Thursday, September 30, 2021

மாப்ளா கலவரம் 100வது ஆண்டு தரும் பாடங்கள்


தேசிய சிந்தனையுள்ள ஒவ்வொருவரும் அறிந்த பெயர் திரு. கோ. ஸ்தாணுமாலயன் (விஷ்வ ஹிந்து பரிஷித் - அகில இந்திய இணை பொதுச் செயலாளர்). 

கேரளாவில் நடந்த மாப்ளா கலவரம் என்பது மறக்க முடியாத ஒன்று. 100 வருடங்கள் முடிந்து விட்டது. இன்னமும் அதன் கோரச் சுவடுகள் வரலாற்றில் தடம் பதித்த விசயங்களைப் பற்றி இந்த வலையொளியில் நீங்கள் முழுமையாக கேட்க முடியும்.

 நன்றி. கற்றுக்கொள்களத்தில்இறங்கு 

மாப்ளா கலவரம் 100வது ஆண்டு தரும் பாடங்கள்-பகுதி 1  

 மாப்ளா கலவரம் 100வது ஆண்டு தரும் பாடங்கள்-பகுதி 2

 

பள்ளிகளுக்கு டாட்டா… கோவில்களுக்குப் பூட்டா… - 16

தமிழக பாஜக மாநிலத்தலைவரின் கடிதம்:

-------------------------------------------

கடிதத்தின் வரிசை எண் பதினாறு

பள்ளிகளுக்கு டாட்டா… கோவில்களுக்குப் பூட்டா…

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே..... அனைவருக்கும் வணக்கம்.
வரும் 01.11.2021 தேதி அன்று 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அனைத்துப் பள்ளிகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது. இதைத் தமிழகப் பாரதிய ஜனதா கட்சி வரவேற்கிறது.


@annamalai_k கடிதவரிகளை செய்தியோடை வழியாக கேட்க இதனைச் சொடுக்கவும். நன்றி.
Listen to "பள்ளிகளுக்கு டாட்டா… கோவில்களுக்குப் பூட்டா… BJP TN Anna Letter-16" by ஜோதிஜி பேச்சு JothiG Pechu.

Wednesday, September 29, 2021

'மராட்டிய மண்ணில் நான் தேடிய தமிழர்கள்...!'

 'மராட்டிய மண்ணில் 

நான் தேடிய தமிழர்கள்...!'

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே.....

அனைவருக்கும் வணக்கம்.

Podcast (செய்தியோடை) வழியாக அண்ணாமலை அவர்களின் பேச்சைக் கேட்ட இதனை சொடுக்கவும்.

பாஜக தமிழக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் ஓரே நாடு இதழில் தொண்டர்களுக்கு தினமும் ஒரு கடிதம் எழுதி வருகின்றார். இது கடிதம் எண் 15. 

வாசிக்க... யோசிக்க.. களப்பணியாற்ற 

Podcast (செய்தியோடை) வழியாக முழுமையான கடிதத்தை ஒலி வடிவில் கேட்க இதனை சொடுக்கவும். பாஜக தொண்டர்கள் அனைவரும் இதனை கேட்க வேண்டும், கடிதத்தை வாசிக்க வேண்டும் என்பதே தலைவரின் விருப்பம்.

Listen to "'மராட்டிய மண்ணில் நான் தேடிய தமிழர்கள்...!'(BJP Anna Letter-15)" by ஜோதிஜி பேச்சு JothiG Pechu. https://anchor.fm/jothig/episodes/BJP-Anna-Letter-15-e181ke9 


தமிழ்நாட்டில் நான் தேடிய தமிழர்களைச் சந்தித்தேன்,

மராட்டிய மண்ணில்… 

மகத்தான இந்தியர்களை மத்தியப்பிரதேசத்தில் சந்தித்தேன்.



Tuesday, September 28, 2021

'அமெரிக்கப் பயணம் ! வெற்றி நிச்சயம் !'

 'அமெரிக்கப் பயணம் ! வெற்றி நிச்சயம் !'

மனத்திடை அன்பும்...

மதிக்கும் ஒழுக்கமும்...

மாறாத உறுதியும்... நிலைபெற்று இருந்தால் நிச்சயம் வெற்றி.

நரேந்திர மோதியின் அமெரிக்க வருகைக்கு வெளிநாட்டு ஊடகங்கள் முன்னுரிமை கொடுக்காதது ஏன்?

அமெரிக்கா நாட்டின் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பியுள்ள பாரதப் பிரதமர்   நரேந்திர மோடி, அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

Annamalai Kuppusamy தொண்டர்களுக்கு எழுதும் கடிதம். பேச்சு வடிவில்.
Listen to "'அமெரிக்கப் பயணம் ! வெற்றி நிச்சயம் !'(BJP Anna Letter-14)" ⚓ https://anchor.fm/jothig/episodes/BJP-Anna-Letter-14-e1801il

மேலும் நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த  பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து உரையாடியுள்ளார். 



Monday, September 27, 2021

காங்கிரஸ் கால வெளியுறவு பேரிழப்புகள்

2017 ஆம் ஆண்டு முதல் நீட் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு திமுக தமிழக மாணவர்களின் உயிரைப் பறித்துக் கொண்டு வருகின்றது. ஆனால் நம் மாணவர்களுக்கு IAS IPS IFS போன்ற தேர்வுகள் எப்படி நடத்தப்படுகின்றது? என்பது பற்றி எத்தனை பேர்களுக்குத் தெரியும் என்பதே குழப்பமாக உள்ளது?

அதிலும் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கே இந்திய வெளியுறவுத்துறை குறித்து எந்த அளவுக்குத் தெரியும் என்று அலசினால் அதிர்ச்சியே மிஞ்சும். காரணம் இங்குள்ள திராவிட அரசியல்வாதிகள் அனைவரும் அடிப்படையில் சாராய வியாபாரிகள். 

அதன் அடிப்படையில் மாறிய கல்வித்தந்தையர்கள். தங்கள் கல்லூரிகளுக்கு பிள்ளை பிடி கோஷ்டி போலப் பிடித்து வந்து நான்கு வருடங்கள் உறிஞ்சி எடுத்து அவர்களைச் சக்கையாக வெளியே வருடம் தோறும் தள்ளிக் கொண்டே இருக்கின்றார்கள். 

நண்பர் பிரகாஷ் ராமசாமி இந்திய வெளியுறவுத்துறை குறித்து முதல் பகுதியில் பேசி உள்ளார். இந்த முதல் பகுதி அரை மணி நேரம் என்கிற வகையில் மூன்று பகுதிகளாக பிரித்து வலையேற்றி உள்ளோம். 

மூன்று பகுதிகளையும் முழுமையாகப் பாருங்கள். 

நன்றி. கற்றுக்கொள்களத்தில்இறங்கு 

காங்கிரஸ் கால வெளியுறவு பேரிழப்புகள்-பகுதி-1  
காங்கிரஸ் கால வெளியுறவு பேரிழப்புகள்-பகுதி-2  
காங்கிரஸ் கால வெளியுறவு பேரிழப்புகள்-பகுதி-3

Saturday, September 25, 2021

'பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்தங்களைப் படைத்த சிற்பி பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா'

'பாரதிய ஜனதா கட்சியின்  சித்தாந்தங்களைப் படைத்த சிற்பி  பண்டிட்  தீனதயாள் உபாத்தியாயா'

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே.....

அனைவருக்கும் வணக்கம்.



Friday, September 24, 2021

நாற்கரக் கூட்டமைப்பு மாநாடு எனும் க்வாட் நாடுகள் மாநாடு

 'உலகத் தலைமை கொள்ளும், உன்னதத் தலைவர் மோடி!'

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே..... 

அனைவருக்கும் வணக்கம்.

ஐக்கிய நாடுகளின் இந்த ஆண்டிற்கான பொதுச்சபைக் கூட்டம், மற்றும் நாற்கரக் கூட்டமைப்பு மாநாடு எனும் க்வாட் நாடுகள் மாநாடு, ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகப் பாரதப் பிரதமர் அமெரிக்கா சென்றிருக்கிறார்.


Thursday, September 23, 2021

'வெள்ளையனை வெளியேற்றி வெற்றியடைந்த வேட்டி'!

 'வெள்ளையனை வெளியேற்றி வெற்றியடைந்த வேட்டி'!

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே.....

அனைவருக்கும் வணக்கம்.

 ' ஆடையில் புரட்சி ' என்ற அற்புதம் நடைபெற்ற நாள், இன்றைக்கு சரியாக நூறாண்டுகளுக்கு முன்,  செப்டம்பர் 22,1921, அன்று மதுரையில் நடைபெற்றது. 

Listen to "'வெள்ளையனை வெளியேற்றி வெற்றியடைந்த வேட்டி'! - (BJP Anna Letter -11)" 

by  ⚓ https://anchor.fm/jothig/episodes/--BJP-Anna-Letter--11-e17ovqq 

ஆங்கிலேயரை எதிர்க்க ‘‘வெடி வேண்டாம், வேட்டி போதும்’’ என சுதந்திரத்தை காந்தியடிகள் நெசவு செய்த கதை சுவாரஸ்யமானது. ஆங்கிலேயருக்கு எதிராக, ஆடைப் புரட்சி செய்தவர் அண்ணல் காந்தியடிகள். 

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடைபெற்ற இந்திய சுதந்திரப் போரில் தமிழகத்தின் வேட்டியின் பங்களிப்பும் இருக்கிறது என்பது ஒரு வியப்பான உண்மை. ஆடையாலே... ஒரு புரட்சியை உருவாக்கி, அன்னியத் துணிகளைப் மறுதலித்து, வெளிநாட்டுத் துணிகளை வெறுப்போம், கதராடை பயன்பாட்டை அதிகரிப்போம், என்ற ஒரு எண்ணத்தை அண்ணல் காந்தியடிகளுக்கு தோற்றுவித்த மண் தமிழ் மண். 


Wednesday, September 22, 2021

'ஊர்கூடி இழுக்க வேண்டிய தேர்

 'ஊர்கூடி இழுக்க வேண்டிய தேர்

உள்ளாட்சித் தேர்தல்'

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே..... 

அனைவருக்கும் வணக்கம்.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி முதல் தேர்தல் நடைபெற இருக்கிறது. நமக்கெல்லாம் தேர்தல் என்பது ஒரு தேர்வுக் களம் போல, முக்கியமானது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் ஒரு தேர்வுக்குத் தயாராவது போல நாமெல்லாம் தயாராக வேண்டும் மிகக் கவனத்துடன் அந்தத் தேர்வு எழுத வேண்டும் பிறகு முடிவுக்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டும்.

அதில் சட்டமன்ற பாராளுமன்றத் தேர்தல்கள் எல்லாம் பொதுத்தேர்வு போலவும் மற்ற உள்ளாட்சி ஊராட்சித் தேர்தல்கள் எல்லாம் காலாண்டு அரையாண்டு தேர்வுகள் போலவும் நினைக்கக் கூடாது. 

Listen to " 'ஊர்கூடி இழுக்க வேண்டிய தேர் (BJP Anna Letter - 10)" 

https://anchor.fm/jothig/episodes/BJP-Anna-Letter---10-e17mqng/a-a6iisod

தேர்தல் களம் எல்லாத் தேர்தல்களிலும் பொதுவானது. மக்களை நம் சின்னத்தில் வாக்களிக்க வைக்க வேண்டிய மாபெரும் கடமை அனைத்துத் தேர்தல்களிலும் நாம் நிறைவேற்ற வேண்டிய முக்கியமான கடமையாக இருக்கிறது. 

அதிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பது ஒவ்வொரு இல்லந்தோறும் நாம் சென்று மக்களை நேரில் சந்திக்கக் கூடிய வாய்ப்பினை வழங்கக்கூடிய தேர்தல். இந்த உள்ளாட்சித் தேர்தலில்தான் கட்சித் தலைவர்களும் ஊடக விளம்பரங்களும் செய்வதைவிட அந்த ஊரின் தலைவர் மிக அதிகமாக செயல்படக்கூடிய வாய்ப்பினை வழங்கும் தேர்தல்.

புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களான செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம் ஆகிய ஒன்பது மாவட்டங்களின் மொத்த வாக்காளர்கள் 76,59,720, இதில் செங்கல்பட்டில் 11,54,933 வாக்காளர்கள், விழுப்புரத்தில் 13,83,687 வாக்காளர்கள். மற்றும் 9,61,770 வாக்காளர்களைக் கொண்டுள்ளது கள்ளக்குறிச்சி.

மற்றபடி இதர ஆறு மாவட்டங்களிலும் தோராயமாக ஆறு, அல்லது ஏழு இலட்சம் வாக்காளர்களே உள்ளனர். ஆகவே தோராயமாக ஒரு மாவட்டத்திற்கு எட்டு இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

என் சகோதர, சகோதரிகளான உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்வது மாவட்டத் தலைவர்களும் மண்டல் தலைவர்களும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அணி, பிரிவு தலைவர்களும் ஒன்று கூடி பணிகளைத் திட்டமிட்டுப் பட்டியலிட வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தேவையான பணிக் குழுவை அமைக்க வேண்டும். அந்த மாவட்டங்களுக்கு உள்ள ஒவ்வொரு ”பூத்”தின் முழு வாக்காளர் பட்டியலும் மண்டல அலுவலகத்தில் தயாராக இருக்க வேண்டும். இப்போது ஊர் மக்களிடம், நம் கட்சியை எடுத்துச் செல்லவும், நல்லன சொல்லவும், பூத் பொறுப்பாளர்களும் வாக்காளர் பக்க பொறுப்பாளர்களும், மிகச் சிறப்பாக பணியாற்ற வேண்டிய, இன்றியமையாத பணியைச் செய்யவேண்டிய காலம் இது.

வெகுவிரைவில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நான் நேரில் வந்து உங்கள் அனைவரையும் சந்திக்க இருக்கிறேன். நான் உங்களையெல்லாம் வந்து சந்திக்கும்போது அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்குறியோடு இல்லாமல் நீங்கள் என்னென்ன செய்து முடித்து இருக்கிறீர்கள் என்ற பட்டியலைத் தயாராக வைத்திருங்கள். உங்கள் மாவட்டத்தில் உங்கள் பலத்தையும் செல்வாக்கையும் நிரூபிக்க இதை விட மிகச் சிறந்த களம் இருக்கவே முடியாது. 

பொதுவாக ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளும் கட்சியினர்தான் அதிகமான வெற்றியைக் குவிப்பார்கள் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆட்சி பலத்தினாலும் அதிகார பலத்தினாலும் பண பலத்தினாலும் தேர்தல் முடிவுகளைத் தன்பக்கம் சாதகமாக திருப்பிவிடும் வாய்ப்பு, ஆளும் கட்சிகளுக்கு இருப்பதை நான் மறுக்கவில்லை ஆனால் இதை நம்மால் முறியடிக்க முடியும் என்று நம்புங்கள். ஆளும் கட்சி தான் அதிக வெற்றிகளைக் குவிக்கும் என்ற நம்பிக்கையை அவநம்பிக்கை ஆக்குங்கள். 

இது உங்கள் மாவட்டம். இது உங்கள் பகுதி. ஒவ்வொரு வாக்காளரையும் உறவு சொல்லி அழைக்கும் வகையில் நீங்கள் எல்லோரும் உங்கள் தொடர்புகளை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். மத்திய அரசின் மக்கள் நலம் பயக்கும் திட்டங்களையெல்லாம் அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். சரியான திட்டமிடலும், சரியான ஒருங்கிணைப்பும், சரியான செயல் வடிவமும், வெற்றியை உறுதி செய்யும். 

எந்த மாவட்டத்தில் களப்பணியில் இருக்கிறவர் தன்னை மட்டும் முன்னிலைப் படுத்தாமல் தன் குழுவை முன்னிலைப் படுத்துகிறாரோ அங்கே நம் வெற்றி உறுதி செய்யப்படும்.  உள்ளாட்சித் தேர்தல்  ஊர்கூடி இழுக்க வேண்டிய தேர்... ஒற்றை மனிதன் எத்தனை பலசாலியாக இருந்தாலும் தேர் நகராது. கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு ஒன்றும் ஒன்றும் பதினொன்று. ஆகவே நாம் ஒன்று ஒன்றாக தனித்தனியே நில்லாமல் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றாக நின்றால் 1+1=11 என்று நம் மதிப்பு கூடும். 

அனைவரும் இணைவோம், அனைவரும் முயல்வோம், அனைவரும் நம்புவோம், அனைவரும் உயர்வோம்,

பாடுபட்டால் பலனுண்டு. 

அன்புச் சகோதரன்

உங்க "அண்ணா"

Tuesday, September 21, 2021

தமிழக நிதியை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.

 இவரா தமிழ்நாட்டுக்கு நிதி அமைச்சர்? 

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக்  குடும்பத்தின் சொந்தங்களே.....

அனைவருக்கும்  வணக்கம்.


Monday, September 20, 2021

திராவிடர் கழகம் (அறக்கட்டளை) சொத்துக்களின் விபரங்கள்

ஈ.வெ. ராமசாமி என்ற தந்தை பெரியார்க்கு பின்பு அவரின் வாரிசாக அம்மையார் மணியம்மை மூலம் இச்சொத்துக்கள்  நிர்வகிக்கப்பட்டது.  அவருக்கு பின்பு தற்போது வரை இதை வீரமணி நிறுவகித்து வருகிறார். தற்போது வீரமணி மகன் அன்பழகன் இதன் நிர்வாகியாக ஆக்கப்பட்டுள்ளார். இதன் சொத்து மதிப்பு கடந்த மாதம் வரை 1லட்சம் கோடியை தாண்டுமாம்

1)பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி[1]


2)நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி[1]


3)பெரியார் தொடக்கப்பள்ளி, திருச்சி[1]


4)பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி[1]


5)நாகம்மையார் குழந்தைகள் இல்லம், திருச்சி[1]


6)பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, திருச்சி[1]


7)பெரியார் நூற்றாண்டு மழலையர் பள்ளி, திருச்சி[1]


8)சாமி கைவல்யம் முதியோர் இல்லம், திருச்சி[1]


9)பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி, திருச்சி[1]


10)பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, 


11)பெரியார் நகர்(வல்லம்) தஞ்சாவூர்[1]


12)பெரியார்- மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]


13)பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, செயங்கொண்டம்[1]


14)பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சில்லத்தூர்,வெட்டிக்காடு[1]


15)பெரியார் சமூகத்தொடர் கல்விக் கல்லூரி, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]


16)பெரியார் வணிகவியல் பயிற்சி மய்யம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]


17)பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]


18)பெரியார் மருத்துவமனை குடும்பநல மய்யம் பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]


19)பெரியார் ஊரக மரபு சாரா ஆற்றல் ஆய்புக் கல்வியகம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]


20)பெரியார் உயிரி தொழில்நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம், பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]


21)பெரியார் பால்பண்ணை, பெரியர் நகர் (வல்லம்) தஞ்சாவூர்[1]


22)பெரியார் கணினி மய்யம், திருச்சி[1]


23)பெரியார்-மணியம்மை இலவச மருத்துவமனை,திருச்சி[1]


24)பெரியார் சமூகத் தொடர் கல்வி கல்லூரி,திருச்சி[1]


25)பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், சென்னை[1]


26)பெரியார் தத்துவக்கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு, சென்னை[1]


27)பெரியார் அருங்காட்சியகம், சென்னை[1]


28)பெரியார்- மணியம்மை இலவச மருத்துவமனை,சென்னை[1]


29)பெரியர் நகர குடும்பநல மய்யம், சென்னை[1]


30)பெரியார்நகர நலவாழ்வு நிலையம், சென்னை[1]


31)பெரியார் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் பயிற்சி மய்யம், சென்னை[1]


32)இளைஞர் வழிகாட்டும் மய்யம், சென்னை[1]


33)பெரியார் கல்வியகம், சென்னை[1]


34)பெரியார் இலவச சட்ட உதவி மய்யம், சென்னை[1]


35)பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம், சென்னை[1]


36)பெரியார் கணினி ஆய்வுக்கல்வியகம், சென்னை[1]


37)பெரியார் பயிற்சி மய்யம், சென்னை[1]


38)பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம், சென்னை[1]


39)பெரியார் இலவச மருத்துவமனை, சோழங்கநல்லூர்[1]


40)பெரியார் மருத்துவமனை- குடும்பநல மய்யம், சோழங்க நல்லூர்[1]


41)டாக்டர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை, சேலம்[1]


42)பெரியார் மகளிர் மேம்பாடு- மறுமலர்ச்சி நிறுவனம், சென்னை[1]


43)பெரியார் வலைக்காட்சி, சென்னை[1]


44)பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, சென்னை[1]


45)பெரியார் மய்யம், பாம்நொலி, புதுடெல்லி[1]


46)பெரியார் மய்யம், ஜசோலா, புதுடெல்லி


பாவே.சத்தியமூர்த்தி, வழக்கறிஞர்,

மும்பை.

Sunday, September 19, 2021

மோடி 20 ஆண்டுகள்

மோடி தனது அரசியல் பொது வாழ்வில் தலைமைப் பதவியில் அடியெடுத்துவைத்து இந்த ஆண்டோடு (அக்டோபர் 2021) இருபது ஆண்டுகள் நிறைவடைகின்றன. 



Friday, September 17, 2021

மோடி பிறந்த நாள் (71) - இவற்றை நீங்கள் மறுக்க முடியுமா?

நீங்கள் பாஜக அரசை விரும்பலாம். 

மோடி அவர்களை வெறுக்கலாம்.

பாஜக அரசின் கொள்கைகளை ஆதரிக்கலாம்.

மோடி அவர்களின் செயல்பாடுகளை மறுக்கலாம்.

இது ஜனநாயக நாடு. உங்கள் உரிமை.

ஆனால் இவற்றை நீங்கள் மறுக்க முடியுமா?


Thursday, September 16, 2021

அச்சம் தவிர் நெஞ்சம் நிமிர்!

அச்சம் தவிர் நெஞ்சம் நிமிர்!

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக்  குடும்பத்தின் சொந்தங்களே.....

அனைவருக்கும்  வணக்கம்.


Wednesday, September 15, 2021

கூட்டு முயற்சிகள் பெரும் வெற்றிகளைத் தரும்.

நான் இனி நாமாக மாறுவோம்

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக்  குடும்பத்தின் சொந்தங்களே.....

அனைவருக்கும்  வணக்கம்.

‌எப்படி இருக்கிறீர்கள்.?


Tuesday, September 14, 2021

அசிங்கமானவர்கள். அருவருப்பானவர்கள்.

நானும் அவனும் பத்தாம் வகுப்பு வரைக்கும் ஒன்றாக படித்தோம். ஒரே பெஞ்சு.  அவன் அய்யங்கார் பிரிவைச் சேர்ந்தவன். பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் அழகப்பா பாலிடெக்னிக் படிப்பில் போய் சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று அதன் பிறகு சென்னை வந்து சேர்ந்து விட்டான். அவன் தான் முதல் ரேங்க் எடுப்பான்.  நானும் அன்புக்கரசி என்ற பெண்ணும் மாறி மாறி இரண்டாவது ரேங்க் எடுப்போம்.  

கடந்த நாலைந்து வருடமாக தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தான்.  சமீபத்தில் சென்னை செல்லத் தயார் ஆன போது அவனிடமும் மற்றொரு பள்ளித் தோழன் இடமும் அழைத்துச் சொன்னேன். 

இவன் என் வீட்டுக்கு வந்தே ஆக வேண்டும் என்று சொன்னதோடு நான் அங்கே இருந்த போது தொடர்ந்து என்னைத் தொடர்ந்து கொண்டே இருந்தான்.  தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் உயர் அதிகாரியாக இருக்கின்றான். 

அரசியல் மற்றும் கடவுள் நம்பிக்கை சார்ந்து எதுவும் யாரிடமும் பேச மாட்டான். காரணம் அந்த இரண்டிலும் அவனுக்கு ஈடுபாடு இல்லை.

மற்றொரு பள்ளித் தோழன் நான் வருகிறேன் என்று சொன்னதும் வா என்றான். அதன் பிறகு எந்தத் தொடர்பும் இல்லை. நான் பொருட்படுத்தவில்லை. அவரவர் சூழல் அவரவர் வாழ்க்கை.

இவன் வீட்டுக்கு மகளுடன் சென்ற போது இருவரும் பேசிக் கொண்டு இருந்தார்கள். நான் அந்தப் பகுதியில் உள்ள வளர்ச்சி பெற்றுக் கொண்டு இருக்கும் புற நகர் பகுதிகளை மனதிற்குள் அளவீட்டுக் கொண்டு இருந்தேன்.  அப்போது என் மகளிடம் இவன் பின்வருமாறு சொன்னது என் காதில் விழுந்தது.

"உன் அப்பா ஆறாவது படிக்கின்ற கால கட்டம் தொடங்கி அவன் கல்லூரியில் படிக்கின்ற வரைக்கும் வீட்டுக்குத் தேடிப் போனால் அங்கே இருக்க மாட்டான்.  ஆனால் கட்டாயம் நூலகத்தில் இருப்பான்.  அங்கேயும் இல்லாவிட்டால் கடைத்தெருவில் உள்ள அண்ணா படிப்பகத்தில் பெரிய ஆட்களுடன் உட்கார்ந்து பழைய கட்சி செய்தித் தாள்களைச் சுவராசியமாக படித்துக் கொண்டு இருப்பான்.  நீ அந்த அளவுக்குப் புத்தகங்கள் படிப்பாயா? என்று கேட்டுக் கொண்டு இருந்தான்.

ஏன் இதை இப்போது இங்கே எழுதுகிறேன் என்றால் எங்கள் ஊரில் திமுக கிளைக் கழகம், ஒன்றியம் என்று அடுத்தடுத்த பதவிகளில் இருந்த அத்தனை பேர்களும் ஒன்று என்னுடன் படித்தவர்களின் அண்ணன் அல்லது அப்பாக்களாக இருப்பார்கள்.  அல்லது எங்கள் சந்தில் உள்ளவர்களாக இருந்தார்கள்.

எனவே எத்தனை வயது என்றாலும் நான் அவர்கள் அனைவருடனும் மிகச் சாதாரணமாகவே பேசுவேன். கல்லூரியில் உள்ளே நுழைந்ததும் மூன்றாம் ஆண்டில் படித்துக் கொண்டு இருந்த எங்கள் ஊர் பசங்களிடம் சர்வ சாதாரணமாக நான் தோளில் கை போட்டுப் பேசியதைப் பார்த்து என்னுடன் படித்த பல பேர்கள் ஜெர்க் ஆகி விலகிச் சென்றார்கள். இவர்கள் திமுக கட்சித் தொடர்பில் இருந்தவர்கள் தான்.

இவர்கள் அத்தனை பேர்களின் அந்தரங்கமும் அந்தக் காலகட்டத்தில் முழுமையாகவே தெரியும்.  

"நமது பிடிஓ அந்த கோப்பில் கையெழுத்துப் போடவில்லை. எங்க அண்ணன் என்ன செய்தார் தெரியுமா? செருப்பை எடுத்து அடிக்க போனார்"

 என்று இது போன்ற பல வீரக்கதைகளை வந்து பகிர்ந்து கொள்வது இயல்பான வாடிக்கையாக இருந்தது.

அப்போது தான் பாசியின் வாழ்க்கை தொடங்கியிருந்தது.

எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தாலும்  அதிமுக வில் செல்வாக்கான நபர்கள் எவரையும் பார்த்தது பழகியது இல்லை. பொ. காளியப்பன் என்பவர் முதல் தேர்தலிலிருந்து சாதிப் பெருமையும் கூத்தியாள் விருப்பத்திலும் காணாமல் போய்விட்டார்.

எல்லா இடங்களிலும் திமுகவினர் தான் அள்ளிக் குவித்துக் கொண்டு இருந்தனர்.

இப்போது விசயத்தில்  வருகின்றேன்.

நான் கடந்த 35 வருடமாக இவர்களை விருப்பு வெறுப்பு இன்று கவனித்து வருகிறேன்.

உலகத்தில் இருப்பவர்களுக்கு நாகரிகத்தைப் போதிக்கக்கூடியவர்களாகவும், நல்ல வார்த்தைகளைத் தவிர வேறு எந்த வார்த்தையைப் பேசினாலும் நாக்கு அழுகி விடும் என்று அச்சப்படுபவர்களாகவும், மனித மாண்புகளை அப்படியே மதிக்கும் மகான்களாகவும் கூசாமல் தயங்காமல் இவர்கள் பேசும் பேச்சை இன்னமும் பார்க்கிறேன்.

சமூகவலைத்தளங்கள் இருப்பதால் அனைத்து அயோக்கியத்தனங்களும் வெளியே வந்தாலும் இன்னமும் தம் கட்டி எப்படி எல்லாம் நடிக்கின்றார்கள் என்பது இன்னமும் எனக்குப் புரியாத புதிராகவே இருக்கின்றது.

1970 முதல் 1975 வரை பழைய செய்தித்தாள்கள் எங்கேயாவது கிடைத்தால் படித்துப் பாருங்கள். யார் மனைவியை யார் வைத்து இருந்தார்கள்? எந்த சமஉ விட்டுக் கொடுத்தார் போன்ற அறிவு சார்ந்த விசயங்கள் தான் அதிகமாக இருக்கும்.  அப்படி வளர்ந்த சமூகத்தில் இருப்பவர்கள் தான் இப்போது உள்ள மிச்சமும் சொச்சமும். வாந்தி வரும் அளவுக்கு அசிங்கமானவர்கள். அருவருப்பானவர்கள்.  எவரும் எழுதவே தயங்குவார்கள். 

சூரப்பா பற்றிப் பேசினவன் ஒருத்தன் கூட இன்றைக்கு வாய் திறப்பதில்லை.

அனிதா குறித்து அழுதவன் எவனும் இன்று அம்மணமாக இருப்பதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை.

கற்றுக்கொள் களத்தில் இறங்கு

காரணம் இவர்கள் ஆஃபாயில் புரட்சியாளர்கள்.

கூச்சமே படாதீர்கள்.

தயங்காமல் அவர்கள் கண்களில் பெப்பர் சால்ட் தூவ தயங்காதீர்கள்.


Monday, September 13, 2021

NEET - The truth & The political drama of DMK - நீட் தேர்வு

 NEET - The truth & The political drama of DMK


பாஜக மாநில தலைவரின் கடிதம்.-4

#தமிழக_பாஜக_தலைவர்_கடிதம்


Thursday, September 09, 2021

தமிழ் ஊடக திராவிட அரசியல்

நானும் தமிழக அரசியல் வரலாற்றை எழுதுவதற்கு முன்பு, அதற்காகத் தகவல் திரட்டி முரண் நகை, முரண்பாடுகள், எதிர்மறை நியாயங்கள் போன்றவற்றை ஒன்றோடு ஒன்று சேர்த்து மாலையாகப் பார்த்த பின்பு கருணாநிதி என்ற பிம்பத்தின் பின்னால் உள்ள அனைத்து விதமான தகவல்களும் எனக்குத் தெரியவந்தது. 

தான் ஆதிக்கச் சாதி இல்லை. எனவே ஆதிக்கச் சாதியில் இருக்கும் அடிப்படை விசயங்களை ஒழித்து விட வேண்டும். அதனை மக்கள் நலன் என்ற பெயரில் என்கிற ரீதியாக மாற்ற வேண்டும். உள்ளுற தனக்கான கட்டிங் களை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

இப்படித்தான் திராவிட அரசியல் என்ற அசிங்கப் பயணம் அண்ணாவிற்குப் பிறகு தொடங்கியது. 

அண்ணா அரசுப் பணத்தைக் களவாடியதாக எங்கும் குறிப்புகள் இல்லை. 

ஆனால் 2000க்குப் பிறகு அரசு எந்திரங்களில் உள்ளவர்களைத் தனக்குச் சாதமாக வைத்துக் கொள்வது என்பதில் தொடங்கி, நீதிமன்றம் மற்றும் கல்வித்துறை மற்றும் ஊடகத் துறையினரைத் தனக்காக மட்டுமே செயல்பட வைப்பது போன்ற வித்தைகளை வைத்து ஒரு பெரிய மாபியா கும்பலை சென்னை முதல் கன்யாகுமரி வரைக்கும் வளர்த்து அதனை அரசு ஊழியர்கள் என்ற பெயரில் அரசுப் பணத்தை அவர்களுக்கு வழங்கிய பெருமை அண்ணாருக்கு உண்டு. 

தமிழகத்தில் 1990 க்குப் பிறகு ஊடகங்கள் போக்கு மாறத் துவங்கியது. அச்சு ஊடகங்களை காட்சி ஊடகங்கள் ஆக்ரமிக்கத் தொடங்கியது. 2000 க்குப் பிறகு சமூக வலைதளங்கள் ஊடகங்களின் இடத்தை பிடிக்கத் தொடங்கியது. 

2010 க்குப் பிறகு ஊடகங்களை சமூக வலைதளங்கள் ஆக்ரமித்து இல்லாமல் ஆக்கி விட்டது. இப்போது ஒவ்வொரு ஊடகங்களின் உயிரும் ஊசலாடிக் கொண்டு இருக்கின்றது. 

 திரு. ஜா. ராஜகோபாலன் திமுக எப்படி ஊடகங்களை கையாண்டது என்பதனைப் பற்றி ........... 

Saturday, September 04, 2021

திராவிட வெள்ளை அறிக்கை

அச்சு ஊடகம், காட்சி ஊடகம், சமுக வலைதளங்கள் என்று மூன்றும் வெவ்வேறு முகம் கொண்டது.  ஒவ்வொன்றையும் தனித் தனியாக குறிப்பிட்ட ஒன்றை மட்டுமே பயன்படுத்துபவர்களின் மனோபாவம் முற்றிலும் வித்தியாசமாகவே இருக்கும். 

உதாரணமாக என் பக்கத்து வீட்டுக் காரர் நாங்கள் வாங்கும் செய்தித் தாள்களை காலை ஒன்பது மணிக்கு வாங்கிக் கொண்டு சென்றார் எனில் மதியம் ஒரு மணி வரை ஒரு வரி விடாமல் படிக்கின்றார்.  

ஆனால் சமூக வலைதளவாசிகளின் கைவிரல்கள் தள்ளிக் கொண்டே செல்லும் பழக்குத்திற்குள் இருப்பதால் எந்த செய்திகளும் அவர்களுக்கு முக்கியமானதாகவே தெரியாது. 

அனைத்து செய்திகளும் பழைய செய்தியாகவே தெரியும் அளவிற்கு மணிக்கொரு தடவை எல்லாமே மாறிக் கொண்டே இருப்பதால் கவனச் சிதறல்களும் அதிகம்.

இதன் காரணமாகவே நீண்ட வாசிப்பின் மேல் பலருக்கும் ஆர்வம் இல்லாமல் போய்விடுகின்றது. ஆனால் நிச்சயம் நீண்ட வாசிப்பு ஆர்வத்தைக் கொண்டவர்களால் இரண்டு குணாதிசயங்கள் கைவரப் பெற்று இருப்பார்கள்.

தியானத்திற்குச் சமமான பொறுமையுடன் எதையும் கையாள்வார்கள்.

இரண்டு மூன்று மணி நேரம் வாசிக்க பழகியிருப்பவர்கள் கவனச் சிதறல் என்ற புறச்சூழல் தாக்குதலிலிருந்து தப்பிக்க கற்று இருப்பார்கள்.

முயன்று பாருங்கள்.  கடந்த ஆகஸ்ட் முழுக்க எழுதியவற்றை இதில் தொகுத்துள்ளேன். இலவசமாக வாசிக்க கீழே இணைப்பு கொடுத்துள்ளேன்.


திராவிட வெள்ளை அறிக்கை

Wednesday, September 01, 2021

பாரத நாட்டின் சொல்லப்படாத வரலாறு பகுதி - 2

நான் அறிந்தவரையிலும் 1990 க்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்குக்கூட அடிப்படையான இந்தியச் சுதந்திர வரலாறு குறித்த புரிதல் இல்லை. 

2000க்குப் பின்னால் பிறந்தவர்களுக்கு இது அவசியமில்லாத ஒன்றாக மாறிவிட்டது. ஒரு கதைக்குள் பல கதை. பல கதைக்குள் ஒரு விதை என்பது போல படிப்படியாக விளக்கிக் கொண்டே செல்கின்றார். 

ஒன்றோடு ஒன்று தொடர்புப் படுத்தி வாஸ்கோடகமா கேரளாவில் கால் வைத்தது (1498) தொடங்கி 1948 வெள்ளையர்கள் நிரந்தரமாக பாரத தேசம் விட்டு வெளியேறியது வரைக்கும் சிறந்த கதை சொல்லியாக இதில் பேசியுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டம் என்பதில் இந்தியாவின் உள்ளே இந்தியாவின் வெளியே என்ற இரண்டு பிரிவுகளை முழுமையாக புரிய வைத்துள்ளார். இது எந்த பாடப் புத்தகங்களில் சொல்லப்படாத பல உண்மைகள் அடங்கிய தொகுப்பாகும். அவசியம் கேட்க வேண்டும். லாகூர் கொலை வழக்கு, இந்தியாவின் முதல் அரசியல் கொலை, மூன்று சகோதரர்கள் (வயது 19 முதல் 28 வரை) ஒட்டு மொத்தமாக தூக்கில் ஏற்றிய வரலாறு, அந்தமான் செல்லுலார் சிறையில் நடந்த கோரங்கள், இவரைக் கொல்வதே என் வாழ்நாள் நோக்கம் என்று வாழ்ந்து வெற்றி கொண்டவர் , 18 வயது குதிராம் போஸ் ( உங்களுக்கு கையெறி குண்டு செய்ய உங்களுக்கு கற்றுத் தரட்டுமா என்று நீதிபதியைப் பார்த்து கேட்டவர்) என்று கண்ணீர் சிந்தவைக்கும் தியாக தழும்புகளை, நிஜமான சுதந்திர போர் வீரர்களை நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றார். 

இந்திய அளவில் தேர்வுக்குக் கலந்து கொள்பவர்கள் முதல் பள்ளிக்கூட மாணவர்கள், ஆசிரியர் பெருமக்கள் வரைக்கும் அனைவரும் கேட்க வேண்டிய உரையிது. பயணத்தின் போது, ஒரு வேலையைச் செய்து கொண்டே நிதானமாக இது போன்ற பேச்சுக்களைக் கேட்க வேண்டும்.
 (பாரத நாட்டின் சொல்லப்படாத வரலாறு பாகம் 2)