Saturday, February 19, 2022

நூற்றுக்கு நூறு வாங்க மறக்காதீங்க/100வது கடிதம்

மிகச் சரியாக 14 வாரத்திற்கு முன்பு தொண்டர்களுக்கு அண்ணாமலை அவர்கள் கடிதம் எழுதத் தொடங்கினார். தொடங்கிய நாள் விநாயக சதுர்த்தி என்று நினைக்கின்றேன். இதோ இன்று 100 வது கடிதம். சர்வதேச அரசியல் முதல் சாமானியன் அரசியல் வரை குறிப்பாக உணர்ச்சிகளைத் தூண்டாத கதை திரைக்கதை வசனம் இல்லாத எதார்த்தமான நிஜ வரிகளைச் சலிக்காமல் எழுதிக் கொண்டு வந்தார். 

எந்தப் பக்கம் திரும்பினாலும் எதிர்ப்பு. வலை விரித்துக் காத்திருக்கும் கொத்தடிமைக்கூட்டம். வலிகளைக் காட்டாமல் சிரிப்புடன் கடந்து வந்த லாவகம். எதிர்ப்புகளை ஏளனங்களைப் பொருட்படுத்தாமல் பகைவனுக்கும் அருள்வாய் என்ற ஞானியின் மனதோடு திருட்டுக் கோஷ்டிகளைத் தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்த அறிவுக்கூட்டத்தை உருவாக்கியதில் இன்று வெற்றி அடைந்துள்ளார். 

ஒவ்வொரு நாளும் தன்னால் முடிந்து பணி செய்து கிடப்பதே என்று அண்ணாமலை அவர்கள் செயல்பட்டு உள்ளார். மிகக் குறுகிய காலத்திற்குத் தமிழகத்தின் நான்கு திசைகளிலும் பயணித்துள்ளார். இதுவரை பாஜக உள்ளே நுழையாத தமிழக கிராமங்களில் காலடித் தடத்தைப் பதித்து முத்திரை பதித்துள்ளார். 

உள்ளாட்சித் தேர்தல் குறித்த துல்லியமான கணக்கீடுகள், கணக்குகள், விபரங்கள், புள்ளி விபரங்கள் போன்ற அனைத்தையும் இந்த 100 வது கடிதத்தில் எழுதியுள்ளார். அவசியம் (பேச்சுவடிவ) முழுமையாக கேட்கவும். நன்றி. 

1 comment:

Unknown said...

அண்ணா வணக்கம், எப்படி இருக்கீங்க ?
நீண்ட நாட்களாக நீங்கள் எதுவும் எழுதாததால், நீங்கள் எப்படி இருக்கீங்க என்பதை எவ்வாறு உங்களை தொடர்பு கொண்டு கேட்பது என்ற சிந்தனையில் இருந்தேன்.