2009 ஜூலை 2020 மார்ச்
10 வருடங்கள் 8 மாதங்கள்
1000 பதிவுகள்
10 வருடங்கள் - கற்றதும் பெற்றதும்
முன் கூட்டிய எச்சரிக்கை
இது பத்து வருடக் கதை. மிக நீண்ட பதிவு. உங்களால் பத்து நிமிடங்களில் வாசிக்க முடியாது. ஆனால் உங்களை விருப்பத்துடன் வாசிக்க வைக்க முயன்றுள்ளேன்.
10 வருடங்கள் - கற்றதும் பெற்றதும்
முன் கூட்டிய எச்சரிக்கை
இது பத்து வருடக் கதை. மிக நீண்ட பதிவு. உங்களால் பத்து நிமிடங்களில் வாசிக்க முடியாது. ஆனால் உங்களை விருப்பத்துடன் வாசிக்க வைக்க முயன்றுள்ளேன்.
முன் தகவல் அறிக்கை
(இணையத்தில் தொடர்ந்து செயல்படுவதும், விட்டு விலகியிருப்பதும், வேடிக்கை மட்டும் பார்ப்பது என் வாடிக்கையாக இருப்பதால் அடுத்த முப்பது நாட்கள் எனக்கு வேடிக்கை நாட்கள். வீட்டில் "பெண்கள் நலக் கூட்டணி"க்கு அடுத்த அறுபது நாட்கள் கொண்டாட்ட நாட்கள். வீட்டுச் சபாநாயகரும் அப்பாடா என்று காலையில் தாமதமாக எழும் நாட்கள். இருதயம் பலகீனமானவர்கள், மதப்பற்று உள்ளவர்கள், அதி தீவிர கட்சி விசுவாசிகள், மோடி எதிர்ப்பாளர்கள் வாசிப்பதை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது)
நீண்ட நாட்களுக்குப் பிறகு மிக நீண்ட பதிவு)
நீண்ட நாட்களுக்குப் பிறகு மிக நீண்ட பதிவு)
1000 குறித்து?
மதுரைத் தமிழன், கிருஷ்ணமூர்த்தி, கிரி போன்றவர்கள் பல மடங்கு கடந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். துளசி டீச்சர் 2000 கடந்து சென்று இருக்க வாய்ப்புண்டு. நான் அவவ்ப்போது வனவாசம் சென்று விடுவதுண்டு. கடந்த பத்தாண்டுகளில் திரட்டி உலகம், திரட்டிகள் இல்லாத உலகம், ஃபேஸ்புக் , ட்விட்டர், யூ டியூப் போன்ற தலைமுறைகளைக் கடந்து இன்னமும் எழுத வாய்ப்பு அமைந்துள்ளது. வீட்டுச் சபாநாயகரும், பெண்கள் நலக் கூட்டணியினரும் என்னை அனுமதித்து உள்ளனர் என்று அர்த்தம். என் ஆர்வம் இன்னமும் மாறாமல் அப்படியே உள்ளது.
ஏன் எழுதுகிறேன்?
கணினி முன்னால் அமர்ந்திருக்க வேண்டிய பணியின் காரணமாகவும், தமிழ் தட்டெழுத்து நல்ல பயிற்சி இருப்பதாலும்.
எழுதும் காரணம்?
சமூக வலைதளங்களில், அன்றாடம் வாசிக்கும் செய்தித்தாளில், வார இதழ்களில் கிடைக்கும் செய்திகள் மூலம் ஏதோவொன்று உத்வேகத்தை உருவாக்கும். ஒரு வார்த்தை அல்லது வாசகம் கிடைக்கும். எண்ணங்கள் சிந்தனையில் தத்தளிக்கும். முழுமையாக எழுதி விட முடிகின்றது..
எழுதாமல் இருந்தால்?
ஒன்றும் ஆகாது. பொழுது வெட்டியாய் நகரும். வாசித்த, பார்த்த விசயங்கள் எனக்குள்ளே இருக்கும். மன உளைச்சல் உருவாகும். எழுதுவதால் இரவில் படுத்த சில நிமிடங்களில் தூங்கிவிட முடிகின்றது.