Wednesday, July 17, 2019

'நீட்’ திமுகவுக்கு அறுகதையே இல்ல..! |Vijayabaskar Vs MK Stalin| NEETநீட் பரிட்சை குறித்து, தமிழகத்தில் மட்டும் திமுக மட்டும் அதீத அக்கறையும் ஆர்வமும் காட்டுகின்றது என்பதனை தினந்தோறும் செய்தித்தாள்கள் படித்து வருபவர்களுக்கு தெரியும்.  ஆனால் இதனை திமுக எப்படி அரசியலாக கையாண்டு தமிழகத்திற்கு துரோகம் இழைத்தது என்பதனை இந்த காணொலியை முழுமையாக பார்க்க முடிந்தவர்கள் பார்க்கவும். அல்லது குறைந்தபட்சம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் (4.22 /16.23)பேசும் பேச்சைக் கேட்க வேண்டும். 

ஒவ்வொரு வரியும் ஏராளமான ஆதாரங்களுடன் புள்ளி விபரங்களுடன் நீட் பரிட்சை தமிழகத்திற்கு வந்தமைக்கு யார் காரணம்? திமுக என்ன செய்தது? காங்கு என்னன்ன நரித்தந்திரங்கள் செய்தது? உச்சநீதிமன்றம் வேண்டாம் என்று இறுதியாக தீர்ப்பளித்தபின்பு அதனை சீராய்வு மனு செய்து மீண்டும் குட்டையை குழப்பிய காங்கு செய்த காரணம் என்ன? திமுக துணை புரிந்த காரணம் என்ன?

எவர் இனி நீட் குறித்துப் பேசினாலும் இந்த ஆவணத்தை பேசுபவர்களை நோக்கி விட்டெறியுங்கள்.

விஜயபாஸ்கர் முழுமையாகப் பேசி முடிந்து அமர்ந்ததும் ஸ்டாலின் ஜகா வாங்குவதைப் பார்த்து சிரிப்பு வந்து விட்டது.


கலைஞர் தன் கலை வாழ்வில் முழு நேரமும் எழுதிக் கொண்டு வாசித்துக் கொண்டும் இருந்தார். அரசியலுக்கு வந்த பிறகும் அவர் ஒரு நாளில் பாதி நேரம் வாசிப்புக்காகத்தான் ஒதுக்கினார். வரலாற்றுக் குறிப்புகளும், நடந்த நிகழ்வுகளும், புள்ளி விபரங்களும் என் அவரின் உழைப்பு ஒவ்வொரு பேச்சிலும் இருக்கும். அவரின் அரசியல் கொள்கை சார்ந்த வாழ்க்கையைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அவரின் உழைப்பென்பது நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. இயற்கை உடல் உறுப்புகள் இனி இயங்காது என்று கட்டளையிட்ட போதும் கூட அவர் வாசிப்பை நிறுத்தவில்லை. உச்சத்தில் வந்து நின்ற பிறகு தான் வாசிப்பிலிருந்து ஓய்வெடுக்கத் தொடங்கினார்.

ஆனால் இந்த விவாதங்களில் ஸ்டாலின் படும் பாடுகள் என்பது பரிதாபமாக உள்ளது. காரணம் அரசியலில் வாசிப்பு என்பது மிக மிக முக்கியமானது. அதற்கு உழைத்துத்தான் ஆக வேண்டும். ஒப்பேற்ற முடியாது.

அதிமுக அமைச்சர்கள் 19 மாதங்கள் ஜனாதிபதி மாளிகையிலிருந்து வந்த நீட் குறித்த மசோதா சார்ந்த தகவல்களை மறைத்து விட்டார்கள் என்பதற்குச் சட்ட அமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் கில்லி போலப் புகுந்து விளையாடுகின்றார்கள்.

எல்லாமே ஆதாரம்.

இதற்கு மேலாக ஏற்கனவே ஸ்டாலின் அது குறித்துப் பேசியதும், அதற்கு அந்த அமைச்சர் அந்த சமயத்தில் பதில் அளித்துப் பேசியதை பேரவைக் குறிப்பேடுகளைத் துணை கொண்டு ஆதாரமாக வைத்துப் பேசி கலங்கடிப்பது..... அடேங்கப்பா அதிமுக அமைச்சர்கள் கொஞ்சமல்ல நிறைய உழைக்கின்றார்கள் என்பது புரிகின்றது.

சிங்கங்கள் தான் சிங்கம் என்பதனை உணராமல் வாழும் போது, அதற்குண்டான பயிற்சி எடுக்காமல் இருக்கும் போது, சிறு நரிகள் என்ன செய்யும்? என்பதனை காட்டுக்குள் சென்று பார்க்கத் தேவையில்லை. இதனைப் பார்க்கவும்.12 comments:

bakki said...

சார், அஞ்சல் துறை தேர்வு ரத்து குறித்து

Unknown said...

Forget what Congress DMk or Admk did— May I ask, what’s your stand on NEET entrance exam? ( I am aligned with bringing NEET and continuing it) - Rajan

ஜோதிஜி said...

இந்தியாவில் மிகப் பெரிய கொடூரம் என்னவென்றால் நுழைவுத் தேர்வுகளை ஹிந்தி மொழியில் வைப்பது தான். ஒரு சாரர்க்கு அது தாய் மொழி. மற்றவர்களுக்கு அது அந்நிய மொழி. ஆங்கில மொழி என்பது அனைவருக்கும் அந்நிய மொழி. ஆங்கிலத்தில் வைத்தால் இந்தியா முழுமையும் பொது மொழியாக அனைவரும் அந்நிய மொழியில் எழுதுவதாக இருக்கும். திறமைகள் யாருக்கு இருக்கின்றது என்று தெரியவரும். ஆனால் அதிகாரவர்க்கமும் அரசியல்வாதிகளும், மேல்சாதி வர்க்கமும் சேர்ந்து இந்திய நாடு என்பது ஹிந்திய மக்களுக்குத்தான் முதல் உரிமை. முதன்மையாக மக்கள் தான் என்று தான் காங்கிரஸ் உருவாக்கியது. அதுவே பாஜக வும் கடைபிடிக்கின்றது. மானங்கெட்டவர்கள். அவர்களால் ஆங்கில மொழியை இன்னமும் 100 ஆண்டுகள் ஆனாலும் கற்க முடியாது என்பதே உண்மை. மத்திய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களும் (படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்) அதிகாரிகளும் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஆங்கிலத்தைப் பேசுவதைப் பார்க்கும் போது இவர்கள் நிச்சயம் திறமையின் அடிப்படையில் அந்த இடத்திற்கு வந்து சேரவில்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகின்றது. எல்லா குறுக்கு வழிகளையும் பயன்படுத்தி கடந்த 70 ஆண்டுகளாக தென் மாநிலங்களையும், திறமை உள்ளவர்களையும் அடக்கி ஆண்டு கொண்டு இருக்கின்றார்கள் என்பது மட்டும் உண்மை. நான் எந்த காலத்திலும் வட மாநில அரசியல்வாதிகளை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொண்டது இல்லை. நம்மவர்கள் மட்டும் சரியாக இருந்தால் அவர்களை போட்டுப் பார்க்க முடியும். அது இங்கே இல்லாத காரணத்தால் தான் துரோகியை விட எதிரி பரவாயில்லை என்று நினைக்கத் தோன்றுகின்றது.

ஜோதிஜி said...

நானும் தொடக்கத்தில் நீட் பரிட்சையை ஆதரிக்கவே செய்தேன். ஆனால் எல்லாவிசயங்களும் வெட்ட வெளிச்சமாக வெளி வந்து கொண்டு இருக்கின்றது. மிகப் பெரிய வணிக நிறுவனங்கள், வணிக லாபி இந்தியாவின் பொது சுகாதாரத்துறையை கைப்பற்ற இந்த பரிட்சையை காரணமாக வைத்துக் கொண்டு மெதுவாக காய் நகர்த்துகின்றார்கள்.இதில் மாற்றம் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். உச்சநீதிமன்றம் என்ற பூச்சாண்டியை வைத்துக் கொண்டு இந்தவிசயத்தில் பாஜக அரசு நமக்குபடம் காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது மட்டும் உண்மை. வட மாநிலங்களுக்கு ஒரு மாதிரி தென் மாநிலங்களுக்கு ஒரு மாதிரி அதுவும் தமிழகத்தில் மட்டும் கொடூரத் தனமாகவும் உள்ளது. ஆனால் இதில் உள்ள அரசியலை யார் காரணம் என்பதனையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த முதல் வீடியோவை முழுமையாகப் பார்க்கவும். கடைசியில் இழந்தது நம் தமிழக மாணவர்கள் தான்.

நெல்லைத்தமிழன் said...

ஸ்டாலினுக்கு 'ஆகவே' தவிர வேறு எந்த வார்த்தையும் சொந்தமாகத் தெரியவில்லை. நீங்க என்னடான்னா 'சிங்கம்' என்றெல்லாம் சொல்றீங்க. From mere, quality point of view, Stalin is below average. அதிமுக அமைச்சர்களில் சிலரே ஸ்டாலினைவிட பலமடங்கு சிறப்பா இருக்காங்க.

திண்டுக்கல் தனபாலன் said...

மத்திய அரசு கல்வி வேலைவாய்ப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி உள்ளது. இது யாருக்காக?

ஏழைகளுக்காக.

எந்த சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளுக்காக? இந்தியாவில் BBL என்று சொல்லக்கூடிய வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்காகவா?

அப்படி இல்லை. இது இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கான இட ஒதுக்கீடு அல்ல. இந்தியாவில் உள்ள இந்து சமயத்தைச் சேர்ந்த ஏழைகளுக்கு இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்து சமயத்தைச் சேர்ந்த அனைத்து சாதிகளுக்கும் இந்த இட ஒதுக்கீடு பொருந்துமா?

இல்லை. இந்து மதத்தில் உயர் சாதி என்று சொல்லக்கூடிய சாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

உயர் சாதி என்றால் ஆண்ட பரம்பரையை சேர்ந்த மக்களுக்கா?

இல்லை. இது அப்படியில்லை. பார்ப்பன‌ர்கள், ஆங்கிலோ இந்தியன் போன்ற உயர் சாதி இந்துக்களுக்கு மட்டுமே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

அப்படியா? அவர்களுக்குள்ளும் ஏழைகள் இருக்கத்தானே செய்கிறார்கள் கொடுப்பது நியாயம்தானே?

நியாயம்தான். உண்மையில் அவர்களுக்குள் ஏழையாக உள்ளவர்களுக்கு கொடுத்தால் நியாயம்.

அப்படித்தானே சொல்கிறார்கள்?

அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் உயர் சாதியில் ஏழைகளாக இருக்க வேண்டுமானால் ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் இருக்க வேண்டும்.

8 லட்சமா?

ஆமாம். ஆண்ட பரம்பரை வகுப்பைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் ஏழையாக இருக்க வேண்டுமானால் ஆண்டுக்கு 72 ஆயிரத்துக்கும் குறைவான வருமானத்தை பெற வேண்டும். உயர் சாதியில் ஏழையாக இருந்தால் அவர்கள் 8 லட்சம் வரை ஆண்டுக்கு சம்பாதித்துக் கொள்ளலாம்.

ஆண்டுக்கு 8 லட்சம் சம்பாதித்தால் அவர்கள் ஏழையாக இருக்க முடியாது தானே?

அப்படி கிடையாது உயர் சாதியில் உள்ளவர்கள் ஓரளவுக்கு நல்ல வருமானத்தில் இருப்பார்கள் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த உச்சவரம்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. 8 லட்சம் வருமானம் இருந்தாலே உயர் சாதியில் ஏழைதான்.

நம்ம ஊர்ல கோயில் குருக்களாக இருந்து கொண்டு மிகக் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்குத் தானே இந்த இட ஒதுக்கீடு? இதனால் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளும் காலம் காலமாக கோயில் பூசாரி வேலையே பார்க்காமல் அரசாங்கத்தில் உயர் பதவிக்கு வரலாம் தானே?

நம்ம ஊரு ஏழை குருக்கள் பிள்ளைகள் எல்லாம் நம்ம ஊர்ல உள்ள ஏதாவது அரசுப் பள்ளிக்கூடத்தில் அல்லது தனியார் பள்ளிக்கூடத்தில் படிப்பாங்க. ஆனா, தற்போது பன்னாட்டு நிறுவனங்களில், தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், குடியரசுத் தலைவர் அலுவலகம், ஆளுநர் அலுவலகங்களில் பணிபுரியும் உயர்சாதி ஏழைகள் நகரத்துல எல்லா வசதியும் உள்ள பள்ளிக்கூடத்துல தங்களது பிள்ளைகள படிக்க வைப்பாங்க. அந்தப் புள்ளைங்க நம்ம ஊரு குருக்கள் பிள்ளைகளை விட அதிகமா மார்க் வாங்குவாங்க. அதனால குருக்கள் பிள்ளைங்க உயர் பதவிகளுக்கு போக முடியாது.

அந்த மாதிரி இடத்தில் வேலை செய்யறவங்க எல்லாம் ஏழைகளா?

ஆமா அவங்க ஏழைகளாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஏழைகளுக்கான அதிகபட்ச வருமான வரம்பு 8 லட்சம் என்று சொல்லியுள்ளார்கள். மாதம் 60,000 ரூபா சம்பளம் வாங்கினாலும் அவங்க ஏழை தான்.

இது என்ன கொடுமையா இருக்கு?

இது என்ன கொடுமை. இதை விட பெரிய கொடுமை எல்லாம் நடக்குது. தமிழ்நாட்டுல சுமார் 70 விழுக்காட்டுக்கு மேல உள்ள ஆண்ட சாதி பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுத்திருக்கு. ஆனா மூன்றிலிருந்து நான்கு விழுக்காட்டுக்கும் குறைவா இருக்கக்கூடிய உயர் சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுக்கிறார்கள்.

ஐயோ இது என்ன அநியாயமா இருக்கு?

உனக்கு தெரியுது ஆனா மத்திய அரசுக்கு இதுதான் நியாயமா தெரியுது.

இது ஏழை இந்துக்களுக்கான இட ஒதுக்கீடாகவும் தெரியல! ஏழையாக இருக்க கூடிய உயர் சாதி இந்துக்களுக்கான இட ஒதுக்கீடாகவும் தெரியல!
நம்ம ஊரு கோயில் அய்யர்மார்கள் வீட்டு பிள்ளைகளுக்கான இட ஒதுக்கீடாகவும் தெரியல! இதை என்னதான் சொல்றது...?

சமூக நீதியும் இல்ல
சமநீதியும் இல்ல
தமிழ் நாட்டு இந்து மக்களுக்கான சமாதி!

- மெய்ச்சுடர் நா.வெங்கடேசன்

G.M Balasubramaniam said...

உயர் சாதியில் ரூ 8 லட்சம் வருமானமுள்ளவர்களும் ஏழைகள் என்பது எங்கோ உதைக்குதே

ஸ்ரீராம். said...

அரசியல் என்பது சாமர்த்தியங்கள் நிறைந்த இடம் ஆகிவிட்டது. நியாயங்களுக்கு இடமில்லை அங்கே.

காணொளி இன்னும் பார்க்கவில்லை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நீட் பற்றிய அருமையான புரிதலைத் தந்துள்ள பதிவு.

ஜோதிஜி said...

விபி சிங் மண்டல் கமிஷனை கொண்டு வந்த போது எப்படி பற்றி எறிந்தது. ஆனால் விபி சிங் கை ஆதரிப்பவர்கள் கூட இதைப் பற்றி ஒன்றும் கருத்து கூறாமல் அமைதியாக இருப்பதன் காரணத்தை கண்டு பிடித்தால்போதும். அரசியல் அறிவு கிடைத்து விடும்.

ஜோதிஜி said...

உதைத்தால் தான் கிடைக்கும்.

Rathnavel Natarajan said...

அருமை