மற்ற தென் மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் அரசியலில் ஆகப் பெரிய வித்தியாசம் என்னவென்றால் இங்குள்ள அரசியல் என்பது தனி நபர்களின் முகத்தை வைத்தே கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடந்து வருகின்றது.
கொள்கை என்று எப்படிச் சொல்லிக் கொண்டாலும் இது இறுதியாக முகத்தை முன்னிறுத்துவதில் தான் முடியும். நீ கலைஞர் ஆளா? எம்.ஜி.ஆர் ஆளா? என்பதில் தொடங்கும். அதற்கு முன்னால் இருப்பவர்களிடம் கேட்டால் நீ அண்ணா ஆளா? காமராஜர் ஆளா? என்பதில் முடிப்பார்கள். அது தான் இன்று வரையிலும் இங்கே அரசியலாக மாற்றப்பட்டுள்ளது. இது மாநில அரசியல்.
இதுவே தேசிய அரசியல் பக்கம் சென்றால் தற்போது ராகுலா? மோடியா? என்பதில் வந்து முடிகின்றது.
அதன் கிளைகளாக மதவாதம், மதசகிப்புத்தன்மை என்ற கடுகு உளுந்தப்பருப்பு, கொத்தமல்லி தூவி பருப்பு வடை, மெதுவடை போன்றவை சுடச்சுட சுட்டு கொடுக்கப்படுகின்றது. கடைசியில் மாநில, தேசிய அரசியலை மொத்தமாக உதிர்த்துப் பார்த்தால் ஒரே மைதா, ஒரே கோதுமை, ஒரே கடலை மாவு என்பதில் தான் முடியும். ஆனால் சுவை மட்டும் காலத்திற்கேற்ப மாறிக் கொண்டேயிருக்கும். நாமும் அதைத்தான் இன்று வரையிலும் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். அதாவது சிவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற உயரிய தத்துவம் போல.
ஆனால் நம்மவர்களுக்குச் சர்வதேச அரசியல் எந்த அளவுக்குத் தெரியும்? அதன் பலன் என்ன? தாக்கம் என்ன? எங்கங்கு அதன் பாதிப்பு தெரியும்? எங்கிருந்து தொடங்கும்? எங்கே வந்து முடியும்? என்பதெல்லாம் தெரியாது.
நம்மவர்கள் தினத்தந்தியும், தினமலரும் அதையெல்லாம் இவர்களுக்குத் தேவையில்லை? சொன்னாலும் புரிந்து கொள்ள இவர்களுக்கு அறிவில்லை என்று முடிவு கட்டி தான் இன்று வரையிலும் நடிகையின் அந்தரங்கத்தை அலசி அலசி காயப்போட்டு மறுபடியும் துவைத்துக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. நாமும் இது தான் உலகம் என்று நம்பிக் கொண்டு இருக்கின்றோம்.
நேரு ஆட்சி புரிந்த காலத்தில் அவர் செய்ய மறுத்த, செய்யாமல் விட்ட பல முக்கிய முடிவுகள் இன்னமும் இந்தியாவைத் தாக்கிக் கொண்டேயிருக்கிறது என்பதனை உங்களால் நம்ப முடியுமா? காஷ்மீர் பிரச்சனை இன்று வரையிலும் இருப்பதற்கும், சீனா அளவு கடந்து இந்தியப் பகுதிகளை தன் பகுதிகளாகச் சொந்தம் கொண்டாடுவதற்கும் முக்கியக் காரணம் நேருவே. அவருக்கு அடுத்து வந்த இந்திரா வெளியுறவுக் கொள்கையில் சில தீர்க்கமான முடிவுகள் எடுத்து இருந்த போதிலும் சர்வதேச அளவில் இந்தியாவை அவர் நினைத்த அளவுக்குக் கொண்டு போய் நிறுத்த முடியவில்லை என்பது தான் உண்மை.
காரணம் அதிகாரம் தன்னை விட்டுப் போய் விடக்கூடாது என்று அம்மையார் காட்டிய அக்கறையில் இந்தியாவின் மொத்த உண்மையான வளர்ச்சியில் அவர் பெரிதான அக்கறை கொள்ளவில்லை என்பதும் மறுக்க முடியாது உண்மை.
ஆனால் 1991 க்குப்பிறகு நரசிம்மராவ் வந்த பிறகு இந்தியா தன் அழுக்குச் சட்டையைத் தூக்கி எறிந்தது. உடம்பு சுத்தமாக்கப்பட்டது. சர்வதேச குளியல் என்பதே அதற்குப் பின்னால் தான் நடந்தது. தங்கம் அடகு வைத்தால் தான் நாடு பிழைக்கும் என்ற எண்ணம் மாறி நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் உபரி அந்நியச் செலவாணி என்பதே அதன் பிறகு தான் நம் கஜானாவில் சேரத் தொடங்கியது. இந்தியத்தாய் அதன் பிறகே ஆசுவாசமாக மூச்சு விடத் தொடங்கினாள்.
அதன் பிறகு இன்று 29 வருடங்கள் கடந்து விட்டது. பாஜக ஏற்கனவே ஐந்து வருடங்கள் ஆண்டு முடித்து இப்போது ஆறாவது வருடத்தில் ஆண்டு கொண்டு இருக்கிறது. சென்ற முறை மோடி மேல் தமிழர்கள் வைத்த முக்கிய குற்றச்சாட்டுகளில் முதன்மையானது இவர் வெளிநாடு சுற்றிக் கொண்டேயிருக்கிறார்? உள்ளே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கிறது? இவர் சுயமோக விளம்பர வெறியில் நாடு நாடாக அலைந்து கொண்டு இருக்கின்றார் என்பதே.
ஈழம் தொடர்பாக நான் படித்த புத்தகங்களின் வாயிலாக நான் அறிந்த முக்கிய உண்மை என்னவென்றால், சந்திரிகா சாதிக்க முடியாததை, ரணில் விக்ரமசிங்கே வெல்ல முடியாததை எப்படி ராஜபக்சே தன் வயப்படுத்தினார்? அதன் பின்னால் உள்ள காரணங்கள் என்ன? என்பதனைப் பார்த்த போது அவை அனைத்தும் சர்வதேச அரசியலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் எனக்குத் தெளிவாகப் புரியவைத்தது. அது குறித்து ஏற்கனவே எழுதியுள்ளேன்.
மோடி இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவராக மாறியுள்ளார். நீங்கள் வெளிநாட்டில் நிரந்தரமாக வாழ்பவரா? வெளிநாட்டில் வேலை விசயமாகத் தங்கியிருப்பவரா? தொழில் தொடர்பாக அடிக்கடி சென்று வருபவரா? சுற்றுலா சார்பாகச் சென்று வர விரும்புவராக இருந்தால் உங்களுக்குச் சர்வதேச அரசியலில் இந்தியா ஏற்கனவே எப்படிப் பார்க்கப்பட்டது? இப்போது எப்படிப் பார்க்கப்படுகின்றது போன்ற அனைத்தும் புரியும்?
ஒட்டன்சத்திரத்தில், மதுரையில் விளையும் மல்லிகைப்பூ அன்றைய மாலையில் சிங்கப்பூர் மதுரை விமான நிலையம் வழியே சென்று சேர்கின்றது என்றால் அது சர்வதேச அரசியலின் ஒரு அத்தியாயம். ஓசூரில் தயார் ஆகும் பொருள் பெங்களூரு விமான நிலையம் வழியாக மறுநாள் லண்டனில் போய்ச் சேர்வதும் இதன் ஒரு அங்கமே.
முன்பு மாவட்ட அரசியல் பேசியது. அதன் பிறகு மாநில அரசியல் மக்களின் வாழ்க்கைத் தீர்மானித்தது. கடைசியில் தேசிய அரசியல் முடிவு செய்தது. இப்போது உங்களையும் என்னையும் சர்வதேச அரசியல் தான் தீர்மானிக்கின்றது. அது உங்களுக்குக் கடைசி வரையிலும் தெரியப் போவதில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை ராணுவத்தினரால் தினமும் மீனவர் சுட்டுக் கொலை என்று வந்து கொண்டு இருந்தது? இப்போது வருகின்றதா? தனுஷ்கோடியிலிருந்து, தூத்துக்குடியிலிருந்து கப்பல் போக்குவரத்து நடத்துங்கள் என்று இலங்கை அமைச்சர் இப்போது கெஞ்சிக் கொண்டு இருக்கின்றார். காரணம் அந்த நாடு திவால் நிலைக்கு அருகே வந்துள்ளது. சமீபத்தில் பாஜக அரசு பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200 சதவிகிதம் வரியை அதிகப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மொத்தமாக மூழ்கியே விட்டது.
நீங்கள் ஆந்திராவைக் கடந்து வட மாநிலங்களின் உள்ளே நுழைந்து விட்டால் நீங்கள் தமிழர் அல்ல. மதராஸி. அப்படித்தான் வடக்கத்தியர்கள் உங்களை அழைப்பார்கள். அதே போல நீங்கள் சிங்கப்பூர் கடந்து லண்டனில் இறங்கி விட்டால் அல்லது ஐரோப்பா, கனடா, அமெரிக்கா என்று முழுமையாக உள்ளே நுழைந்து வெளியே வரும் போது நீங்கள் இந்தியர் அல்ல. அவர்களைப் பொறுத்த வரையிலும் நீங்கள் ஆசியர் என்று தான் அழைப்பார்கள்.
இங்கிருந்து தான் சர்வதேச அரசியலின் பாலபாடம் தொடங்குகின்றது.
தெற்காசிய நாடுகளில் அரசியல் என்பது தற்போதைய சூழலில் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்புக்கு வருகின்றவர்களுக்கு மிக மிக முக்கியமானது. அது விரிவாக விபரமாக புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இல்லாவிட்டால் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களையே காவு வாங்கி விடும். அந்த வேலையைத்தான் மோடி இப்போது செய்து கொண்டு இருக்கின்றார். அதன் பலன் அனைத்தும் நம் குழந்தைகளுக்குக் கிடைக்கும். நம்பத் தயாராக இல்லாதவர்கள் சர்வதேச அரசியல் குறித்து எழுதப்பட்ட எளிய புத்தகங்களைப் படித்து உங்களின் சிந்தனைகளில் சிறகுகளை மாட்டி வையுங்கள். உங்களுக்குப் பலன் உள்ளதோ இல்லையோ? உங்கள் குழந்தைகள் இதில் தான் இனி வாழ்ந்தாக வேண்டும் என்ற காலகட்டம் மிக அருகில் உள்ளது என்பதனை மறந்து விட வேண்டாம்.
++++++++++++++++
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 19 வது உ ச்சி மாநாட்டிக்கு கிர்கிஸ்தான் சென்றுள்ள பாரத பிரதமர் மோடிக்கு கிர்கிஸ்தானுக்கு செல்வது இது மூன்றாவது முறையாகும்.ஒவ்வொரு முறை அவர் கிர்கிஸ்தான் செல்லும் பொழுதும் அவர் கிர்கிஸ்தானைப்பற்றி நினைக்கும் பொழுது ஒரு காலத்தில் இது இந்தியாவின் மேப்பில் இருந்த பகுதியல்லவா என்று நினைத்து இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.
இந்த கிர்கிஸ்தான் நாடு ஒரு காலத்தில் இந்தியாவோடு இணைந்து இருந்தது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் நம்பித்தான் ஆக. வேண்டும்.கனிஷ்கரின் காலடிப்பட்டு அவரின் வீரத்துக்கு கட்டுப்பட்டு இந்தியாவோடு கிபி 130 களில் அடங்கி இருந்த நாடு தான் கிர்கிஸ்தான்.
கனிஷ்கர் இந்தியாவின் இரண்டாவது பேரரசர்.
இந்தியாவின் முதல் பேரரசர் என்று பெயர் எடுத்த அசோகரின் காலத்திற்கு பிறகு மௌரியப் பேரரசு வீழ்ச்சி அடைய குஷாணப் பேரரசு உருவானது.இவர்கள் காலத்தில் தான் இந்தியாவில் நாணயங்கள் அறிமுகமானது.
கனிஷ்கர் காலத்து இந்தியாவை மேப்பில் தேடிப்பார்த்தால் இப்பொழுது மோடி தலைமையில் பிஜேபி வெற்றி பெற்ற பகுதிகளை உள்ளடக்கிய மேப் எப்படி இருக்குமோ அப்படித் தான் இருக்கும். அதே மாதிரி இன்னொரு முக்கிய விசயம் தெரியுமா?
மோடி இந்த ஷாங்காய் அமைப்பில் இந்தியாவை இணைய வைத்ததன் மூலமாக மத்திய ஆசிய நாடுகளை இந்தியாவோடு நட்புறவோடு வைத்துஇருக்க வேண்டும் என்பதே.. இதனால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா. இந்த அமைப்பில் உள்ள நாடுகள் அனைத்தும் இந்தியாவின் எதிரிகளான பாகிஸ்தான் சீனாவை சுற்றியுள்ள நாடுகள்.
சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் என்னவென்றால் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகி ஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் மாதிரி உருவாகிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட து.
இந்த அமைப்பு 1996 ல் உஸ்பெஸ்கிஸ்தானை தவிர ஏனைய நாடுகளுடன் சேர்ந்து சீனா ஆரம்பித்தாலும் 2001 ல் உஸ்பெஸ்கிஸ்தான் இணைந்த பிறகு தான் முறையாக செயல்பட ஆரம்பித்தது. அன்றிலிருந்து இன்றுவரை 19 மாநாடுகள் இந்த 6 நாடுகளில் ஏதாவது ஒன்றில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.
இந்த அமைப்பில் பல வருடங்களாக பார்வையா ளர்களாக இருந்த இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த 2017 ம்ஆண்டில் தான் உறுப்பினர்களாக இணைந்தார்கள்.ரஷ்யா ஆதரவுடன் இந்தியா இதில் உறுப்பினராக பதிலுக்கு சீனா வம்படியாக பாகிஸ்தானையும் இதில் உறுப்பினராக்கி விட்ட து.
இப்பொழுது 8 நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.சீனா தான் இதற்கு பாஸ் மாதிரி இருந்து நடத்தி வருகிறது. இந்தியா தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு என்கிற பெயரில் சார்க் அமைப்பை நடத்தி வருவதை பார்த்து சீனாவும் நம்முடைய தலைமையில் ஒரு அமைப்பு இருக்கட்டுமே என்று இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை ஆரம்பித்து நடத்தி வருகிறது.
இந்த அமைப்பில் உள்ள 8 நாடுகளில் ரஷ்யாவை தவிர ஏனைய 7 நாடுகளும் ஆசியா கண்டத்தை சேர்ந்த நாடுகள் தான். ரஷ்யா மட்டுமே ஐரோப்பா கண்டத்தை சேரந்ததாக இருக்கிறது. இருந்தாலு ம் ரஷ்யாவின் ஆசியா கண்டத்திலும் இருப்பதால் ரஷ்யா இந்த அமைப்பில் சேர்ந்து விட்டதாக நினைக்க வேண்டாம்.
இந்த அமைப்பில் ரஷ்யா இணைந்ததன் முக்கிய நோக்கமே ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடுகளை இந்த ஷாங்காய் அமைப்பு மூலமாக இணைத்து அவர்களுடன் வர்த்தகம் பொருளாதாரம் பாதுகாப்பு என்று உறவு வைத்துக் கொள்வதன் மூலம் கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய நாடுகள் அமெரிக்காவோடு நட்புறவு கொள்ள விடாமல் பார்த்துக்கொண்டது.
சுருக்கமாக கூறினால் கம்யூனிசம் அங்கே காணாமல் போய்விட்டாலும் அமெரிக்காவோடு இந்த நாடுகள் நட்பாகி விடக்கூடாது என்பது தான் ஷாங்காய் அமைப்பின் காரணகர்த்தாக்களான சீனா மற்றும் ரஷ்யாவின் நோக்கம்.அதுவும் இப்பொழுது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறும் கிர்கிஸ்தான் சீனாவின் மேற்கு எல்லை யில் உள்ள நாடு.
அதனால் தான் ரஷ்யாவில் இருந்து சிதறிப்போ ன இந்த நாடுகளை கூட்டி வைத்து உனக்கு என்ன வேண்டுமோ அதை நாங்கள் தருகிறோம் என்று ரஷ்யாவும் சீனாவும் அந்த நாடுகளுக்கு சோறு போட்டு வளர்த்து வருறார்கள்.
ஆனால் இந்தியாவோ இந்த அமைப்பில் உள்ள ரஷ்யாவில் இரு ந்து பிரிந்த நாடுகளுக்கு நிதி உதவி அளித்து அந்த நாடுகளை இந்தியாவின் ராணுவ தளங்களாக மாற்ற வேண்டும் என்பதே..
இப்பொழுது கூட இந்த அமைப்பில் உள்ள தஜிகிஸ்தானில் உள்ள பார்கோரில் இந்தியாவின் விமானப் படை தளம் இருக்கிறது.அதோடு தஜிகிஸ்தானில் இருக்கும் அய்னி ராணுவ தளத்தையும் இந்தியா நவீனப்படுத்தி வருகிறது. இந்த அய்னி விமானப்படை தளத்தை பயன்படுத்தி தான் ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்த பொழுது அங்கு அமெரிக்கா பாகிஸ்தான் படைகளோடு போர் புரிந்தது.
அது மட்டுமல்லாது சோவியத் யூனியனில் இரு ந்து பிரிந்த நாடுகளில் ராணுவ பலத்தில் ஸ்ட்ரா ங்கான உஸ்பெஸ்கிஸ்தான் ஷாங்காய் அமைப் பில் இந்தியா இணைந்தவுடன் இந்தியாவோடு நிறைய ராணுவ ஒப்பந்தங்களை போட்டுள்ளது. அதில் ஒன்று எதிர்காலத்தில் இந்தியாவின் தேவைக்கு உஸ்பெஸ்கிஸ்தானில் உள்ள கார்ஷிகானபத் விமானப்படை தளத்தையும் பயன்ப டுத்தி கொள்ள வழி செய்துள்ளது.
இதே மாதிரி ஷாங்காய் அமைப்பில் உள்ள இன்னொரு நாடான கஜகஸ்தானிடமும் இந்தியா நிறைய ராணுவ ஒப்பந்தங்களை செய்துள்ளது. அதில் முக்கியமானது பாதுகாப்பு துறையில் இந்தியாவும் கஜகஸ்தானும் இணைந்து 2019 ல் இருந்து ஸ்ட்ராடஜி பார்ட்னர்களாக செயல் படுவோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றா ல் கஜகஸ்தானில் உள்ள மிகப்பெரிய ராணுவ தளமான ஒடார் ராணுவ தளத்தில் இந்தியாவின் மிலிட்டரி இருக்கிறது. அதோடு கஜகஸ்தானை சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் இப்பொழுதும் ட்ரைனிங் நடைபெற்று வருகிறது.
இப்பொழுது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறும் கிர்கிஸ்தான் கூட இந்தியாவின் கண்ட்ரோலில் தான் இருக்கிறது.கடந்த மாதம் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பொழுது அழைக்கப்பட்ட ஸ்பெஷல் கெஸ்ட் யார் தெரியுமா? சூரான்பே ஜீன்பெகோ தான்.
சூரான்பே ஜீன்பெகோ தான் இப்போதைய கிர்கிஸ்தான் அதிபர்.இவருக்கு இந்தியா நிறைய கடன் உதவிகளை செய்துள்ளது இவரை 2018 ல் ஒரு முறைமோடி கிர்கிஸ்தானுக்கு சென்று பார்த்து பேசிவிட்டு வந்த பிறகு தான் கிர்கிஸ்தானில் இருக்கும் பலிக்சியில் இந்தியாமவுண்டைன் ட்ரை னிங் சென்டர் என்கிற பெயரில் ஒரு தளத்தை கட்டி வருகிறது. இந்த பலிக்சிதான் சீனாவுக்கு மிக மிக அருகில் உள்ள மலைப்பகுதி.
ஆக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மூலமாக சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளை தங்களின் பிடிக்குள் வைத்துக் கொள்ளலாம் என்று சீனாவும் ரஷ்யாவும் போட்டக்கணக்குகளை மோடி முறியடித்து கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான்,உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய மத்திய ஆசிய நாடுகளை தன்னுடைய ராஜதந்திரத்தின் மூலமாக இந்தியாவோடு நெருக்கமாக்கி வரு கிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா இணைவதற்கு மோடியே முழுக் காரணம்.இதன் நோக்கமே மத்திய ஆசியநாடுகளை இந்தியாவோடு இணங்க வைப்பதற்குத்தான்.
.
நன்றி Vijayakumar Arunagiri
18 comments:
உங்கள் கேள்விக்குப் பதில் அளிப்பதற்கு முன்பு அது குறித்து சில துணைக் கேள்விகள் உண்டு. அதற்கு உங்களால் பதில் அளிக்க முடியுமா? என்று பாருங்கள்.
1. பாஜகவுக்கு இன்றைய சூழலில் ஒரு மசோதாவைத் தாக்கல் செய்து அதனை வெற்றி அடையத் தேவையான எண்ணிக்கை மாநிலங்களவையில் இல்லை. ஆனால் இந்த மசோதா வென்றுள்ளது? யாரால்? மோடிக்கு நாங்கள் எதிரி என்று சொன்னவர்கள்? சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் ஏன் ஆதரித்தார்கள். குறிப்பாகக் கம்யூனிஸ்ட். காங்கிரஸ் உட்பட. அப்படியானால் யார் முதன்மைக் குற்றவாளி?
2. சமூக நீதி என்பது சமூகத்தில் அனைவரும் சம உரிமையுடன் எவ்வித சாதி இழுக்கும் இல்லாமல் சகல உரிமையுடன் வாழ்வது. அது சாதி மூலம் தான் இந்த சமூகத்தில் உருவாக்கப்பட்டு இது இன்று வரையிலும் பாதுகாக்கப்படுகின்றது? மற்ற மாநிலங்களை விடுங்கள். தமிழகத்தில் இன்றைய சூழலில் சாதீய ஆதிக்கம் மிக அதிக அளவில் வளர்ந்துள்ளது. ஒவ்வொரு சாதிக்கட்சியும் ஒவ்வொரு தேர்தலின் போதும் பெரிய கட்சிகளை மிரட்டும் அளவிற்குப் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளார்கள். எப்படி வளர்ந்தார்கள்? யார் வளர்த்தார்கள்? என்ன காரணம்?
3. இட ஒதுக்கீடு என்பது சாதீய தீண்டாமையில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. மற்ற மாநிலங்கள் வேண்டாம். நம் மாநிலத்தில் மற்ற மாநிலங்களை விட 69 சதவிகிதம் இட ஒதுக்கீடு இன்னமும் அமுலில் உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட, மலைவாழ் சாதியைச் சேர்ந்த மக்கள் 1950 முதல் 1919 வரைக்கும் நடந்த ஆட்சிக்குப் பின்னால் சம உரிமையைச் சகல மக்களும் பெற்று உள்ளார்களா? அவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி தோன்றியுள்ளதா? இத்தனை ஆட்சிகள் மாறியும், வெவ்வேறு கொள்கைகள் கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தும், இட ஒதுக்கீடு அமலில் இருந்தும் ஏன் இங்கே நடக்கவில்லை?
4. இட ஒதுக்கீடு மூலம் பலன் அடைந்தவர்களின் குடும்பத்தில் அவர்களின் பொருளாதார, நடைமுறை வாழ்க்கை என்று அனைத்தும் ஒரு தலைமுறையில் மாறுகின்றது. முதல் தலைமுறை பெற்ற அந்த வசதிகளின் மூலம் அடுத்த அவர்களின் தலைமுறை எளிதாகக் கல்வி வசதிகள் பெறமுடியும் என்பது உண்மை தானே? ஆனால் அதே குடும்பத்தில் மகன், மகள், பேரன், பேத்தி, அடுத்த தலைமுறை என்று தொடர்ந்து ஒரே குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகள் தொடர்ந்து அனுபவிக்கும் போது கிராமப்புறங்களில் உள்ள எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல், வாழ்கின்றவர்கள் புறக்கணிப்பட்டு இன்னமும் அவர்கள் சாதிய இழிவை சுமந்தப்படியே தான் வாழ்கின்றார்களே? அவர்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும்? அதற்கு அரசாங்கங்கள் என்ன தீர்வு வைத்து உள்ளது?
இப்போது அரசாங்கத்தின் முக்கிய வருவாய் என்பது எரிபொருள் மூலம் கிடைப்பது தான். இப்போது ஜிஎஸ்டி மூலமும் வரிகின்றது. இதற்குப் பின்னால் உள்ள லாபி வட்டத்தையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இது சரி என்று வாதிட வரவில்லை. இது ஒன்றின் மூலம் விலைவாசி எல்லாப் பக்கமும் உயரும். சாதாரண மக்கள் பாதிக்கப்படத்தான் செய்வார்கள் என்று தான் நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் ப சிதம்பரம் விலை வாசி உயர்வு தவறில்லை. அது உயரத்தான் வேண்டும் என்கிறார். எனக்கே குழப்பமாக உள்ளது. நேற்று டிவிஎஸ் அப்பாச்சி என்ற வண்டி எத்தனால் மூலம் ஓடக்கூடிய வண்டியை தயாரித்து அறிமுகம் செய்துள்ளார். பேட்டரி இரண்டு சக்கர வாகனங்கள் பரவலாக தமிழகத்தில் வரத்துவங்கி விட்டது. மின்சார வண்டிகள் அமெரிக்க நிறுவனம் மூலம் உள்ளே வரவும் போகின்றது. இன்னும்சில வருடங்களில் எரிபொருள் தேவை குறையும் என்றே நம்புகிறேன். அப்போது மாற்றங்கள் உருவாக வாய்ப்பு உண்டு என்று நம்புகிறேன்.
படித்தேன். புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
//தமிழகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட, மலைவாழ் சாதியைச் சேர்ந்த மக்கள் 1950 முதல் 1919 வரைக்கும் நடந்த ஆட்சிக்குப் பின்னால்//
2019 என்று இருக்க வேண்டும்?
நன்றி. எண் மாறிவிட்டது.
ஒரு காலத்தில் கூட்டு சேரா இயக்கம். மற்றொரு காலத்தில் சார்க் அமைப்பு. மற்றொரு நேரத்தில் Look East. இவ்வாறாக காலத்திற்கேற்றவாறு அமைப்புகளில் ஈடுபட்டு இந்தியா தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் பாங்கு போற்றத்தக்கது.
ஒரு அரசுபற்றிய ஆதரவோ எதிர்ப்போ புள்ளிவிவரங்களில் இல்லை அது எழுதுபவரின் பெர்செப்ஷனே
நீங்க சொல்வது அனைத்தும் அரசியலில் ராஜநீதி என்றும் இது தான் அரசியலின் ராஜதர்மம் என்று முடிக்கின்றார்கள். நீங்க சொல்ற மாதிரி மோடியை கடவுள் என்று எந்த இடத்திலும் எழுத வில்லை. சொல்லவும் மாட்டேன். எனக்கு இந்த அரசு மேல் காங்கிரஸை ஒப்பிடும் போது கொஞ்சம் நம்பிக்கை உள்ளது. அதனால் கவனித்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி வருகிறேன். ஐஐடி என்பது தனியான லாபி. நல்லதும் கெட்டதுமாக நிறைய படித்துள்ளேன். எனக்கு அதைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. பூதாகரமாக்கப்பட்ட செய்திகள் அதைப் பற்றி வந்து கொண்டு இருக்கின்றது. மற்றபடி அங்கு படித்தவர்கள் எவரும் இந்தியாவில் இருப்பதில்லை. இந்தியர்களின் வரிப்பணத்தில் வெளிநாட்டினருக்கு உழைக்க உருவாக்கப்பட்ட அமைப்பு அது. பெட்ரோல் விலை பீப்பாய் 140 இருந்த போது ஏன் மோடி குறைக்காமல் இருந்தமைக்கு காரணம் பற்றி ஏற்கனவே ஒரு பின்னூட்டத்தில் ஒருவருக்கு தெரிவித்துள்ளேன்.
ஜிடிபி என்பதே மாயமால கணக்கு தானே. அதைத் தானே மொத்த உலகமே வழிமொழிகின்றது.
உண்மை தான். அது ஆள்பவர்களின் தனிப்பட்ட திறமைகளில் தானே அதுவும் அடங்கியுள்ளது.
//நம்மவர்களுக்குச் சர்வதேச அரசியல் எந்த அளவுக்குத் தெரியும்? அதன் பலன் என்ன? தாக்கம் என்ன? எங்கங்கு அதன் பாதிப்பு தெரியும்? எங்கிருந்து தொடங்கும்? எங்கே வந்து முடியும்? என்பதெல்லாம் தெரியாது.///
பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு போயிருக்கிறது என்று கருதுமாம் அது போலத்தான் இதை எழுதியவரின் இந்த கருத்தும் இருக்கிறது...
தினமலரும் தினத் தந்தியும் வாங்கி படிப்பவர்கள் அதில் சர்வ தேச அரசியலை புரிந்து கொள்ள அதை வாங்கிப்படிப்பதில்லை... அதை வாங்கி படிப்பவர்கள் அதில் வரும் நடிகையின் அந்தரங்கத்தை படித்து மகிழத்தான் வாங்குகிறார்கள் அதில் சந்தோஷம் கொள்கிறார்கள் அதனால் அவர்கள் மற்றைய இண்டர்னேஷனல் அரசியல் செய்திகள் வரும் ஊடக செய்திகளை படிக்காமல் இருப்பதில்லை இதில் கிராம புறங்களில் டீகடைகளில் இருப்பவர்கள் விதிவிலக்கு
இப்போது இணையம் எல்லோரையும் எட்டிவிட்ட பிறகு பலரும் சர்வதேச செய்திகளையும் சர்வதேச அரசியலையும் படித்து தெளிந்து இருக்கிறார்கள் என்பதே உண்மை
ஒரு இடத்தில் ஒரு நிகழ்வு நடக்கிறது என்றால் மோடி ஆதரவு ஊடகங்கள் அதை எப்படி திரிக்கின்றன. அதே நிகழ்வை மற்றைய இந்திய ஊடகங்கள் எப்படி திரிக்கின்றன பாகிஸ்தான் சீனா அமெரிக்கா ஐரோப்பா ஊடங்கள் எப்படி திரிக்கின்றன என்பதை பலரும் படித்து தெளிந்து கொள்கிறார்கள் அவைகள் ஏன் அப்படி திரிக்கின்றன அப்படி திரிப்பதால் என்ன பலன் யாருக்கு கிடைக்கின்றது என்பதும் பலரும் அறிவார்கள்
அதனால் சர்வ தேச அரசியல் நம்மவர்களுக்கு தெரியவில்லை என்று கட்டுரையாளர் சொல்வதை பார்க்கும் போது அவருக்கு இன்றைய நம் மக்களை பற்றிய அறிவு சிறிதும் இல்லை என்பது மிக நன்றாகவே தெரிகிறது இது கூட தெரியாதவர் அறியாதவர் மோடியின் திட்டங்கள் மிக நன்றாக தெரிந்தது போல அதுவும் மோடியே இந்த அறிவு கொளுந்திடம் நேரை பேசி விவாதித்து செயல்பட்டது போல எழுதிக் சென்று இருக்கிறார்
இந்த ஒரு கருத்திலே பதிவை எழுதியவர் எவ்வளவு அறிவு ஜீவி என்பது அறிவில் மிக குறைந்து இருக்கும் எனக்கே புரிகிறது மற்றவர்களுக்கு அது புரியாமலா இருக்கும்
//பாஜகவுக்கு இன்றைய சூழலில் ஒரு மசோதாவைத் தாக்கல் செய்து அதனை வெற்றி அடையத் தேவையான எண்ணிக்கை மாநிலங்களவையில் இல்லை. ஆனால் இந்த மசோதா வென்றுள்ளது? யாரால்? மோடிக்கு நாங்கள் எதிரி என்று சொன்னவர்கள்? சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் ஏன் ஆதரித்தார்கள். குறிப்பாகக் கம்யூனிஸ்ட். காங்கிரஸ் உட்பட. அப்படியானால் யார் முதன்மைக் குற்றவாளி?//
ஆதரித்தவர்கள் எதிர்கட்சி தலைவர்கள் அல்ல அவர்களின் கட்சியில் இருக்கும் சில எட்டப்பன்கள்தான்.. அவர்கள் அதிகாரம் யார் பக்கம் இருக்கிறதோ அந்த பக்கம் சாய்ந்து இருக்கிறார்கள்... அவ்வளவுதான்... இந்தியாவில் இருக்கும் எம் எல் ஏக்கள் எம்பிக்கள் எப்போதும் ஒரு மசோதாவை ஆராயந்து அதற்கு வாக்களிப்பதில்லை ஒன்று அவர்கள் கட்சி சார்ந்தோ அல்லது அவர்களின் தனிப்பட்ட நலன் சார்ந்தோதான் வாக்களிக்கிறார்கள்
குறிப்பாக சொல்லப்போனால் மோடியும் அமித்ஷாவும் தன் வானாளவிய அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்கட்சியில் இருக்கும் சில கருப்பு ஆடுகளை மறைமுகமாக விலை பேசி இந்த மசோதாவை வெற்றி பெற செய்து இருப்பார்.... அப்படி செய்யாமல் இந்த மசோதா வெற்றி பெற்று இருக்காது
மோடி ஏன் வெளிநாடு சுற்றுகின்றார்? - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி
பொதுவா பெட்ரோல் விலை, வெளிமார்க்கெட்டில் விலை குறையும்போது ஏன் இந்தியாவில் குறையவில்லை என்றெல்லாம் நிறைய கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
1. மத்திய அரசு தரகர் வேலை செய்யவில்லை. அவர்கள் வண்டியை மெயிண்டெயின் செய்யாமல் பெட்ரோல் மாசு மூலம் அப்பாவிகளைத் திட்டம்போட்டுக் கொல்லும் வண்டிகாரர்களின் நல்லதை மட்டும் நினைப்பதற்கு.
2. அரசு பெட்ரோல் உபயோகத்தினால் நாம் இழக்கும் அந்நியச் செலாவணியைக் குறைக்கவும், டிஸ்கரேஜ் செய்யவும், வருமானத்தை வெளிக்காட்டாமல் வருமான வரி கட்டாமல் இருப்பதால் ஏற்படும் இழப்புக்கும், இதை ஒரு வருவாய் சோர்ஸ் எனக் கருதி பெட்ரோல் விலையைக் கூட்டுகிறது.
ஏன் மக்கள் அரசு போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை? ஏன் ஒற்றை நபருக்காக ஒரு கார் இயக்கப்படுகிறது? ஏன் இவ்வளவு இரண்டு சக்கர வாகனங்கள். இதற்கெல்லாம் மக்களிடம் பணம் இருக்கும்போது, பெட்ரோல் விலை உயர்ந்தால் அதற்கு ஏன் கவலைப்படவேணும்? சகோதர ஏழை இந்தியனிடம் பிரியம் வைத்திருப்பவர்கள், எந்த எந்த வழிகளில் பெட்ரோல் பயனைக் குறைக்க முடியுமோ அப்படிக் குறைத்தால் என்ன?
உங்கள் கருத்து முழுமையாக தவறு. இது சார்ந்த விசயங்களை முழுமையாக படித்துப் பார்க்கவும். காங்கிரஸ் மட்டுமல்ல எந்த கட்சியும் முற்பட்ட வகுப்பினரை பகைத்துக் கொண்டு வட மாநிலங்களில் அரசியல் செய்ய முடியாது. கொன்று விடுவார்கள். விபி சிங் பட்ட பாடுகளைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளவும். அது தான் முக்கியக் காரணம்.
உங்களுக்குத் தெரிந்த சர்வதேச அரசியல் அறிவை வைத்துக் கொண்டு நேரு இந்திரா காலத்தில் இந்தியா அடைந்த லாபம் மற்றும் நட்டம் என்ன? அதுவே மோடி காலத்தில் இழந்த பெருமைகள் என்ன? என்பதனை உங்கள் தளத்தில் எழுதவும். தரவுகளைக் கொடுக்கவும். ஆவலுடன் காத்திருக்கிறேன். நானும் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
நன்றி
அற்புதமான கேள்வி? நடுத்தரவர்க்கம் 1991 க்குப் பிறகு 30 கோடி இந்தியர்கள் உயர்நடுத்தர வர்க்கமாக மாறி உள்ளனர். அவர்கள் அனுபவிக்கப் பிறந்தவர்கள். முதல் தலைமுறையாக பணத்தை பார்க்கின்றவர்கள். அதன் விளைவு நீங்க சொன்னது.
Post a Comment