நானும் அவனும் பத்தாம் வகுப்பு வரைக்கும் ஒன்றாக படித்தோம். ஒரே பெஞ்சு. அவன் அய்யங்கார் பிரிவைச் சேர்ந்தவன். பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் அழகப்பா பாலிடெக்னிக் படிப்பில் போய் சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று அதன் பிறகு சென்னை வந்து சேர்ந்து விட்டான். அவன் தான் முதல் ரேங்க் எடுப்பான். நானும் அன்புக்கரசி என்ற பெண்ணும் மாறி மாறி இரண்டாவது ரேங்க் எடுப்போம்.
கடந்த நாலைந்து வருடமாக தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தான். சமீபத்தில் சென்னை செல்லத் தயார் ஆன போது அவனிடமும் மற்றொரு பள்ளித் தோழன் இடமும் அழைத்துச் சொன்னேன்.
இவன் என் வீட்டுக்கு வந்தே ஆக வேண்டும் என்று சொன்னதோடு நான் அங்கே இருந்த போது தொடர்ந்து என்னைத் தொடர்ந்து கொண்டே இருந்தான். தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் உயர் அதிகாரியாக இருக்கின்றான்.
அரசியல் மற்றும் கடவுள் நம்பிக்கை சார்ந்து எதுவும் யாரிடமும் பேச மாட்டான். காரணம் அந்த இரண்டிலும் அவனுக்கு ஈடுபாடு இல்லை.
மற்றொரு பள்ளித் தோழன் நான் வருகிறேன் என்று சொன்னதும் வா என்றான். அதன் பிறகு எந்தத் தொடர்பும் இல்லை. நான் பொருட்படுத்தவில்லை. அவரவர் சூழல் அவரவர் வாழ்க்கை.
இவன் வீட்டுக்கு மகளுடன் சென்ற போது இருவரும் பேசிக் கொண்டு இருந்தார்கள். நான் அந்தப் பகுதியில் உள்ள வளர்ச்சி பெற்றுக் கொண்டு இருக்கும் புற நகர் பகுதிகளை மனதிற்குள் அளவீட்டுக் கொண்டு இருந்தேன். அப்போது என் மகளிடம் இவன் பின்வருமாறு சொன்னது என் காதில் விழுந்தது.
"உன் அப்பா ஆறாவது படிக்கின்ற கால கட்டம் தொடங்கி அவன் கல்லூரியில் படிக்கின்ற வரைக்கும் வீட்டுக்குத் தேடிப் போனால் அங்கே இருக்க மாட்டான். ஆனால் கட்டாயம் நூலகத்தில் இருப்பான். அங்கேயும் இல்லாவிட்டால் கடைத்தெருவில் உள்ள அண்ணா படிப்பகத்தில் பெரிய ஆட்களுடன் உட்கார்ந்து பழைய கட்சி செய்தித் தாள்களைச் சுவராசியமாக படித்துக் கொண்டு இருப்பான். நீ அந்த அளவுக்குப் புத்தகங்கள் படிப்பாயா? என்று கேட்டுக் கொண்டு இருந்தான்.
ஏன் இதை இப்போது இங்கே எழுதுகிறேன் என்றால் எங்கள் ஊரில் திமுக கிளைக் கழகம், ஒன்றியம் என்று அடுத்தடுத்த பதவிகளில் இருந்த அத்தனை பேர்களும் ஒன்று என்னுடன் படித்தவர்களின் அண்ணன் அல்லது அப்பாக்களாக இருப்பார்கள். அல்லது எங்கள் சந்தில் உள்ளவர்களாக இருந்தார்கள்.
எனவே எத்தனை வயது என்றாலும் நான் அவர்கள் அனைவருடனும் மிகச் சாதாரணமாகவே பேசுவேன். கல்லூரியில் உள்ளே நுழைந்ததும் மூன்றாம் ஆண்டில் படித்துக் கொண்டு இருந்த எங்கள் ஊர் பசங்களிடம் சர்வ சாதாரணமாக நான் தோளில் கை போட்டுப் பேசியதைப் பார்த்து என்னுடன் படித்த பல பேர்கள் ஜெர்க் ஆகி விலகிச் சென்றார்கள். இவர்கள் திமுக கட்சித் தொடர்பில் இருந்தவர்கள் தான்.
இவர்கள் அத்தனை பேர்களின் அந்தரங்கமும் அந்தக் காலகட்டத்தில் முழுமையாகவே தெரியும்.
"நமது பிடிஓ அந்த கோப்பில் கையெழுத்துப் போடவில்லை. எங்க அண்ணன் என்ன செய்தார் தெரியுமா? செருப்பை எடுத்து அடிக்க போனார்"
என்று இது போன்ற பல வீரக்கதைகளை வந்து பகிர்ந்து கொள்வது இயல்பான வாடிக்கையாக இருந்தது.
அப்போது தான் பாசியின் வாழ்க்கை தொடங்கியிருந்தது.
எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தாலும் அதிமுக வில் செல்வாக்கான நபர்கள் எவரையும் பார்த்தது பழகியது இல்லை. பொ. காளியப்பன் என்பவர் முதல் தேர்தலிலிருந்து சாதிப் பெருமையும் கூத்தியாள் விருப்பத்திலும் காணாமல் போய்விட்டார்.
எல்லா இடங்களிலும் திமுகவினர் தான் அள்ளிக் குவித்துக் கொண்டு இருந்தனர்.
இப்போது விசயத்தில் வருகின்றேன்.
நான் கடந்த 35 வருடமாக இவர்களை விருப்பு வெறுப்பு இன்று கவனித்து வருகிறேன்.
உலகத்தில் இருப்பவர்களுக்கு நாகரிகத்தைப் போதிக்கக்கூடியவர்களாகவும், நல்ல வார்த்தைகளைத் தவிர வேறு எந்த வார்த்தையைப் பேசினாலும் நாக்கு அழுகி விடும் என்று அச்சப்படுபவர்களாகவும், மனித மாண்புகளை அப்படியே மதிக்கும் மகான்களாகவும் கூசாமல் தயங்காமல் இவர்கள் பேசும் பேச்சை இன்னமும் பார்க்கிறேன்.
சமூகவலைத்தளங்கள் இருப்பதால் அனைத்து அயோக்கியத்தனங்களும் வெளியே வந்தாலும் இன்னமும் தம் கட்டி எப்படி எல்லாம் நடிக்கின்றார்கள் என்பது இன்னமும் எனக்குப் புரியாத புதிராகவே இருக்கின்றது.
1970 முதல் 1975 வரை பழைய செய்தித்தாள்கள் எங்கேயாவது கிடைத்தால் படித்துப் பாருங்கள். யார் மனைவியை யார் வைத்து இருந்தார்கள்? எந்த சமஉ விட்டுக் கொடுத்தார் போன்ற அறிவு சார்ந்த விசயங்கள் தான் அதிகமாக இருக்கும். அப்படி வளர்ந்த சமூகத்தில் இருப்பவர்கள் தான் இப்போது உள்ள மிச்சமும் சொச்சமும். வாந்தி வரும் அளவுக்கு அசிங்கமானவர்கள். அருவருப்பானவர்கள். எவரும் எழுதவே தயங்குவார்கள்.
சூரப்பா பற்றிப் பேசினவன் ஒருத்தன் கூட இன்றைக்கு வாய் திறப்பதில்லை.
அனிதா குறித்து அழுதவன் எவனும் இன்று அம்மணமாக இருப்பதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை.
காரணம் இவர்கள் ஆஃபாயில் புரட்சியாளர்கள்.
கூச்சமே படாதீர்கள்.
தயங்காமல் அவர்கள் கண்களில் பெப்பர் சால்ட் தூவ தயங்காதீர்கள்.
2 comments:
வேக வைத்தால் உண்மை தெரியும்...!
http://yaathoramani.blogspot.com/2021/09/blog-post_14.html
Post a Comment