*_வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து ஒரு செய்தி வந்தது._* ஆனால் அதன் பின்னூட்டமாகப் பல்வேறு கமெண்டுகள் வந்தன._
அதில் மிகப் பலர் குறைப்பட்டுக் கொண்ட விஷயம் :*_'எங்களை ATM ல் போய்ப் பணம் எடு என்று விரட்டிவிடுகிறார்கள்'_* *_'பணம் செலுத்தப் போனால் - Remitting Machine - க்குப் போ என்று அனுப்பிவிடுகிறார்கள்'_*
*_'பாஸ் புத்தகம் என்ட்ரி போடப் போனால் கஸ்டமர் e- lounge க்குப் போ என அனுப்பிவிடுகிறார்கள்'_* *_'அப்புறம் இவர்கள் வங்கிக்குள் அமர்ந்து என்ன ஆணியைப் பிடுங்குகிறார்கள்?'_* _இவர்களுடைய கோபம் நியாயமானதுதான்._ *_ஆனால் முழுமையான பின்னணியைத் தெரிந்து கொண்டு கமென்டுவது நலம்!_*
_Roadmap 2020 என்ற Vision Document ஐ சுமார் 10 / 15 ஆண்டுகளுக்கு முன்பே தயாரித்து விட்டார்கள்!_ _அதாவது 2020 ல் வங்கிகள் எப்படி இருக்க வேண்டும், ஊழியர்கள் எவ்வளவு பேர் இருக்க வேண்டும், வங்கிக் கிளைகள் செயல்படும் கட்டிடத்தின் CARPET AREA எவ்வளவு இருக்க வேண்டும்... என்பதை எல்லாம் 2000 களின் தொடக்கத்திலேயே திட்டமிட்டு விட்டார்கள்._
_அதன் முதல் படி ON FLOOR BANKING லிருந்து OFF FLOOR BANKING ஐ நோக்கி நகர்வது!_ _அதாவது நீங்கள் வங்கிக்கு 'உள்ளே' சென்று பணம் எடுக்கலாம் - ATM கார்டு மூலம். அப்படி நிறுவப்பட்ட ATM இயந்திரங்களை 2 வகையாகப் பிரித்தார்கள்._ _வங்கிக் கிளை அலுவலகத்தை ஒட்டியே அமைந்தால் ON SITE ATM: ரயில்வே ஸ்டேஷன் - பஸ் ஸ்டாண்ட் - போன்ற வெளி இடங்களில் அமைந்தால் OFF SITE ATM._
*_இந்த முதல் மாற்றத்திலேயே வங்கிக்குள் அதன் தாக்கம் ஏற்பட்டது - நான்கு / ஆறு CASH COUNTER கள் செயல்பட்ட பெரிய கிளையில் கூட 2/3 என்று பணம் பெறும் / செலுத்தும் கவுன்டர்கள் குறைக்கப்பட்டன._* _வாடிக்கையாளர்களை ON FLOOR லிருந்து OFF FLOOR க்கு நகர்த்துவது என்பதன் அடுத்த கட்டம் NET BANKING, MOBILE BANKING போன்றவை._
_ஒருவருக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்றால் என்ன செய்தீர்கள்?_
_வங்கிக் கிளைக்கு வந்தீர்கள் - DEMAND DRAFT பணம் கட்டி எடுத்தீர்கள் - அதைத் தபாலில் அனுப்பினீர்கள்!_ _அதெல்லாம் வேண்டாம் ராசா, நீ உன் வீட்டிலோ அலுவலகத்திலோ இருந்தபடியே நீ விரும்பும் நகருக்கு - THE SAME BANK OR FROM BANK TO BANK - பணம் அனுப்பு ராசா! இந்தா பிடி MOBILE BANKING/ NET BANKING..._
_இப்போது மிக அத்யாவசியமான சில GOVT TRANSACTIONS/ பல்கலைக் கழகக் கட்டணம்/ TENDERS... இவை தவிர வேறெதற்கும் DD தேவைப்படுவதில்லை - எல்லாம் NET BANKING தான் - TNEB/ TELEPHONE BILL/ INSURANCE PREMIUM உட்பட!_
_OFF FLOOR BANKING என்பதற்கு இரண்டு நோக்கங்கள்:_
*_1) வாடிக்கையாளர்களை முடிந்தவரை வங்கிக் கிளைக்கு 'உள்ளே' வருவதைத் தவிர்ப்பது_* *_2) ஊழியர்களை அதற்கு ஏற்பக் குறைப்பது._*
_இதில் 2 வது நோக்கம் மிக வேகமாக நிறைவேறி விட்டது. 30 க்ளார்க், 3 Special Assistant, 6 Officer, 1 Field Officer (Agriculture), 2 Managers (1 internal control + 1 Branch Head)... இது போகக் கடைநிலை ஊழியர்கள் 4 பேர்.... எல்லாம் போயே போச்சு!_
_இப்போதெல்லாம் 30 CLERKS இருந்த கிளையில் மூன்றே பேர்தான்!_
_CBS எனப்படும் கம்ப்யூட்டர் வலை இணைப்பு சாத்தியமானவுடன் ஊழியர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைந்தது!_ *_ஆனால் வாடிக்கையாளர்கள் / பொதுமக்கள் பெரும்பாலோர் இப்படிப்பட்ட மாற்றங்களுக்குப் பழகவில்லை._*
_ACCOUNT STATEMENT எனப்படும் -வாரம் வாரமோ, மாதம் மாதமோ - கேட்டு வாங்கும் வியாபார வாடிக்கையாளர்கள் - CURRENT ACCOUNT - வைத்திருப்பவர்கள் கூட மிக மெதுவாகவே இந்த மாற்றங்களை ஏற்றனர்!_
_OFF FLOOR BANKING ல் இதுவும் ஒரு பகுதிதான்! அதாவது STATEMENT வாங்க ஏன் வங்கிக்கு 'உள்ளே' வருகிறீர்கள்?_ _e-Mail address கொடுங்கள் - உங்களுக்கு எத்தனை நாளைக்கு ஒரு முறை STATEMENT வேண்டும் சொல்லுங்கள் - Monthly, Fortnightly, Weekly, Daily- என்பதை நீங்கள் சொன்னால் போதும்._
_உங்களுக்கு e-Mail மூலம் வரும் - உங்களுக்கு Printed Statement வேண்டுமானால் Pen Drive ல் போட்டு நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்!_ _இதே மாற்றம் Savings Bank எனப்படும் சாதா கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும்!_
_ஆக... இப்படிப் பல வகைகளில் மக்களை OFF FLOOR BANKING நோக்கித் தள்ளியும் போகாதவர்களை என்ன செய்வது?_ _இதோ ஒரு BAR CODING SLIP உங்கள் பாஸ்புத்தகத்தில் ஒட்டி உங்கள் கணக்கோடு லிங்க் செய்து விடுகிறோம் - நீங்களே போய் PASSBOOK PRINTER ல் போட்டுக் கொள்ளுங்கள்!_
_40000 ரூபாய்க்கு உட்பட்டு (இப்போதைய லிமிட் என்னவோ) பணம் எடுக்கவோ, போடவோ வேண்டுமா... இயந்திரங்கள் மூலம் செய்யுங்கள் - 'உள்ளே' வந்து CASH COUNTERல் வரிசையில் நின்று சிரமப்படாதீர்கள்!_
*_இப்படி எல்லாம் திட்டமிட்டவர்கள் யார்? வங்கி ஊழியர்களும், அதிகாரிகளுமா?_* _இவை எல்லாம் இன்று துவங்கியது இல்லை, மன்மோகன் சிங், சிதம்பரம், UPA காலத்திலும் ஏன் அதற்கு முன்பே 'ஐக்கிய முன்னணி' காலம்...._ _'வங்கித் துறைச் சீர்திருத்தங்கள்'- என்பதற்கு நரசிம்மம் கமிட்டி பரிந்துரைகள் உள்ளிட்ட மிக நீண்ட வரலாறு உண்டு!_
_அதில் மிக முக்கியம் VISION 2020 என்று இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட VISION DOCUMENT!_ _இப்போதைய நிலை என்ன தெரியுமோ? (இது வந்தே நான்கைந்து ஆண்டுகள் ஆகி விட்டன)_
_'அதாவது ஒரு கிளை என்றால் 2 (இரண்டே இரண்டு) TELLERS போதும். ஒருவர் கவுன்டருக்கு உள்ளே அமர்ந்து பெருந் தொகைகளை மட்டும் பணமாக வாங்குவார். ( BULK REMITTANCE FROM CUSTONERS AND BUSINESS ESTABLISHMENTS LIKE PETROL BUNK, TRANSPORT CORPORATIONS, TNEB etc)._
_2வது TELLER என்பவர் கவுன்டருக்கு வெளியில் அமர்ந்தபடி ACCOUNT OPENING, ATM CARD DISTRIBUTION போன்ற MISCELLANEOUS வேலைகள் செய்வார்._ இவர்களுக்கு ஒரு அதிகாரி - கிளையின் COMPUTER SYSYEMS மேற்பார்வைக்கு SYSTEM ADMINISTRATOR அவ்வளவுதான்._
*_அதற்குத் தகுந்தாற் போல் கிளைகள் பரப்பளவில் சிறியதாகவும், வாடகை குறைவாகவும் அமைய வேண்டும். இந்த திசையில் வங்கிகள் நகர வேண்டும் என்பதெல்லாம் நீண்ட காலம் முன்பே வகுக்கப்பட்ட கொள்கைகள்!_*
*_ரயில்வேத் துறையில் மாற்றம் வரவில்லையா? ஒரு ஊருக்குச் செல்ல டிக்கெட் ரிசர்வ் செய்ய எப்படி லோல் பட்டோம்? கெட்டி அட்டை டிக்கெட், கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட் டிக்கெட்..._* _இப்போதெல்லாம் ONLINE RESERVATION - அதுவும் டிக்கெட் காலி உள்ளதா, வெயிட்டிங் லிஸ்டா, RAC யா எல்லாம் தெரிகிறதே...._ இப்படித்தான் வங்கித் துறையும் இன்னும் பல மாற்றங்களைச் சந்திக்கும்!_*
_நீங்கள் கிளைக்கு உள்ளேயே செல்லாமல் உங்களின் சகல தேவைகளையும் ONLINE மூலமே செய்ய வேண்டி வரும்!_ *_எனவே எனது அன்பான வேண்டுகோள் - அடுத்த முறை யாரேனும் ஊழியர் - 'போய் மெஷினில் பணம் கட்டுங்க/ எடுங்க/ பாஸ்புக் போட்டுக்கங்க'- என்று சொன்னால் டென்ஷன் ஆகாதீர்கள்!_*
*_இன்னும் சில ஆண்டுகளில் அதைச் சொல்வதற்குக் கூட உள்ளே கவுன்டரில் எவரும் இருக்க மாட்டார்கள்!_* ......
மொழி அரசியல்
மம்தா பேனர்ஜி
எம்.ஜி.ஆர் )( விஜயகாந்த்
ஆவின் பாலும் ஆதார் அட்டையும்
பெற்றோர்கள் ஆசிரியர்களாக மாற வேண்டாம்?
அச்சு ஊடகம் 2019
நேரு, இந்திரா,சஞ்சய், ராஜீவ் .........
அருண் ஜெட்லி
உங்கள் வீட்டில் (மகன்/மகள்) வாசிக்கச் சொல்லவும்.
மொழி அரசியல்
மம்தா பேனர்ஜி
எம்.ஜி.ஆர் )( விஜயகாந்த்
ஆவின் பாலும் ஆதார் அட்டையும்
பெற்றோர்கள் ஆசிரியர்களாக மாற வேண்டாம்?
அச்சு ஊடகம் 2019
நேரு, இந்திரா,சஞ்சய், ராஜீவ் .........
அருண் ஜெட்லி
உங்கள் வீட்டில் (மகன்/மகள்) வாசிக்கச் சொல்லவும்.
2 comments:
கடைசி வரி வெகு சீக்கிரமாக நிறைவேறப் போகும் உண்மை.
எப்படியோ வங்கியில் ஆட்களை களையெடுத்தால் கொள்ளைக்காரர்களால் ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தில்லை.
ஆனால் சொற்ப சம்பளத்தில் வேலை செய்யும் ஏடிஎம் மிஷின் காவலாளிகளுக்கு பிரச்சனை அதிகரிக்கும்.
Post a Comment