Thursday, January 06, 2022

சவுக்கு சங்கர் என்ற இணையப் பேராளிக்கு ஒரு கடிதம்......

சென்ற வாரத்தில் டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் ஜுலி மாரியப்பன் என்ற பெண்மணியால் எழுதப்பட்ட கட்டுரை ஒரு நீண்டதொரு பெரிய விவாதத்தைச் சலசலப்பை உருவாக்கியது.  அண்ணாமலை அவர்கள் எப்போதும் போல பொளோர் என்று சாத்து சாத்தினார்.  




இதனைத் தொடர்ந்து டைம்ஸ் நவ் ல் பணியாற்றும் வைரண்ட் ஊப்பி ஷபீர் களம் இறங்கினார்.  

அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை மிரட்டுகின்றார் என்று அழுகாச்சி காவியம் ஒன்றை எழுதினார்.  எடுபடவில்லை.  "பிச்சை எடுத்து வாழ்வதே என் பெருமை" என்று வாழும் ராதாகிருஷ்ணன் என்பவர் களம் இறங்கிடச் சப்தம் அதிகமானது.  

அண்ணாமலை அவர்கள் இந்த நபர் 2ஜி ஊழல் பணத்தில் வாகனம் வாங்கியது முதல் தற்போது வாழ்ந்து கொண்டு இருக்கும் பிச்சைகாரத்தனத்தை நாகரிகமாக மேலோட்டமாக ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டு மறந்து விட்டார்.

அண்ணாமலை எப்போது இப்படித்தான்.  

அந்தந்த கூட்டத்தில் வரவு என்ன? செலவு என்ன? என்று பேரேடுகளை க்ளீயர் செய்து மூடி வைத்து விடுவார்.  

கூடவே வாங்க சன்டிவி வாங்க? கலைஞர் டிவி? என்று தான் அழைப்பார்.  

அவர்கள் அலறிக் கொண்டு ஓடுவார்கள். 

எங்கள் பெயரைப்  பயன்படுத்தி ஏன் அழைக்கின்றார் என்று மற்றொரு நெஞ்சுக்கு நீதி நாடக காவியத்தை அரங்கேற்றம் செய்ய நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் அண்ணாமலை இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கின்றார் என்றாலே இன்றைக்கு எத்தனை தலை உருளப் போகிறதோ? என்ற சுவராசியக் கணக்குகளுக்குள் பாஜக வினர் ஆர்வத்துடன் காத்திருப்பது வாடிக்கையாகவே மாறிவிட்டது.

இந்து மாலினி பார்த்தசாரதி உள்ளே வந்தார். பெருந்தன்மையுடன் கண்டித்தார்.  கூடவே வேறு சிலரும் அண்ணாமலை குறித்தும் மத்திய அரசு மாநில அரசுக்கு ஒதுக்கிய நிதி குறித்தும் தெளிவாகவே எழுதத் தொடங்கினர். 

கதை இந்த இடத்தில் ட்விஸ்ட் ஆக மாறத் தொடங்கியது.

தானைத் தலைவர் சவுக்கு சங்கர் உள்ளே வந்து எப்போதும் போல இது பிராமண லாபியின் சதி. ஆரியம், பார்ப்பனர்கள் என்று எழுதி திரைக்கதையில் வேகத்தைக் கூட்டினார். 

கிளைக் கதையாக வேறொருவர் உள்ளே வந்தார். அவர் துணை கதாபாத்திரம்.  

மோகன் சி லாரன்ஸ் நடத்தும் சதயம் தொலைக்காட்சியில் பணியாற்றும் நெறியாளர் அரவிந்தாக்ஷன் என்ற புனைப் பெயரில் (உண்மையான கிறிஸ்துவப் பெயர் என்னவென்று தெரியவில்லை?) அண்ணாமலைக்கு ஒரு கடிதம் என்று ஆயிரம் வார்த்தைகள் அடங்கிய கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டு இருந்தார்.

எப்போதும் போல கிண்டல் கேலி நக்கல் எகத்தாளம் கடைசியாக நீயெல்லாம் மனுஷனா? என்பது போல அது உலகத்தைச் சுற்றி வந்து கடைசியில் பாஜக ஒழிக என்பதாக முடித்து இருந்தார்.  

சில தினங்களுக்கு முன்பு சவுக்கு சங்கர் அதில் பட்டி டிங்கரிங் பார்த்துக் கூடுதலாக சில நகைச்சுவைகளைச் சேர்த்து தன் சவுக்கு தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

இவையெல்லாம் டிவிட்டர் தளத்தில் கடந்த மூன்று வாரத்தில் நடந்த கூத்து. ஒவ்வொரு பக்கமும் அதகளமாகவே இருந்தது. சில நண்பர்கள் சவுக்கு தளத்தில் வெளியிட்டு இருந்த கடிதம், அதற்கு முந்தைய கடிதம் என்று அனைத்தையும் எனக்கு அனுப்பி இருந்தனர்.  அதில் தெரிந்து கொள்ள ஒன்றும் இல்லாத காரணத்தால் நான் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் நேற்று முதல் ட்விட்டர் மீண்டும் அதகளம் ஆனது.  

இணையத்தில் சவுக்கு சங்கர் தான் அனைவருக்கும் கடிதம் எழுதுவார்.  

முதல்முறையாக பாஜக வினர் சங்கருக்குக் கடிதம் எழுதி உள்ளனர்.  

ட்விட்டர் லாங் தளத்தில் வெளியிட்டுள்ளதைப் பார்த்தேன்.  

கடிதமும் இணைப்பும் உங்கள் பார்வைக்குத் தந்துள்ளேன்.

(அடுத்த பதிவில்....)

********

சவுக்கு சங்கர் என்ற இணையப் பேராளிக்கு ஒரு கடிதம்......

நூறு நாள் வேலைத்திட்டப் பயனாளி போலத் தினமும் ஒரு யூ டியூப் சேனலாக ஏறிக் கொண்டு இருப்பீர்கள் ? யாரும் கூப்பிடாத நேரத்தில் இந்தக் கடிதத்தை வாசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் ஒருவரை நம்பித் தான் தமிழக பத்திரிக்கை சுதந்திரம் உள்ளது. இந்திய கருத்துச் சுதந்திரம் உள்ளது. மோடிக்கு எதிராக அணி திரளும் அனைவரும் உங்கள் வழிகாட்டுதலை வைத்துத் தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

நீங்கள் யூ டியூப் சேனலில் பேசுவதை நிறுத்தி விடாதீர்கள். நீங்கள் பேசப் பேச மோடி அவர்கள் 2024 ல் நிச்சயம் அண்ணாமலை அவர்கள் சொல்வது போல 400 சீட் பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து விடுவார்கள் என்று மக்கள் உறுதியாக நம்புகின்றார்கள். எனவே தயவு செய்து பேசுவதை நிறுத்த வேண்டாம். கூடவே திராவிடக்கட்சிகள் என்பது இல்லாமல் போனால் தமிழகம் கன்யாகுமரி பக்கம் கொஞ்சம் மெரினா பக்கம் கொஞ்சம் என்று கடலுக்குள் மூழ்கி விடும் என்பதனையும் தொடர்ந்து உரக்க சொல்லி வரவும். காரணம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கோமாளிகளைப் போல வெளியே உங்களைப் போன்றவர்களையும் நாங்கள் மிஸ் பண்ண விரும்பவில்லை.

உங்களைப் போன்ற அதிர்ஷ்ட சாலியை தமிழ்ச் சமூகம் இது வரையிலும் பார்த்ததில்லை. பத்திரிக்கைத் துறைக்கென உள்ள படிப்பு எதுவும் படிக்கவில்லை. தரமான பத்திரிக்கைகள் எதிலும் கடந்து காலத்தில் பணியாற்றவும் இல்லை. அரசாங்கம் உங்களைப் பத்திரிக்கையாளர் என்ற வரையறையில் கொண்டு வந்து நிறுத்தவும் இல்லை. ஆனால் நீங்களும் உங்கள் தோழர்களும் உங்களைப் பத்திரிக்கையாளர் என்கிறார்கள். வராது வந்த மாமணி என்று ஒரு கூட்டமே நம்புகின்றது. உங்கள் கூவல் என்பது ஏழு லோகத்திற்குக் கேட்கும் அளவுக்கு உள்ளதே?

16 வயதிலே சேர்ந்த அரசுப் பணியில் பித்தலாட்டம். பணிபுரிந்து கொண்டே செய்த விதிமீறல். விசாரணையில் அம்மணமாக்கி விசாரித்த அசிங்கம். உயர் அதிகாரிகள் உண்மையை வரவழைக்க வேண்டும் என்பதற்காகக் குடும்பத்தைச் செய்த அலங்கோலம். கடைசியாக சிறைத்தண்டனை.

வாழ்க்கை இனி முடிந்து விட்டது என்று தான் சாமானியன் நினைப்பான். உனக்கு அரசியல் தரகர் வேலை உள்ளது என்று அதிர்ஷ்டம் அழைத்து வந்து உங்களை ஒவ்வொரு யூ டியூப் சேனலாக ஏறி இறங்க வைத்திருப்பதை நினைத்து என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. இதற்குப் பெயர் தான் ஜோதிடத்தில் விபரீத ராஜயோகம் என்கிறார்கள்.

நீங்களும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஊடகவியலாளர் என்று யார் யாரையே தினமும் அறிமுகம் செய்து வைத்துக் கொண்டே இருக்குறீங்க. வந்தவன் போனவன், சபைக்கூட்டத்தில் ஓரமாக நின்று தசம பாகம் வசூலித்து நிறையச் சுருட்டிக் கொண்டு கொஞ்சம் கொடுத்தவன் என்று பலரையும் கொண்டு வந்து வெளிச்சம் பாய்ச்சுகிறீர்கள்?

புனிதமான பத்திரிக்கைத் துறை பெயரைப் பயன்படுத்திக் கொண்டு கோபாலபுரம் என்ற வணிக நிறுவனத்திற்குத் தரகர் வேலை செய்யும் அயோக்கியர்கள் (மட்டும்) ஆணவத்தை அழிக்க வந்த அண்ணாமலை அவர்கள் மூலம் தமிழகத்தில் நல்ல மாற்றம் நடக்கும் என்று நம்பும் எங்களைப் போன்ற சாதாரண மனிதனாக சிலவற்றை மட்டும் கேட்க விரும்புகிறேன்.

உங்களை மாதிரி கிரிமினல்தனமாக யோசிக்கத் தெரியாது. எந்த வேலையும் கற்றுக் கொள்ளாமல், எப்போதும் எந்த வேலைக்கும் செல்லாமல் வேலை எதுவுமே கற்றுக் கொள்ளாமலும் வருமானத்திற்குப் பஞ்சமில்லாமல் வாழும் கலையை நீங்க எனக்கும் கற்றுத் தரவேண்டும்.

ஒவ்வொரு யூ டியூப் சேனலாக பேசி கோடீஸ்வரனாக வாழ எங்களுக்குத் தெரியாது. தமிழக அரசியலே உங்களைச் சுற்றித் தான் நகருகிறதென்று பீலா விடத் தெரியாது.

உங்களுக்கு இவ்வளவு ஆணவம் அண்ணாமலை ? கடிதத்தைப் படித்தேன். நமது வூட்டு எருமைக்கு இம்பூட்டு அறிவான்னு ஒரு நிமிஷம் அசந்து போயிட்டேன். பக்கத்து வூட்டு தோழர் ஃபெலிக்ஸ் தான் அட... அவனுக்கு கோபாலபுரத்துக்கு விளக்கு பிடிக்கவே நேரம் சரியாயிருக்கும். எழுத நேரம் எங்கே கிடைக்கப் போகுதுன்னு சொன்ன பொறவு தான் புரிஞ்சுக்கிட்டேனுங்கோ. எனக்கு உங்களை மாதிரி நீட்டி முழக்க தெரியாதுங்கோ.

சமூக நீதி என்கிற ஒற்றைச் சொல் ஒரு குடும்பத்தை, குடும்ப ரத்த உறவுகளை, சொந்தங்களை, சார்ந்திருக்கும் ஒட்டுண்ணிகளை எவ்வளவு பெரிய கோடீஸ்வரர்களாக மாற்றியிருக்கிறது? அடுத்த ஏழு தலைமுறைக்குத் தேவையான அத்தனை பணத்தையும் அடைந்தாலும் ஆசையும் வெறியும் அடங்கவில்லையே? அதைப் பற்றி எப்போது கடிதம் எழுதப் போகிறீர்கள் சங்கர்?

ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட என்ற தேய்ந்த ரிக்கார்டு போல காலை முதல் மாலை வரைக்கும் கோபாலபுரம் கொத்தடிமைகள் உச்சரிக்கும் மந்திரம் குறித்து நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம் சங்கர். தமிழர்கள் அனைவரையும் கொஞ்சம் கொஞ்சமாக திதி பண்ற வேலையை டாஸ்மாக் மூலம் செய்துகிட்டுருப்பதைப் பற்றிப் பேசியிருக்கிறீர்களா?

உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தன் மாநிலத்தைப் பற்றிக் கவலைப்படுவதை விட உங்களை மாதிரி ஆட்கள் கவலைப்படுவதை நினைத்து நெஞ்சம் விம்முதுங்க. கண்கள் கசியுதுங்க. ஆனால் என்ன பிரயோஜனம். ஆனால் பொங்கல் சீர் என்று கொடுத்த பொருட்களில் கூட கைவரிசை காட்டியுள்ள இந்த ஊப்பிகளை திருத்த முடியுமென்று நம்புகிறீர்களா சங்கர்.

தமிழக ஊப்பீகள் எப்போது பேசினாலும் எழுதினாலும் வட இந்திய மாநிலங்களைப் பற்றி மட்டுமே தான் பேசுகிறீர்களே? அப்படி என்ன பாசம்? தமிழகத்தைக் கடந்து போய் இருப்பீர்களா? வட கிழக்கு மாநிலம் என்பதனை நீங்கள் இணையம் வழியே தான் பார்த்து இருக்க முடியும்? 68 ஆண்டுகளில் செய்ய முடியாத அனைத்து மக்கள் நலப் பணிகளையும் ஏழே வருடங்களில் மோடி ஆட்சி சாதித்துள்ளது. நேரு குடும்பம் பழிவாங்கிய நீங்கள் தொடர்ந்து பேசும் உத்திர பிரதேசம் என்று கம்பீர நடை போட்டுப் பயணித்துக் கொண்டு இருக்கின்றது.

குடும்ப பாரம் இல்லாத மோடிஜியாக இருக்கட்டும், யோகிஜியாக இருக்கட்டும் இருவருமே 140 கோடி இந்தியர்களைத்தான் தங்கள் குடும்பமாக நினைக்கின்றார்கள். ஆனால் நீங்களோ, உங்கள் தோழர்களோ கோபாலபுரத்தை மட்டுமே குடும்பமாக நினைப்பது சரியா சங்கர்?

ஊழல் குறித்துப் பேசினாலே உங்களைப் போன்றவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகின்றது. லஞ்ச லாவண்யம் பற்றிப் பேச வந்தாலே சுடுதண்ணீர் காலில் கொட்டியது போலவே பதட்டப்படுகிறீர்களே? காரணம் என்ன? ஒரே காரணம் நீங்கள் ஆதரிக்கும் கூட்டத்தில் ஒருவர் கூட யோக்கியன் இல்லை. அரசுப் பணத்தைத் திருடியது முதல் அடுத்தவன் மனைவியை ஆட்டையைப் போட்டது வரைக்கும் கப்படிக்கும் நாற்றம் இருப்பதால் தானே?

இது போன்ற நெஞ்சுக்கு அநீதி உங்களுக்குப் பிடித்து இருக்கலாம். காரணம் உங்கள் வாழ்க்கைப் பாதை அப்படி. ஆனால் எங்கள் அண்ணாமலை அவர்கள் தனது சுகமான வாழ்க்கையை இழந்து, பணயம் வைத்து எங்களை நோக்கி வந்துள்ளார். என்னைப் போன்ற எட்டு கோடி தமிழக மக்களின் நல்ல வாழ்க்கைக்காக நாங்கள் வணங்கும் கடவுள்கள் எங்களுக்கு அனுப்பி உள்ளதாகவே நாங்கள் நம்புகின்றோம்.

உங்களுக்குத் தான் எந்த நம்பிக்கையும் இல்லையே? ஒரே நம்பிக்கை. பணம் யார் தருகின்றார்களோ? அவர்களைப் புகழ்ந்து பேசுவது தானே? அண்ணாமலை அவர்கள் எந்தக் காலத்திலும் உங்கள் பக்கம் வர வாய்ப்பே இல்லை சங்கர்.

உங்கள் கடித வரிகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக பதில் அளிக்கத்தான் எனக்கும் ஆசை? ஆனால் உங்களைப் போன்றவர்களுக்குப் பல பக்கத்திலிருந்தும் தினமும் பணம் வந்து கொண்டேயிருக்கும். எங்களைப் போன்றவர்கள் உழைத்தால் தான் சோறு சாப்பிட முடியும்.

உங்களுக்கு அடுத்த தினக்கூலி சேனல் அழைப்பு வந்து இருக்கும். உங்கள் பிழைப்பில் மண் அள்ளி போட விரும்பவில்லை.

கடைசியாக ஒரே ஒரு கேள்வி?

நீங்கள் உண்ணும் உணவில் உப்பு உள்ளதா?

இப்படிக்கு

உங்கள் விசிறி

2 comments:

Nanjil Siva said...

பலே வெள்ளையத்தேவா... சவுக்கு சங்கருக்கு சரியான சவுக்கடி...
https://www.scientificjudgment.com/

ஸ்ரீராம். said...

ச ச பெறும் முதல் கடிதமா?!