Wednesday, November 30, 2022

சன் டிவி Sun tv network

 Sun tv network தமிழர்களுக்கு எப்படி சேவை செய்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

சன் குழுமம் விலைப்பட்டியல்.
Sun Tv - 22.42
Sun HD - 22.42
KTv - 22.42
KTv HD - 22.42
Sun Music 7.08
Sun Mus HD 22.42
Sun News 01.18
Adithya 10.62
Chutti Tv 07.08
Sun Life 10.62
Total 148.68 for tamil HD
81.42 for ordinary pack
HD + SD = Average = 110/connection
ஒருவர் 200 ரூபாய் மாதம் ரீச்சார்ஜ் செய்தால் அதில் 110 ரூபாய் சன் குடும்பத்திற்கு கிடைக்கிறது.
தமிழகத்தில் மக்கள் தொகை 8 கோடி
4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு டிவி என்றால் 2 கோடி + ஓட்டல், ஆஸ்பிட்டல், காத்திருப்பு அறைனு, கமர்சியல் டிவி தனி.
இப்போது 2 கோடி×110 = 220 கோடி (ஒரு மாதம் வருமானம் தமிழ்நாட்டில் மட்டும்)
அப்போது ஒரு வருடத்திற்கு 2660 கோடி.
இவர்கள் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பிற்க்கு கொடுத்த நிதி எவ்வளவு?
சரி அது கூட பரவாயில்லை.
உலகத்தில் உள்ள அத்தனை தமிழனும் இன்றைக்கு தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் இந்த வேலையில், சன் டிவி மட்டும் சன் பர்த்டே கொண்டாடுவாராம். பார்த்து கொள்ளுங்கள்.
இதோடு போச்சா? சன் குழுமம் மிச்சம் list பாத்துக்கோங்க
Telugu
Gemini TV - 22.42
Gemini HD - 22.42
Gemini movies - 20.06
Gemini HD - 22.42
Gemini music - 4.72
Gemini Comedy - 5.90
Kushi Tv - 4.72
Gemini Life - 5.90 total 108.56
Kannada
Udhaya Tv 20.06
Udhaya HD 22.42
Udhaya Music 7.08
Udhaya Movies 18.88
Udhaya comedy 7.08
Chintu TV 7.08
Total 82
Malayalam
Surya Tv 14.16
Surya HD 22.42
Surya Movies 12.98
Surya Music 4.72
Surya comedy 4.72
Kochu TV 5.90
Total 64.90
மொத்தம் 404.74 ஒரு மாதத்திற்கு.
தமிழ் தவிர மற்ற சேனல்கள் நிர்வாக செலவுக்கு.
22.42 ரூபாய் KTV ய விட
அருமையான
படம் போடும் vijay super 2 ரூபாய், zee thirai 5 ரூபாய். இதுல sun news மட்டு 1.18 ரூபாய். சன் குழுமத்தில் மற்ற எதுவுமே இவ்வளவு கம்மி இல்லை. ஏனெனில், 22.42 ரூபாய் கொடுத்து அவன் சொல்லும் பொய் எல்லாம் மக்கள் பாக்க முடியாது என்று அதை மட்டும் 1.18 ரூபாய்க்கு கொடுக்கின்றனர்.
இதுல விஷயம் என்னவென்றால், வடநாட்டு சேனலான vijay, zee, colors எல்லோரும் தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள்
சொல்லும் போது. தமிழகத்தில், சன் டிவி, ஒரு வார்த்தை கூட தமிழ் புத்தாண்டு பற்றி பேசவே இல்லை.
இதுல, மாப்பிள்ளை சபரீ WE - Wired Entertainment என்று TV + OTT + INTERNET(Broadband) optical services கூடிய விரைவில்.....
அதுக்கு எவ்வளவோ
(பின்குறிப்பு கேடி சகோதரர்கள் தாத்தா யார் என்று தெரியுமா? முரசொலி மாறன் அப்பா பெயர் தெரிந்தால் கீழே குறிப்பிடவும்)

Sunday, November 27, 2022

அரசியலில் வெல்லச் சந்தர்ப்பவாதம் தான் முக்கியம்

வரப் போகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சியின் கொள்கை பேசப் போகின்றதா? இல்லை எப்போதும் போல சந்தர்ப்பவாதம் தான் பேசுமா? என்பதனை சற்று நீள அகலமாக பார்த்து விடுவோம்.



Friday, November 25, 2022

தேவதாசி வாரிசுகள் 2.0

இன்று அதிகாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே ஒருவர் வந்து "வணக்கம் சாமி" என்றார். முதலில் அடையாளம் தெரியவில்லை. நெற்றி நிறைய விபூதி, சந்தனம், ஐயப்பன் சாமியாக மாறியிருந்தார்.  என் வீட்டுக்கு அடுத்த சந்தில் இருப்பவர்.  நேற்று வரை வேறொரு விதமாக வாழ்ந்து கொண்டு இருந்தவர். ஓர் இரவுக்குள் ஐயப்பன் வந்து கனவில் என்ன சொன்னாரோ? இப்படி வந்து நிற்பார் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை.



Wednesday, November 23, 2022

2022 22 11 இருபதும் இனி வரும் காலமும்

சில தினங்களுக்கு இரவு பத்து மணிக்கு நண்பர் அழைத்திருந்தார். மகள் பேசிக் கொண்டிருந்ததைப் பாதித் தூக்கத்தில் கேட்டுக் கொண்டு இருந்தேன். உரையாடல் கேட்டது. ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் என் மூளை முழுமையாக உள்வாங்கியது.  



Wednesday, November 16, 2022

பசி மாறி ருசி

கருணாநிதி எம்ஜிஆரைப் போல திரைப்படத் துறையில் உள்ளே புகுந்து வெளியே வந்தாலும் அடித்தட்டு மக்களிடம் எம்ஜிஆர் போல மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.  குறிப்பாக எம்ஜிஆர் போல அதனை வாக்காக மாற்ற முடியவில்லை. உதயசூரியன் சின்னத்தை அண்ணாத்துரை கட்டளையின் பேரில் அவர் மேல் கொண்டு இருந்த மரியாதை மற்றும் அன்பின் காரணமாக எம்ஜிஆர் தன் படத்தில் பாட்டில் வைத்து கிராமப் புற மக்களிடம் கொண்டு சேர்த்தார்.



Monday, November 14, 2022

K. Annamalai Speech - You are IAS Officer/You are IPS Officer/நீங்களும் IAS ஆகலாம்

திருப்பூரில் ஏற்கனவே இருந்த மாவட்ட ஆட்சியர் செயல்பாடுகள் பார்த்து மனதளவில் இவர்கள் மேல் ஒருவிதமான பரிதாபம் உருவானது. 


Sunday, November 13, 2022

அம்மாவின் சோம்பேறித்தனம். அப்பாவின் விழிப்புணர்வு

திருமணத்திற்கு முன் பத்தாண்டுகள் முழுக்க முழுக்க உணவகங்களில் சாப்பிட்டு (அப்போது திருப்பூர் வளர்ந்து கொண்டு இருந்தது. இப்போது உள்ள வசதிகள் எதுவுமே இல்லை. தண்ணீர் கூட அக்மார்க் உப்புத் தண்ணீர் தான்) வயிறு கிழிந்து, எல்லா உறுப்புகளும் கெட்டழிந்து.........





Saturday, November 12, 2022

TIMES NOW - K.Annamalai/ஆபாச ராசா மட்டுமல்ல திமுக மக்கள் கேள்வியைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 தேசியக் கட்சிகளுக்கும் மாநிலக் கட்சிகளுக்கும் உண்டான ஒரே வித்தியாசம் கோஷ்டிப் பூசலின் வடிவம்.  மாநிலக் கட்சிகள் என்றால் அது பங்கு பிரிப்பது பணப் பிரச்சனைகள்  அடிப்படையில் உருவாகும்.  



Friday, November 11, 2022

அண்ணாமலை மூன்றாவது வட்டத்திற்குள்....

இந்தப் படத்தைப் பார்க்கும் போதே உங்களுக்குப் புரிந்து இருக்கும். அண்ணாமலை மூன்றாவது வட்டத்திற்குள்ளும் நுழைந்துள்ளார்.



Thursday, November 10, 2022

தலைமுறைக்கு உணர்த்துங்கள்

கணவன், மனைவி, வயதான பாட்டி, மகள் என்று நான்கு பேர்கள் பக்கத்து வீட்டில் வசிக்கின்றார்கள்.  கழிப்பறை சென்று விட்டு வரும் போது என்று தொடங்கி வெளியே உள்ள விளக்குகள் வரை ஒரு முறை போடுவார்கள். அதற்குப் பிறகு அணைக்கவே மாட்டார்கள்.  நான் மறந்து போய் விடுகின்றார்கள் என்று பலமுறை ஞாபகப்படுத்தி ஸ்விட்ச் களை ஆஃப் செய்ய வைப்பேன்.  வீட்டில் திட்டுவார்கள்.  

அவர்கள் எப்போதும் அப்படித்தான்.  விளக்கு எறிந்து கொண்டே இருக்கும் என்றார் இல்லத்தரசி. 

இதற்கு மேல் அறிவுரை சொன்னால் பிரச்சனையாகி விடும் என்று சென்ற வாரம் வரைக்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டே  நொந்து போய் கடந்து செல்வதுண்டு.

சில தினங்களுக்கு முன் அவர்கள் வீட்டில் ஒரே சண்டை. சப்தம் எங்கள் வீடு வரைக்கும் கேட்டது.  வீட்டில் கேட்ட போது கடந்த இரண்டு மாத மின்சாரக் கட்டணம் பார்த்து அலறுகின்றார்கள் என்றார்.  மிகப் பெரிய தொகையைத் தீட்டியிருக்கின்றார்கள்.  அதாவது மாறிய மின் கட்டணம் குறித்து நானே முன்பே தெரிவித்தேன்.  கவனமாக சிக்கனமாக மின்சாரத்தைப் பயன்படுத்துங்கள் என்றேன்.  என்னை அலட்சியப்படுத்தினார்கள். 

*****

வீட்டுக்கு அருகே இருந்த தந்திக் கம்பத்தில் உள்ள ட்யூப் லைட் அவ்வப்போது எறியாமல் இருக்கும்.  நானே பலமுறை வரவழைத்துச் சரி செய்து கொடுத்து இருக்கின்றேன்.  அந்த விளக்கு வெளிச்சத்திற்கும் எங்கள் வீட்டுக்கும் தொடர்பில்லை.  ஆனால் அந்த விளக்கு எறிந்தால் நான்கு புறமும் இருட்டு இல்லாமல் அச்ச உணர்வு இல்லாமல் கல்லூரி சென்று வரும் மாணவிகளுக்கு வசதியாக இருக்கும்.  பலமுறை கோவை சென்று படித்து வருகின்றவர்கள் எட்டு மணி போல வீட்டுக்கு வரும் போது இருட்டைக் கடந்து வருவதைப் பார்த்து மனதிற்குள் பயமாக இருக்கும்.  அந்த தந்தி கம்பம் அருகே இருப்பவர்கள் உயர் நடுத்தர வர்க்கம். ஒரு முறை கூடப் பிரச்சனை வரும் சமயங்களில் வெளியே வருவதில்லை. விளக்கு எறிந்தாலும் எறியாவிட்டாலும் கண்டு கொள்வதில்லை. 

மகள் ஒரு முறை சொன்னார்.  அப்பா அடுத்தமுறை எதுவும் செய்யாதீர்கள்.  அவர்களுக்கு சில பாடங்கள் அனுபவப்பூர்வமாக கிடைத்தால் தான் புரியும் என்றார்.  அப்பவும் மனம் கேட்காமல் எறியாமல் இருந்த விளக்குக்கு அருகே இருந்த வீட்டில் வசிக்கும் பெரியவரிடம் மாநகராட்சி அழைத்து சொல்லலாமே என்றேன். அலட்சியமாகப் பேசினார்.  அதாவது என்னுடன் பேசுவதே பாவம் என்பது போலத் தெரிந்தது. 

மகளிடம் வந்து சொன்னேன்.  காத்திருங்கள். அடுத்த வாரத்தில் தெரியும் என்றார்.  

காரணம் அப்போது தண்ணீர் குழாய்க்குப் பள்ளம் தோண்டு சாலையைக் கொத்துக்கறியாக்கி வைத்திருந்தார்கள்.  இரவில் வந்த அவரின் மகள் தடம் தெரியாமல் உள்ளே விழுந்து  கோவைக்குத் தூக்கிக் கொண்டு சென்றார்கள்.

••••

எங்கள் சந்து வார்டு கவுன்சிலர் ஒவ்வொரு இடத்திலும் தெளிவாக அழகாக தண்ணீர்க் குழாய் மாட்டி மக்கள் சேவையைச் சிறப்பாகவே செய்துள்ளார்.  ஆனால் மக்கள் அதன் லீவரைப் பிடுங்கிப் போட்டு தண்ணீர் வரும் ஆறு போலத் தரையில் பாயும்.  நான் நடந்து செல்லும் போது துணி வைத்து கட்டை வைத்து அடைப்பதுண்டு. கவுன்சிலரிடம் சொன்னால் வேறொரு லீவர் கொண்டு வந்து மாட்டுவார்.  அடுத்த சில வாரங்களில் நிலைமை பழையபடி மாறும்.  இப்போது தான் வீட்டுக்கு வீடு தண்ணீர் பைப் மாட்டி தயாராக வைத்துள்ளார்கள். இனி இந்த திட்டம் தொடங்கும் போது காசுக்குத்தான் தண்ணீர்.  ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

•••••

நான் மின்சார ஒழுங்கு முறை ஆணையம், உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணம், புத்திசாலித்தனத்துடன் கிரிமினல் கலந்த மின்சாரக் கட்டணத்தை உருவாக்கிய  மக்காபுருஷர்களை திட்டவே மாட்டேன்.  பலரும் கடந்த இரண்டு நாட்களாக ஏறிய கட்டணம் குறித்து எழுதுவதால் என்னைச் சுற்றியுள்ள சமூக மனோநிலையை எழுத வேண்டும் என்று தோன்றியது.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் செய்யும் அயோக்கியத்தனம் என்பது பத்து சதவிகிதம் தான்.  ஆனால் அவர்களை 90 சதவிகிதம் செய்யுங்கள் என்று ஊக்குவிப்பது பலரின் கள்ள மௌனம் மற்றும் எவன் செத்தால் எனக்கென்ன என்ற மனோபாவமும் தான்.

•••••

மோடி அவர்கள் இதைத்தான் அனுபவப்பூர்வமாகச் சொன்னார்.  

பதினேழு டிகிரி செல்சியஸ் ல் குளிர்சாதன வசதியை வைத்துக் கொண்டு நன்றாக போர்வையை இழுத்துப் போர்த்து மூடிக் கொண்டு படுப்பது தவறு என்றார்.

••••

மகன் மகளிடம் மனைவியுடன் சொல்லுங்கள்.

மின்சாரம், தண்ணீர் எத்தனை லட்சம் கோடி இருந்தாலும் நாம் உருவாக்கவே முடியாது. இயற்கை வழங்கிய கொடையை நாம் கவனமாக பயன்படுத்தப் பழகுவோம். பிறகு அடுத்தவர்களைக் குறை சொல்வோம் என்பதனை நான் என் வீட்டில் சொல்லிக் கொண்டே இருப்பதைப் போல நீங்களும் சொல்லுங்கள்.



Wednesday, November 09, 2022

"என் வாக்குச்சாவடி வலிமையானது"

 ஒரு மாபெரும் 

உருப்படியான 

உண்மையான 

தேவையான 

அவசியமான மாற்றத்தின் 

முதல்படியில் தமிழக பாஜக கால் எடுத்து வைத்துள்ளது என்றே நம்புகின்றேன்.  அதனை மதுரை பாஜக இன்று தொடங்கி வைக்கின்றது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு பூத் (வாக்குச் சாவடி) மாவட்ட நிர்வாகத்தின் நேரிடையான கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டர்கள் தேர்தலுக்கு மட்டுமல்லாது 365 நாட்களுக்கும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மனதில் இருக்கும்படி செயல்பட வேண்டும் என்பதன் முதல் படி இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களால் இன்று மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.  

இதனை மதுரை பத்திரிக்கையாளர் சந்திப்பில் இன்று தெரிவித்துள்ளார்.

இது இரண்டாவது பத்திரிக்கையாளர் சந்திப்பு. சச்சரவு இல்லை. சண்டை இல்லை. ஏட்டிக்குப் போட்டியான கேள்விகளும் இல்லை.  

அமைதியாகவே பத்திரிக்கையாளர்கள் அண்ணாமலை அவர்களுடன் ஒத்துழைத்துள்ளனர்.

"என் வாக்குச்சாவடி வலிமையானது" / மதுரை பாஜக தொடங்குகின்றது/K.Annamalai Press Meet/Nov 8 2022

லச்சு அக்காவும் ஷபிர் தம்பியும் எங்கேயிருந்தாலும் மேடைக்கு வரவும்.

()()()

அண்ணாமலை அவர்கள் இலங்கை சென்று வந்தவுடன் அய்யா நெடுமாறன் அவர்களுடன் சேர்ந்து ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார்.  அதில் ஈழம் குறித்த விபரங்களுடன் கொஞ்சம் சர்வதேச அரசியல் குறித்துப் பேசினார்.

ஆனால் பாஜக மருத்துவ அணி சார்பாக கூட்டப்பட்ட கூட்டத்தில் அண்ணாமலை சர்வதேச அரசியல் குறித்து அசத்தலான பேச்சைப் பேசியுள்ளார்.  இது முழுக்க சர்வதேச அரசியல் அறிவியல் சார்ந்த எளிமையான உரையாகும்.

இந்தியாவை வெளிநாடுகள் எப்படி பார்க்கின்றது?

எப்படி பின்னுக்குத் தள்ளப் பார்க்கின்றது?

ஏற்கனவே எப்படி பார்த்தார்கள்? இன்னமும் ஏன் பழைய பார்வையை வைத்தேன் பார்க்கின்றார்கள்?

 இதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன?

அமெரிக்கா உருவாக்கும் கருத்துக்கணிப்பு செய்யும் மாயங்கள்? 

போன்ற பல விசயங்களை எளிமையாக பேசி புரியவைத்துள்ளார்.

மற்ற கட்சிகளில் பல அணிகள் உண்டு. 

எப்படி செயல்படுகின்றார்கள் என்பதனை நாம் அறியோம்.  ஆனால் பாஜக தலைவராக அண்ணாமலை அவர்கள் வந்தவுடன் உருவான ஒவ்வொரு அணியும் தனக்கான பணியைச் சிறப்பாகவே செய்து வருகின்றார்கள். 

இலக்கு நோக்கி நகர்கின்றார்கள்.  

இது போன்ற பேச்சுகள் என்றாவது ஒரு நாள் இரண்டாவது மூன்றாவது (ஒன்று இரண்டு மூன்றாவது டயர் சிட்டிகள்) தமிழ்நாட்டின் நகரங்களில் வாழும் மாணவர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு அவர்களின் கல்வி அறிவு மட்டும் வளர்ந்து விட்டால் போதும்.  

ஆனால் இன்றைய சூழலில் பெருநகரங்களில் உள்ள மாணவர்களுக்குக் கூட இது போன்ற ஆழமான விசயங்கள் தெரியுமா? என்றே யோசித்துப் பார்க்கின்றேன்.  

அண்ணாமலை உரை - BJP Medical Cell / சர்வதேச அரசியலில் இந்தியாவை அழிக்க நினைக்கும் வல்லூறு நாடுகள்.

இப்படிப் பலரும் பேசத் தொடங்கினால் உணர்ச்சிப் பூர்வமான அரசியல்வாதிகளின் பேச்சு எடுபடாது என்றே நம்புகின்றேன்.

என் காலத்திற்குள் இது நடக்கும் என்றே நம்புகின்றேன்.

Tuesday, November 08, 2022

ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் – ஜெயகாந்தன்

 பெரியார் முன்னிலையில் ஜெயகாந்தன் பேசியது....

1959 ல்,திருச்சியில் தமிழ் எழுத்தாளர் சங்க மாநாடு தேவர் ஹாலில் நடைபெற்றது.அதன் திறப்பாளரான பெரியார் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

Sunday, November 06, 2022

அண்ணாமலை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் உரையாடும் காணொளி

தமிழ் இணைய உலகில் அதிகப்படியான அவமானத்தைப் பெறக்கூடிய முதல் அரசு ஊழியர் அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் தான்.  விமர்சனம் செய்யக்கூடிய பத்தில் எட்டுப் பேர்களின் குழந்தைகள் தனியார்ப் பள்ளியில் தான் படிக்கும்.  ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை தங்கள் பள்ளியில் சேர்ப்பதும் இல்லை.  மொத்தததில் இன்றைய சூழலில் அரசு பள்ளிக்கூடம் என்பது வேறொரு "வார்த்தை" கொண்டே அழைக்கப்பட்டு வருகின்றது.  

இடஒதுக்கீடு என் வாழ்க்கையில் என் குழந்தைகள் வாழ்க்கை வரைக்கும் நான் சிறப்புச் சலுகையாக பெற்றது இல்லை.  ஆனால் இடஒதுக்கீடு என்பது முறைப்படுத்தி அதனைச் சரியான வகையில் சரியான நபர்களுக்குக் கொடுத்தால் போதுமானது என்ற எண்ணத்தில் தான் தற்போது அரசு பள்ளிக்கூடச் சூழலைக் கவனித்து வருகின்றேன்.

அரசுப் பள்ளிக்கூடங்களைக் கடந்த மூன்று வருடங்களாக அதன் இயங்கியல் குறித்து நேரிடையாக உள்ளே நுழைந்து பார்க்கும் வாய்ப்பு  எனக்கு அமைந்துள்ளது.   சில உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றேன். 

13 ஆண்டுகள் தனியார் கல்வி என்ற எலைட் சூழலையும் பார்த்தேன். அதன் வணிக செயல்பாடுகளை இரத்தம் உறுஞ்சுவதை கண்டேன்.  இன்றைய சூழலில் தமிழகத்தில் 45 000 என்ற எண்ணிக்கை அளவில் தனியார் கல்விக்கூடங்கள் உள்ளது.  5,000 நிறுவனங்கள் தரமான சிந்தனையுள்ள மாணவர்களை உருவாக்குமா? என்பது பெரிய கேள்விக்குறி? வாய்ப்பும் இல்லை. சூழலும் இல்லை.  

நீங்கள் எந்த பெரிய தனியார் கல்விக்கூடங்களின் பெயரைச் சுட்டிக் காட்டினாலும் நேரிடையாக நுழைவுத் தேர்வு (தனிப்பட்ட பயிற்சி இல்லாமல்) எழுதி வெற்றி பெறும் மாணவர்கள் தமிழகத்தில் இல்லை என்பதனை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். சிபிஎஸ்சி அல்லது என்சிஆர்டி பாடத்திட்டம் எதுவாக இருந்தாலும் கல்வி நிறுவனத்தின் பிராண்ட நேம் என்பது பணம் பார்க்க மட்டுமே உதவுகின்றது. ஆசிரியர்கள் பழைய கள் புதிய மொந்தை.

அப்படியெனில் அரசு பள்ளிக்கூட என்ன கிழித்து விட்டது? என்ற கேள்வி உங்களுக்கு வரும்.  

ஒரு மாணவனுக்கு மாணவியருக்கும் முதலில் தேவை ஆளுமைத்திறன்.  

அண்ணாமலை அவர்களுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் உரையாடும்  காணொளியைப் பாருங்கள்.  அந்த மாணவியர்கள் பேச்சை, கம்பீரத்தை, ஆளுமைத்திறன், சமூகச் சூழலைப் புரிந்து கொண்டு விதத்தை என்று ஒவ்வொன்றாக உங்களால் புரிந்து கொள்ள முடியும். என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்? தனியார்கூடம் தோற்று விடுகின்றது என்பதனை கண்கூடாகப் பார்த்தேன்.  எந்திரம் போலவே மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளனர்.

நமக்கு அரசுப் பள்ளிக்கூடம் என்றவுடன் உடனே மனதில் தோன்றுவது அதிகப்படியான சம்பளம் பெறும் ஆசிரியர்கள், வேலை செய்யாத ஆசிரிய சமூகம், திமுக விற்கு ஆதரவாக இருக்கும் கூட்டம், மாணவர்களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், வட்டிக்கு விட்டுச் சம்பாதிப்பவர்கள்  இது போன்ற பலவிதமான குற்றச்சாட்டை இன்று வரையிலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடுக்கி வருகின்றோம். 

அமைச்சர் மூர்த்தி நடத்திய திருமணத்தில் தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு அதிகார வர்க்கம் எத்தனை கோடிகளைக் கொண்டு கொட்டியுள்ளனர் என்பதனை வாசித்து உய்க. இவர்கள் மேல் எவராவது விமர்சனம் வைப்பார்களா?  தனி மென்பொருள் உருவாக்கி லஞ்சம் மட்டும் வசூல் செய்யும் போக்குவரத்து துறை பற்றி பேசுகின்றோமா?  கோடி... கோடி.  

அடுத்து நாம் வைக்கும் குற்றச்சாட்டு இட ஒதுக்கீடு.  

அந்தப் பக்கம் முற்பட்ட வகுப்பினர் (பொருளாதார பலமில்லாதவர்கள்) பெறும் பத்து சதவிகிதம் தொடங்கி  இந்தப் பக்கம் 7.5 சதவிகிதம் வரைக்கும் கறித்துக் கொட்டுகின்றோம்.

என் நண்பர் கடந்த பல ஆண்டுகளாக சொல்லி வருவது என்னவெனில் தற்போது தமிழகப் பள்ளிக்கல்வித்துறைக்கு 38 முதல் 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகின்றது. இதனைக் கணக்கீட்டுப் பார்த்தால் ஒரு மாணவனுக்கு ஏறக்குறைய 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரைக்கும் தமிழக அரசு செலவழித்துக் கொண்டு இருக்கின்றது. இதனை அப்படியே தனியாருக்குக் கொடுத்து நடத்தச் சொன்னால் ஒரு மாணவனுக்கு வருடம் பத்தாயிரம் கொடுத்தால் மிக அற்புதமாக நடத்துவார்கள் என்பார்.

திறமையின்மை, பொறுப்பின்மை, தங்களை மேம்படுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள்......

எங்களுக்கு ஓட்டு வேண்டும் என்பதற்காக ஆசிரியர்களைப் பகடைக்காயாக மாற்றி வைத்த கருணா அரசியல்......

லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினாலும் இன்னமும் எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்.....

நான் அரசுப் பள்ளிக்கூடங்களை குறைகளுடன் விரும்புகின்றேன்.

நான் கடந்த சில வருடங்களாக அரசுப் பள்ளிகளில் ஒரு பெரிய கூட்டத்தைப் பார்த்து வருகின்றேன்.

மன வளர்ச்சி இல்லாத பெண் குழந்தைகள்.....

அதீதமாக இல்லாமல் ஓரளவுக்குக் கற்றல் திறன் சுமாராக உள்ள மாணவியர்களும் நான்காவது பிரிவு என்று சொல்லப்படுகின்ற தொழில் பிரிவில் படிக்கின்றார்கள். அவர்களை எந்த தனியார்ப் பள்ளிகளும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.  அவர்களை 35 மதிப்பெண்கள் எடுக்க வைப்பதே ஆசிரியைகளுக்கு மிகப் பெரிய சவால். நான் கண்கூடாக பார்த்து வருகின்றேன்.  அதனை இந்த வருடத்தோடு புலிகேசி கூட்டம் இழுத்து மூட ஆணை பிறப்பித்துள்ளது.

இத்துடன் எதற்கு இட ஒதுக்கீடு என்று கேட்பவர்கள்? நக்கல் செய்பவர்கள்? வெறுப்புணர்வுடன் எழுதுபவர்கள் தயவு செய்து இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுடன் அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வென்று 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளவர்கள் கலந்துரையாடல் செய்துள்ளதை அவசியம் முழுமையாகக் கேளுங்கள்.

சவாலான சமூக வாழ்க்கை

இடைவிடாத கல்வி வாழ்க்கை

எப்போதும் வேண்டுமானாலும் தங்கள் கல்வி நின்று விடும் வாழும் பெண் குழந்தைகள்.

இடைவிடாத லட்சியத்தை சுடரொளி போல ஏந்திக் கொண்டு இருக்கும் இந்த மாணவியர்கள் உண்மையிலேயே மருத்துவராக வர வேண்டும் விரும்புகிறேன்.

இது போல உள்ள மாணவிகளை நான் இங்கே அரசுப் பள்ளிக்கூடங்களில் கண்கூடாகப் பார்த்து வருகின்றேன்.

அனைத்து தனியார் பள்ளிகளும் தங்கள் கட்டணத்துடன் கட்டாய கட்டணமாக நீட் பயிற்சி கட்டணத்தையும் வாங்குகின்றார்கள்.  ஆனால் யாரும் வெல்வதில்லை. பாதிப் பேர்கள் பரிட்சைக்கு செல்வதில்லை.  அருகே உள்ள பள்ளிக்கூடங்களில் சென்று கேட்டுப் பாருங்கள்.

அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக அடிப்படையான விசயங்களை மேம்படுத்தி அடுத்த கட்டத்திற்குக் கல்வித்துறையை நகர்த்தாத வரைக்கும் இந்த சிஸ்டம் ஆவது இருந்து தொலைக்கட்டும் என்ற எண்ணம் தான் என்னைப் போன்றவர்களுக்கு உருவாகி மனதை இளக வைக்கின்றது.

அண்ணாமலை அவர்களுடன் மாணவியர்கள் உரையாடும் விதத்தைப் பாருங்கள். 

Friday, November 04, 2022

அண்ணாமலை & ரங்கராஜ் பாண்டே காரசார நேர்காணல் - "முடிந்தால் என்னைத் தொட்டுப் பார்க்கட்டும்" 28-2022

 முதல் முறையாக பாண்டே அண்ணாமலை நேர்காணல் என்பது கால்பந்தாட்டம் இறுதி ஆட்டம் பார்ப்பது போலவே இருந்தது. மாறி மாறி கோல் போட்டுக் கொண்டேயிருந்தால் பார்வையாளனுக்கு எப்படியிருக்கும்?  

ஆராவாரம் ஒலி கேட்டுக் கொண்டேயிருக்கும்.

ரபி பெர்ணார்ட்,  வீரபாண்டியன் இவர்களைத் தெரியாதவர்கள் என்றால் அது வளர்ந்து கொண்டிருக்கும் தலைமுறை என்று அர்த்தம்.  

இரண்டு பேர்களும் இரண்டு பாதை.  ஆனால் ஆதரவு, எதிர்ப்பு என்பதற்கு அப்பாற்பட்டு கட்டாயம் முழுமையாக கேட்டே ஆக வேண்டும் என்பதனை இவர்கள் இருவரும் உருவாக்கினார்கள்.  காரணம் உழைப்பு.

அண்ணாமலை & ரங்கராஜ் பாண்டே காரசார நேர்காணல் - "முடிந்தால் என்னைத் தொட்டுப் பார்க்கட்டும்" 28-2022

இதற்குப் பிறகு மூவர் முக்கியமானவர்களாகத் தெரிகின்றார்கள்.

கார்த்திகை செல்வன்.  குணசேகரன், ரங்கராஜ் பாண்டே.

உங்களுக்கு வியப்பாக இருக்கும்.  காரணம் உள்ளது.

கார்த்திகை செல்வன் நக்கீரன்  வார இதழ் தொடக்க காலத்திலிருந்து தன் பத்திரிக்கை உலக பணியைத் தொடங்கியவர்.

குணசேகரன் கம்யூனிஸ்ட் சார்பு பத்திரிக்கையுலகத்திற்குள் புகுந்து வெளியே வந்தவர்.

பாண்டே மதுரை தினமலரில் தன் பணியைத் தொடங்கியவர்.

மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமையாக நான் பார்ப்பது....

மாதச் சம்பளத்திற்கு நாயாய் பேயாய் அலைந்து திரிந்து உழைத்து அத்துடன் தன் திறமையை வளர்த்துக் கொண்டது.  வறுமையுடன் வாழ்க்கையை அதன் போக்கில் சென்று இன்று வென்று நிற்பது.

இவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பாதை வேறு. எண்ணங்கள் வேறு. நோக்கம் வேறு. கடமையாற்றிக் கொண்டு இருக்கும் இடம் வேறு.  அடைந்த உயரங்களும் வெவ்வேறு விதமாக இருந்தாலும் நிச்சயம் சாதித்து உள்ளனர். சாதித்துக் கொண்டு இருக்கின்றனர்.

மற்றபடி அய்யா ஒருவர் சில தினங்களுக்கு முன் யூ டியூப் ல் வரும் மாதேஷ் என்ற பையனைப் பத்திரிக்கையாளர் என்று பட்டியலில் கொண்டு வந்தார். இல்லை. 

அந்தப் பையன் போல யூ டியூப் ல் நூற்றுக்கணக்கான பசங்க இருக்கின்றார்கள்.  இவர்கள் எத்தனை புத்தகங்கள் இது வரையிலும் படித்து இருப்பார்கள்.  எத்தனை பேர்களின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக தெரிந்து இருப்பார்கள். தினமும் எத்தனை தினசரி பத்திரிக்கைகள் படிக்கின்றார்கள்? வாரந்தோறும் தவறாமல் எத்தனை வார இதழ்கள் வாசித்து நிகழ்கால நல்லது கெட்டதைப் புரிந்து உள்ளனர் என்று கேட்டுப் பாருங்கள்.  நிச்சயம் ஜுரோ வாகத்தான் இருப்பார்கள்.

இவர்கள் அனைவரும் சமாளிக்கத் தெரிந்தவர்கள்.  

குறுக்குக்கேள்வி கேட்கத் தெரிந்தவர்கள்.  கொச்சையாகச் சொன்னால் போட்டு வாங்கத் தெரிந்தவர்கள்.  இது லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்து முடித்து வெளியே வந்தவுடன் ஒரு பத்திரிக்கையில் கொடுப்பதைக் கொடு எதுவாக இருந்தாலும் வாங்கிக் கொள்கிறேன் என்று ஒரு வருடம் பயிற்சி எடுத்து விட்டு கிறிஸ்துவ ஆதரவுத் தளத்தில், நானும் ஈவேரா பேரனுக்குப் பேரன் என்ற அயோக்கியத்தனத்தை டேக் ஆக வைத்துக் கொண்டு சுற்றி வரும் பொறுக்கிக் கும்பலைத்தான் பாண்டே போட்டியில் அண்ணாமலை வெளுத்து வாங்கினார்.

ரங்கராஜ் பாண்டே அண்ணாமலை பேட்டி என்பது எனக்குத் தீரன் அதிகாரம் ஒன்று பார்த்தது போலவே உள்ளது. 

இந்த இடத்தில் மற்றொரு தகவலையும் கூடுதலாகச் சொல்லிவிடுகின்றேன்.

அண்ணாமலை அவர்களின் கிராமத்தில் (தொட்டம்பட்டி) உள்ள வீட்டில் உள்ள மதில் சுவர் வரைக்கும் தீயசக்தி ஆராய்ந்து பார்த்து இடிக்க முடியுமா? என்று பார்த்து உள்ளனர்.  அண்ணாமலை ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். 

தன் உறவுகள், மனைவி வகையில் வரக்கூடிய உறவுகள் அத்தனை டேட்டாவும் கொலை வெறியில் இருக்கும் டேவிட்சன் ஆசீர்வாதம் கையில் வைத்திருந்து காத்திருக்கக்கூடும்.

ஓர் இன்ஞ் கூட இவர்களால் கடந்த 16 மாதத்தில் அண்ணாமலை அவர்களை அசைக்க முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்?

வாழ்கின்ற வாழ்க்கைக்கும்

பேசுகின்ற வார்த்தைக்கும்

அச்சு பிறழாமல் 

அறத்துடன் 

உண்மையாக 

நேர்மையாக 

வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். 

தன்னைச் சுற்றிலும் உள்ளவர்களையும் வாழ வைத்துக் கொண்டு இருக்கின்றார்.

தமிழக மக்களையும் அப்படியே மாற்றி விடுவார் என்றே என்னைப் போன்றவர்கள் நம்புகின்றோம்.

Thursday, November 03, 2022

நிர்வாக அறிவு

நிர்வாக அறிவு என்பது பட்டப்படிப்பு படிப்பதாலோ, குறிப்பிட்ட ஆட்களிடம் பயிற்சி எடுத்துக் கொள்வதாலோ வராது. 

கற்றுக் கொள்ளவும் முடியாது.  

25 சதவிகிதம் இதன் மூலம் புரியக்கூடும்.  ஆனால் உண்மையான நிர்வாக அறிவு என்பது

கோவை Bomb /கேஸ் சிலிண்டர் வெடிகுண்டு வெடிப்பு / முதல்வர் மெத்தனம் / அண்ணாமலை Press Meet Oct 25 2022

அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புக்குத் தயாராக இருக்க வேண்டும்.

24 மணி நேரம் உழைத்து முடித்து விட்டு ஓய்வு எடுக்க வேண்டும் என்று தோன்றாத வண்ணம் அடுத்தடுத்த வேலைக்கும் நம் மனமும் உடலும் தயாராக இருக்க வேண்டும்.

உடல் ஆரோக்கியத்துடன் உள்ள ஆரோக்கியம் மிக முக்கியம்.

கட்சி அரசியல் என்பது வேறு. எட்டு கோடி மக்களுக்கு பொதுவான ஒருவராக இருந்து நிர்வாக அரசியல் செய்ய வேண்டியது வேறு.

கோப்புகளைத் தினமும் பார்க்க ஐந்து மணி நேரமாவது உட்கார்ந்து பொறுமையாக அலசி ஆராயத் தெரிய வேண்டும்.

கேள்வி கேட்டுப் புரிதலை உருவாக்கிக் கொள்ளக் குறிப்பிட்ட விசயங்களைப் பற்றி அடிப்படையாவது புரிந்து இருக்க வேண்டும்.

உளவுத்துறை ஆட்கள் என்பது நிர்வாகத்தின் உயிராயிதம். அவர்களைக் கையாளத் தெரியாத பட்சத்தில் கருமாதி செய்தி பின்பு ஒரு பெண்மணியை இன்னும் தமிழர்கள் இட்லி கதையைப் பேசி தூற்றுவது போலவே எதிர்காலம் பேசப் போகின்றது?

வாசிப்பு அனுபவம் இல்லாவிட்டால் அப்படிப்பட்ட பலரிடம் உறவாடி அனைத்தையும் உடனே கிரகிக்க அறிவு வேண்டும்.

ஓட்டரசியலுக்கு ஓராயிரம் காரணம் சொல்லச் சுற்றிலும் ஆட்கள் இருப்பார்கள்.  ஆனால் வாழ்நாளுக்குப் பிறகும் நம் நிர்வாகம் எப்படி இருந்தது என்பதனை சுட்டிக் காட்டக் காலம் வழங்கிய வாய்ப்பு என்று நாம் பணிபுரிகின்ற பதவியை நினைக்க பெரிய மனது வேண்டும். 

மக்கள் நலன் மீதி பற்றுதல் வேண்டும். 

ஒவ்வொரு நாளும் பயம் கலந்த அணுகுமுறை வேண்டும்.  

இவற்றை   எல்லாம் விட தேசத்தையே துண்டாட நினைக்கும் அழிவுச் சக்திகளுக்கு அகோரத்தலைவனாகவும் மாறியிருக்க தெரிந்து இருக்க வேண்டும்.

இவையெல்லாம் இருக்கின்றதா?

Wednesday, November 02, 2022

"வெல்லும் சொல்"

 "வெல்லும் சொல்" என்றொரு நிகழ்ச்சி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் தொடங்கப் பட்டுள்ளது. புதிய தலைமுறையில் தலைமை செய்தி ஆசிரியராக பணிபுரிந்த கார்த்திகை செல்வன் வழி நடத்துகின்றார்.  

ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நாளில் இனி தொடர்ந்து வரும்.  ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய ஆளுமை அரசியல் மற்றும் பல்வேறு தளங்களில் உள்ளவர்கள் வந்து பேசப் போகின்றார்கள். 

அண்ணாமலை - கார்த்திகை செல்வன்/ பாஜக தமிழகத்தில் தாமதமாக வளர்ந்தது / Interview- நியூஸ் 18 தமிழ்நாடு

இதில் முதல் ஆளுமையாக தமிழக பாஜக தலைவர் திரு. கு. அண்ணாமலை அவர்கள் பேசி உள்ளார்.

ஏறக்குறைய ஒரு மணி நேரம். அரசியல் காரணங்களால் இது நீக்கப்படும் அபாயம் இருக்கலாம் என்பதால் எங்கள் தளத்தில் நண்பர்கள் பதிவேற்றி உள்ளனர்.

இதில் உள்ள சிறப்பு விசயங்களை உங்களுக்குக் கீழே தருகின்றேன்.   இணைப்பு கீழே கொடுத்துள்ளேன்.

1.  முழுமையாக அவசியமாக கேட்க பரிந்துரை செய்கின்றேன். உள்ளே இடையிடையே செய்தி சேனலில்  உள்ள செய்திகள் வரும்.  அது சுருக்கம் மட்டுமே. அதை நகர்த்தி விட்டு அண்ணாமலை அவர்களின் பேச்சைக் கேளுங்கள்.

2. கார்த்திகை செல்வனை நான் பலமுறை கொடூரமாக விமர்சனம் செய்து உள்ளேன்.  ஆனால் இதில் அவர் கேட்ட கேள்வி என்பது தயவு தாட்சணியமின்றி அதே சமயத்தில் அவசியமான முக்கியமான கேள்விகள் என்று பலவற்றைக் கேட்டு உள்ளார். திமுக வின் முழு நேர ஆதரவாளர் என்பதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நைச்சியமாக நகர்ந்து வந்தாலும் இதில் அவர் கேட்டுள்ள கேள்விகள் எதுவும் இதுவரையிலும் எந்த சேனலிலும் கேட்காத கேள்விகள் ஆகும்.  கத்தி வைத்து இறக்கியது போல சிரித்துக் கொண்டே கேட்டுள்ளார்.

3. கார்த்திகை செல்வன் உடல் மொழி சிறப்பு. பாராட்டத் தக்கது.  அண்ணாமலை அவர்கள் தவறுதலாக எடுத்துக் கொள்வாரோ என்று யோசிக்கவில்லை.  அதே போல அண்ணாமலை அவர்களும் தடுமாறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.  இந்த பேட்டி அண்ணாமலை அவர்களின் கீரிடத்தில் ஒரு மணி மகுடம்.

4. அரங்கத்தில் பல இளைஞர்கள் அமர்ந்துள்ளனர். அழைத்து வந்தார்களா? இல்லை வேறு ஏதுவுமா? என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் அனைவரும் அண்ணாமலை அவர்கள் குத்திக் கிழிக்கும் அளவுக்குக் கேள்வி கேட்டு உள்ளனர். எதுவும் தவறு என்று சொல்லவே முடியாது. சிறப்பான முறையில் இருந்தது.

ஏன் சில வாரங்களுக்கு முன்பு முதல் முறையாக பணியில் சேர்ந்த கார்த்திகை செல்வன் தன் அபிமானமுள்ள ஒருவரை ஸ்டுடியோ அழைத்து வந்து பேட்டி எடுத்தார். அவரிடம் இந்த செட் அப் இல்லையே என்று கடைசி வரைக்கும் யோசித்துக் கொண்டே பார்த்தேன். காரணம் தெரிந்தால் சொல்லுங்கள்.

நிச்சயம் இன்று ஒய்வு தினம் தானே? கறிக்கொளம்பு, காரக்கொளம்பு, தயிர்ச்சாதம் சாப்பிட்டு விட்டுக் குட்டித் தூக்கம் போட வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒதுக்கி வைத்து விட்டு இதனை முழுமையாக கேளுங்கள் என்று பரிந்துரை செய்கின்றேன்.  

கடைசியாக

தினத்தந்தி பாப்பா முதல் கார்த்திகை செல்வன் வரை அண்ணாமலை வந்து அமர்ந்தால் எப்படி இவர்களின் நியூரான்கள் துடிக்கின்றது. 

நமக்கு நல்லது என்றாலும் இவரைப் போலப் பலரையும் கொண்டு வந்து குறிப்பாக முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அத்தனை பேர்களையும் கொண்டு வந்து இந்த ஆப்ரேசன் போல செய்தால் நன்றாக இருக்குமே?

அண்ணாமலை பேட்டி ஒவ்வொன்றையும் தயவு செய்து உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரை செய்யுங்கள். பார்க்கச் சொல்லுங்கள். Pls Forward/Tks.

மீதி இருப்பது குணசேகரன் (சன் நியூஸ்).

காத்திருக்கின்றேன்.

Tuesday, November 01, 2022

அம்மா மரண வாசலில் நிற்கின்றார்

"அம்மாவை நீங்க கொஞ்ச நாளைக்கு வச்சுக்றீங்களா?"?

நேற்று மாலை ஊரிலிருந்து அழைப்பு வந்தது.