Friday, October 27, 2023

அவர் பெயர் பி. ஜெய்னுல் ஆபிதீன்.

 1980 முதல் 1990 வரை பள்ளி முதல் கல்லூரி வரை வீட்டுக்கு வந்தவரை பாயம்மா வந்துருக்காங்க என்ற சொல் அளவுக்கு உறவு இருந்தது.  கறிக்கடை பாய் மற்றும் மீன் கதை பாய் போன்றவர்கள் சாகின்ற வரைக்கும் காசுக்கு அல்லாடிக் கொண்டே இருந்தவர்களாக வாழ்ந்து இறந்தார்கள். நெல்மூட்டையை இறக்கியாச்சுன்னு அத்தாகிட்ட சொல்லும்மா என்று என்று அரபு உடை இல்லாத முகம் காட்டிய இயல்பான பெண்ணிடம் எளிதாகச் சொல்லிவிட்டு வர முடிந்தது. பெரிய அகப்பையில் கால் கிலோ கறி என்கிற அளவுக்கு  மகன் மகள் திருமணத்தில் உறவு போலக் கலந்து கொள்ள முடிந்த காலம் ஒரே ஒரு நபரால் தமிழகத்தில் மொத்தமும் மாற்ற முடிந்தது. மாற்றினார். 

அவர் பெயர் பி. ஜெய்னுல் ஆபிதீன்.


Tuesday, October 24, 2023

தரமான உணவென்பது இங்கே கனவு தான்.

நேற்று பூஜைப் பொருட்கள் வாங்கச் சென்ற போது தான் கவனித்தேன்.  ஒவ்வொரு இடத்திலும் கூட்டம் இருந்தது.  ஆனால் எள் போட்டாலும் எண்ணெய் ஆகின்ற அளவு என்பது போலக் கூட்டத்தைப் பார்க்க முடியவில்லை.  காய்கறிகளின் விலை மட்டும் நூறு சதவிகிதம் வியாபாரிகள் ஏற்றியுள்ளனர்.  கத்திரிக்காய் ஒரு கிலோ ரூபாய் நாற்பது என்று இருந்தது. நேற்றும் இன்றும் ரூபாய் 110. முருங்கைக்காய் இந்த பருவகாலத்தில் குப்பையில் கொட்டும் அளவுக்கு ஒரு கிலோ முப்பது ரூபாய்க்குள் இருந்தது. இப்போது ஒரு காய் பத்து ரூபாய். நான் ஏற்கனவே எழுதியது போல மளிகை சாமான்கள் விலை அனைத்தும் டபுள் ட்ரிபிள்.  



Sunday, October 15, 2023

எம்ஜிஆர் வழங்கிய கொடையால் கருணாநிதி திமுக தலைவரானார்

 திமுக நிறுவனர் அண்ணாதுரை அவர்கள் மறைந்த போது தமிழகத்தில் இருந்த திமுக வின் அமைப்பின் எண்ணிக்கை 18,000 (2024 ஜனவரி மாதம் வரப்போகும் அரசியல் வரலாறு புத்தகத்தில் இது குறித்து ஓர் அத்தியாயத்தில் எழுதியுள்ளேன்).  மாவட்டம் தோறும் திமுக வின் மன்றம், பாசறை, படிப்பகம் போன்ற பல பெயர்களில் இயங்கியது.  நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். இருந்தது என்று நான் இங்கே எழுதவில்லை.  இயங்கியது என்று தான் எழுதியுள்ளேன்.  காரணம் ஒவ்வொரு  ஊரிலும் (குக்கிராமம் வரைக்கும்) பத்துக்குப் பத்து அறை போன்ற அமைப்பில் (90 சதவிகிதம் கீற்றுக் கொட்டகை தான்.  மழை பெய்தால் ஒழுகும்) நெருக்கியடித்துக் கொண்டு படித்தவர்களை நானே என் சிறு வயதில் பார்த்துள்ளேன். நான் நூலகம் விடுமுறை தினங்களில் அங்கே போய் வந்துள்ள பத்திரிக்கைகளைப் படித்துள்ளேன்.

Friday, October 13, 2023

யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள்.

 தங்கள் ஓட்டின் மதிப்பு தெரிந்தவர்கள்.

யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள்.

ஒரே குடையின் கீழ் திரளக்கூடியவர்கள்.

உத்தரவு வந்ததும் ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வி எதுவும் கேட்காமல் சொன்னபடி சிந்தாமல் சிதறாமல் ஓட்டளிக்கும் மனப் பக்குவம் பெற்றவர்கள்.

கிறிஸ்துவச் சமூகம் மற்றும் இஸ்லாமியர்களும். 



Tuesday, October 10, 2023

அன்புள்ள தம்பி

 அன்புள்ள தம்பி

வாட்ஸ்அப் வழியாக வந்த உன் அவசரக் கடிதம் கண்டு நொந்தேன். உரிமையுடன் அக்கா என்று அழைத்தாலும் கலாய்ப்பதற்கு இது தான் நேரமா?  ஓர் அளவில்லையா? கூட்டணி முறிந்ததால் உழைக்காமல் பதவி சுகத்தை அனுபவித்தவர்களுக்கு இனி வரும் காலம் அரசியல் அனாதை தான் என்பதெல்லாம் பெரிய வார்த்தை தானே?  இப்படி எழுதிப் புண்படுத்தாதே தம்பி.

Sunday, October 08, 2023

2023 அதீத விலைவாசி உயர்வு

 இன்று சந்தையில் நான் பார்த்த சில விசயங்கள், பேசிய பெண்கள் நேற்று மளிகை கடை சென்று வெந்து போய் வந்த நிலை மூலம் மனதில் தோன்றும் கேள்விகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

Friday, October 06, 2023

வந்தே பாரத் ரயில் யாரை கதறடிக்கின்றது?

 சில தினங்களுக்கு முன் ஒருவர் கதை எழுதித் தொடங்கி வைத்திருந்தார்.  அதாவது "வந்தே பாரத் ரயில் என்பதனை நான் கண்டு கொண்டதில்லை. அது ஏழைகளின் எதிரி". 

வாசித்தவுடன் புளகாங்கிதமடைந்தேன்.

Sunday, October 01, 2023

இங்கே நாய்கள் குலைக்கும்....

நேற்று காலையில் மகள் வந்து சொன்னார். பெல்ட் குட்டி போட்டுள்ளது என்று.  யாரோ ஒருவர் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயது.  கழுத்தில் கட்டப்பட்டு இருந்த பெல்ட் உடன் வெளியே வந்து விட்டது.