Saturday, February 05, 2022

தமிழக முதல்வர் அவர்களுக்கு / லோகேந்திரன் கடிதம்

தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு

உள்ளாட்சித் தேர்தலுக்குக் கட்சித் தொண்டர்களுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை வாசித்தேன். 




பாஜக எப்போதும் மக்களுக்கான திட்டங்களைப் பற்றியே யோசிக்கும்.  முழுமையாக அதனை மக்களிடமும் கொண்டு சேர்ப்பதில் வெற்றியும் அடைந்துள்ளது. எங்கள் தலைவர் மோடிஜியின் மக்கள் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றும் சிந்தாமல் சிதறாமல் இடைத்தரகர் இல்லாமல் நொடிப் பொழுதில் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் சென்று சேர்ந்து கொண்டே இருக்கின்றது.  உங்களைப் போலப் பத்து ரூபாய் கொடுத்து பத்தாயிரம் ரூபாய்க்கு விளம்பரம் செய்வது கிடையாது.  

ஆனால் திமுக அப்படி செய்வதனால் மக்களுக்குச் சிந்தியது தானே மிஞ்சும். உங்கள் உடன்பிறப்புகள் சாலை போட வந்த உதவிப் பொறியாளரைத் தாக்குவது தொடங்கி காவல்துறையினரை மிரட்டுவது வரைக்கும் உண்டான சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதை மக்கள் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றார்கள்.

மற்றவர்களின் திட்டங்களில் "ஸ்டிக்கர்" ஓட்டி பெயர் வாங்க நினைக்கும் உங்களுக்கு நீங்களே "விடியல் அரசு" என்று சொல்வதும், சட்டமன்றத் தேர்தலுக்கென கொடுத்த ஒவ்வொன்றும் பொய் வாக்குறுதிகள் என்றும்

இது தெரிந்து தானே தேர்தல் நடத்தினால் தோற்று விடுவோம் என்று அச்சப்பட்டு அல்லாடித் தவிர்த்தீர்கள்.  

சென்னையில் நீங்கள் ஆட்சிக்கு வந்த  ஐந்தாறு மாதங்களில் என்ன செய்தீர்கள்? என்பதனை பெருமழை வெள்ளம் வெளிச்சம் போட்டுக் காட்டியதே?  

நான் படகோட்டியதைக் குற்றம் என்று சொன்ன உங்கள் அடிமைகள் மழைக்குப் பிறகு சென்னையில் நடந்த மாற்றங்கள் குறித்துச் சொல்ல வரவில்லையே?

பாரதப் பிரதமர் நம்பிக்கை பெற்ற எங்கள் மாநிலத் தலைவருக்கு உறுதுணையாக அணிதிரண்டு உத்வேகத்துடன் எங்கள் நிறைகளையும் உங்கள் குறைகளையும் மக்களிடம் எடுத்துரைப்பதே எங்களின் தலையாய கடமையாகப் பார்க்கின்றோம்.

உங்கள் தனயன் கூவிக்கூவி "நகையைக் கொண்டு போய் அடகு வையுங்கள்" என்றார்.  ஆனால் இன்று அடகு வைத்தவர்கள் அத்தனை பேர்களின் மானமும் ஏலம் என்ற பெயரில் செய்தித்தாளில் காற்றில் பறக்கின்றதே?  

பெட்ரோல் டீசல் விலையில் மாநில அரசு மானியத்தைக் குறைப்போம் என்று சொன்னதும் நடக்கவில்லை. எரிவாயு உருளைக்கு மாநில அரசு வழங்குவதாகச் சொன்ன நூறு ரூபாயைக் காணவில்லை.

மாதம் தோறும் மின்சாரக் கட்டணம், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்று வாக்குறுதிகளைக் கொடுத்த உங்களைத் தமிழக கிராம மக்கள் ஆராத்தி எடுத்து வரவேற்க காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  

கூடவே சமீபத்தில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு கண்டு வெறுப்போடு இருக்கும் மக்களிடம் என்ன சொல்லப் போகின்றீர்கள்? எண்ணிக்கை குறைவு. தரம் இல்லை. 

மின்சாரத் துறை, உணவு வழங்கல் துறை, பத்திரப்பதிவுத்துறை என்று ஒவ்வொரு துறைகளும் நீ பாதி நான் பாதி என்று  அள்ளிக்குவிப்பதாகச் செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றதே? 

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் உங்கள் பணபலமும் அதிகார பலமும் உதவியதைப் போல இந்த முறையும் அதுவே உதவும் என்று கற்பனைக் கோட்டை கட்ட வேண்டாம்.

மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய தமிழர் திருநாளைச் சோக நாளாக மாற்றிய பெருமகன் அல்லவா நீங்கள். நிச்சயம் அவர்களின் மனதில் உள்ள ஏமாற்றத்தை வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுச் சீட்டு வழியாக காட்டுவார்கள்.

எங்கள் தலைவர் மோடிஜி அவர்கள் மூலம் பெற்ற ஒவ்வொரு நல்வாய்ப்பு திட்டங்களையும் தமிழர்களின் எதிர்கால நலனுக்குரியது என்பதால் தானே உலக சரித்திரத்தில் இதுவரை இல்லாத ஒரே வருடத்தில் 11 மருத்துவக்கல்லூரிகள் தமிழகத்திற்குக் கிடைத்து இன்று மாணவர்களும் படிக்கப் போகின்றார்கள்.  திமுக ஆட்சியில் இருந்த போது என்ன சாதித்தது? தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு உரிமம் வழங்கியதோடு மது பான ஆலைகளுக்குப் பினாமிகளை உருவாக்கியதும் தானே நடந்தது.  கழகத்தின் நீண்ட காலச் செயல் திட்டம் என்பது இது தானே?

உங்களால் என்ன முடியும்? 

நல்ல திட்டங்கள் என்றால் மடை மாற்ற முடியும். கிராமத்து மாணவர்களுக்கு இன்று மருத்துவராக மாற உதவிய நீட் பரிட்சையில் அரசியல் செய்ய முடியும்? மாணவர்களைக் குழப்ப முடியும்? உங்கள் நண்பர்கள் கல்லூரிகளின் வருமானம் பாதிக்கப்படுமே என்று முன்களப்பணியாளர்களை மடை மாற்றி கூவச் செய்ய முடியும்.

நீதிமன்றம் தலையிட்டு கட்டாயம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்று மிரட்டாத குறையாக விரட்டியபின்பு அரைகுறை மனதுடன் ஏற்றுக் கொண்ட நீங்கள் இப்போது கடிதத்தில் என்னவொரு வார்த்தை ஜாலத்தில் விளையாடி இருக்கிறீர்கள்?

தொண்டர்களுக்கு இதயத்தில் இடம் கொடுத்து மகன், மகள், பேரன் பேத்திகளுக்கு அதிகாரத்தில் இடமளிப்பது என்பது உங்கள் அப்பா வகுத்துத் தந்த பாதையல்லவா? நீங்களும் அந்தப் பாதையிலேயே பீடுநடை போடுவது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.

உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் திமுகவிற்கு அளிக்கப் போகும் தண்டனை தான் பொய் வாக்குறுதிகள் வழங்கும் அரசியல் கட்சிகளுக்கு இறுதித் தீர்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நாங்கள் மறந்தாலும் உங்களுக்கு ஓட்டளிக்க உதவும் அப்பாவி சிறுபான்மை மக்களுக்குப் பூச்சாண்டி காட்டும் மதவாதத்தை மறந்து விடுவீர்களோ என்று கடிதம் முழுக்கத் தேடிப் பார்த்தேன்.  கடைசியாக குறிப்பிட்டு எழுதியமைக்கு மாநிலத் தலைவர் என்கிற முறையில் என் பணிவான நன்றியை உங்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.

ஆனால் பாஜக குறித்து கலைஞர் என்ன வார்த்தைகள் சொன்னார் என்பதனை உங்களுக்கு இந்தச் சமயத்தில் நினைவு படுத்த விரும்புகின்றேன்.

"சிறுபான்மை மக்களிடம் பாஜக பற்றி ஒரு சந்தேகத்தை ஒரு சிலர் உருவாக்கி வைத்து இருக்கின்றார்கள் என்பது உண்மை தான். பொய்ப் பிரச்சாரம் செய்கின்றார்கள். அதற்கு ஈடு கொடுத்து விட்டு அதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களாகிய உங்களுக்கு உண்டு".

(முரசொலி 23 ஜூன் 1999)

என்றென்றும் நேர்மையுடன்

பாஜக தொண்டன்

லோகேந்திரன்


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னது மக்களுக்கான திட்டங்களா...? யாரு அந்த நாலு பேர்கள் தானே...?