Saturday, January 30, 2021

நடராஜன் உருவாக்கிய ஜெயலலிதா

நடராஜன் என்றொரு மனிதர் இல்லாதபட்சத்தில் இன்று தாயம்மாவுக்கு 80 கோடி செலவில் மண்டபம் கட்ட காலம் அனுமதித்து இருக்காது. நிச்சயம் கர்நாடகாவில் அமைதியாக தன் மீதமிருந்த வாழ்க்கையை கழித்து முன்னாள் நடிகை மறைந்தார் என்று இரண்டு பத்தி காலத்தில் காணாமல் போய் இருப்பார். 



Friday, January 29, 2021

கோவிட் தடுப்பு மருந்து மேட் இன் இண்டியா

 கோவிட் என்ற தொற்று நோய்க்கு இந்திய அரசு உதவியோடு மிக விரைவாகக் கண்டுபிடிக்கப்பட்ட உள்நாட்டுத் தயாரிப்பான தடுப்பு மருந்தை வைத்துக் கொண்டு பாரதப் பிரதமர் மோடி அவர்களை பணியில் இருக்கும் மருத்துவர் தொடங்கி அல்லக்கை வரைக்கும் விமர்சனம் எழுப்புகின்றார்களே? உங்கள் கருத்து என்ன?



Thursday, January 28, 2021

தேர்தல் திருவிழா 2021

இன்று அதிகாலையில் நடந்து சென்ற போது எப்போது நான் பார்க்கும் காட்சிகளும், வீட்டுக்குள் வந்து விழுந்த செய்தித்தாள்களில் தினமும் முழுப்பக்க விளம்பரங்களைப் பார்க்கும் போது பல எண்ணங்கள் ஓடியது. 


Wednesday, January 27, 2021

சசிகலா என்ற தியாகி

சசிகலா என்ற தியாகி 27 ஜனவரி 2021 சிறையிலிருந்து வெளியே வந்து உள்ளார்.

இந்திய நீதிமன்றங்களில் உள்ள ஆள் பற்றாக்குறையும், தேங்கியிருக்கும் பல லட்ச வழக்குகளும், தீர்ப்பில் உள்ள பாரபட்சமும் உச்சத்தை எட்டியுள்ள இப்போதைய காலகட்டத்தில் அடுத்த நம்பிக்கை ஊடகங்கள். 


ஆனால் நாங்கள் விளம்பரத்திற்கிடையே செய்தி என்ற பெயரில் துணுக்குகளை கோர்த்து தருவோம். மக்கள் பிரச்சனை சார்ந்த விசயங்கள் இதில் இருக்காது என்ற அவர்களின் கோட்பாடுகளை உணர்ந்த மக்கள் அதனை புறக்கணித்து தொலைக்காட்சிக்கு வந்த போது அங்கே ஏர்வாடி கும்பல்கள் கத்துவதைப் பார்த்து சீரியல்கள் போதும் என்று தமிழக குடும்பங்கள் தங்களை காப்பாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

Tuesday, January 26, 2021

பைத்தியக்காரர்களின் பூமி

 "ஒரு காட்சியின் அளவு 180 செகண்ட் அதிக பட்சம் இருக்க வேண்டும். அதாவது மூன்று நிமிடங்கள். இதுவே அதிகம் தான். இதுவே மிக நீண்டது. நான் அப்படி வைக்க மாட்டேன். குறைத்து விடுவேன். அதை நான் பார்க்கும் போது ஒரு ஷாட்டில் இருக்கும் பட்சத்தில் கோணங்களும், கதாபாத்திரங்களின் வசனம் அதற்குத் தகுந்தாற்போல அவர்களின் முகபாவனை முக்கியமாக இருக்க வேண்டும்.  இவை அனைத்தும் பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட வேண்டும். பார்ப்பவர்கள் அடுத்த காட்சியின் தொடக்கத்தில் அது முடிக்க வேண்டும்" என்று இயக்குநர் ஷங்கர் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.  



Monday, January 25, 2021

சாபத்தை சுமக்கும் ராகுல் காந்தி

சோனியா செய்த நல்ல விசயம் ஒன்று உண்டெனில் கணவர் முகத்தை மகனுக்கும் மாமியார் முகத்தை மகளுக்கும் கடத்த காரணமாக இருந்தது தான். 

ராகுல் பல சமயங்களில் அச்சு அசலாக ராஜீவ் காந்தி முகத்தை நினைவு படுத்துகின்றார். தோற்றம், நடை, உடை, பாவனை, உண்மையான எளிமை என்று எல்லா நிலைகளில் நான் பத்தடி தொலைவில் நின்று பார்த்த ராஜீவ் காந்தியை நினைவு படுத்தினார். அவரின் நேற்றைய கோவை, திருப்பூர் பயணம் பல ஆச்சரியங்களை உருவாக்கியது.



Sunday, January 24, 2021

கல்லூரிச் செல்லத் தயாராக இருப்பவர்களுக்காக

உங்கள் மகன் மகள் இந்த வருடம் பள்ளி வாழ்க்கை முடித்து கல்லூரிச் செல்லத் தயாராக இருந்தால் இந்தக் காணொளியைக் கேட்கவும். 

இணைய தளத்தில் எந்த இடத்திலும் உண்மையான மகன், மகளின் பெயரை, மின் அஞ்சலை, அலைபேசி எண் போன்றவற்றைப் பதிவு செய்யாதீர்கள். மாற்று ஏற்பாடு வைத்திருக்கவும். 

2. எந்தப் பிரபல்யமான நிறுவனம் சார்ந்த இணைய தளங்கள் உங்களுக்கு வழிகாட்டும் என்பதனை நம்பாதீர்கள். 

3. மத்திய அரசு, மாநில அரசின் இணையதளங்களில் சோதிக்க முயலுங்கள். 

4. இணையதளங்களின் நம்பகத் தன்மையை நிச்சயம் அலைபேசி வழியாகச் சோதிப்பது என்பது முழுமையான புரிதல் ஏற்பட வாய்ப்பு குறைவு. 

5. நீங்கள் பதிவு செய்து வைக்காத நிறுவனங்களிலிருந்து குறுஞ்செய்தி வந்தால் ப்ளாக் லிஸ்ட் ல் சேர்த்து விடுங்கள். 

6. திடீரென்று தொடர்பில்லாத, நீங்கள் பதிவு செய்யாத கல்வி நிறுவனங்களிலிருந்து அழைப்பு வந்தால் முதலில் தன்மையாகப் பேசி அடுத்த முறை அழைக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். 

ஷிப்ட் மாறும் போது அடுத்தவர் அழைப்பார். செந்தமிழில் பேசுங்கள்.

 மற்ற விபரங்கள் காணொளியில்.......

Saturday, January 23, 2021

உள்ளுணர்வு குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன?

உள்ளுணர்வு குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன?

மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகளுக்கும் இது உண்டு என்ற அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  தொழில் துறையில் இருப்பவர்களுக்கு உள்ளுணர்வு மிகவும் முக்கியம். ஏற்றம், இறக்கம், வளைவு போன்றவற்றைச் சந்திக்கவிருக்கும் சமயங்களில் நிச்சயம் ஏதோவொன்று அறிகுறியாகத் தெரியும். உடனே இதனை மூடநம்பிக்கையில் வகைப்படுத்திவிட வேண்டாம். எனக்கும் இப்படி உணரும் எண்ணம் உண்டு. சில சமயம் அப்படியே நடந்தும் உள்ளது.  



Thursday, January 21, 2021

அறிவு, உணர்தல், உள்வாங்குதல்.

அறிவு, உணர்தல், உள்வாங்குதல்.

இந்த மூன்றுக்கும் வித்தியாசம் தெரிந்தால் அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்காமல் தனியார்ப் பள்ளியில் கௌரவத்திற்காகப் படிக்க வைத்துக் கொண்டு, தமிழகக் கல்வித் தரம் பாழ்பட்டு நிற்கின்றது என்று பூபாளம் இசைக்கும் நண்பர்களுக்குப் புரியும்.


Wednesday, January 20, 2021

மதிப்புமிகு சாந்தா அம்மையாருக்கு அஞ்சலி

நம் நாட்டில் அரசியலில் நீண்ட காலம் கோலோச்சியவர், ஆட்சியில் இருந்த சமயத்தில் இறந்து போனாலும், ஆட்சியில் இல்லாமல் இருந்தாலும் குறிப்பிட்ட நபருக்குச் செல்வாக்கு இருக்கும் பட்சத்தில் அனைத்து ஊடகங்களும் அவரவர் நிறுவன கொள்கைகளுக்கு ஏற்ப சங்கூதும். சங்கநாதம் முழங்கும். மக்கள், தொண்டர்கள், விசுவாசிகள், பலன் பெற்றவர்களின் உணர்ச்சிகரமான வார்த்தைகளை அஞ்சலியில் கோர்த்து மக்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இறந்தவர்  குறித்த மரியாதையை, மகத்துவத்தை வெளிப்படுத்துவார்கள்.


Sunday, January 17, 2021

எம்.ஜி.ஆர். - ஜெ. ஜெயலலிதா: 1970 - 2016 Tamil Nadu Political History

 இன்று முதல் இலவசவாசிப்பில்

பகிர்ந்து கொள்ளுங்கள்.




(இந்தியா)

எம்.ஜி.ஆர். - ஜெ. ஜெயலலிதா: 1970 - 2016 Tamil Nadu Political History eBook: JothiG, ஜோதிஜி, Ganesan, Jothi: Amazon.in: Kindle Store http://amzn.to/3bUgAxI

(வெளிநாடு)

Amazon.com: எம்.ஜி.ஆர். - ஜெ. ஜெயலலிதா: 1970 - 2016 Tamil Nadu Political History eBook: JothiG, ஜோதிஜி, Ganesan, Jothi: Kindle Store  http://amzn.to/3bMZIJi


Saturday, January 16, 2021

ஆல் பாஸ் முதல் அரியர் மாணவர்கள் வரை

இன்று தமிழகத்தில் பெரிய கோஷமாக முழக்கத்தில் இருப்பது கல்வியறிவு பெற்ற மாநிலம். மற்ற மாநிலங்களை விடப் பல மடங்கு அதிகம் படித்தவர்கள் இருக்கின்றார்கள். இவர்களை ஏமாற்ற முடியாது. 

ஆனால் எதார்த்தம் என்ன? 

முதல்படி கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டது. 

இரண்டாவது படி வறுமை தடையாக இருந்தது 

மூன்றாவது படி அனைவருக்கும் கல்வி. குறிப்பிட்ட தூரத்திற்குள் கல்விக்கூடம். 

நான்காவது படி சாப்பாடு உண்டு. வந்து படி. 

ஐந்தாவது படி சத்துணவு தருகின்றோம். வந்து படி. 

ஆறாவது படி இட ஒதுக்கீடு உண்டு. முன்னேற முடியும். வந்து படி. 

ஏழாவது படி 24 பொருட்கள் இலவசம். வந்து படி. 

ஏழு படிகளைத் தமிழ்நாடு கடந்து வந்து இப்போது எட்டாவது படியில் வந்து நிற்கின்றது. 

உன்னிடம் எவ்வளவு பணம் உள்ளது? இங்கே வா. 

என்னிடம் அதிகம் பணம் உள்ளது? அங்கே போ. 

என்னிடம் பணம் இல்லை. நீ போய் வரிசையில் நில். 

இது தான் தமிழகக் கல்வி வரலாறு. 

ஆனால் கல்வி மூலம் கற்ற, கற்றுக் கொண்ட கல்வியின் வெளிப்பாடு எப்படி உள்ளது. சமூக வலைதளங்களில் ப்ராங் ஷோ என்று யூ டியூப் ல் உள்ளது. அதில் காசு கொடுத்துப் பேச வைத்தவர்கள், இயல்பாகப் பேசியவர்கள் என்று இருபது வயதுக்குக் கீழே அல்லது அருகே உள்ளவர்கள் பேசும் பேச்சைக் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கே புரியும். 

இதன் விளைவுகள் எப்படி மாறியுள்ளது? 

இருபது வயதுக்குள் இருப்பவர்களிடம் 80 சதவிகிதத்தினருக்கு இந்தியா தமிழக வரலாறு எதுவும் தெரியாது. ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கும் எவரைப் பற்றியும் புரியாது. தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை. எல்லோருக்கும் சமூக வலைதள கணக்கு உண்டு. ஆனால் அவர்கள் கணக்கு செய்து வேறு விசயங்களில் மட்டுமே. 

இது வயதானவர்களின் புலம்பல் என்று தோன்றும். அவர்கள் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றார்கள் என்று ஆறுதல் சொல்ல முன் வரலாம். கடந்த முப்பது ஆண்டுகளில் நாம் பயன்படுத்தும் 80 சதவிகிதப் பொருட்கள் நம்முடையது அல்ல. மற்ற நாடுகள் கண்டுபிடித்து நாம் பயன்படுத்தும் வாடிக்கையாளராக இருக்கின்றோம். 

முப்பது ஆண்டுகள் இந்தியா முழுக்க இருந்த உயர்தரமான கல்விக்கூடங்கள் அனைத்தும் படித்தவர்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளது என்பது தான் நம் மகத்தான சாதனை. 

வீட்டுக்கொரு இஞ்சினியர். வீட்டுக்கொரு பட்டதாரி. வீடு முழுக்க கல்வி கற்றவர் என்ற இலக்கை அடைந்துள்ளோம். என்ன சாதகம்? என்ன பாதகம்? 
கேட்டுப் பாருங்கள்.

Thursday, January 14, 2021

தமிழர் திருநாள் வாழ்த்துகள் 2021

இன்று கொண்டாடிய பொங்கலில் எந்தச் சுவராசியமும் இல்லை. ஆனால் எனக்குக் கிடைத்த தின்பண்டங்கள் மிக அதிகம்.  நான் ஒரு மெது வடை விரும்பி. கூடவே காரச்சட்னி இருந்தால் போதும். அந்தக் காரமும் கண்ணிலிருந்து நீர் வரும் அளவிற்கு இருந்தால் மனமெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும். மகள்கள் என்னை வினோதமாக வேடிக்கை பார்ப்பார்கள். 



பூமி என்றொரு படத்தை இன்று பார்த்தேன். பத்து நிமிடங்களுக்கு மேல் என்னால் உட்கார முடியவில்லை. ஜெயம் ரவியின் 25 ஆவது படம். தமிழ் நடிகர்களுக்கு தங்களை சமூக ஆர்வலராகப் படத்தில் மட்டும் காட்டிக் கொள்ள ஆசை. களத்தில் வர அச்சம்.  கையிலிருந்து காசு எடுத்துச் செலவழிக்க அதை விடப் பயம் அதிகம் இருப்பதால் இது போன்ற படங்கள் தமிழ்நாட்டில் அடுத்த பத்தாண்டுகள் ஆனாலும் நிற்கப் போவதில்லை.

காங்கிரஸ் குறித்து இனம் புரியாத வெறுப்பு இருந்தாலும் இந்தப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. ராகுல் ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம், தேனி, கம்பம், மதுரை பக்கம் பொண்ணு எடுத்துக் கட்டினால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்.


வாழ்க்கை அதிர்ஷ்டம் என்ற தங்கத் தட்டை வாரி வழங்கினாலும் திறமையும் உழைப்பும் இல்லாவிட்டால் என்னவாகும்? என்பதற்கு இந்தப்படம் சாட்சி.


நான் எழுதுவதற்குக் காரணம் ராஜாராமன் என்பதனை பலமுறை பதிவு செய்துள்ளேன். அவருடைய மென்பொருள் இல்லாவிட்டால் நான் எழுதுவதை நிறுத்திவிடுவேன். அவருக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று பலமுறை யோசித்துள்ளேன். இப்போது கிடைத்துள்ளது. என்று வாழ்த்துகள்.


என் எழுத்துப் பயணத்தை மாற்றியதில் சீனிவாசனுக்குப் பங்குண்டு. ஆனந்தவிகடன் இந்த வருடம் அவருக்குச் சிறப்புச் செய்துள்ளது. என் வாழ்த்துகள்.   தை மாதத்தில் என் நெஞ்சுக்கு நெருக்கமான இருவரையும் உச்சி முகர்ந்து வாழ்த்துவதில் பெருமிதம் அடைகின்றேன்.


தம்பி ஒருவர் என்ன அண்ணே யூ டியூப் என்றால் இப்போது பரபரப்பான செய்திகளைப் போட்டுப் பல ஆயிரம் பார்வையாளர்களைத் தட்டிக் கொண்டு போவது தான் வாடிக்கை. நீங்க என்ன வேறு பாதையில் போய்க் கொண்டு இருக்குறீங்க? உங்களை மாற்றிக் கொள்ளலாமே? என்று கேட்டார்.  பத்து நிமிடப் பேச்சு. அரை மணி நேரம் மகள் அதனை யூ டியூப் க்காக மாற்றுவது என்பது மிகச் சாதாரணமாக விசயமாக மாறிவிட்டது.  

இது 18 முதல் 25 வயதுக்குள் இருப்பவர்களுக்காக மட்டுமே.  அது போன்ற வயதில் இருப்பவர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்.  100 பேர்கள் பார்த்தால் போதும் என்றேன்.  என் அடுத்த தலைமுறை உணர்ந்தால் போதும் என்றேன்.

மகள் விஜய் ரசிகை. கொரானா காலத்தில் மாஸ்டர் படம் பார்க்க திரையரங்கத்திற்கு அனுமதியில்லை என்றவுடன் கர்புர் என்று கோபத்துடன் அம்மாவைச் சுற்றிக்கொண்டு இருக்கின்றார். தொடர்ந்து ட்விட்டரில் கல்வி அமைச்சர் மற்றும் முதலமைச்சரிடம் பள்ளி திறப்பது குறித்து தினமும் எழுதிக் கொண்டேயிருந்தேன்.  வருகின்ற 19 ஜனவரி 2021 12 மற்றும் 10 ஆம் வகுப்பிற்கு மட்டும் பள்ளி வகுப்புகள் தொடங்கப்படுகின்றது. 

மகிழ்ச்சி.

அனைவருக்கும் தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

Wednesday, January 13, 2021

மொழியும் எழுத்தும் அண்ணன் தங்கை பாசம்

தமிழ் மன்னர்கள் காலம் முதல் அச்சுப் புத்தகம் காலம் வரைக்கும் மொழியும் எழுத்து வடிவமும் எத்தனை விதமாக மாறியுள்ளது. இன்று டிஜிட்டல் வாசிப்பில் வந்து நிற்கிறது. தமிழ் என்றும் வளரும். மாற்றத்துடன் பயணிக்கும்.

Monday, January 11, 2021

பணம் இனி தேவையில்லை

தொற்று நோய் குறித்த அச்சமும் தமிழகப் பொருளாதாரப் புழக்கமும் எப்படியுள்ளது?
வருகின்ற 13 ஆம் தேதி திருப்பூர் ஸ்ரீ சக்தி திரை அரங்கத்தில் மொத்தம் 47 காட்சிகள் (ஒரே நாளில்) மாஸ்டர் படம் திரையிடப்படுகின்றது. முன்பதிவு செய்யவில்லை. சும்மா பார்க்கிறேன் என்று விஜய் ரசிகை சென்று பார்த்தார். ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 380. ஓர் இருக்கை தள்ளி மற்றொரு இருக்கை என்கிற விதத்தில் தயார் செய்து உள்ளனர். அதாவது பாதிக்குப் பாதி. 47 காட்சிகளில் அதிகாலை 7 மணி காட்சியில் மட்டும் சில இருக்கைகள் மட்டும் உள்ளது. மற்ற அனைத்துக் காட்சிகளும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. இதுவே அடுத்த நாளும். அதற்கடுத்த நாளும். பொங்கலோ பொங்கல்.
ஒரு நாள் தொகை (அனைத்துக் காட்சிகள் சேர்த்து) என்னவாக வரும் என்று உத்தேசமாகக் கணக்கிட்ட போது இருபத்தாறு லட்சத்து எழுபத்து ஒன்பதாயிரம் ரூபாய் மட்டுமே. எழு நாட்கள் முழுமையாகக் கணக்கிட்டால் ஒரு கோடியே என்பத்தி எட்டு லட்சம். விஜய் தாராளமாக ஜிஎஸ்டி போக நூறு கோடி சம்பளமாக வாங்கத் தகுதி உள்ளது.


+++++


2020 ஆம் ஆண்டு நடந்த முக்கியமான மாற்றங்களில் ஒன்று மின்ணணு வர்த்தகம் மூலம் நடந்த பரிவர்த்தனைகள். சின்ன பெட்டிக்கடைகள் முதல் பெரிய கடைகள் வரைக்கும் அட்டை தான் பேசுகின்றது. அட்டைகளும் ஸ்கேன் செய்யக்கூடிய பரிவர்த்தனைகளும் இனி இந்தியர்களின் எதிர்காலம்.

Sunday, January 10, 2021

மாட்டிக் கொண்டால் மீள வழியில்லை

உங்களிடம் ஒரே விசயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லும் எரிச்சல் வரும். பயம் உருவாகும். வாசிப்பதை, பார்ப்பதைத் தவிர்த்து விடுவீர்கள். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு நீங்கள் ஓரளவுக்கேனும் இவற்றைப் பற்றித் தெரிந்து இருக்க வேண்டும். 

காரணம் நீங்கள் வாழ்ந்த விதத்திற்கும் உங்கள் அப்பா வாழ்ந்த விதத்திற்கும் கொஞ்சம் தான் வித்தியாசம். ஆனால் உங்கள் மகன் மகள் வாழப்போகும் உலகம் என்பது இதுவரையிலும் மானிட சமூகம் வாழாத புதிய வித்தியாசமான தொழில் நுட்ப உலகில் வாழப் போகின்றார்கள். தவிர்க்க முடியாது. ஒதுங்க முடியாது. வேண்டாம் என்று சொல்ல முடியாது. 

எவ்வளவு நல்லது உள்ளதோ? அவ்வளவு கெட்டதும் ஒவ்வொரு விசயத்திலும் இருக்கத் தானே செய்யும். ஆனால் இங்கு கெட்டது அதிகமாகவும் நல்லது தேடிக் கண்டுபிடிக்கும் அளவுக்கு இருப்பதால் 

இதனை நீங்கள் கேட்டுத் தான் ஆக வேண்டும். உங்கள் மகன் மகள் மனைவிக்குத் தெரியப்படுத்தத்தான் வேண்டும் என்பதே என் கோரிக்கை. நன்றி.

ஆவணங்கள் இன்றி பணம் தருகின்றோம்

6 வயது 11 லட்சம் - வீபரித விளையாட்டு

Saturday, January 09, 2021

எது பாதை? எது இலக்கு?

அதிகக் கட்டணம், நடுத்தரக் கட்டணம் உள்ள தனியார்ப் பள்ளிகள், தனிப்பட்ட நபர்களின் முயற்சியில் நன்றாக நடந்து கொண்டிருக்கின்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நாங்கள் சம்பளம் மட்டும் வாங்கத் தான் இந்தப் பணியில் சேர்ந்தோம்? என்று அக்கறையின்றி ஆசிரியப் பணியில் இருக்கும் ஜந்துகள் இருக்கும் பள்ளிகள்  என்று எல்லாப் படிக்கட்டுகளும் இப்போது ஒன்றாக மாறியுள்ளது.  



Friday, January 08, 2021

ஆவணங்கள் இன்றி பணம் தருகின்றோம்

கடன் வாங்குவது, பெறுவது குறித்து இரண்டு கருத்துக்கள் உள்ளது. ஒரு முதலாளி எப்போதும் கடன் வைத்துக் கொண்டே இருப்பார். காரணம் கேட்ட போது நான் அவர்களுக்கு இந்தக் கடன் கட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உருவாகும் போது அதிகாலையில் எழுந்து நான் உழைக்க வேண்டும் என்று என்னை நானே சுறுசுறுப்பாக மாற்றிக் கொள்கிறேன் என்றார். 

 மற்றொரு முதலாளி (இவர் தான் திருப்பூரில் எனக்குத் தெரிந்து கடன் இல்லாமல் வாழும் ஒரே நபர்) கடன் என்பது கொடூரமான விசயம். நாளை நான் இறந்து விட்டால் என் பிணத்தைப் பார்க்கும் என் வாரிசுகளுக்கு நான் யார் யாருக்கும் கடன் வைத்துவிட்டு சென்று உள்ளேன் என்பது தான் அவர்கள் மனதில் ஓடும். இதன் காரணமாகவே ஒவ்வொரு மாதமும் அனைத்தையும் கொடுத்து விடுகிறேன் என்றார். இது தொழிலில் நான் பார்த்த அனுபவம். ஆனால் தனி மனிதர்களின் வாழ்க்கையில் கடன் குறித்த அச்சம் விலகிவிட்டது. இது எனக்கு வேண்டும். கடன் என்பது தவறில்லை என்பதாக மாறிக் கொண்டே வருகின்றது. ஆசைகள் பேராசைகளாக மாறும் எல்லா விதிகளும் மாறிவிடுகின்றது. கடைசியில் சாவுக்கு அருகே அழைத்துச் செல்கின்றது.

Wednesday, January 06, 2021

6 வயது 11 லட்சம் - வீபரித விளையாட்டு

இணையம் என்பது காந்த கண்ணழகி. உள்ளே நுழைந்தால் வெளி வருவது கடினம். உங்கள் கட்டுப்பாடுகள் அனைத்தும் தகர்ந்து போய்விடும். 

குறிப்பாக இணைய விளையாட்டிற்கு நீங்கள் அடிமையானால் உங்கள் வங்கி கணக்கு துடைத்து எடுக்கப்படும் சூழல் உருவாகும்.

Tuesday, January 05, 2021

2020 மின்னூலாக

 2020 இறுதியில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது.

இன்று முதல் இலவசமாக வாசிக்க

நினைவுக் குறிப்புகளை குறைந்தபட்சம் வருடந்தோறும் எழுதிப் பாருங்கள். வழித்தடத்தை நினைத்துப் பார்க்க உதவும்.

#இலவசமாக வாசிக்க

#2020


புத்தகம் பெற இணைப்பு

Monday, January 04, 2021

ஆதிக்கம் செலுத்திய ஐந்து விசயங்கள்

2020 இறுதியில் யூ டியூப் அறிமுகமானது. இங்கு செயல்படுபவர்கள் பரபரப்புக்காக உருவாக்கும் தலைப்புகள் எதையும் நான் தேர்ந்தெடுக்கவில்லை. சமகால மனிதர்களின் பார்வையில் நான் பார்த்த கேட்ட புரிந்து கொண்டு விசயங்களில் மட்டுமே கவனம் செலுத்தினேன். சிறப்பான ஆதரவு கிடைத்தது. ஆதரவளித்த, தொடரும், தொடர நினைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் 2021 ல் நிறைவேற என் வாழ்த்துகள்.

Friday, January 01, 2021

அண்ணா - கலைஞர்: 1967 - 2018 Tamil Nadu Political History

 2021

வாழ்த்துகள்
இன்று முதல் இலவசமாக வாசிக்க
நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள
அண்ணா - கலைஞர்: 1967 - 2018 Tamil Nadu Political History
http://amzn.to/2WXbY1g (இந்தியா)