Saturday, February 26, 2022

தாமரை மலர்ந்தது 2022

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி

தன் மெய் வருந்தக் கூலி தரும்.

(நன்றி குறள் சித்தர் திண்டுக்கல் தனபாலன்)

விளக்கவுரை

ஒருவனை, ஒருவரை, ஒரு கட்சியை, ஒரு கொள்கையை நாம் அசிங்கப்படுத்தலாம். 

அவமானப்படுத்தலாம். கேவலப்படுத்தலாம். 

புழுதிவாரி தூற்றலாம். பொய்க் கதைகளை திரும்பத் திரும்பச் சொல்லலாம்.  

மாலை நேரம் என்றாலே தொலைக் காட்சி முன்னால் அமர்ந்து கொண்டு அதில் வரும் விவாதங்களைக் கவனித்து மன நலம் பாதிக்கப்பட்டு அதுவே உண்மை என்று நம்பலாம்.

ஆனால் உழைப்பு உன்னதமான முடிவுகளைத் தரும் என்று என் ஆசான் வள்ளுவர் எழுதியதாக திண்டுக்கல் சித்தர் நேற்று அழைத்து சொன்னார். அப்படித்தான் இப்போது தமிழகத்தில் திரு. அண்ணாமலை அவர்கள் படிப்படியாக தமிழக மக்கள் இளம் தலைவராக அடையாளம் காணப்பட்டு வருகின்றார்.

பொழுது போகாமல் இருக்கும் போது மதுரை ரவி அவர்கள் கட்டாயம் இந்தப் படங்கள் என்ன சொல்கின்றது?  

என்ன புரிந்து கொண்டீர்கள் என்பதனை குரல் வழியே அனுப்புங்கள் அய்யா.  

என் அலைபேசி என் கையில் இப்போது இல்லை.  

முழுப் பரிட்சை முடியும் வரைக்கும் இங்கே எனக்கு என் டவுசர் மட்டும் தான் சொந்தமாக இருக்கும்.  

மற்றது அனைத்து பெண்கள் நலக்கூட்டணியார் ஆதிக்கத்தில் தான் இருக்கும் என்பதனை அன்போடு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

"ஆகூழைமட்டும் நம்பாமல் முயல்க" என்று சொல்கிறது இப்பாடல்... அடுத்ததில் "உப்பக்கம்" பார்க்க வேண்டி வரும்... ஆனால் அதற்கு முன், அந்த உப்பக்கத்தை அதாவது இயற்கையின் பேராற்றலை அறம் கணித்து, தான் முந்திச் செல்லும்... அதுவே குறள் 380

380 × 620 (இதை முன்பே எனது வலைப்பூவில் எழுதி உள்ளேன்...) இனி எழுதாதவை :-

கூலி என்னவென்று பிறகு தெரிய வரும்... அதற்கு கணக்கியல் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்...!

"தெய்வம்" எனும் சொல் எத்தனை குறள்களில் வருகிறது...? அதன் கட்டமைப்பு என்ன...? சரி, 380-ல் முந்தும் ஊழை வெல்ல முடியுமா...? தெய்வம் எங்கே முடிகிறது...?

1023 : எனது குடும்பத்தை (இங்கு குடிமக்களை) உயரச்செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு, தெய்வமே ஆடையை இறுகக் கட்டிக் கொண்டு தானே முன்வந்து துணை செய்யுமாம்...!

ஓருவனுக்கு = வெங்கோலனுக்கு தகுதி இல்லை... A1 & அடிமைகளால் உட்புகுந்து விசம் பரவிக் கிடக்கும் நாட்டை சீரமைக்கவே பல ஆண்டுகள் ஆகும்... அதற்கு தற்போதைய நிலைமையும் விலை போகாமல் இருக்க வேண்டும்...

எளிய தமிழ்ப் பிள்ளைகள் விழித்துக் கொள்வார்கள்...

முடிவாக கணக்கு அனைத்தையும் தீர்மானிக்கும்...

நன்றி... இந்தப் பதிவில் குறளை மட்டுமே படித்ததில், இந்த சுருக்கமான கருத்துரை...! மற்றவை மற்றவையே... உறுதிப் பொருட்கள் மட்டுமே கொண்டது முப்பால்...

மீண்டும் நன்றி...

From Bangalore...!

KILLERGEE Devakottai said...

கடைசி தாமரை படம் அழகு.

ஆனால் அழகில் தான் ஆபத்து(ம்) இருக்கிறதாம் ஊருல நாலு பேரு சொல்லிக்கிட்டாங்க...