உங்கள் வீட்டில் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவ மாணவியர்கள் இருந்தால் இந்த தளத்தை வாய்ப்பு கிடைக்கும் போது பார்வையிடச் சொல்லுங்க.
Let's Make Engineering Simple
என்னால் புத்தகம் படிக்க வாய்ப்பில்லை என்று சொல்பவர்களுக்கு. திருமாவேலன் தளத்தை சேமித்து வைத்துக் கொள்ளவும். நேரம் கிடைக்கும் போது கேட்டுக் கொள்ள முடியும். 100 ஆண்டு கால தமிழக சரித்திரம். அழகு தமிழிலில் மிகவும் சுவராசியமான அவர் குரலில்.
அறிவியல் பாடங்களில் உங்கள் குழந்தைகள் ஆர்வமாக இருந்தால், குறிப்பாக விண்வெளி குறித்த விசயங்களில் ஈடுபாடு காட்டுபவராக இருந்தால் இந்த தளத்தை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கலாம்.
What If
தமிழ் பைனான்ஸ்
வாசித்தேன். வாசிக்க வேண்டிய புத்தகங்கள் பத்து
1. சிலைத்திருடன்
2. நரசிம்ம ராவ் (இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி)
3. கம்யூனிசம் - பஞ்சம் படுகொலை பேரழிவு (அரவிந்தன் நீலகண்டன்)
4. 1984 சீக்கியர் கலவரம்
5. லி குவான் யூ (சிங்கப்பூரின் சிற்பி)
6. இந்திய வரலாறு (காந்திக்குப் பிறகு) ராமசந்திரா குஹா பாகம் 1
7. இந்திய வரலாறு (காந்திக்குப் பிறகு) ராமசந்திரா குஹா பாகம் 2
8. கிழக்கிந்திய கம்பெனி: உலகின் முதல் கார்ப்பரேட் கம்பெனி
9. இந்தியாவின் இருண்ட காலம் (சசி தரூர்)
10. ஊழல் - உளவு - அரசியல் (சவுக்கு சங்கர்)
நிதி ஆலோசனைகள் குறித்த தகவல்கள், காப்பீடு வகைள் அதற்குப் பின்னால் உள்ள ஆதார விசயங்கள், நம் நிதி ஆதாரங்களை எப்படி சரியான முறையில் கையாள்வது போன்ற பல விசயங்களை நண்பர் ராம் தொடர்ந்து ஃபேஸ்புக் தளத்தில் எழுதிக் கொண்டு வந்தார். இப்போது அதனை இந்தத் தளத்தில் அப்படியே எடுத்துப் போட்டுள்ளார். இந்தத் தளம் தரகர்களுக்கு பிடிக்காது. அவர்களின் ஏமாற்று வேலைகளை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
உங்கள் நிதி. நீங்கள் தான் பொறுப்பு. வேறு ஏதும் சந்தேகங்கள் இருந்தால் அவரைத் தொடர்பு கொள்ளலாம். உங்கள் சந்தேகங்களுக்கு மட்டுமே பதில் அளிப்பார். வேறு எந்த தொடர்பையும் ஏற்படுத்திக் கொடுக்க மாட்டார். எவரையும் கை காட்ட மாட்டார். உங்கள் சொந்த சிந்தனையின் மூலமே செயல்படுங்கள் என்று அறிவுரையுடன் இந்த தளத்தை சேமித்து வைத்துக் கொள்ளுங்க.
சிலர் மட்டுமே நமக்கு தேவதூதர்கள் போலக் காட்சியளிக்கின்றார்கள். தமிழர்களுக்கு உணர்ச்சி வசப்படுதல் என்பது இயல்பான குணாதிசயங்களில் ஒன்று. ஆனாலும் முன்னாள் கல்வித்துறைச் செயலாளர் பதவியிலிருந்த திரு. உதயச்சந்திரன் குறித்து யோசிக்கும் போதெல்லாம் சற்று வியப்பாகவே உள்ளது.
அவரின் கல்வி குறித்த பின்புலம் தொடங்கி அவர் மாவட்ட ஆட்சியாளராக இருந்த போது செய்த சமூகப் பணிகள் என்று எல்லாவற்றையும் அறிந்துள்ளேன். தமிழக மாணவர்கள் செய்த புண்ணியம் அவர் கல்வித்துறை செயலாளராக வந்தமர்ந்து குறுகிய காலத்தில் புலிப்பாய்ச்சல் போலப் பாய்ந்து பலவற்றையும் செய்து முடித்துள்ளார் என்பது வியப்பாகவே உள்ளது.
பாடத்திட்டங்கள் மாற்றம் தொடங்கி நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப காணொலிக் காட்சி வடிவத்தில் பாடங்களை எளிதாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த தளத்தை உருவாக்கியுள்ளார். மாணவர்கள் கட்டாயம் இந்தத் தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாடத்திட்டங்கள் மாற்றி அமைத்த குழுவினர் சந்தித்த பிரச்சனைகள் குறித்து சிலருடன் பேசும் போது புரிந்து கொள்ள முடிந்தது.
நம் அரசியல்வாதிகளின் தரத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.
TN SCERT
உங்கள் அன்றாட கடமைகளில் நூறு மணி நேர வாசிப்பு, ஆயிரம் மணி நேர வாசிப்பு என்று ஏதாவது ஒன்றைத் தேர்தெடுத்துக் கொள்ளுங்கள். நேரம் இல்லை என்று சால்ஜாப்பு காரணங்கள் தேவையில்லை. குறைந்த பட்சம் வீட்டில் உள்ள திறக்குறள் புத்தகத்தையாவது வாசிக்கத் தொடங்கிப் பாருங்கள். கடந்த இரண்டு மாதங்களில் அப்படியான ஒரு சட்ட திட்டத்தை எனக்குள் உருவாக்கிக் கொண்டேன். நான் கிண்டில் வழியாகத்தான் புத்தகங்கள் படித்துக் கொண்டு இருக்கின்றேன்.
1. சிலைத்திருடன்
2. நரசிம்ம ராவ் (இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி)
3. கம்யூனிசம் - பஞ்சம் படுகொலை பேரழிவு (அரவிந்தன் நீலகண்டன்)
4. 1984 சீக்கியர் கலவரம்
5. லி குவான் யூ (சிங்கப்பூரின் சிற்பி)
6. இந்திய வரலாறு (காந்திக்குப் பிறகு) ராமசந்திரா குஹா பாகம் 1
7. இந்திய வரலாறு (காந்திக்குப் பிறகு) ராமசந்திரா குஹா பாகம் 2
8. கிழக்கிந்திய கம்பெனி: உலகின் முதல் கார்ப்பரேட் கம்பெனி
9. இந்தியாவின் இருண்ட காலம் (சசி தரூர்)
10. ஊழல் - உளவு - அரசியல் (சவுக்கு சங்கர்)
12 comments:
பதிவை bookmark செய்து விட்டேன்... நன்றி...
அண்ணே...!
1) சமையல் குறிப்பு தெரியுமா...?
2) உடான்ஸ் கதையாவது எழுத தெரியுமா...?
3) முட்டாளாக நினைக்கும் புத்திசாலிக்கு, புத்தியான கருத்து சொல்லி, நீங்கள் முட்டாளாக + ஆக தெரியுமா...?
4) ஐயோ சூப்பர், அய்யய்யோ சூப்பர் என்று மரத்துப் போய் பாராட்ட தெரியுமா...?
5) உங்களது இசை ஆர்வம் செத்துப் போய், மீண்டும் மீள்வது எப்படி என்று தெரியுமா...?
6) "பிடில் வாசித்தான் ஒருவன்" என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள், அது போல் ஆக தெரியுமா...?
7) 'நம்பர் மொபைலே போதும்' என்கிற நிலைக்கு மாறத் தெரியுமா...?
மேற்கண்ட அனைத்தும் தெரிந்தால்...
ஒரு குழுவில் இணைத்து விடுகிறேன்... பிறகு பாருங்கள்... உங்கள் ஒவ்வொரு வலைப்பதிவின் பக்கப்பார்வைகள் அள்ளுவது ஒரு பக்கம் இருந்தாலும், கருத்துரைகள் சும்மா... அய்யோ WhatsApp-யை விட மிஞ்சும்...
நன்றி...
மாணாக்கர்களுக்கு பயனுள்ள விடயத்தை திசைகாட்டி இருக்கின்றீர்கள்.
பொதுநலமான இச்செயலுக்கு எமது சல்யூட் நண்பரே...
நன்றி நண்பா.
வேண்டாம் தலைவரே. நேற்று தான் மதுரையிலிருந்து ரவி என்ற என் நெருங்கிய நண்பர் இதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். ரவி நீங்க இதுக்கு பதில் சொல்லியே ஆகனும்.
நானும் இந்த தமிழ்மணம் தளத்தில் கடந்த பனிரெண்டு வருடங்களுக்கு மேலாக உலாத்துகிறேன். பெரும்பாலும் SILENT READER (இதுக்கு தமிழ் வார்த்தை என்ன?) நீங்கள் சொல்வது 100% சரி என்பது தான் எனது கணிப்பும்.
தேடித் தேடி வாசிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவது. உள்வாங்கிக் கொள்வது. பொறுமையாக வாசிக்கக் கற்றுக் கொண்டவர் என்று உங்களை நீங்களே தோளில் தட்டி பாராட்டிக் கொள்ளலாம்.
படிக்க வேண்டிய லிஸ்ட்டில் இருக்கும் புத்தகங்களில் சில ஏற்கெனவே நானும் குறித்து வைத்திருப்பது.
//குறைந்த பட்சம் வீட்டில் உள்ள திறக்குறள் புத்தகத்தையாவது வாசிக்கத் தொடங்கிப் பாருங்கள்.//
ஹா... ஹா.. ஹா.. மற்ற புத்தகங்களும் படிக்கிறேன். என்ன, முன்னளவு அதிகமாக படிக்க முடியவில்லை. கொஞ்சம் குறைந்திருக்கிறது.
அருமை. நன்றி
பயனுள்ள பதிவு ஐயா
பயனுள்ள பதிவு. . நன்றி.
நல்ல பகிர்வு. நானும் சமீபமாக விட்டுப்போன வாசிப்பு வழக்கத்தை தொடர்ந்திருக்கிறேன். கிண்டில் வாசிப்பு மகிழ்ச்சி தருகிறது.
Post a Comment