Tuesday, February 22, 2022

தொடர்ந்து பயணிக்கின்றேன் 2022 02 22

வேர்ட் ப்ரஸ் ல் எழுதத் தொடங்கிய போது எழுத்துலகம் பற்றி எனக்கு அடிப்படை அறிவு கூட கிடையாது.

ப்ளாக்ஸ்பாட் வந்த போது எழுத்தாளர் என்பதற்கு உண்டான தகுதியை வளர்த்துக் கொள்ளவே முயன்றேன்.

சென்ற வருடம் ஜூலை மாதத்தில் 13 ஆம் ஆண்டு தேவியர் இல்லம் பயணம் குறித்து எழுதியிருந்தேன்.

2022 என்பது என் எழுத்துப் பயணத்தில் 14 ஆம் ஆண்டு.  

இன்று வரையிலும் எழுதுகிறேன்.


அடுத்த பயணமாக இலவச மின் நூல் பயணம் என்பதில் தொடங்கியது.  

இதனைத் தொடர்ந்து அமேசான் கிண்டில் மின் புத்தகம் என்பதாக மாறியது.

ஜோ பேச்சு என்று யூ டியூப் வழியாகவும் பாட்காஸ்ட் வழியாக குரல் பதிவுகளும் காலத்திற்குத் தகுந்தாற் போல என்னை மாற்றிக் கொண்டேன்.

2020 கொரோனா முதல் அலையில் ஆறு மாதங்கள் இரவு பகலாக வீட்டுக்குள் முடங்கியிருந்த காலகட்டத்தில் 100 ஆண்டுகள் தமிழக அரசியல் வரலாறு எழுதி முடித்த பின்பு என் மனதில் அலை அலையாக கேள்வி எழுந்து கொண்டே இருந்தது.

எல்லாம் தெரிந்தும் அயோக்கியர்களை இன்னமும் ஆள அனுமதித்துக் கொண்டு இருப்பது தவறு என்று மனம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தது.

நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கற்றுக் கொள் களத்தில் இறங்கு என்ற குழுமம் உருவாக்கி அதன் மூலம் கற்று களத்தில் இறங்கு என்ற யூ டியூப் சேனல் மூலமாக முக்கியமானவர்கள் அனைவரையும் ஜும் வழியாக பேச வைத்துப் பதிவு செய்து வாரம் தோறும் வலையேற்றிக் கொண்டு இருந்தோம்.  

டிசம்பர் 2021 க்கு மேல் அதனைத் தொடர முடியாமல் நிறுத்தி வைத்து இருந்தோம்.

இதே சமயத்தில் தமிழக பாஜக தலைவர்கள் திரு. அண்ணாமலை அவர்கள் தொண்டர்களுக்கு ஒரே நாடு இதழில் கடிதம் எழுதிக் கொண்டு வந்தார். 

அதனை ஒலி வடிவமாக பாட்காஸ்ட் மற்றும் கற்று களத்தில் இறங்கு யூ டியூப் வழியாக கொடுத்துக் கொண்டு வந்தோம்.  

இது இன்று வரையிலும் தொடர்கின்றது.

இதுவரையிலும் 1900 மணி நேரம் பார்வையாளர்கள் கேட்டு உள்ளனர்.

ஜுன் 20 2021 முதல் இன்று வரையிலும் ஏழு மாதங்கள் தான் முடிந்ததுள்ளது. 19,000 பேர்கள் கேட்டு உள்ளனர். பார்த்து உள்ளனர். மெதுவாக இயல்பாக போய்க் கொண்டு இருக்கின்றது.

இந்த சமயத்தில் வெவ்வேறு இடங்களில் பேச அழைப்பு வந்த போது பல சமயம் மறுத்து உள்ளேன். தவிர்த்துள்ளேன்.

முகம் வெளியே தெரிய வேண்டாம் என்பதாகவே என்னைச் சுருக்கிக் கொண்டு வைத்திருந்ததை நண்பர் அழைத்துக் கரைத்து விட்டார்.  

அண்ணாமலை அவர் ஹோப் (அண்ணாமலை நமது நம்பிக்கை) என்றொரு யூ டியூப் சேனல் அப்போது  தான் அறிமுகம் ஆனது.

முகம் தெரியாமல் குரல் வழியே பேசுகின்றேன் என்று தான் தொடங்கினேன். கடைசியில் அது எங்கங்கே அழைத்து உலகம் முழுக்க கொண்டு போய் சேர்த்து விட்டது.

கடந்த 12 வருடங்களில் இணைய உலகில் எனக்கென்று எந்த அரசியல் சார்பும் இல்லாமல் இருந்தேன்.  ஆனால் என்னுடன் பழகிய அத்தனை பேர்களுக்கும் ஒவ்வொருவிதமான அரசியல் சார்பு இருந்தது. அனைவரும் பேசினார்கள். விவாதித்தார்கள். நான் அத்தனை பேர்களுடனும் பழகினேன். அவர்கள் குணங்களுடன் எண்ணங்களுடன் கருத்துக்களுடன் அப்படியே ஏற்றுக் கொண்டேன். ஆனால் எனக்கென்று ஒரு பார்வை, கருத்து, கொள்கை,நோக்கம் என்ற போது ஒவ்வொருவரின் முகமும் தெரியத் தொடங்கியது. பார்த்தேன். ரசித்தேன். கடந்து வந்து கொண்டு இருக்கின்றேன். கூடவே அடுத்தடுத்த படியில் ஏறிக் கொண்டே இருக்கின்றேன். 

இது நாள் வரைக்கும் சமூகம் சார்ந்த பொதுவான கருத்துக்களை ஆவணப்படுத்துவதில் கவனம் செலுத்தினேன். அது எவ்வளவு பெரிய தவறு என்பதனை கடந்த இரண்டு வருடங்களில் உணர்ந்துள்ளேன்.

"நீ எங்களுடன் வரவில்லை எனில் எதிரி"

என்று அர்த்தம் என்பதாக கருதும் கூட்டம் என்னைச் சுற்றி இருந்ததை இப்போது தான் உணர்ந்துள்ளேன்.  

இதன் காரணமாகவே என் அரசியல் பயணத்தை, அரசியல் சார்ந்த கருத்தை, நான் நம்பும் சித்தாந்தத்தை அவர்கள் வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு வேகமாக கொண்டு செல்ல விரும்புகின்றேன்.

ஒவ்வொருவரும் என்னை விட்டு விலக விலக என் பாரம் குறைகின்றது. சிறகு இயல்பாக வேகமாக பறக்க முடிகின்றது. தூர இலக்கை மனதில் வைத்து தொல்லை இல்லாமல் இப்போது பயணித்துக் கொண்டு இருக்கின்றேன்.

எவரையும் திருத்த நான் இங்கே எழுதவில்லை.

எவரும் என்னைத் திருத்த வேண்டிய அவசியமும் இல்லை.

இப்போது மட்டுமல்ல இனி வரும் காலம் முழுக்க நான் எழுத முடிகின்ற காலம் வரைக்கும் நாம் நம்பும் விரும்பும் அரசியலைத்தான் இங்கே எழுதப் போகின்றேன்.

உங்கள் மனம் அமைதியடைய ஒதுங்கி விடுங்கள்.  

உணர விரும்பினால் அமைதியாக பின் தொடருங்கள்.

எதில் இறங்கினாலும் அர்ப்பணிப்பு உணர்வோடு உண்மையான அக்கறையோடு கூடுதல் உழைப்போடு செயல்படுவது வாடிக்கை. 

அப்படியே இவர்களுடன் இணைந்து செயல்பட்டேன்.  அதாவது கட்டாயத்தின் அடிப்படையில்.

நான் எனக்காகச் செயல்படும் முகநூல், ட்விட்டர் என்று சமூக வலைதளங்களில் அதிகமான பாதுகாப்பு வசதிகள் செய்து உள்ளேன். எவரையும் உள்ளே அனுமதிப்பது இல்லை. சின்ன வட்டத்திற்குள் தெளிவாக அழகாக அமைதியாக பயணம் செய்து கொண்டு இருப்பதால் பிரபல்யம் என்ற மாய வட்டத்திற்குள் சிக்காமல் 14 ஆண்டுகள் கடந்து வந்து விட்டேன்.

ஆனால் இந்த சேனல் கடல்.  

உள்ளே நுழையும் போதே புரிந்து கொண்டேன்.

ஏறக்குறைய இரண்டு வாரங்கள்.

15 க்கும் மேற்பட்ட உரைகள், உரையாடல்கள்.

இரண்டரை லட்சம் பார்வையாளர்கள்.

தலா 300 முதல் 450 வரைக்கும் விமர்சனங்கள்.

ஒரு வலையொளிக் காட்சி மட்டுமே 40 ஆயிரம் கடந்து போய்க் கொண்டு இருக்கின்றது.

இது என் அடுத்த பயணம் 

இப்படித் தொடங்கியுள்ளது.

இது எங்கே முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. 

இதை எழுதக் காரணம் நண்பர் அக்கறையுடன் பின்னூட்டத்தில் தெரிவித்து இருந்தார்.

ஏன் அய்யா சில நாட்கள் ஏன் எழுதவில்லை. பதிவு போடவில்லை?

என்று கேட்டு விமர்சனம் எழுதியிருந்ததைப் பார்த்தேன்.

இதையும் இங்கே காரணத்தை எழுதி வைத்து விடலாம் என்று தோன்றியது. நண்பருக்கு நன்றி.

இது என் தாய்வீடு. தாய் நிலம். பிறந்த ஊர்.

எங்கே சென்றாலும் இங்கே வந்து தான் சேர்வேன்.

இவர்கள் என்னை இனி விட மாட்டார்கள் என்றே நினைக்கின்றேன். இந்த சேனலை என்னளவில் நான் ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்வேன் என்று உறுதியளிக்கின்றேன்.  

தொடர்ந்து பயணிக்கின்றேன்.

விருப்பமும் நேரமும் ஆர்வமும் இருந்தால் பாருங்கள்.

நான் பேசிய ஒவ்வொரு தலைப்பினையும் மொத்தமாக கோர்த்து ஜோதிஜி - அண்ணாமலை அரசியல் என்ற பெயரில் ஒரு பட்டியல் போல உருவாக்கி  உள்ளனர்.

அதனை கீழே இணைப்பாக கொடுத்துள்ளேன்.

இணைப்பு

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள் அண்ணே...

திண்டுக்கல் தனபாலன் said...

அப்புறம் "பார்ட்டி" கட்சி, எளிய தமிழ்ப் பிள்ளைகளுக்கு வாய்க்கரிசி போடுவதற்கும் GST உண்டாம்... கவனித்து ஆவண செய்யவும்... நன்றி...

Unknown said...

உங்கள் பதிலுக்கு நன்றி அண்ணா.
உங்கள் அடுத்த பயணம் சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உங்கள் விடாமுயற்சியும், ஆர்வமும் போற்றத்தக்கன. மென்மேலும் தொடர்ந்து எழுதவும், சாதிக்கவும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

உங்கள் ஆக்கபூர்வமான பணியை நிச்சயம் ஆவணப்படுத்துவேன். நன்றி.

ஜோதிஜி said...

மகிழ்ச்சி நன்றி. கீழே பெயர் போடவும்.

ஜோதிஜி said...

நன்றி

avan indri.... said...

சாதாரண ஒரு இந்தியன் தமிழன் தன் கண் முன்னால் நம் பெரியவர்கள் உருவாக்கிய கலாச்சாரம்.. பண்பாடு... திட்டமிட்டு அழியும்போது கையாலாகாமல் மனம் வேகும்போது... நாம் நினைக்கிறதை.. ஒருத்தன் பண்டரத...
பார்க்கிறதுது
கலக்கிங்கு சார்... வாழ்த்துக்கள்..

Unknown said...

கணேஷ் பாண்டியன்

ஸ்ரீராம். said...

வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

வெங்கட் நாகராஜ் said...

தொடர வாழ்த்துகள் ஜோதி ஜி.

கிரி said...

வாழ்த்துகள் ஜோதிஜி. அனைத்து துறைகளிலும் சிறப்பான வெற்றியை வளர்ச்சியைப் பெற மனமார்ந்த வாழ்த்துகள்.

உங்கள் அரசியல் பயணம் நல்ல மாற்றங்களை மக்களுக்கு கொண்டு வர வேண்டுகிறேன்.

ஜோதிஜி said...

Thank you so much for your support 💓

ஜோதிஜி said...

Thanks Ram

ஜோதிஜி said...

Thank you so much Venkat

ஜோதிஜி said...

Thank you so much for your support and encouragement Giri🙏