18ம் தேதி 109.3 கோடி
மொத்த விற்பனை 697.49 கோடி





ஆதாரம் நாங்கள்.
அரசின் கௌரவம் நாங்கள்.
ஆனால்
குடிகாரர் என்கிறீர்கள்?
தெருவில் கிடக்கின்றோம் என்கிறீர்?
வாந்தியெடுத்துக் கிடந்தாலும்
கேட்க ஆளிள்லை

குடித்தால் தான் உழைக்க முடியும்
குடித்தால் மட்டுமே வாழ முடியும்.
கொரனாவிற்கு தெரியுமா?
அரசாங்கத்திற்குத் தான் புரிந்ததா?
இரண்டு வாரம் என்றார்கள்.
எட்டு வாரமாக்கினார்கள்.
அம்பது நாளும் அவஸ்த்தையாச்சு.
நாக்கு செத்து நாளாயிற்று.

மண்டைக்குள் மூளையில்லை.
மனசுக்குள் புத்தியில்லை.
சாமிக்கிட்டே யார் சொல்றது.
எங்கள் எடப்பாடி சாமிக்கிட்ட யார் சொல்றது?

எங்கள் கஷ்டம் தெரிந்தவர்.
டெல்லி வரைக்கும் சென்றவர்.
வந்தார் பார்த்தாயா?
வென்றார் கேட்டாயா?

வரிசையில் நிற்கச் சொன்னார்கள்.
கட்டத்துக்குள் நிற்கச் சொன்னார்கள்.
காலையில் வந்து நிற்கச் சொன்னார்கள்.
குடைபிடித்து வந்து நிற்கச் சொன்னார்கள்.

வேலையும் இல்லை.
கையில் காசும் இல்லை.
கடைக்குப் போகவேண்டும்
டோக்கன் வாங்கவேண்டும்.
தினமும் 500 டோக்கன் தான். 
நாமும் இருந்தாக வேண்டும்.
வட்டத்திற்குள் நிற்க வேண்டும்.

அடையாளத்துக்குச் செருப்பு போதும்.
நள்ளிரவு பயமில்லை.
அதிகாலை வேறு வேலையில்லை.
கடை திறப்பார்கள்.
காத்திருப்போம் வா நண்பா.
கடைக்காரர் சில்லறை தர வேண்டும்.

இம்பூட்டு இம்சைகள்.
உள்ளே போனா சரக்கு எறியுது.
ஊறிப்போன நாற்றம் போல கொடல புடுங்குது.
ச்சே.. இது நாடா?😇




2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

"வாழ்வது தவறு. கெடுப்பது சிறப்பு." என்று நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது அடிமைக் கூட்டம்...!

வெங்கட் நாகராஜ் said...

சரக்கு - அடிக்க அடிக்க எகிறும் கிக் - வருமானம் தரும் கிக்!

சோகம் - வேறென்ன சொல்ல!