பயமும் பரிதாபமாய் ரங்கநாத் மனைவி மிருதுளா பெங்களூர் நகர காவல்துறையிடம் பேசி முடித்ததும், துணை கமிஷனர் ஒருவரை காரில் அழைத்துக்கொண்டு தூரத்தில் இருந்தபடியே சிவராசன் குழுவினர் தங்கியிருந்த தங்களுடைய வீட்டை அடையாளம் காட்டினார். சிவராசன், சுபாவுடன் திருச்சியில் இருந்து தப்பித்த ரங்கன், மற்றும் சுரேஷ் மாஸ்டர் கூட்டணியினர் உள்ளே இருந்தனர்.
கோனனகுண்டேவில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதை அந்த வீட்டின் மிக அருகில் ஓட்டியிருந்த வீட்டின் குளியல் அறையில் இருந்தபடியே பார்க்க முடியும். துணை கமிஷனர் மற்றும் சில காவல்துறையினருடன் சேர்ந்து அந்த வீட்டைக் கண்காணித்தபடி இருந்தனர். இவர்கள் மறைவிடத்தில் நிறுத்தியிருந்த வாகனத்தை வெளியே வந்த ரங்கன் பார்த்துவிட்டு பின்வாங்கியபடியே போய் தப்பிவிட்டார். இரவு முழுக்க சுற்றிலும் பாதுகாப்பு படையினருடன் கண்காணிக்கப்பட்டது.முழுமையாக உறுதிப்படுத்த வேண்டும். மனைவியை காவல்துறையினர் பிடித்துவிட பயந்து போன ரங்கநாத் லாட்ஜ்ல் தங்கி விட்டு மறுநாள் கோனனகுண்டேவிற்கு வர பொதுமக்கள் அடையாளம் காட்டி பிடித்துக் கொடுத்து விட்டனர். அவர் சயனைடு விழுங்க முயற்சித்து அந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டது.
இரவு பகல் பராமல், குடும்ப வாழ்கை மறந்து மொத்த குழுவினரின் ஒரே லட்சியமான சிவராசனை துரத்திக்கொண்டு வந்தவர்கள் இப்போது எதிரே உள்ளே வீட்டுக்குள் இருக்கிறார் என்று தெரிந்தும் ஒன்றும் செய்யமுடியாமல் தடுமாறிக்கொண்டுருந்தனர். உள்ளே உடனடியாக நுழைய அனுமதி கிடைக்கவில்லை. டெல்லி அதிகார மக்கள் மிகுந்த புத்திசாலி. இந்த இடம் தான் கடைசி வரைக்கும் புலனாய்வு குழுவில் பணிபுரிந்தவர்களுக்கும்,இந்த SITஎன்று உருவாக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினரை தலைமைப்பொறுப்பில் இருந்து வழிநடத்திக்கொண்டுருந்த கார்த்திகேயனுக்கு மிகுந்த அயர்ச்சியையும், தர்மசங்கடத்தையும் கொடுத்தது என்றால் அது மிகையில்லை.
ஏன் உடனடியாக உத்தரவு வரவில்லை? கொடுக்கப்படவில்லை? என்பதற்கு இரண்டு விதமாக யோசித்திப்பார்க்கலாம். தப்பிச்செல்ல சூழ்நிலை அவர்களுக்கு கிடைத்தால் நல்லது. மீண்டும் அவர்களை பிடிக்க முடியும் என்பது உத்தரவு கொடுக்க வேண்டியவரின் வாதம். அல்லது எதனால் அவர் அவ்வாறு கொடுக்கவில்லை என்பதும் அவரை இயக்கிய சக்தி அப்போது என்னவாக இருந்துருக்கும் என்பதும் மறுநாள் பிறந்தநாள் வரும் ராஜீவ் ஆன்மாவுக்குத் தான் தெரியும். காரணம் ஏற்கனவே நடந்த நிகழ்வில் உருவான ஒவ்வொரு நிமிட தாமதமும் குழுவினர் சயனைடு சுவைக்க உருவாக்கிய தருணங்கள் அது. அவர்களைப் பொறுத்தவரையில் உயிரை விட கொள்கை பெரிது. கொள்கையை விட இயக்கம் அதன் கட்டுப்பாடு அத்தனை உன்னதமானது. உணர்ந்து என்ன பிரஜோயனம்? ஜனநாயக கட்டுப்பாடு கட்டுக்களைத் தான் போட்டு இருந்தது?
மொத்த குழுவினர்களுகளுடன் பொதுமக்களும் சூழ்ந்து அந்த பகுதியே ஒரு விதமான அசாதரணமாக சூழ்நிலை நிலவிக்கொண்டுருந்தது. அதிரடியாக உள்ளே நுழைந்து விடலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது. பால்கார பெண்மணியை அனுப்ப யோசித்தார்கள். அவரையும் உள்ளே பிடித்து வைத்துக்கொண்டால்? வீட்டின் உள்ளே செல்லும் குழாயில் மயக்க மருந்து கலக்கலாமா? வாதப்பிரதி வாதங்கள். உள்ளுர் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. அவசர ஊர்தி உடனடியாக ஏற்பாடு செய்து இருந்தனர். ஏற்கனவே நடந்துருந்த சயனைடு மரணங்கள் காரணமாக மருத்துவகுழு எல்லாம் வந்து இறங்கிய பிறகு சிபிஐ இயக்குநரும் வந்து சம்பவ இடத்திற்கு வந்து இருந்தார். அத்தனையும் அவர் மேற்பார்வையில் (?) நடந்து கொண்டுருந்தது. அதிரடிப்படையினர் தயாராக இருந்தனர்.
1991 ஆகஸ்ட் 19 அதிகாலை வேளை. அந்த தெருவின் வழியே வந்த டிரக் எதிர்பாரதவிதமாக பழுதாகி மிகச் சரியாக அந்த வீட்டுக்கு முன் நின்று கொண்டு அவர்கள் சரி செய்யத் தொடங்க சம்மந்தம் இல்லாத சூழ்நிலையை உள்ளே இருந்தவர்கள் தவறாக புரிந்து கொண்டு சுடத் தொடங்கினர். புலனாய்வு குழுவினர் ஓளிந்து இருந்து பார்த்த குளியலைறை நோக்கி குண்டுகள் சரமாரியாக வரத்தொடங்கின. அப்போது பு.கு. அங்கே இல்லாத காரணத்தால் எவருக்கும் பிரச்சனை இல்லை. அதிரடிப் படையினரும் சுட ஆரம்பிக்க, வீட்டின் உள்ளேயிருந்து வந்து கொண்டுருந்த குண்டுகள் அதிரடிப்படையில் உள்ள ஒரு வீரருக்கும் ஒரு காவல்துறை அதிகாரியையும் வந்து தாக்கியது. அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டுக்குள் இருந்து வந்த கொண்டுருந்த குண்டு முழக்கம் ஓய்ந்தது.
கடந்த 24 மணிநேரமாக வெளியே காத்துக்கொண்டருந்த அதிரடிப்படையினர், உத்தரவு கிடைக்கப்பெற்று (?) காலை ஆறுமணிக்கு நுழைய இத்தனை நிகழ்ச்சிகளையும் அங்கு வந்த தூதர்ஷன் நேரிடையாக படம் பிடித்துக்கொண்டுருந்தது. உள்ளே இருந்தவர்கள் அத்தனை பேர்களும் இறந்து கிடந்தனர். சயனைடு சாவு, வெடித்த குண்டுகள், இதற்கு மேலும் சிவராசன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை சுட்டுக்கொண்டு இறந்து கிடந்தார்.
சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர்,அம்மன், டிரைவர் அண்ணா,முதல் நாள் வந்து சேர்ந்து இருந்த ஜமுனா. இருந்து கிடந்தனர். கோடியக்கரைக்கு வந்து இறங்கியவர்களும் எட்டுபேர்கள் வந்து இறங்கினர். அதே போல் வேறு வகையில் உருவானவர்கள் ஒன்றிணைந்தவர்கள் உள்ளே இறந்து கிடந்தனர். அதிரடிபடையினர் தாமதமாக உள்ளே நுழைய எல்லாம் முடிந்து போயிருந்தது.. சரியாக அன்றைய தினம் ஆகஸ்ட் 20. ராஜீவ் காந்தியின் பிறந்த தினம்.
மயிரிழையில் அங்கிருந்து வெளியே தப்பியிருந்த ரங்கன் கூட்டணியினர் உத்தரவுபடி வெள்ளைநிறமாக மாற்றப்பட்ட மாருதி ஜிப்ஸியில் சென்னைக்கு வந்துருந்தார். ஆவடியில் தங்கியிருந்தவர் குறிப்பிட்ட டிராவல் (?) ஏஜென்ஸிக்கு வர அங்கு காத்து இருந்த புலனாய்வு குழுவினரை பார்த்ததும், சாலையில் ஓடத் துவங்க, திரைப்பட சாகச காட்சி போல துரத்திச் செல்ல சயனைடு குப்பியை கடிக்க முற்படும் போது தடுத்து அவர் மூலம் பெற்ற தகவல் தான் சிவராசன் குழுவினர் டேங்கர் லாரியின் உள்புறம் ஒளிந்து தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இப்போது மொத்தமும் ஒரு முடிவுக்கு வந்து விட்டது. சர்வதேச இன்டர்போல், அயல்நாட்டு தூதரங்கள், இ.பி.கோ, தடா, பொடா, தேவைப்டும் ஆவணங்கள், தனி மனித வழிகாட்டல், குழுவினரின் தியாக மனப்பான்மை, உறக்கம் மறந்த நாட்கள் என வெறும் வெள்ளை காகிதம் போல் இருந்த சதிவலையை இதற்கு பின்னால் நேரிடையாக மறைமுகமாக செயல்பட்டவர்கள் என அத்தனை பேர்களையும் ரவுண்டு கட்டி வட்டத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தியாகி விட்டது.
புலனாய்வு குழுவினரை, செய்திதாள்கள், தனிப்பட்ட அதிகார வர்க்கம், பாராட்டுரைகள் வழங்கியதைப் போல இதற்குப் பினனால் நாம் இப்போது பேச வேண்டியது?
ஏன் ராஜீவ் காந்தி படுகொலை நடந்தது?
இந்த புலனாய்வு குழுவினர் குறித்த மொத்த புரிதல்கள் என்ன?
இந்தியா விடுதலைப்புலிகளின் பலம் பலவீனம் என்ன?
இருவரின் மொத்த உள்கட்டமைப்பின் நீள அகலம்?
இதுவொரு இந்த நூற்றாண்டின் மகத்தான சாதனை என்றாலும் வெளியே தெரியாத சோதனைகள் என்ன?
முழுமையாக கார்த்திகேயன் மற்றும் அவரது குழுவினரும் ஜெயித்து விட்டார்களா?
பாரபட்சம் இல்லாமல் அடித்து துவைத்து காயப்போட்டால் தான் கறைகள் என்பது ஆடையில் எந்தந்த இடத்தில் இருந்தது, இன்னமும் இருக்கிறது என்பதை நாம் உணரத்தானே வேண்டும்......................................?????,
அது தெரிந்தால் தான் 1991க்கு பிறகு ஏறக்குறைய தான் வைத்திருந்த தனித் தமிழீழம் என்ற கொள்கையை ஏறக்குறைய 90 சதவிகிதம் அடைந்து, வெளிநாட்டு தூதரகங்கள், ஐ.நா சபை அங்கிகாரங்கள் மட்டும் இல்லாத ஆட்சி செலுத்திய பிரபாகரன் குறித்து நாம் புரிந்த கொள்ள முடியும்? முள்ளிவாய்க்கால் வரைக்கும் தொடர வேண்டுமென்றால் இன்னும் எட்டு வருடங்களை மூன்று ஆட்சியாளர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்? அப்போது தான் நடத்தி முடிந்த கோரத்திற்காக மூன்று வருடங்கள் சிங்கள தலைவர்களும் சர்வதேச சமூகமும் உழைத்த உழைப்பை முழுமையாக நாம் உண்ர்ந்து கொள்ள முடியும்?
புலனாய்வு குழுவினர் மேல் உள்ள அரசியல் சார்பான விமர்சனங்களையும், இந்திய அதிகார வர்க்கம் குறித்த புரிதல்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சந்திரிகா, ரணில்விக்ரமசிங்கே, கருணா பிரிவு, கடைசியாக கதாநாயகனாக ஆண்டு கொண்டுருப்பவர்கள்.
நல்ல புரிந்துணர்வுடன் மீண்டும் ஒரு நாள் தொடர்வோம். காரணம் ரதம் ஓட்டியவர் மூச்சு தம் பிடித்து வாழ்ந்து கொண்டுருக்கிறார். மற்றொருவர் மது தந்த போதை போல் திளைத்துக்கொண்டு இருக்கிறார். ஒருவர் இப்போது புழுங்கிக்கொண்டு மற்றொருவர் புல்லரித்துப்போய் உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டு அரசியலைத் தவிர எங்கள் குடும்பத்துக்கு வேறொன்றும் தெரியாது என்கிறார். காரணம் இலங்கை சுதந்திரம் அடைந்த போது இந்த மேதகுவுக்கு வயது 3 (?),
வெற்றி பெற்றவர் மட்டுமல்ல அவரை சார்ந்து இருப்பவர்கள் அத்தனை பேர்களும் மரண பீதியில் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். ஏன்? வெற்றிச் சின்னம் என்று அத்தனை தமிழர் பண்பாட்டு சின்னங்களையும் அழித்து ஒழிக்கும் வேலையை முழு மூச்சாக வைத்துக் கொண்டு சுருதி சுத்தமாக செயல்பட்டுக்கொண்டுருந்தாலும் உள்ளே இருக்கும் மரண பீதியை மறைக்க முடியவில்லை. வல்லரசு போய் ஒவ்வொரு முறையும் கண்ணீரை துடைக்க வேண்டியதாய் இருக்கிறது. பாரபட்சம் இல்லாமல் கொழும்பு முதல் டெல்லி வரைக்கும் படையெடுப்பு இந்த நிமிடம் வரைக்கும் தினந்தோறும் தெரிந்தும் தெரியாமலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.
நிரந்தரம் இனி நாம் தான் என்றவர்கள் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் நிச்சயமில்லாத விடியலை நோக்கி நகர்ந்து கொண்டுருக்கிறது. ஆடு புலி ஆட்டத்தில் இன்னும் ஏப்ரல் மாத ஒரு ஆட்டம் இருக்கிறது. நடந்த முடிவுகளுக்கும் செயல்படுத்திய முயற்சிகளுக்கும் காலம் அடுத்து என்ன மாதிரி புரிந்துணர்வை தனக்குள் வைத்து இருக்கிறது என்பதை அறிந்தவர் எவரும் இல்லை?
தமிழினம் நல்ல முறையில் எதிர்காலத்தில் சுதந்திரமாய் வாழ வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாகவும் தனக்கு என்ன லாபம் என்பதை கருத்தில் கொண்டு வாழ்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகவும் இருக்கிறது? இந்தியாவை நோக்கி, தமிழ்நாட்டு தலைவர்களை நோக்கி கை நீட்டும் உலகத் தமிழர்கள் அத்தனை பேர்களும் இன்று இலங்கையில் அதிகாரப் போட்டியில் நீயா நானா என்று சாமரம் வீச காத்துக்கொண்டுருப்பவர்களை என்ன பெயர் சொல்லி அழைக்க முடியும்? அன்று விடுதலைப்புலிகளுக்கு வரி என்ற பெயரில் கொடுத்தீர்களே? இன்று எங்களுக்கு கொடுங்கள் என்று இன்று தோன்றியுள்ள தமிழினத் தலைவர்களால் இன்றும் பாதிக்கப்பட்டுக் கொண்டுருப்பது அப்பாவி திருவாளர் பொதுஜனம் மட்டுமே?
பக்கம் பக்கமாக பிரபாகரன் சர்வாதிகாரத்தை, அவரின் நீக்கு போக்கற்ற தன்மையை வார்த்தைகளால் விளாச தெரிந்தவர்களால், விரும்பியவர்கள் கேட்ட இன்றைய பரிபூரண சுதந்திர காற்றில் உலாவிக்கொண்டுருக்கும் விஷவாயுக்களைப் பற்றி வாய் திறந்து பேச மறுப்பதேன்?
இலங்கை தமிழினத்தை சவக்குழி போல் ஆக்கினாலும் சுதந்திர வேட்கை என்பது ஒரு சிறிய விதை மட்டுமே. கொழும்புவில் வாழ்ந்த பிரபாகரன் உறவினர்கள் பெற்ற துன்பத்தை மிகச் சிறிய வயதில் கேட்டு உள்ளே உருவாக்கிக்கொண்ட வேட்கை ஆலமரமாக பின்னால் வானாளவ உயர்ந்து நின்றது. தமிழரசு கட்சியில் இருந்து விலகி ஆசிரியர் தொழில் செய்து கொண்டுருந்த வேணுகோபால் மாஸ்டர் உருவாக்கிய "உரிமை என்பது கேட்டுப் பெறுவது அல்ல. அடித்துப் பெறுவதே. காந்தியின் அமைதி வழி என்பது சிங்களர்களிடத்தில் எதிர்பார்த்தால் இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் தமிழன் என்பவன் அடிமையே" என்ற தராக மந்திரம் இடைவிடாது ஒலிக்க தனிப்பாதை உருவாகி அடுத்த கால் நூற்றாண்டு ஒவ்வொரு சிங்களரையும் அச்சத்தின் உச்சமாய் அவஸ்த்தையாய் வாழ வைத்தது. இன்று சர்வதேச சமூகமும் ஹம்பன் முதல் கொழும்பு வரைக்கும், யாழ்பாணம் முதல் காலி வரைக்கும் புடம் போட்டு இலங்கை மக்களுக்கு என்று பல புனித நிகழ்வுகளை உருவாக்கிக்கொண்டுருந்தாலும்,
" சுதந்திரத்திற்காக போராடுகின்ற மக்களின் மீது யாருமே கடைசி தோல்வியை ஏற்படுத்தி விட முடியாது? இலங்கை தமிழர்களை அழிவுக் குவியலாக மாற்றி விடலாம். ஆனால் நிரந்தர அடிமையாக மாற்றி வைக்க முடியாது"
இன்று ஓரு இன அழிவின் முடிவில் ராஜபக்ஷே மகன் அதிகாரத்தின் பாலபாடத்தை கற்றுக் கொள்ள உள்ளே வந்து இருக்கிறார். சொல்ல முடியாது? இவரின் ஆட்சியில் வேறொருவர் (?) வந்து நிற்கலாம்? அப்போது உருவாகக்கூடியவர் பிரபாகரனிடம் இருந்த சிறிதளவு இரக்கம் கூட இல்லாத பட்சத்தில் ஒரு இனத்தையே தேடிப்பார்க்க வேண்டிய அளவிற்கு புதிய எழுச்சி அப்போது உருவாகலாம். அன்றைய சூழ்நிலையில் வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டுருக்கும் வேறொரு சர்வ தேச சமூகம் உள்ளே வந்து ஆயுதக்கடை விரிப்பை அட்டகாசமாக தொடங்கலாம்? மறுபடியும் 7000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பூர்வ இலங்கையில் இருந்த நாகர்கள் போல் தொடக்கத்தில் இருந்த புதிய தலைமுறைகள் உருவாகக்கூடும்?
தீர்வுகள் சரியான முறையில் தீர்க்கப்படாதவரையிலும் எந்த சுதந்திரப் போராட்டமும் அழிந்து போய்விடுவதில்லை. காரிய இருள் என்றால் விடியல் மிக அருகில் உண்டு என்று தானே அர்த்தம்.
இதற்குப்பிறகு ஒவ்வொன்றும் சர்வதேச அரசியல் பங்கெடுப்பதால் இடுகை என்ற வாசிப்புக்கு தகுந்தாற் போல சூழ்நிலை உருவாக்கும் நிலையில் நிச்சயம் உணர்ந்து கொள்வோம். தொடர்பவர்கள், விரும்புபவர்கள் பொறுத்தருள்க?
உணர்ந்தவர்கள், அமைதியாய் தொடர்ந்தவர்கள் உங்கள் விமர்சனங்களை, எண்ணங்களை பதிவு செய்தால் பலருக்கும் பயன் உள்ளதாக இருக்கட்டுமே?
வாழ்வில் உருவாகும் நெருக்கடியான சமயங்கள் நிறைய அனுபவங்களையும் புதிய போராடக்கூடிய சக்தியையும் அளிக்கவல்லது. உணர்ந்தவர்கள் ஜெயிக்கக்கூடியவர்கள்.