அஸ்திவாரம்

Saturday, March 20, 2010

சிவராசன் சுபா கூட்டணி அதிரடிப்படை இறுதிக்கட்டம்

பயமும் பரிதாபமாய் ரங்கநாத் மனைவி மிருதுளா பெங்களூர் நகர காவல்துறையிடம் பேசி முடித்ததும், துணை கமிஷனர் ஒருவரை காரில் அழைத்துக்கொண்டு தூரத்தில் இருந்தபடியே சிவராசன் குழுவினர் தங்கியிருந்த தங்களுடைய வீட்டை அடையாளம் காட்டினார். சிவராசன், சுபாவுடன் திருச்சியில் இருந்து தப்பித்த ரங்கன், மற்றும் சுரேஷ் மாஸ்டர்  கூட்டணியினர் உள்ளே இருந்தனர்.
கோனனகுண்டேவில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதை அந்த வீட்டின் மிக அருகில் ஓட்டியிருந்த வீட்டின் குளியல் அறையில் இருந்தபடியே பார்க்க முடியும். துணை கமிஷனர் மற்றும் சில காவல்துறையினருடன் சேர்ந்து அந்த வீட்டைக் கண்காணித்தபடி இருந்தனர்.  இவர்கள் மறைவிடத்தில் நிறுத்தியிருந்த வாகனத்தை வெளியே வந்த ரங்கன் பார்த்துவிட்டு பின்வாங்கியபடியே போய் தப்பிவிட்டார். இரவு முழுக்க சுற்றிலும் பாதுகாப்பு படையினருடன் கண்காணிக்கப்பட்டது.முழுமையாக உறுதிப்படுத்த வேண்டும். மனைவியை காவல்துறையினர் பிடித்துவிட பயந்து போன ரங்கநாத் லாட்ஜ்ல் தங்கி விட்டு மறுநாள் கோனனகுண்டேவிற்கு வர பொதுமக்கள் அடையாளம் காட்டி பிடித்துக் கொடுத்து விட்டனர். அவர் சயனைடு விழுங்க முயற்சித்து அந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டது.

இரவு பகல் பராமல், குடும்ப வாழ்கை மறந்து மொத்த குழுவினரின் ஒரே லட்சியமான சிவராசனை துரத்திக்கொண்டு வந்தவர்கள் இப்போது எதிரே உள்ளே வீட்டுக்குள் இருக்கிறார் என்று தெரிந்தும் ஒன்றும் செய்யமுடியாமல் தடுமாறிக்கொண்டுருந்தனர். உள்ளே உடனடியாக நுழைய அனுமதி கிடைக்கவில்லை.  டெல்லி அதிகார மக்கள் மிகுந்த புத்திசாலி.  இந்த இடம் தான் கடைசி வரைக்கும் புலனாய்வு குழுவில் பணிபுரிந்தவர்களுக்கும்,இந்த SITஎன்று உருவாக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினரை தலைமைப்பொறுப்பில் இருந்து வழிநடத்திக்கொண்டுருந்த கார்த்திகேயனுக்கு மிகுந்த அயர்ச்சியையும், தர்மசங்கடத்தையும் கொடுத்தது என்றால் அது மிகையில்லை.

ஏன் உடனடியாக உத்தரவு வரவில்லை? கொடுக்கப்படவில்லை? என்பதற்கு இரண்டு விதமாக யோசித்திப்பார்க்கலாம்.  தப்பிச்செல்ல சூழ்நிலை அவர்களுக்கு கிடைத்தால் நல்லது.  மீண்டும் அவர்களை பிடிக்க முடியும் என்பது உத்தரவு கொடுக்க வேண்டியவரின் வாதம்.  அல்லது எதனால் அவர் அவ்வாறு கொடுக்கவில்லை என்பதும் அவரை இயக்கிய சக்தி அப்போது என்னவாக இருந்துருக்கும் என்பதும் மறுநாள் பிறந்தநாள் வரும் ராஜீவ் ஆன்மாவுக்குத் தான் தெரியும். காரணம் ஏற்கனவே நடந்த நிகழ்வில் உருவான ஒவ்வொரு நிமிட தாமதமும் குழுவினர் சயனைடு சுவைக்க உருவாக்கிய தருணங்கள் அது. அவர்களைப் பொறுத்தவரையில் உயிரை விட கொள்கை பெரிது.  கொள்கையை விட இயக்கம் அதன் கட்டுப்பாடு அத்தனை உன்னதமானது.  உணர்ந்து என்ன பிரஜோயனம்?  ஜனநாயக கட்டுப்பாடு கட்டுக்களைத் தான் போட்டு இருந்தது?

மொத்த குழுவினர்களுகளுடன் பொதுமக்களும் சூழ்ந்து அந்த பகுதியே ஒரு விதமான அசாதரணமாக சூழ்நிலை நிலவிக்கொண்டுருந்தது. அதிரடியாக உள்ளே நுழைந்து விடலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது.  பால்கார பெண்மணியை அனுப்ப யோசித்தார்கள். அவரையும் உள்ளே பிடித்து வைத்துக்கொண்டால்? வீட்டின் உள்ளே செல்லும் குழாயில் மயக்க மருந்து கலக்கலாமா? வாதப்பிரதி வாதங்கள். உள்ளுர் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. அவசர ஊர்தி உடனடியாக ஏற்பாடு செய்து இருந்தனர்.  ஏற்கனவே நடந்துருந்த சயனைடு மரணங்கள் காரணமாக மருத்துவகுழு எல்லாம் வந்து இறங்கிய பிறகு சிபிஐ இயக்குநரும் வந்து சம்பவ இடத்திற்கு வந்து இருந்தார்.  அத்தனையும் அவர் மேற்பார்வையில் (?) நடந்து கொண்டுருந்தது.  அதிரடிப்படையினர் தயாராக இருந்தனர்.

1991 ஆகஸ்ட் 19 அதிகாலை வேளை. அந்த தெருவின் வழியே வந்த டிரக் எதிர்பாரதவிதமாக பழுதாகி மிகச் சரியாக அந்த வீட்டுக்கு முன் நின்று கொண்டு அவர்கள் சரி செய்யத் தொடங்க சம்மந்தம் இல்லாத சூழ்நிலையை உள்ளே இருந்தவர்கள் தவறாக புரிந்து கொண்டு சுடத் தொடங்கினர். புலனாய்வு குழுவினர் ஓளிந்து இருந்து பார்த்த குளியலைறை நோக்கி குண்டுகள் சரமாரியாக வரத்தொடங்கின.  அப்போது பு.கு. அங்கே இல்லாத காரணத்தால் எவருக்கும் பிரச்சனை இல்லை. அதிரடிப் படையினரும் சுட ஆரம்பிக்க, வீட்டின் உள்ளேயிருந்து வந்து கொண்டுருந்த குண்டுகள் அதிரடிப்படையில் உள்ள ஒரு வீரருக்கும் ஒரு காவல்துறை அதிகாரியையும் வந்து தாக்கியது. அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டுக்குள் இருந்து வந்த கொண்டுருந்த குண்டு முழக்கம் ஓய்ந்தது.

கடந்த 24 மணிநேரமாக வெளியே காத்துக்கொண்டருந்த அதிரடிப்படையினர், உத்தரவு கிடைக்கப்பெற்று (?) காலை ஆறுமணிக்கு நுழைய இத்தனை நிகழ்ச்சிகளையும் அங்கு வந்த தூதர்ஷன் நேரிடையாக படம் பிடித்துக்கொண்டுருந்தது. உள்ளே இருந்தவர்கள் அத்தனை பேர்களும் இறந்து கிடந்தனர். சயனைடு சாவு, வெடித்த குண்டுகள், இதற்கு மேலும் சிவராசன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை சுட்டுக்கொண்டு இறந்து கிடந்தார்.
சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர்,அம்மன், டிரைவர் அண்ணா,முதல் நாள் வந்து சேர்ந்து இருந்த ஜமுனா. இருந்து கிடந்தனர். கோடியக்கரைக்கு வந்து இறங்கியவர்களும் எட்டுபேர்கள் வந்து இறங்கினர்.  அதே போல் வேறு வகையில் உருவானவர்கள் ஒன்றிணைந்தவர்கள் உள்ளே இறந்து கிடந்தனர். அதிரடிபடையினர் தாமதமாக உள்ளே நுழைய எல்லாம் முடிந்து போயிருந்தது.. சரியாக அன்றைய தினம் ஆகஸ்ட் 20.  ராஜீவ் காந்தியின் பிறந்த தினம்.

மயிரிழையில் அங்கிருந்து வெளியே தப்பியிருந்த ரங்கன் கூட்டணியினர் உத்தரவுபடி வெள்ளைநிறமாக மாற்றப்பட்ட மாருதி ஜிப்ஸியில் சென்னைக்கு வந்துருந்தார். ஆவடியில் தங்கியிருந்தவர் குறிப்பிட்ட டிராவல் (?) ஏஜென்ஸிக்கு வர அங்கு காத்து இருந்த புலனாய்வு குழுவினரை பார்த்ததும், சாலையில் ஓடத் துவங்க, திரைப்பட சாகச காட்சி போல துரத்திச் செல்ல சயனைடு குப்பியை கடிக்க முற்படும் போது தடுத்து அவர் மூலம் பெற்ற தகவல் தான் சிவராசன் குழுவினர் டேங்கர் லாரியின் உள்புறம் ஒளிந்து தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இப்போது மொத்தமும் ஒரு முடிவுக்கு வந்து விட்டது.  சர்வதேச இன்டர்போல், அயல்நாட்டு தூதரங்கள், இ.பி.கோ, தடா, பொடா, தேவைப்டும் ஆவணங்கள், தனி மனித வழிகாட்டல், குழுவினரின் தியாக மனப்பான்மை, உறக்கம் மறந்த நாட்கள் என வெறும் வெள்ளை காகிதம் போல் இருந்த சதிவலையை இதற்கு பின்னால் நேரிடையாக மறைமுகமாக செயல்பட்டவர்கள் என அத்தனை பேர்களையும் ரவுண்டு கட்டி வட்டத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தியாகி விட்டது.

புலனாய்வு குழுவினரை, செய்திதாள்கள், தனிப்பட்ட அதிகார வர்க்கம், பாராட்டுரைகள் வழங்கியதைப் போல இதற்குப் பினனால் நாம் இப்போது பேச வேண்டியது?

ஏன் ராஜீவ் காந்தி படுகொலை நடந்தது?

இந்த புலனாய்வு குழுவினர் குறித்த மொத்த புரிதல்கள் என்ன?  

இந்தியா விடுதலைப்புலிகளின் பலம் பலவீனம் என்ன?

இருவரின் மொத்த உள்கட்டமைப்பின் நீள அகலம்?

இதுவொரு இந்த நூற்றாண்டின் மகத்தான சாதனை என்றாலும் வெளியே தெரியாத சோதனைகள் என்ன?

முழுமையாக கார்த்திகேயன் மற்றும் அவரது குழுவினரும் ஜெயித்து விட்டார்களா?
பாரபட்சம் இல்லாமல் அடித்து துவைத்து காயப்போட்டால் தான் கறைகள் என்பது ஆடையில் எந்தந்த இடத்தில் இருந்தது, இன்னமும் இருக்கிறது என்பதை நாம் உணரத்தானே வேண்டும்......................................?????,

அது தெரிந்தால் தான் 1991க்கு பிறகு ஏறக்குறைய தான் வைத்திருந்த தனித் தமிழீழம் என்ற கொள்கையை ஏறக்குறைய 90 சதவிகிதம் அடைந்து, வெளிநாட்டு தூதரகங்கள், ஐ.நா சபை அங்கிகாரங்கள் மட்டும் இல்லாத ஆட்சி செலுத்திய பிரபாகரன் குறித்து நாம் புரிந்த கொள்ள முடியும்?  முள்ளிவாய்க்கால் வரைக்கும் தொடர வேண்டுமென்றால் இன்னும் எட்டு வருடங்களை மூன்று ஆட்சியாளர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்?  அப்போது தான் நடத்தி முடிந்த கோரத்திற்காக மூன்று வருடங்கள் சிங்கள தலைவர்களும் சர்வதேச சமூகமும் உழைத்த உழைப்பை முழுமையாக நாம் உண்ர்ந்து கொள்ள முடியும்?

புலனாய்வு குழுவினர் மேல் உள்ள அரசியல் சார்பான விமர்சனங்களையும், இந்திய அதிகார வர்க்கம் குறித்த புரிதல்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சந்திரிகா, ரணில்விக்ரமசிங்கே, கருணா பிரிவு, கடைசியாக கதாநாயகனாக ஆண்டு கொண்டுருப்பவர்கள்.

நல்ல புரிந்துணர்வுடன் மீண்டும் ஒரு நாள் தொடர்வோம்.  காரணம் ரதம் ஓட்டியவர் மூச்சு தம் பிடித்து வாழ்ந்து கொண்டுருக்கிறார். மற்றொருவர் மது தந்த போதை போல் திளைத்துக்கொண்டு இருக்கிறார். ஒருவர் இப்போது புழுங்கிக்கொண்டு மற்றொருவர் புல்லரித்துப்போய் உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டு அரசியலைத் தவிர எங்கள் குடும்பத்துக்கு வேறொன்றும் தெரியாது என்கிறார். காரணம் இலங்கை சுதந்திரம் அடைந்த போது இந்த மேதகுவுக்கு வயது 3 (?),

வெற்றி பெற்றவர் மட்டுமல்ல அவரை சார்ந்து இருப்பவர்கள் அத்தனை பேர்களும் மரண பீதியில் தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். ஏன்? வெற்றிச் சின்னம் என்று அத்தனை தமிழர் பண்பாட்டு சின்னங்களையும் அழித்து ஒழிக்கும் வேலையை முழு மூச்சாக வைத்துக் கொண்டு சுருதி சுத்தமாக செயல்பட்டுக்கொண்டுருந்தாலும் உள்ளே இருக்கும் மரண பீதியை மறைக்க முடியவில்லை.  வல்லரசு போய் ஒவ்வொரு முறையும் கண்ணீரை துடைக்க வேண்டியதாய் இருக்கிறது. பாரபட்சம் இல்லாமல் கொழும்பு முதல் டெல்லி வரைக்கும் படையெடுப்பு இந்த நிமிடம் வரைக்கும் தினந்தோறும் தெரிந்தும் தெரியாமலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

நிரந்தரம் இனி நாம் தான் என்றவர்கள் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் நிச்சயமில்லாத விடியலை நோக்கி நகர்ந்து கொண்டுருக்கிறது. ஆடு புலி ஆட்டத்தில் இன்னும் ஏப்ரல் மாத ஒரு ஆட்டம் இருக்கிறது. நடந்த முடிவுகளுக்கும் செயல்படுத்திய முயற்சிகளுக்கும் காலம் அடுத்து என்ன மாதிரி புரிந்துணர்வை தனக்குள் வைத்து இருக்கிறது என்பதை அறிந்தவர் எவரும் இல்லை?

தமிழினம் நல்ல முறையில் எதிர்காலத்தில் சுதந்திரமாய் வாழ வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாகவும் தனக்கு என்ன லாபம் என்பதை கருத்தில் கொண்டு வாழ்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகவும் இருக்கிறது? இந்தியாவை நோக்கி, தமிழ்நாட்டு தலைவர்களை நோக்கி கை நீட்டும் உலகத் தமிழர்கள் அத்தனை பேர்களும் இன்று இலங்கையில் அதிகாரப் போட்டியில் நீயா நானா என்று சாமரம் வீச காத்துக்கொண்டுருப்பவர்களை என்ன பெயர் சொல்லி அழைக்க முடியும்? அன்று விடுதலைப்புலிகளுக்கு வரி என்ற பெயரில் கொடுத்தீர்களே? இன்று எங்களுக்கு கொடுங்கள் என்று இன்று தோன்றியுள்ள தமிழினத் தலைவர்களால் இன்றும் பாதிக்கப்பட்டுக் கொண்டுருப்பது அப்பாவி திருவாளர் பொதுஜனம் மட்டுமே?

பக்கம் பக்கமாக பிரபாகரன் சர்வாதிகாரத்தை, அவரின் நீக்கு போக்கற்ற தன்மையை வார்த்தைகளால் விளாச தெரிந்தவர்களால், விரும்பியவர்கள் கேட்ட இன்றைய பரிபூரண சுதந்திர காற்றில் உலாவிக்கொண்டுருக்கும் விஷவாயுக்களைப் பற்றி வாய் திறந்து பேச மறுப்பதேன்?

இலங்கை தமிழினத்தை சவக்குழி போல் ஆக்கினாலும் சுதந்திர வேட்கை என்பது ஒரு சிறிய விதை மட்டுமே.  கொழும்புவில் வாழ்ந்த பிரபாகரன் உறவினர்கள் பெற்ற துன்பத்தை மிகச் சிறிய வயதில் கேட்டு உள்ளே உருவாக்கிக்கொண்ட வேட்கை ஆலமரமாக பின்னால் வானாளவ உயர்ந்து நின்றது.  தமிழரசு கட்சியில் இருந்து விலகி ஆசிரியர் தொழில் செய்து கொண்டுருந்த வேணுகோபால் மாஸ்டர் உருவாக்கிய "உரிமை என்பது கேட்டுப் பெறுவது அல்ல.  அடித்துப் பெறுவதே. காந்தியின் அமைதி வழி என்பது சிங்களர்களிடத்தில் எதிர்பார்த்தால் இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனாலும் தமிழன் என்பவன் அடிமையே"  என்ற தராக மந்திரம் இடைவிடாது ஒலிக்க தனிப்பாதை உருவாகி அடுத்த கால் நூற்றாண்டு ஒவ்வொரு சிங்களரையும் அச்சத்தின் உச்சமாய் அவஸ்த்தையாய் வாழ வைத்தது. இன்று சர்வதேச சமூகமும் ஹம்பன் முதல் கொழும்பு வரைக்கும், யாழ்பாணம் முதல் காலி வரைக்கும் புடம் போட்டு இலங்கை மக்களுக்கு என்று பல புனித நிகழ்வுகளை உருவாக்கிக்கொண்டுருந்தாலும்,

" சுதந்திரத்திற்காக போராடுகின்ற மக்களின் மீது யாருமே கடைசி தோல்வியை ஏற்படுத்தி விட முடியாது?  இலங்கை தமிழர்களை அழிவுக் குவியலாக மாற்றி விடலாம்.  ஆனால் நிரந்தர அடிமையாக மாற்றி வைக்க முடியாது"


இன்று ஓரு இன அழிவின் முடிவில் ராஜபக்ஷே மகன் அதிகாரத்தின் பாலபாடத்தை கற்றுக் கொள்ள உள்ளே வந்து இருக்கிறார்.  சொல்ல முடியாது? இவரின் ஆட்சியில் வேறொருவர் (?) வந்து நிற்கலாம்?  அப்போது உருவாகக்கூடியவர் பிரபாகரனிடம் இருந்த சிறிதளவு இரக்கம் கூட இல்லாத பட்சத்தில் ஒரு இனத்தையே தேடிப்பார்க்க வேண்டிய அளவிற்கு புதிய எழுச்சி அப்போது உருவாகலாம். அன்றைய சூழ்நிலையில் வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டுருக்கும் வேறொரு சர்வ தேச சமூகம் உள்ளே வந்து ஆயுதக்கடை விரிப்பை அட்டகாசமாக தொடங்கலாம்?  மறுபடியும் 7000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பூர்வ இலங்கையில் இருந்த நாகர்கள் போல் தொடக்கத்தில் இருந்த புதிய தலைமுறைகள் உருவாகக்கூடும்?


தீர்வுகள் சரியான முறையில் தீர்க்கப்படாதவரையிலும் எந்த சுதந்திரப் போராட்டமும் அழிந்து போய்விடுவதில்லை. காரிய இருள் என்றால் விடியல் மிக அருகில் உண்டு என்று தானே அர்த்தம்.

இதற்குப்பிறகு ஒவ்வொன்றும் சர்வதேச அரசியல் பங்கெடுப்பதால் இடுகை என்ற வாசிப்புக்கு தகுந்தாற் போல சூழ்நிலை உருவாக்கும் நிலையில் நிச்சயம் உணர்ந்து கொள்வோம்.  தொடர்பவர்கள், விரும்புபவர்கள் பொறுத்தருள்க?

உணர்ந்தவர்கள், அமைதியாய் தொடர்ந்தவர்கள் உங்கள் விமர்சனங்களை, எண்ணங்களை பதிவு செய்தால் பலருக்கும் பயன் உள்ளதாக இருக்கட்டுமே?

வாழ்வில் உருவாகும் நெருக்கடியான சமயங்கள் நிறைய அனுபவங்களையும் புதிய போராடக்கூடிய சக்தியையும் அளிக்கவல்லது.  உணர்ந்தவர்கள் ஜெயிக்கக்கூடியவர்கள்.

Friday, March 19, 2010

ஸ்ரீபெரும்புதூர் முதல் பெங்களூர் வரைக்கும்

ராஜீவ் காந்தி படுகொலையில் சம்மந்தப்பட்ட பெரும்பாலனவர்களை கைது செய்து அவர்கள் மூலம் பல தகவல்கள் பெறப்பட்டாலும் முக்கியமான குழுவுக்கு தலைமையேற்று இருந்த சிவராசன் தான் என்பதையும், அதை நீரூபிக்க வேண்டிய ஆதாரத்திற்கும் ஏராளமான இடைவெளி இருந்தது.  இதன் பொருட்டு மேற்கொண்டு தகவல்களை உறுதிபடுத்துவதற்காக தலைமறைவாய் இருக்கும் கோடியக்கரை சண்முகத்தை மீண்டும் தேடத் தொடங்கினர்.  சண்முகம் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடியாக அவராகவே பாதுகாப்புடன் புலனாய்வு குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தொடங்கினார்.  அப்போது தான் சதுப்பு நிலக்காடுகளின் விடுதலைப் புலிகளின் சாம்ராஜ்யம் முழுமையாக புரிந்தது.  ஆனால் எதிர்பாரத விதமாக சண்முகம் தற்கொலை செய்து கொண்டது பல விதங்களிலும் ஊடகங்களில் ஊகத்தை ஹேஷ்யங்களையும் உருவாக்கியது.  சிவராசன் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடியவில்லையே தவிர இங்கு கிடைத்த ஆவணங்களின் படி சிவராசன் 1990 ஆம் ஆண்டு பாஸ்போர்ட் புகைப்படம் எடுத்து வைத்திருந்ததும் கிடைத்தது. அதிலும் ஒரு ஆச்சரியம் அப்போது இழந்த ஒற்றைக் கண்ணில் செய்ற்கை கண் பொருத்தாமல் அசலான சிவராசனின் உருவம் கிடைத்தது. 
சிவராசனின் நகர்வும், செயல்பாடுகளையும், வெளியே கடத்திக் கொண்டு இருக்கும் செய்திகளையும் கண்டு பிடிக்கும் அளவிற்கு சிறப்பாக புலனாய்வு குழுவினர் முன்னேறியிருந்தனர். எல்லா வகையிலும் சுற்றி வளைக்கப்பட்ட சிவராசன் இப்போது தன்னுடைய உள் நடவடிக்கைகளை விடுத்து அமைதியாக இருக்க புலனாய்வு குழுவினருக்கு மேலும் சிக்கலாக இருந்தது. அதிர்ஷ்ட வசமாக கடைசியாக கடத்திய செய்தியை கண்டு உணர்ந்தவர்களுக்கு சிவராசன் உள்ளே செயல்பட்டுக்கொண்டுருப்பவர்கன் ஒத்துழைப்போடு இலங்கைக்கு தப்பிக்க போட்டுள்ள திட்டம் தெரிய வந்தது. ஆனால் தமிழ் நாட்டுக்குள் செயல்பட்டுக் கொண்டுருந்த விடுதலைப்புலிகளின் அரசியல் மற்றும்  உளவுப்பிரிவினர் எந்த வகையிலும் முயற்சி செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலை.  காரணம் இந்த இரண்டு பிரிவுகளையும் மத்திய மாநில உளவு அமைப்புகள் தங்களுடைய கண்காணிப்பில் வைத்து ஒவ்வொரு நிமிடமும் அவர்களை கவனித்துக் கொண்டுருந்தனர். தேடலின் தொடர்ச்சியாக ரங்கன் என்ற ஈழத்தமிழர் பற்றிய செய்தி கிடைத்தது. இவர் லாட்ஜில் தங்கியிருந்தவர், மற்றொரு வீடும் தனியாக எடுத்து இருந்ததும் தெரியவந்தது. அவரை டிக்சன் என்பவர் பார்க்க வந்து போய்க் கொண்டுருப்பதும் தெரியவர மீண்டும் துரத்தல் ஆரம்பித்தது.

ரங்கன் போலி கடவுச்சீட்டு செய்வதில் கில்லாடி.  சென்னையில் இருந்த (?) ஒரு பிரபலமான TRAVEL AGENCY உடன் தொடர்பு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. ரங்கன் திருச்சியில் இருப்பதாக தகவல் கிடைத்ததும் அதிரடி படையினருடன் திருச்சியை வலம் வந்தாலும் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினர். ஆனால் இவர்கள் உபயோகித்துக் கொண்டுருந்த மாருதி ஆம்னி என்பதையும் அதன் நிறம் என்பதை வைத்துக்கொண்டு பயணத்தில் இருக்கும் அத்தனை வண்டிகளையும் சல்லடை போடாத குறையாக தேடிக் கொண்டுருந்தனர். இதே சமயத்தில் இவர்களிடத்தில் இல்லாத டிக்சன் புகைப்படத்தை புலனாய்வு குழுவினருக்கு மத்திய உளவுத்துறை அனுப்பி வைத்தது. சிவராசனின் பல்வேறு தோற்ற புகைப்படமும், டிச்னின் புகைப்படத்தையும் ஊடகத்தில் வெளியிட கோவையில் இருந்து ஒருவர் அழைத்தார்.  டிக்சன் முக ஜாடையில் உள்ளவர் டெலிபோன் பூத் வந்து போவதாக சொன்னதும், இதே சமயத்தில் வயர்லெஸ் கருவியை பயன்படுத்தும் போது தொலைக்காட்சி அலைவரிசை மாறுவதாகவும் அருகில் இருந்த காவல்துறையினரிடம் தகவல் வரவும் சரியாய் இருந்தது.

இதே சமயத்தில் கோவை வாகன சோதனையில் இருவர் பிடிபட்டனர். விக்கி, ரகு என்ற இருவருமே விடுதலைப்புலிகள்.  இருவரும் கோவை முனுசாமி நகரில் டிக்சன் மற்றும் குணா என்றவர்களுடன் ஒன்றாக இருந்தவர்கள்.  சென்றவர்கள் நள்ளிரவு வரைக்கும் வராத காரணத்தால் எச்சரிக்கையாக இருந்தனர்.  கோவை காவல்துறையினர் மூலம் சம்மந்தப்பட்ட இடத்தை சுற்றி வளைத்த போது ஜன்னல் வழியே இருவரும் பார்த்து விட்டனர்.  நாங்கள் உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம் என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைய முற்பட்ட போது அவர்கள் எழுதி வைத்த கடிதமும் கடித்து துப்பிய சயனைடு குப்பியுமே வரவேற்றது.  அந்த இக்கட்டான சூழ்நிலையில் வெளியே நின்று கொண்டுருக்கும் கூட்டத்தையும் பார்த்து, பதட்டப்படாமல் சயனைடை குப்பியை கடிப்பதற்கு முன் முத்தான எழுத்துக்களில் பதட்டப்படாமல் கடிதம் டிக்சன் எழுதியிருந்தார் . .சாவின் இறுதி நொடியில் அவர்களின் அர்ப்பணிப்பு அதை உணர்த்தியது.
 " திரு. கார்த்திகேயன் தங்கள் திறமைக்கு என் பாராட்டுக்கள் ". டிக்சன்

புலனாய்வு குழுவினர் அறையின் உள்ளே முழுமையாக நுழைந்த போது அத்தனை ஆவணங்களை எறித்து முடித்து தங்கள் உயிரையும் உடலை விட்டு பிரித்து இருந்தனர். சோர்ந்து போனாலும் தொடர்ந்த துரத்தலில் வேறொரு புதிய தகவல் கிடைத்தது. முக்கிய தளபதியாக தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டுருந்த திருச்சி சாந்தன் பற்றிய தகவல். பெங்களுரில் திப்ப சந்திரா என்ற இடத்தில் காயம்பட்ட விடுதலைப்புலிகள் தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டுருப்பதாக வாகன சோதனையில் பிடிபட்ட விக்கி மூலம் கிடைத்தது.  அப்போது விக்கி சொன்ன முக்கிய தகவல் திருச்சி சாந்தன் நீலநிற ப்ரிமியர் பத்மினி காரை பயன்படுத்துவதாகவும், அவரது குழுவினர் பச்சை நிற மாருதி ஆம்னி காரை பயன்படுத்திக்கொண்டுருப்பதாகவும் சொன்னதை வைத்து பெங்களுரில் உள்ள இந்திரா நகர் என்ற மேல்தட்டு மக்கள் வசிக்கும் இடத்தை சென்ற புலனாய்வு குழுவினரின் கண்டுபிடித்தனர்.  அருகில் உள்ளவர்களை விசாரித்த போது அந்த இரண்டு வாகனமும் அங்கு இருப்பதாக உறுதிபடுத்தியதை தொடர்ந்து குறிப்பிட்ட வீட்டை கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.

வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத போதும் கூட இரவு நேரத்தில் விளக்குகள் எறிந்து கொண்டுருந்தது.  ஆட்கள் உள்ளே இருக்கிறார்கள். தொடர்ந்து 24 மணி நேர கண்காணிப்புக்கு பிறகு தேசிய பாதுகாப்பு படையில் உள்ள கமேண்டோ பிரிவு இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அவசர ஊர்தி, மருத்துவர், சயனைடு அருந்தினால் காப்பாற்ற உதவும் ஏற்பாட்டுடன் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டது.  இயல்பான முகத் தோற்றம் கொண்ட அதிகாரிகள் வீட்டின் விலாசத்தை கேட்பது போல் கதவை தட்ட வேண்டும் என்ற திட்டத்தின்படி செயல்பட, உள்ளேயிருந்தவர்கள் ஜன்னல் வழியே பார்க்க உடனடியாக மூடிவிட்டு உள்ளே வேகமாக ஓடினர்., அதிரடி படையினர் கதவுகளை வெடி வைத்து தகர்த்து அதிரடியாக உள்ளே நுழைய முக்கியமான காட்சி கண் எதிரே நடந்தேறிக் கொண்டுருந்தது.

ஒருவர் சயனைடு குப்பியை கடிக்க முற்பட, மற்றொருவர் குளியல் அறைக்குள் சென்று தப்ப முயற்சிக்க இருவரையும் பிடித்து (அரசன், குளத்தான்) மருத்துவமணை கொண்டு செல்லும் வழியில் ஒருவர் இறக்க, மற்றொருவர் விஷ முறிவையும் மீறி மூன்று நாட்களுக்குப் பிறகு மயக்க நிலையிலேயே இறந்தார். மொத்தத்தில் சிவராசன் பெங்களுருக்குள் தான் இருக்கிறார் என்று உறுதியாய் தெரிந்து விட்டது. இந்திரா நகர் வீட்டின் உரிமையாளர் மூலம் இந்த வீட்டை அவர்களுக்கு பிடித்துக்கொடுத்த ஜகன்நாதன் என்ற தரகர் மூலம் தோமலூர் என்ற மறைவிட தகவல் கிடைத்தது.

அந்தப்பகுதியில் திருட்டுப்பயத்தின் காரணமாக குடியிருந்தவர்கள் உருவாக்கியிருந்த பாதுகாப்பு சோதனையில் காயம் பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டுருந்த மற்றொரு புலி இளைஞன் சிக்க அந்த இடத்திலேயே சயனைடு சாப்பிட்டு இறந்துபோக அந்த இடம் மொத்தமாக சுற்றி வளைக்கப்பட்டது. இவர்கள் தேடிச் சென்ற இடத்தில் இருந்து அன்று காலை தான் காயம்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டுருந்தவர்களை வேறு இடம் மாற்றப்பட்டு இருந்தது.

ரங்கநாத் பெங்களுர் தமிழர்.  லேத் தொழிற்சாலையை நஷ்டத்தின் காரணமாக விற்க முயற்சித்துக்கொண்டுருந்தவர். தமிழர் ஆதரவு கொள்கையுள்ள கர்நாடக வசித்துக்கொண்டுருந்த தமிழர் சுரேஷ் மாஸ்டரை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் உருவான புரிந்துணர்வில் காயம்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டுருந்தவர்களை பாதுகாப்பு காரணமாக ரங்கநாத் வீட்டில் கொண்டு வந்து சேர்த்து இருந்தனர். ரங்க நாத் வீட்டில் இருந்த இரண்டு அறைகளை ஒன்றை ஒதுக்கி கொடுத்து இருந்தார். இவர் உள்ளே போய் வசதிகளை உருவாக்கியதும்  ஆகஸ்ட் 2 அன்று இரவு 11 மணிக்கு பச்சை நிற மாருதி ஜிப்ஸியில் சிவராசன் குழுவினர் உள்ளே நுழைந்து அறையில் வசிக்க ஆரம்பித்தனர். வந்து தங்கியவர்களுக்காக திரைப்படக் குழுவினருக்காக என்று மாண்டியா மாவட்டத்தில் முதாடி மற்றும் பிருடா கிராமத்தில் இரண்டு வீடுகளைப் பார்த்துக்கொடுத்தார்.  ரங்கநாத் மனைவி மிருதுளாவுக்கு இவர்கள் ராஜீவ் கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் என்று தெரிந்து விட்டது.

சிகிச்சை எடுக்க வேண்டியவர்களை ரங்கநாத்துக்கு தெரிந்த காலப்பா மருத்துவமனையிலும், மற்றவர்களை கிராமத்திலும் கொண்டு போய் விட்டு வர ஏற்பாடுகள் செய்தனர். சுரேஷ் மாஸ்டர் அறிவுரையின் படி இரண்டு கார்களிலும் வெள்ளை நிறம் அடிக்கப்பட்டது. பெங்களுர் செய்திதாள்கள் கர்நாடகாவில் இலங்கை தமிழர்கள் உள்ளே வந்து இருப்பது பொதுமக்கள் அணைவருக்கும் தெரிந்து விட்டது. இதன் மூலம் கிராமத்தில் தங்கியிருந்தவர்களை சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் அருகில் உள்ள காவல்துறைக்கு தகவல் கொடுக்க காவல்துறை வந்து சோதனை செய்ய முற்பட உள்ளே இருந்தவர்கள் (ஆகஸ்ட் 17) சயனைடு மூலம் உயிர் துறந்தனர். 

புலனாய்வு குழுவினரில் ஒரு பகுதியினர் ரங்கநாத் நண்பர் மூலம் ரங்கநாத்தின் லேத் முகவரி பெறப்பட்டு அங்கு இருந்தவர்கள் மூலம் ரங்க நாத் வீட்டு முகவரி பெறப்பட்டது.  காலையில் பால் வாங்க வெளியே வந்த ரங்கநாத் முதல் நாள் சயனைடு மரணத்தை படித்ததும் மொத்தமும் கை மீறி விட்டது.  எந்த நேரத்தில் காவல்துறையினர் வீட்டுக்கு வந்து இறங்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டார். மனைவி மிருதுளாவுக்கு இருந்த ஆஸ்துமா அதிகமாக இப்போது வெளியே செல்லக்கூடாது என்ற சிவராசன் மிரட்டலை பொருட்படுத்தாமல் வெளியே வந்தார்.  ரங்கநாத் சிவராசனிடம் சமாதனப்படுத்தி  மனைவியை மீண்டும் உள்ளே அழைத்து வருகின்றேன் என்று வெளியே வந்தபோதிலும் உறுதியாக தெரிந்து விட்டது.  எப்படியும் நம்முடைய விடு தட்டப்படும்.  இந்நேரம் புலனாய்வு குழுவினர் மோப்பம் பிடித்து இருப்பார்கள்?

புலனாய்வு குழுவினர் பெறப்பட்ட தகவல்களை காவல்துறையினரிடம் பகிர்ந்து கொள்ள, கர்நாடக காவல்துறையினர் ரங்கநாத்தையும் சகோதர் வீட்டில் தங்கியிருந்த மிருதுளாவை கண்டு பிடித்தனர். மிருதுளா ஆகஸ்ட் 18 வரைக்கும் தான் சந்தித்த நரக வாழ்க்கையை கடந்த 16 நாட்கள் அனுபவத்தையும் மூச்சு விடாமல் பேச ஆரம்பித்தார்.

ராஜீவ் காந்தி பிறந்த நாள் ஆகஸ்ட் 20.  இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது.

Thursday, March 18, 2010

நாகபட்டிணம் இராமேஸ்வரம் வழி டெல்லி

ஊடகத்தில் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள், சந்தேகப்படுவர்களின் அணி வகுப்பு, தமிழ்நாட்டின் உள்ளே வாழ்ந்து கொண்டுருந்த ஈழத்தமிழர்கள் என்று எத்தனையோ வழிகளில் தங்களுடைய பார்வையை புலனாய்வு குழுவினர் செலுத்தினாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.  மொத்த வலைபின்னலை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் இவர்கள் இறங்கிய இடத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் கரை இறங்கிய நாகபட்டிணம் வந்து சண்முகத்தை தேடத் தொடங்கிய போது அவரும் தலைமறவானார்.  ஆனால் அவரிடம் நீண்ட நாட்களாக படகோட்டியாக பணிபுரிந்து கொண்டுருந்த (இவரும் யாழ்பாணத்தை சேர்ந்த ஈழத்தவரே) மகாலிங்கம் என்ற மீனவரை பிடித்தனர்.  இவர் தான் விடுதலைப்புலிகள் சம்மந்தப்பட்ட அத்தனை வேலைகளுக்கும் 1984 முதல் சண்முகத்திடம் பணிபுரிந்த தனிப்பட்ட முக்கிய படகோட்டி.  புலனாய்வு குழுவினர் தேடிப்போன சண்முகத்தை விட இவருக்கும் மொத்தமும் தெரிந்து இருந்தது.  புலனாய்வு குழுவினருக்கு அப்போதைய சூழ்நிலையில் விடுதலைப்புலி இயக்கம் தான் இதை நிகழ்த்தியது என்று தெரிந்து இருந்தாலும் விடுபட்ட இடங்கள் நிறைய இருந்தது. வலைபின்னலை நெருங்கி சூழ்ந்து இருந்தாலும் அது அத்தனை தூரம் முழுமையடைந்த பாடில்லை.  

கைது செய்யப்பட்ட சாட்சிகள் உண்டு.  ஆனால் சட்டம் எதிர்பார்க்கும் அழுத்தமான ஆதாரங்கள் இல்லை என்பதை விட சிக்கியவர்கள் எவருமே அவரவர் பங்குகளை சொன்னார்களே தவிர முழுமையாக எதையும் சொல்லவில்லை.  ஒவ்வொரு சாட்சியும் அவர் தொடர்பில் இருந்த மற்றவர்கள் சிக்கியவுடன் தான் ஓரளவிற்கு கக்கினார்கள்.  அப்பவும் சிவராசன் எங்கு இருக்கிறார் என்பதோ? எப்படி தப்பினார் என்பதோ எவரும் சொல்லவில்லை.  காரணம் உள்ளே இருந்தவர்களுக்கு சிவராசன் இருக்கும் இடம் முதல் தப்பியது வரைக்கும் தெரிந்து இருந்த போதிலும் மூச்சு விடவில்லை.  ஆனால் படகோட்டி மகாலிங்கம் சிக்கியபிறகு தான் திட்டத்தின் முழு பரிணாமும் புரிய ஆரம்பித்தது. விடுதலைப்புலிகள் இந்த படுகொலைக்கு காரணம் என்பதும் அவர்களின் மொத்த தொடக்க வலைபின்னலும் புலனாய்வு குழுவினருக்கு முழுமையாக புரிந்தது. இவர்கள் ராஜீவ் காந்தி படுகொலை விசாரணையில் இருந்த போது உள்ளே இருந்த இயக்கத்தவர்கள் மூலம் இதற்கு முன்னால் வேறொரு விடுபட்டுருந்த பணிக்கான ஆய்த்த ஏற்பாடுகள் நடந்து கொண்டுருந்ததும் அப்போது தான் புரிந்தது. ஏற்கனவே செய்து முடித்து இருந்த பத்பநாபா படுகொலையைப் போலவே, அவர்கள் துரத்திக்கொண்டுருந்தது இலங்கை வடகிழக்கில் முதலமைச்சராகயிருந்து அப்போது இந்தியாவில் உளவுத்துறை மேற்பார்வையில் தஞ்சம் புகுந்து இருக்கும் வரதாஜப் பெருமாள். அவர் இருந்த இடம் ராஜஸ்தான் மாநிலத்தில் குவாலியர் பகுதியில்.  மோப்பம் பிடித்தவர்கள் இந்த படகோட்டி சண்முகத்தை அழைத்துக்கொண்டு செல்வதாக திட்டம்.  வரதராஜப்பெருமாளின் ஆயுள் கெட்டியாக இருந்துருக்கும் போல.  பல விதங்களிலும் இவர்களின் பயணம் தள்ளிப் போனது.  அப்போது படகோட்டி மகாலிங்கம் மூலம் பெறறப்பட்ட வாக்குமூலம்,

" 1990 ஜுனில் சிவராசன் மற்றும் கடற்புலித் தலைவர் டேவிட் போன்றவர்களுடன் தமிழ்நாட்டுக்கு வந்து பத்பநாபாவை கொன்று முடித்ததும் அவர்களை கொண்டு போய் விட்டதும் இந்த மகாலிங்கமே.  இரண்டாவது திட்டம் வரதாஜப்பெருமாள்.  வடஇந்தியாவில் இதற்கென்றும் மொத்த இந்தியாவிற்கும் தளம் அமைக்க டெல்லியை மையப்பபுள்ளியாக இருக்கும் அளவிற்கு டெல்லியை தலைமையிடமாக வைத்துக்கொண்டு செயல்பட சிவராசன் வருவதற்கு முன்பு ஆதிரை என்ற பெண்புலி உள்ளே வந்து இருந்தார். அதற்குள் இந்த அவசர அவஸ்யமான ராஜீவ் காந்தி படுகொலைக்காக சிவராசனுடன் வந்த சுபா தணுவுடன் இன்னும் ஐந்து பேர்கள் ஆக மொத்தம் எட்டு பேர்கள் உள்ளே வந்தனர்.  மற்ற ஐந்து பேர்கள் ரூசோ, கீர்த்தி, நேரு, சுதந்திர ராஜா, சுரேஷ் குமார் என்ற சிவரூபன் (இவர் ஒற்றைக்காலுடன் வாழ்ந்தவர்).

ஏற்கனவே பிடிபட்ட முருகன் காட்டிய மடிப்பாக்கம் இல்லத்தில் கைப்பற்ற ஆவணத்தில் ஒன்று சுரேஷ் குமார் கோல்டன் ஹோட்டல் ஜெய்பூர் என்று ஒன்று இருந்தது.  ராஜஸ்தானில் இருந்த சுரேஷ் குமார் தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வேறு இடத்திற்கு மாற முயற்சித்த போது கைது செய்யப்பட்டார்.  இந்த ஒற்றைக்கால் சுரேஷ் குமார் கைது செய்யப்பட்டபோது கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் இருந்த இரண்டு தொலைபேசி எண்கள் மூலம் சென்னையில் ராபர்ட் பயஸ் கைது செய்யப்பட்டார். இவர் மூலம் தமிழ்நாட்டுக்கு புதிதாக வந்து திருதிருவென்று முழித்துக் கொண்டுருந்த ரூசோ தஞ்சாவூரில் ரயில் பயண தொடக்கத்தின் போதும் வளைக்கப்பட்டார்.. எப்போதும் போல புலனாய்வுக்குழுவினர் தொடர்ச்சியாக அங்கங்கே உருவாக்கியிருந்த தொடர் சோதனையின் போது போது விஜயானந்தன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த விஜயானந்தன் மூலம் அவர் தங்கியிருந்த மடிப்பாக்க வீட்டின் உரிமையாளரை புலனாய்வு குழுவினர் விசாரித்த போது சிவராசனின் அடுத்த கட்ட நடவடிக்கை முழுக்க புரிந்து போனது.  காரணம் டெல்லியில் ஒரு வீடு பிடித்த தங்கவேண்டும் என்பதும், அங்கிருந்தபடி செய்ய வேண்டிய மற்ற வேலைகளையும் முடித்துவிட்டு நேபாளம் வழியாக தப்பும் எண்ணம் என்பதையும் புரிந்து கொண்டனர். ஆனால் முடிந்தவரைக்கும் மற்றவர்கள் நேபாளம் வழியாக தப்ப வைக்கும் எண்ணம் இருந்தாலும் சுபா,நளினி,சிவராசன் போன்றோர்களை இலங்கைக்கு திருப்பி அழைத்துக்கொள்ள வேண்டும் என்ற விடுதலைப்புலிகளின் முயற்சியும் முறியடிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு வெளியிடப்பட்ட சிவராசன் புகைப்படத்தை மடிப்பாக்க வீட்டின் உரிமையாளரும், டெல்லியில் வீடு பிடிக்க ஏற்பாடு செய்து கொண்டுருந்த சபாபதி பிள்ளை என்பவரும் செய்திதாள்களில் பார்த்ததும் திடுக்கிட்டு போயினர். தங்கள் வீட்டிலிருந்த சிவராசனை வேறு எங்கேயவாது போய்விடுங்கள் என்று எச்சரிக்க சூளைமேட்டில் இருந்த ஈழத்தமிழர் வீட்டில் தஞ்சம் அடைந்து இருந்தனர்.  இந்த இருவரையும் புலனாய்வு குழுவினர்  துரத்தி பிடிப்பதற்குள் இவருமே தப்பிவிட்டனர். தேடிக்கொண்டுருந்த இருவரின் உறவினர்களையும் துரத்திய புலனாய்வு குழுவினருக்கு வேறொரு தகவல் கிடைத்தது.

தமிழ்நாட்டுக்கு சிவராசன் குழுவினருக்கு முன்னால் வந்து உள்ள இருந்த ஆதிரை என்ற பெண் விடுதலைப்புலி டெல்லியை நோக்கி கிராண்ட் எக்ஸ்பிரஸ் மூலம் பயணித்துக் கொண்டுருந்தது தெரியவந்தது.  பயணித்துக் கொண்டுருந்தவர் பெண் என்றதும் நிச்சயம் தணுவுடன் இருந்த சுபாவாகத் தான் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள அனைத்து சிபிஐ அலுவலகத்திலும் தகவல் தெரிவித்தனர். வழியில் அவர்கள் பயணித்த இருக்கையை கண்டு உணர்ந்தவர்கள்  அவர்களுடன் பயணித்து டெல்லியில் இறங்கிய போது கைது செய்தனர். பயணம் செய்து கொண்டுருப்பது சுபா என்று தேடிப்போனவர்களுக்கு வியப்பு.  ஆதிரை பெண்ணாக இருந்தாலும் எந்த வாகனத்தையும் எந்த இடத்திலும் சிறப்பாக ஓட்டும் ஓட்டுநர் பயிற்சி பெற்றவர்.  இதற்கு மேலாக ஓயர்லெஸ் சங்கேத பாஷையான கிரிட்ப்லாஜியில் கைதேர்ந்தவர். ஆனால் தொடக்கத்தில் இந்த ஆதிரை மூலம் டெல்லியில் வைத்தே ராஜீவ் காந்தியை கொலை செய்ய திட்டங்கள் உருவாக்கப்பட்டு இருந்ததும் அதன் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது தப்பவைக்க என்ற நோக்கத்தில் சிவராசன் உருவாக்கி வைத்திருந்த சபாபதி பிள்ளை மற்றும் வீட்டின் உரிமையாளர் இருவரும் டெல்லிக்கு பயணம் செய்து அங்கு போலியான கடவுச்சீட்டுக்கள் மூலம் வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் நபர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கி வைத்திருந்தனர். துரத்தல் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

ஜுன் மாத இறுதியில் பிடிபட்ட பாஸ்கரன் மூலம் கடைசியாக சிவராசன் தங்கியிருந்த வீடும் கண்டுபிடிக்கப்பட்டது. சிவராசன் குழுவினர் வெளியேறியதும் அந்த வீட்டில் விஜயன் என்பவர் தன் மனைவியுடன் வசித்து வந்தார்.  புலனாய்வு குழுவினர் துருவி விசாரித்த விசாரணையில் மனைவி சமையல் அறையில் புதைத்து வைத்திருந்த வயர்லெஸ் செட்டை காட்டிக் கொடுத்தார்.  புலனாய்வு குழுவினர் இவர்கள் எந்த திசையில் இருந்து செய்தி கடத்திக் கொண்டு ருக்கிறார்கள்கள்? என்று மண்டையை உடைத்துக் கொண்டுருந்தார்களோ அந்த செய்தி மல்லிகை இல்லத்திற்கு மிக அருகிலேயே கொடுங்கையூரில் எவரெடி காலணியில் இருந்து கடத்தப்பட்டுக் கொண்டுருந்ததை அப்போது தான் கண்டுபிடித்தார்கள். தேசப்படுத்தப்பட்ட அந்த உபகரணங்களை வைத்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் வைத்து பிடிபட்ட ஆதிரை மூலம் முக்கியமான தகவல் ஒன்று பெறப்பட்டது.  சிவராசனுக்கு உதவியாக தொடக்கம் முதல் செயல்பட்டுக்கொண்டுருந்த சுதந்திர ராஜாவை உயிருடன் பிடித்தனர்.  அதுவும் எப்படி?  ஆதிரை சொன்ன தகவலின்படி பல்லாவரம் அருகில் உள்ள பம்மல் என்ற பகுதிக்கு சுதந்திர ராஜா அழைத்துச் சென்றார் என்பதைத்தவிர வேறு ஏதும் அவரால் சொல்லத் தெரியவில்லை.  ஆனால் அந்த வீட்டிற்கு அருகில் படிக்கும் குழந்தைகளைப் பற்றி சொல்லவும், அந்த குழந்தைகள் போட்டுருந்த பள்ளிச்சீருடை மூலம் பள்ளியை கண்டுபிடித்து, குழந்தைகள் மூலம் சுதந்திராஜா தங்கியிருந்த வீட்டை அடைந்தனர். தூங்கிக்கொண்டுருந்தவர் இவர்களைப் பார்த்ததும் சயனைடு குப்பியை கடிக்க முயற்சிக்க, தடுத்து கைது செய்தனர்.  இவர் கைதானபிறகு தான் சிவராசன் பற்றிய முழுமையான அத்தனை விசயங்களும் புலனாய்வுக் குழுவினருக்கு தெரியவந்தது.  காரணம் இவர் தான் தொடக்கம் முதல் சிவராசனுக்கு உதவியாளராய் செயல்பட்டவர்.

Wednesday, March 17, 2010

சிவராசன் வலைபின்னல்

தமிழ்நாட்டு காவல் துறை Q branch தொடக்கம் முதல் விடுதலைப்புலிகள் விசயங்களில் மிகுந்த முன்னேற்பாடுகளையும் தங்களால் முடிந்த அளவிற்கு ஆதாரங்களையும் திரட்டி வைத்திருந்தவர்கள்.  ஆட்சி மாறும் போது அவர்களின் தொடர்ச்சியான பணியும் அலங்கோலமாய் முடிந்து மறுபடியும் தொடக்கத்தில் இருந்தே தொடங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும்.  அவர்களுக்கு இருந்த அதிகாரம் என்பது செய்திகளை,ஆதாரங்களை திரட்டுவது மட்டுமே.  முடிவு எடுக்ககப்பட வேண்டியவர்கள் அவவ்போது வந்து அமரும் ஆட்சியாளர்கள். ஆட்சிக்கு வருபவர்களின் கொள்கைகள், நோக்கங்கள், தனிப்பட்ட நிர்ப்பந்தம், தெரிந்தும் நழுவல் என்ற கொள்கையினால் அவ்வப்போது அது வெறும் காகிதமாக கோப்புகளில் உறங்கிக் கொண்டு இருக்கும்.  அப்படி உறங்கிய ஒன்று பத்பநாபா கொலைவழக்கு. 

அவர்களின் பணி இப்போது சற்று வேகம் பிடித்து இருந்தது. இத்தனைக்கும் புலனாய்வுக் குழுவினருக்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இல்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் என்ன பிரச்சனைகள் நடந்தாலும் அனைவரும் ஒரே குரலில் கேட்பது உடனே சிபிஐ விசாரணை வேண்டும்.  அப்படி என்றால் மாநிலத்தில் உள்ள காவல்துறை மற்றும் மாநில உளவுத்துறை என்ன செய்து கொண்டுருப்பார்கள்? அவர்கள் பலம் பலவீனம் என்பது தான் என்ன? இந்த துறையில் இருக்கும் உண்மையான நேர்மையான அதிகாரிகள் வருந்தத்தான் செய்வார்கள்.  காரணம் மத்திய சிபிஐ ஒன்றும் கொம்பு முளைத்த வினோத மிருகம் அல்ல.  சிபிஐ மாநிலத்திற்குள் வந்தாலும் அவர்களும் சார்ந்து தங்களுடைய தொடக்க புலனாய்வு பாதைகளை உணர வேண்டுமென்றால் இவர்களை சார்ந்து தான் இருக்க வேண்டும்.  பாடு படுபவர்கள் எப்போதும் போல கீழே தான் இருப்பார்கள்.  பட்டத்துக்கு வரும் இளவரசன் கணக்காய் சிபிஐ மேலே வந்து அமர்ந்து கொண்டு நோகாமல் நோண்டி கிண்டி கிழங்கெடுத்துக் கொண்டு இருப்பார்கள். . ஆனால் இப்போது உருவாக்கப்பட்ட சிபிஐ (எஸ்ஐடி) சற்று வித்யாசமானது.  குறிப்பாக இதன் அலுவலகம் சென்னையில்.  தலைமைப் பொறுப்பில் ஒரு தமிழர். அரசியல் நிர்ப்பந்தம் இல்லாத அளவிற்கு தெளிவான முறையில் வடிவமைக்கப்பட்டது. தொடக்கம் முதல் கார்த்திகேயன் போட்ட ஒப்பந்தம் என்பதே இது தான். தமிழ்நாடு என்பது ஆட்சி அதிகாரத்தில் மற்ற மாநிலத்து மக்கள் அதிகமாக இருப்பதைப் போலவே மற்ற மாநில முக்கிய பொறுப்புகளிலும் இன்றைய மும்பை கமிஷனர் சிவானந்தா போல கார்த்திகேயனும் மிகுந்த செல்வாக்குடன் கர்நாடாகவில் முதல் அமைச்சர் குண்டு ராவ் அவர்களின் இடது வலது கை போல செயல்பட்டுக் கொண்டுருந்தார். 

Q branch போலவே ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ச்சியில் புகைப்படம் எடுத்த ஹரிபாபு வீட்டில் புலனாய்வு குழுவினரும் வீட்டில் சென்று சோதனையிட்டார்கள்.  அவருடைய ஏழ்மையான வீட்டில் ஒன்றும் கிடைக்காத போதும் அன்று அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் இருந்தது.  ஹரி பாபுவின் வீட்டின் பின்புறம் சென்றவர்கள் எதிர்பார்க்காத ஒளித்து வைத்திருந்த கத்தை கடிதங்கள் மறைவு பகுதியில் இருந்து கைப்பற்றினார்கள். கைப்பற்றியதை புலனாய்வுக்குழுவினருக்கு உதவியாய் இருக்கலாம் என்று மல்லிகை இல்லத்திற்கு அனுப்பினர். அங்கிருந்து கைப்பற்றப்பட்ட காகித குப்பைகள் அத்தனையும் பொக்கிஷம்.  பல விதமான கடித பரிமாற்றங்கள்.

பல கடிதங்களுடன் ஹரிபாபு விரும்பிக்கொண்டுருந்த பெண்ணின் கெஞ்சல் கடிதமும் இருந்தது.  ஹரிபாபு விடுதலைப்புலி இயக்கத்துடன் வைத்திருந்த தொடர்பு, அவர் ஈடுபட்டுருந்த அபாயகரமான பணி என்று மொத்தமும் அதன் மூலம் புரிந்து கொள்ள உதவியாய் இருந்தது. இதில் தான் தணு ராஜீவ் காந்தியை கொல்வதற்கு உபயோகித்த சந்தன மாலை பூம்புகார் விற்பனை அங்காடியில் வாங்கிய ரசீதும் இருந்தது. இப்போது ஹரிபாபுவைப்பற்றி சற்று புரிந்து கொள்வோம். 

இவர் ஒரு திருவாளர் அப்பாவி.  இளவயதுக்குரிய முறுக்கும் சாகசமும் நிறைந்த எண்ணங்கள் அவரை இந்த குழிக்குள் தள்ளியது. இவர் செய்த முதல் தவறு சுபா சுந்தரத்தின் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தது.  இரண்டாவது விடுதலைபுலிகளின் யாழ்பாணம் போல் இருந்த சுபா சுந்தரதின் அலுவலகத்திற்கு வந்து போனவர்களால் ஹரிபாபுவின் எண்ணங்களும் மாறத் தொடங்கியது., அப்போது ஏற்பட்ட தொடர்புகளால் கவரப்பட்டு தனக்கும் இலங்கைத்தமிழ் மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று எண்ணத்தையும், சாரசரி தமிழ்நாட்டு இளைஞன் போலவே பிரபாகரன் என்று பிம்பத்தின் மேல் ஒரு கவர்ச்சியும் வந்தது. ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து சுபா சுந்தரம் செய்த அலங்கோலமான அவசர குடுக்கை சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் போய் இறுதியில் அவரை கைது செய்யும் அளவிற்கு உருவாக்கியது.  அவர் ஹரிபாபு தன்னிடம் வேலை செய்யவில்லை என்பதில் தொடங்கி, குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வாங்கலாம் என்ற நோக்கத்தில் ஹரிபாபுவின் அப்பாவை அறிக்கை விடச் செய்யது வரைக்கும் அப்பன் இல்ல குதிருக்குள்ளே என்று அவரைக் கொண்டு போய் மாட்டியது.

இதற்கிடையே சிறப்பு புலனாய்வு குழுவினரில் ஒரு பகுதியினர் துரத்திக் கொண்டுருந்த சோதனைகள் மூலம் விடுதலைப்புலிகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அச்சக பணியை நிறைவேற்றி கொடுத்துக் கொண்டு இருந்தவர்களை முற்றுகையிட்டனர். அதன் மூலம் 1987 முதல் 1990 வரையிலும் இலங்கையில் இந்திய அமைதிப் படையினர் நடத்திய மொத்த நிகழ்வுகளையும், அது குறித்த உலக ஊடகங்கள் வெளியிட்ட கட்டுரைத் தொகுப்பை அடிப்படையாக வைத்து " சாத்தானின் படைகள்" என்ற புத்தக வடிவில் தயாராக இருந்த மொத்த பிரதிகளும் கைப்பற்றப்பட்டது.  அச்சிட்டவர் தலைமறைவானர்.

அப்போது, தமிழ்நாட்டு காவல் துறை தஞ்சாவூரில் வைத்து ரூசோ என்ற சங்கர் கோணேஸ்வரன் என்ற விடுதலைப்புலியை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து இருந்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சீட்டில் சென்னையில் இருந்த நளினி, தாஸ் என்பவர்களின் தொலைபேசி எண்களும், போரூரில் இருந்த எபிசேனர் மளிகைக்கடை தொலைபேசி எண்ணும் கிடைத்தது. நளினியின் எண் மூலம் அவர் அடையாறு அனபான்டு சிலிக்கன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என்ற உண்மையை கண்டு பிடிக்கப்பட்டது.  மேலும் பிடிபட்ட சங்கர் மூலம் பெறப்பட்ட தகவல்,  திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு கடத்தல் புள்ளியை நெருங்க முடிந்தது.  அவர் மூலம் சிவராசன் பற்றிய உண்மைகள் வெளிவர ஆரம்பித்தது.
ராஜீவ் இறந்த இடத்தில் நிறுவப்பட்ட நினைவுத்தூண்கள்
ஹரிபாபுவின் நண்பர் மூலம் தலைமறைவான அச்சகம் நடத்தி வரும் பாக்யநாதன் பற்றிய உண்மைகள் கிடைக்கப்பெற்றது.  பாக்யநாதனை விசாரித்த அதிகாரிக்கு புகைப்படத்தில் இருந்த நளினி இவரின் சகோதரி தான் என்பதும் புரிந்தது. ஆனால் இரண்டாம் முறை பாக்யநாதனை விசாரிக்கும் போது தான் நளினியை தனது மூத்த சகோதரி என்பதையும் தெரிவித்தார். சங்கர் மூலம் தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட நளினி தொலைபேசி எண் மூலம் அடையாறு சென்ற வேறொரு குழுவினர் அங்கு நளினியிடம் விசாரித்தனர். அப்போது நளினி சந்தேகப்படும்படி எதையும் பேசவில்லை.  அவரிடமிருந்து உருப்படியான தகவல் இல்லை என்பதோடு நளினியும் இதில் சம்மந்தபட்டுருக்கிறார் என்பதை அன்று சென்றவர்களால் யூகிக்க முடியவில்லை.  ஆனால் வில்லிவாக்கத்தில் இருந்த வந்த தொலைபேசி அழைப்பின் மூலம் நளினி வீட்டை சென்றடைந்த புலனாய்வு குழுவினருக்கும் பூட்டிய வீடு தான் வரவேற்றது. நளினி தப்பி விட்டார். கைது செய்யப்பட்ட பாக்யநாதன் மூலம் இந்த சதித்திட்டத்திற்கு பின்னால் உள்ள அடிப்படை விசயங்கள் புரிய ஆரம்பித்தது.

திட்டம் சரியாக நிறைவேறியதும் சிவராசன் குழுவினர் கொடுங்கையூர் வந்து சேர்ந்தனர். மறுநாள் எப்போதும் போல நளினி வேலைக்குச் சென்று விட்டார். ஆனால் புலனாய்வு குழுவினர் ஊடகத்தில் (மே 24) தணுவின் புகைப்படங்கள் முதல் ஒவ்வொன்றாக வெளியிடத் தொடங்க சிவராசன் கூட்டணியினரின் ஒட்டமும் தொடங்கியது. மே 25 பாக்யநாதன் ஏற்பாடு செய்து கொடுத்து இருந்த டாக்ஸியில் திருப்பதி சென்றதும், அங்கு முருகன் நளினி திருமணம் முடித்ததும், மீண்டும் ஒரு முறை முருகன் நளினி மட்டும் தனியாக திருப்பதி சென்று, முருகன் மொட்டை போட்டுக்கொண்டது வரைக்கும் வெளிவந்தது.

பாக்யநாதனுடன் கைது செய்யப்பட்ட அவரது தயார் பத்மா மூலம் மேலும் சில புதிர்களுக்கான விடைகள் கிடைத்தது.  பத்மா பணிபுரிந்து கொண்டுருந்த மருத்துவமணையில் உள்ளே பணிபுரிந்தவரிடம் கொடுத்து வைத்த ரகஸ்ய கவர் கிடைக்கப்பெற்றது.  பத்மாவின் கைது நிகழ்ந்ததும், மருத்துவமனையில் பத்மாவுடன் பணிபுரிந்த மற்றொரு நர்ஸ் பெண்ணே புலனாய்வு குழுவினரை அழைத்து ஒப்படைக்க உள்ளே இருந்த பூதம் பலவிதங்களிலும் புலனாய்வு குழுவினருக்கு உதவியது. ஓயர்லெஸ் குறியீடுகள், எண்ணும் எழுத்தும் அடங்கிய சங்கேத பாஷைகள், முருகனின் மற்றொரு பெயரான இந்து மாஸ்டர் போன்ற பல விபரங்கள் கிடைத்தாலும் சுற்றிச் சுற்றி வட்டத்திற்குள் வந்தாலும் இதற்கு மையப் புள்ளியான சிவராசன் குறித்தோ அதற்கு மேல் உள்ள முக்கியப் புள்ளி குறித்தோ தகவல் ஒன்றும் கிடைத்தபாடில்லை.

கூட்டணிக் குழுவினரின் புகைப்படம் வெளியானதும் தமிழ்நாடு முதல் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் வரைக்கும் சரியான தவறான தகவல்கள் மல்லிகை இல்லத்திற்கு வந்து கொண்டே இருந்தது. இந்த செய்திகளுக்கிடையே திருமணம் முடிந்து மொட்டை தலை முருகனுடன் நளினி திருப்பதியில் இருந்து வந்து மதுரைக்கு நளினியின் தோழி வீட்டுக்குச் சென்றனர்.  அங்கு மறுக்கப்பட கர்நாடகாவில் உள்ள தாவன்கெர இடத்திற்கு செல்ல அங்கும் உதவி செய்ய மறுக்க அங்கிருந்து கிளம்பி விழும்புரம் வழியாக சென்னை வந்து இறங்கிய போது ஒவ்வொன்றையும் வந்த தகவல்கள் அடிப்படையில் அவர்களை துரத்திக்கொண்டுருந்த புலனாய்வு குழுவினர் சைதாப்பேட்டை பேரூந்து நிறுத்தத்தில் இருந்து இறங்கிய போது இருவரையும் கைது செய்து மல்லிகை இல்லத்திற்க்கு கொண்டு வந்தனர்.  அப்போது தான் நளினி இரண்டு மாத கர்ப்பபமாக இருந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட முருகன் மூலம் மடிப்பாக்கத்தில் உள்ள வீட்டில் உள்ள மற்ற போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.  பிடிப்பட்ட ஒவ்வொருரின் வாக்குமூலம் வெவ்வேறு திசையில் இருந்து பல விசயங்களையும் புரியவைத்தாலும் இன்னமும் முன்னேற முடியவில்லை. ஆனால் கொடுத்த
விளம்பரம் மூலம் கிடைத்த மற்றொரு அற்புத ஆவணம் சிவராசனின் உண்மையான புகைப்படம்.  மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சிவராசனுக்கு இரண்டு சக்கர ஓட்டுநர் உரிமம் வழங்கியிருந்தது.  அதன் மூலம் சிவராசனின் புகைப்படத்தோடு, ராபர்ட் பயஸ்,மகேஸ்வரன் புகைப்படங்களும் இது தொடர்பான வழங்கப்பட்ட அத்தாட்சி சான்றிதழ்கள், ஆவணங்கள் என்று மொத்தமும் கிடைக்கப்பெற்றது. 

இதன் மூலம் ராபர்ட் பயஸின் போரூர் முகவரி தெரியவந்தது. தஞ்சாவூரில் பிடிபட்ட சங்கர் என்ற விடுதலைப்புலி மூலம் பெறப்பட்ட தொலைபேசி எண் என்பது ராபர்ட் பயஸ் வீட்டுக்கு அருகில்இருந்த மளிகைக்கடைக்காரர் சொந்தமானது. வட்டம் இறுகியது.  அறிவு, ராபாட் பயஸ்,ஜெயக்குமார் என மொத்தமும் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.  இதற்கிடையே சென்னையில் இருந்து வயர்லெஸ் மூலம் செய்திகள் கடத்தப்பட்டுக் கொண்டுருந்த போதிலும் உளவுத்துறையினரால் முழுமையாக ஊடுருவ முடியவில்லை.  கடினமான சங்கேத வார்த்தைகள் ஒரு புறம், நவீன தொழில் நுட்பம் மறுபுறம்.  இயக்குவர்களின் அதி புத்திசாலித்தனம் என்று ஐம்பது சதவிகிதம் உள்ளே நுழைந்தால் செய்தியை கடத்திக்கொண்டுருப்பவர்கள் அடுத்த அலைவரிசைக்கு மாறி மற்ற செய்திகள் வழக்கம் போல போய்க்கொண்டுருந்தது.  புலனாய்வுக்குழுவினர் எதிர்பார்க்கும் நவீன உபகரணங்கள் கிடைக்காதது ஒரு புறம், இந்தியாவிடம் விடுதலைப்புலிகள் வைத்திருந்த உபகரணங்களுக்கு சமமான தொழில் நுட்பம் அடங்கிய உபகரணங்கள் இல்லை என்பது மகத்தான ஆச்சரியமும் சோகமும் கூட. தொலை தொடர்புதுறையில் சிறப்பாக பங்காற்றிக் கொண்டுருக்கும் சாம்பிட்ரோடா வரைக்கும் தொடர்பு கொண்டு பெற முடியாதது அடுத்த ஆச்சரியம். அந்த அளவிற்கு விடுதலைப்புலிகள் இயக்கம் உலக நவீனங்களை அன்றைக்கு உள்ளபடி மாற்றிவைத்து பயன்படுத்திக்கொண்டு இருந்தார்கள்.

ஆனால் சென்னையில் தனிப்பட்ட முறையில் செயல்படுத்திக்கொண்டுருந்த ஹேம் அலைவரிசை பயன்படுத்துவோர் உதவ முன்வந்தாலும் இறுதி வெற்றி கிடைக்கவில்லை.  அப்போது புலனாய்வு குழுவினர் நவீன உபகரணங்கள் கேட்டு தொடர்பு கொண்ட துறையையும் பார்த்து விடலாம். DEFENCE ELECTRONIC RESEARCH LAB/ CHENNAI TELEPHONE DEPT./INTERNATIONAL MONITAR CENTER/WIRELESS PLANNING AND CO ORDINATION UNIT/ INIDAN MILITRARY SIGNAL REGIMENT.  அன்றைய காலகட்டத்தில் இல்லாத வசதிகள் நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு புலனாய்வு குழுவினரை போராட வைத்தது. இவர்கள் விரும்பிய கருவி HIGH FREQUENCY DIRECTION BINDER. ஆனால் இவர்களுக்கு அப்போது ஹைதராபாத்தில் இருந்து கிடைத்த கருவி HIGH FREQUENCY COMMUNICATION RECEIVER , இதன் மூலம் எந்த திசையில் இருந்து செய்திகள் செல்கின்றது என்பதை மட்டுமே உணர முடியும்.  எந்த இடத்தில் இருந்து வருகின்றது என்பதை உணர முடியாது.

இதற்கென்று உருவாக்கப்பட்ட வல்லுநர் குழு இந்த கருவியை வைத்துக்கொண்டு சென்னையில் புலிகாட் ஏரி, வியாசர்பாடி போன்ற பகுதிகளில் நின்று கொண்டு பல நாட்கள் காத்து இருந்த செய்திகள் ஊடகத்தில் வந்ததும் தற்காலிகமாக கடத்திக்கொண்டுருந்த செய்திகளும் நின்று போனது. ஆனால் இத்தனை துரதிஷ்ட்டத்திற்கும் மத்தியிலும் கூட அப்போது இடைமறித்த ஒரு செய்தி மூலம் சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள ஒரு இலங்கையைச் சார்ந்த பொறியியல் வல்லுநர் வீட்டில் நடக்க இருக்கும் சந்திப்பு என்ற செய்தி கிடைக்கப்பெற்றது. அங்கு சிவராசனும், உளவுத் துறையில் உள்ள சாந்தனும் சந்திக்க இருப்பதாக கிடைத்த செய்தியின் அடிப்படையில் குறிப்பிட்ட இடத்தை கண்காணித்தனர்.  அந்த பொறியியல் வல்லுநர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று ஏற்கனவே உளவுத்துறையினர் முதல் புலனாய்வு குழுவினர் வரைக்கும் தெரியும்.  மேல்தட்டு மக்கள் வசிக்கும் அந்த பகுதியில் பல நாட்கள் காத்து இருந்தும், குடிநீர் வடிகால் வாரிய ஆட்கள் போல புலனாய்வு அதிகாரிகள் வீட்டிற்குள் உள்ளே போய் வந்தும் எந்த உருப்படியான தகவல்களையும் பெற முடியவில்லை.

இவர்கள் இங்கு காத்திருந்தது சிவராசன் மற்றும் சாந்தனுக்காக. ஆனால் வீட்டுக்கு வந்து கடிதம் கொடுத்து விட்டு சென்றவர் ஒரு பெண்மணி,  அந்த கடிதம் வாங்க வந்ததும் சார்பாளர்.  சிவராசன் சார்பாக பெண்மணி.  சாந்தன் சார்பாக டிக்சன் என்பவர். அவர்களைப் பொறுத்தவரையில் காரியம் வெற்றி.  இதை எதிர்பாரதவர்களுக்கு பலத்த அதிர்ச்சி.  அப்போது தான் மத்திய உளவுத்துறையில் இருந்து டிக்சனின் புகைப்படத்தை புலனாய்வு குழுவினர் வாங்கினர். 

Sunday, March 14, 2010

ராஜீவ் என்றொரு சதை துணுக்குகள்

சிவராசன் குழுவினர் எதிர்பார்த்தபடியே ராஜீவ் காந்தி படுகொலையென்பது மனித வெடிகுண்டு மூலம் நிகழ்த்தியாகிவிட்டது. இருபது அடி உயரத்துக்கு எழும்பிய புகைமூட்டமும், உருவான கூச்சலும் குழப்பமும் அங்கு என்ன நடக்கிறது? என்பதே எவருக்கும் புரியவில்லை. காவலுக்கு இருந்த பல போலீஸ்காரர்கள் அலறி அடித்து வெவ்வேறு இடங்களுக்கு ஓடிக்கொண்டுருந்தனர்.  இதிலும் தைரியமான காவல் துறையைச் சேர்ந்தவர்களும், கட்சிக்காரர்களும் மனோதிடத்துடன் அங்கேயே நின்று கொண்டுருந்தனர்.

தேடி வந்த வாழப்பாடியும், மூப்பனாரும் சிதறிக் கிடந்த சதை குவியலில் ராஜீவ் காந்தியின் உடலை தேடினர்.  அந்த சூழ்நிலையில் அத்தனை சுலபமாக இல்லை. ஐந்து நிமிடத்திற்கு முன் உயிருள்ள மனிதர்களாக நின்று கொண்டுருந்தவர்கள் அத்தனை பேர்களும் இப்போது சதை துணுக்குகளாக, தலை கை கால் வேறு வேறாக சிதறிக் கிடந்தார்கள்.  அடையாளம் காண்பதற்காக " ஒவ்வொன்றையும் " புரட்டிப் பார்க்க வேண்டியிருந்தது.  இறுதியாக மனத்துணிவுடன் பார்த்தவர்கள் கண்களில் சிக்கியது ராஜீவ் காந்தி அணிந்து வந்த லோட்டோ ஷீ. அதன் மூலம் மட்டுமே அவரது உடலை கண்டு பிடிக்க முடிந்தது. 

அரற்றிக் கொண்டுருந்த மூப்பனார் மனத்துணிவுடன் குப்புறவாக்கில் கிடந்த உடலை திருப்பிய போது சதை துணுக்குகளாய் கோரமாய் இருக்க உருக்குலைந்து கிடந்த உடம்பில் துணியை போட்டு மூடினார். மேற்கொண்டு எதுவும் குண்டுகள் வெடிக்குமோ என்று உடன் இருந்தவர் மூப்பனாரை அங்கிருந்து நகர்த்த முற்பட அப்போது அவர் சொன்ன வாசகம். " தலைவனே போயிட்டார் இனிமேல் என்னயிருக்கு"  என்றார். அந்த நிமிடம் வரைக்கும் கம்பளம் எறிந்து கொண்டுருந்தது.  லதா கண்ணன், கோகிலா, ஹரிபாபு,ராஜீவ் காந்தியின் பிரத்யோக காவல் அதிகாரி,மாவட்ட காவல்துறை அதிகாரி இக்பால் உட்பட ஒன்பது காவல்துறையைச் சேர்ந்தவர்களும் தணுவுடன் இறந்திருந்தனர். அருகில் இருந்த பலருக்கும் பலத்த காயம். அரசாங்க அறிக்கை என்பது பின்னாளில் வந்து சம்பிராதய கணக்குகளைச் சொன்னதே தவிர உண்மையிலேயே அப்பாவிகள், பார்க்க வந்தவர்கள், உள்ளே இருந்தவர்கள் எத்தனை பேர்கள் இறந்தார்கள் என்பது போய்ச் சேர்ந்த ராஜீவ் காந்தி ஆன்மாவுக்கு தான் தெரியும்?

தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டுருந்த சிவராசனுக்கு திருப்தி மனதிற்குள் இருந்தாலும் அந்த சூழ்நிலையில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளும் படபடப்பு தான் உருவாகியிருந்தது. அந்த சூழ்நிலைதான் அப்போது அவர்களை உந்தி தள்ளியது.  சுபா,நளினியை கூட்டிக்கொண்டு சாலைப்பகுதியை நோக்கி விரைந்தனர்.  அருகில் இருந்த வீட்டில் படபடப்பை அடக்க தண்ணீர் வாங்கி குடித்து விட்டு ஆட்டோ, பேரூந்து மூலம் சென்னை வந்தடைந்தனர். இத்தனை தெளிவாக சிறப்பாக ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செயல்படுத்தி ஜெயித்த சிவராசன் எதிர்பார்க்காதது ஹரிபாபு இறந்த சம்பவம்.  அவர்களைப் பொறுத்தவரையில் ஆவணத்திற்காக அந்த புகைப்படம் வேண்டும். ஒரு வேளை கொண்டு போய் சேர்த்து ஆவணமாக்குவதின் ஒரு பகுதியாய இருந்துருக்கலாம். எந்த அளவிற்கு வெடிகுண்டின் தாக்கம் இருக்கும். எந்த இடத்தில் நின்று கொண்டு புகைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை மீறி ஹரிபாபு சென்றாரா அல்லது அவரின் விதியும் அவரைக் கொண்டு போய்ச் சேர்த்ததா என்பது தெரியாது.

ஆனால் மொத்தமாய் அன்று ஸ்ரீபெரும்புதூர் இருட்டில் நின்று கொண்டு சிரித்த விதி உருவாக்கிய மாய வலை வேறு ஒன்றையும் உருவாக்கியிருந்தது.  அது ஹரிபாபு பயன்படுத்திய புகைப்படக்கருவி சதைக்குவியல் மேல் கிடந்தது முதல் ஆச்சரியம்.  எந்த பிரச்சனையும் இல்லாமல் எடுக்கப்பட்ட புகைப்படம் லட்டாக புலனாய்வு குழுவினர் கைக்கு கிடைத்ததென்பது அடுத்த அதிசயம்.
அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கடமை தவறாத காவல்துறை அதிகாரி ராகவன் சம்மந்தப்பட்ட இடத்தை வளைத்து கவனமாக காவல் காத்ததும் அந்த புகைப்பட கருவி வந்து சேர வேண்டிய இடத்திற்கு மிகக் கவனமாக வந்து சேர்ந்ததும் முக்கிய காரணமாக இருந்தது.  இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அப்போது அங்கே உருவான அக்னிபிழம்பு அந்த புகைப்படகருவிக்கு எந்த சேதாரத்தையும் உருவாக்காத காரணத்தால் துப்பிய புகைப்படங்கள் தமிழக மக்கள் விடுதலைப்புலிகள் மேல் வைத்திருந்த மொத்த மதிப்பும் வெறுப்பாக மாற்ற உதவியதன் தொடக்கப்புள்ளி அது. காரணம் அப்போது வரைக்கும் அரசியலும், விரும்புவர்களும், வெறுப்பவர்களும் உள்ளே இருந்தாலும் அத்தனையும் மீறி ஒரு மொத்தமான நல்ல பார்வை அவர்கள் மேல் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.  அறிவுஜீவிகளின் லாவணி அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியாக இருந்தாலும் ராஜீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு அவர்களின் கச்சேரி என்பது சுருதி சுத்தமாய் ஒலிக்கத் தொடங்கியது.

அவசரமாய் வரவழைக்கப்பட்ட ஸ்டிரச்சரில் சிதைந்த ராஜீவ் உடலை ஏற்றி சென்னை அரசினர் பொது மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு துரிதகதியில் நடந்தது காவல்துறை வண்டியில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டது. இந்த இடத்தில் ராஜீவ் காந்தியை படுகொலை செய்யப்பட வேண்டும் என்ற திட்டத்திலும் அது எவ்வாறு நிகழ்த்தப்பட வேண்டும் என்று உள் கட்டளைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  வெறுமனே சாவு என்பதை இது ஒரு பெண்ணால் நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஒரு காரணமும் நடக்கும் அந்த சாவும் மிகக் கோரமான சாவாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தவர்கள் அதன்படியே உருவாக்கி இருந்தார்கள். 

ராஜீவ் காந்தியின் முகத்துக்கு அருகே நிற்கும் தருணத்தில் வெடிகுண்டு வெடித்தால் மட்டுமே எதிர்பார்த்த வெற்றி. காரணம் உருவாகும் மரண விளைவு என்பது விபரீதத்தின் உச்சமாக இருக்க வேண்டும். அந்த அளவிற்கு தான் இறுதியில் நடந்து முடிந்து இருந்தது.மிஞ்சியிருந்த துண்டு துணுக்குகள், பாகங்களை பொட்டலாமாக கட்டி கொண்டு போய் சேர்த்து இருந்தாலும் போஸ்மார்டம் செய்த மருத்தவரின் (டாக்டர் செசிலியா சிரில்) அறிக்கையும் படித்துப் பார்க்கத்தான் வேண்டும். 

" தலையில் கபாலப்பகுதி எலும்புகள் நொறுங்கி பெருத்த சேதமுற்று மூளை சிதறிவிட்டிருந்தது.  முகத்தில் உதடுகளும், மூக்கும், கண்களும் நாசமாகி இருந்தன. முகவாட்டை எலும்புகள் நொறுங்கி இருந்தன.  வயிற்றுப் பகுதியிலும் குடல்கள் கல்லீரல் வெளியே வந்திருந்தன.  இடது நுரையீரல் மிகச் சிதைந்து காணப்பட்டது. வது கை பெருவிரலும், ஆள்காட்டி விரலும் சேதமாக இருந்தன.  எக்ஸ்ரே செய்து பார்த்ததில் உடலில் இருந்த கிட்டத்தட்ட எல்லா எலும்புகளும் உடைந்து இருந்தன.  உடல் முழுவதும் சிறு சிறு குண்டுகளால் துளைக்கப்பட்டு இருந்தது "

இதே போல் வெடித்து சிதறிய தணுவின் தலை, சிதைந்த கை கால்கள் போன்றவைகள் பார்ப்பதற்கு கோரமாக கொடுமையாக இருந்தது. அவர் அணிந்து இருந்த பெட்டிகோட் போன்ற உள்ளாடை ஜாக்கெட் வடிவத்தில் இறுக்கமாக தைக்கப்பட்டு இருந்தது, உள்ளே உருவாக்கப்பட்ட வெடிகுண்டுகளுடன் இணைக்கப்பட வேண்டிய ஓயர்கள் செல்ல வேண்டிய பாதைக்கு குழாய் போன்ற வடிவத்தில் வெளியே தெரியாத அளவிற்கு சிறப்பான தையல்கலை வல்லுனர் தோற்றுப்போகும் அளவிற்கு தைக்கப்பட்டு இருந்தது. வீர்யம் மிக்க மருந்துக்களை சிறு குண்டுகளாக மாற்றப்பட்டு மொத்தமாக கோர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டு இருந்தது. குண்டுகள் அணிவகுப்புகளால் உருவாக்கப்பட்ட இந்த ஜாக்கேட் இறுக்கமாக இருக்க பெல்ட் வடிவ அமைப்பு கீழே உருவாக்கப்பட்டு இருந்தது. அணிபவர் உடல் பருமன் என்பது மாறலாம். இலக்குக்காக காத்திருக்கும் நாட்களைப் பொறுத்து தொளதொளவென்று மாற வாய்புண்டு.  இதற்காக ஜாக்கெட்டின் கீழே பெல்ட் போன்ற அமைப்பு. 

இதை இழுத்து மாட்டிக்கொண்டால் மொத்தமும் ஒரு ஒழுங்குக்கு வந்து சிறப்பாக உடலுடன் பொருத்திக்கொள்ள முடியும். இதற்கும் மேலே ஜாக்கெட்டுக்குள் வரிசைகிரமமாக வைக்கப்பட்ட வெடிகுண்டுகளைக் கொண்டு ஜாக்கிரதையாக தைக்கப்பட்ட மொத்த அமைப்பையும்,  வெடிக்க வைக்கப்பட வேண்டிய ஓயர்களுக்கான கட்டுப்பாட்டின் பொத்தான் என்பதும் இடுப்புக்கு கீழே வரும்படி உருவாக்கப்பட்டு இருந்தது. இதன் நோக்கமென்பது குனியும் போது கைக்கு எட்டும் உயரம். உள்ளாடையின் உள்ளே மொத்த வெடிகுண்டுகளையும் கட்டுப்படுத்துவது இரண்டு பொத்தான்கள்.  முதல் என்பது இயக்கும் விசையென்பது ஏதும் தவறுதலாக அமுக்கப்படும் பட்சத்தில் மொத்த இயக்கத்தையும் நிறுத்துவதற்கு பயன்படும்.  இரண்டாவது என்பது வெடிக்கச் செய்யும் வீர்யம்.  இத்தனையும் நவீன தொழில் நுட்பமோ, வெளிநாட்டு இறக்குமதியோ அல்ல. வெறி உருவாக்கிய சுதேசி மனப்பான்மை. இது சிங்களர்களுக்கென்று பிரபாகரன் மனதில் உருவாக்கப்பட்ட அமைப்பு பிரபாகரன் துப்பாக்கி சுட கற்றுக்கொண்டது முதல் இது போன்ற வெடிபொருட்கள், பின்னால் வந்த நவீன ரக ஆயுதங்கள் அத்தனையும் பயிற்சி எடுத்து கற்றுக் கொண்டது அல்ல.  புத்தகங்கள் படித்து கற்றுக்கொண்டது. தணு மாட்டியிருந்த வெடிகுண்டு அமைப்பு அமெரிக்காவில் டெட்டராய்ட் நகரில் வெளியிடப்பட்ட புத்தகம் மூலம் உருவாக்கப்பட்டது. இந்த. ஆண் பெண் கரும்புலிகள் என்பது முழுக்க முழுக்க பிரபாகரன் சிந்தனையில் உருவானது. .  

கரும்புலிகளுக்கென்று உருவாக்கப்பட்டவர்கள் இதில் தங்களை அர்பணித்தவர்களை இயக்கத்தில் உள்ள மற்றவர்களிடத்தில் இருந்து தனியாக தேர்ந்தெடுப்பது முதல் அவர்களுக்கென்று உருவாக்கப்பட்ட பயிற்சி வகுப்புகள், பாடங்கள் வரைக்கும் வித்யாசமான சூழ்நிலையில் இருக்கும். உள்ளேயுள்ள மற்ற அமைப்புகளுடன் சம்மந்தம் இருக்காது.  எவரவர் இதில் இருப்பார்கள்?  மற்றவர்களுக்கு தெரியுமா என்பதும் சந்தேகமே. கரும்புலிகளாக இருப்பவர்களுக்கும் அவர்களின் இலக்கு என்பதும், எந்த நாள் வரைக்கும் இந்த உயிர் உடலில் இருக்கும் என்பதும் அவர்களுகே தெரியாது.  நாளை, மறுநாள், அடுத்த வாரம், அடுத்த மாதம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.  மனோதிடத்தின் உச்சம்.  மற்ற தீவிரவாத அமைப்புக்கும் விடுதலைப்புலிகளின் அமைப்புக்கும் உள்ள் மிகப்பெரிய வித்யாசமே இது தான்.  இங்கு தான் ஆரம்பமாகிறது.. மற்றவர்கள் ஒரு குடும்பத்தில் உள்ள ஏழ்மையை பயன்படுத்தி அவர்களின் குடும்பத்திற்காக கொடுக்கப்படும் நிதி என்பதன் மூலம் ஒருவரை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த குடும்பத்தின் எதிர்கால வாழ்வுக்காக மும்பை கசாப் போல தனிப்பட்ட ஒருவர் இந்த மனித வெடிகுண்டாக தீவிரவாதியாக மாற்றம் பெறுவார். 

ஆனால் இங்கே என்ன தான் மூளைச்சலவை என்று தொடங்கினாலும் ஒரு அளவிற்கு மேல் இயக்கத்தின் வெற்றிக்கான தங்களால் ஆன முன்னேற்பாடு என்ற அளவிற்கு அவர்களின் இறுதி மனோ திடம் இந்த பாதையில் கொண்டு வந்து அவர்களை நிறுத்திவிடுகின்றது..  தீர்மானிக்கப்பட்ட நாளுக்கு முன் அல்லது அவர்களின் இலட்சியத்திற்கான பயணம் தொடங்கப்படுவதற்கு முன் பிரபாகரன் உடன் உணவு அருந்தும் வைபோகத்துடன் அவர்களுக்கும் விடுதலைப்புலி இயக்கத்திற்கும் உள்ள உறவு முறிந்து விடுகின்றது.அப்போது தொடங்கும் அவர்களின் பயணமென்பது அவர்களின் இறுதி வாழ்க்கை பயணத்தின் தொடக்கப் பாதை.

இவர்கள் தான் கடைசியாக "அக்னிக்குழந்தைகள்" என்றும்," மண் மீட்பிற்காக உயிர் நீத்த மாவீர்கள்" என்ற உருவாக்கப்படும் ஆவணப் பெயரில் வந்து முடிந்து போய் விடுகிறார்கள். சிங்களர்களுக்கென்று உருவாக்கப்பட்ட கரும்புலிகள் இன்று ராஜீவ் காந்திக்கு என்று மாற்றப்பட்ட கொடுமை என்பது இந்தியாவிற்கு மே 22 அன்று புலர்ந்த காலை என்பது கதறும் நாளாக இருந்தது.  காத்துக் கொண்டுருந்த சமூக விரோதிகளுக்கு சொத்துக்களை சூறையாடுதல் தொடங்கி பிடிக்காதவர்களை போட்டுத் தள்ளும் பைபவம் வரைக்கும் கொண்டு செலுத்தியது. அன்றைய தினம் அதிகமாக பாதிக்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழக அடிமட்ட தொண்டர்களும், இயக்கத்தில் இருந்தவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. குறிவைத்து சொத்துக்கள் சூறையாடப்பட்டது. செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டுருந்த மொத்த வாகனங்களும் நிறுத்தப்பட்டன. கலவரத்தீயின் நாக்கு மெதுவாக முன்னேறிக்கொண்டுருந்தது. வரிசையாக நின்று கொண்டுருந்த ஆயிரக்கணக்கான பேரூந்துகளும் நிறுத்தப்பட்டது. 

முடக்கப்பட்டது என்ற வார்த்தை தான் சரியாக இருக்கும். எவருக்கும் எதுவும் தெரியவில்லை.  அவரவருக்கு தெரிந்த வார்த்தைகள் கொண்டு கோர்த்துக் கொண்டுருந்தனர்.  எவர் வாயில் இருந்து ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார் என்று வரவேயில்லை என்பது மிகப் பெரிய ஆச்சரியம்.  காரணம் பயணித்த பேரூந்து நடந்து முடிந்த இடத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் சாலையில் நின்று கொண்டுருந்தது.  முன்னால் பின்னால் எத்தனை ஆயிரம் பேரூந்துகள் நின்று கொண்டுருந்த கணக்கு சொல்லிவிட முடியாது? அன்று செங்கல்பட்டில் நடு இரவு 2 மணிக்கு சிறப்பு சேவையாக விடப்பட்ட ரயில் மூலமாக புளி மூட்டையாக பயணித்து கிளம்பிய சென்னைக்கு மீண்டும் வந்து சேர்ந்த போது விரித்து வைத்து விற்பனை செய்து கொண்டுருந்த முதல் பாதி பக்க செய்திகள் கருப்பாக அந்த அலறல் செய்தியதை பார்த்த படித்த செய்திகள் மூலம் உணர்ந்தவன் இது போன்ற ஒரு தொடர் எழுதவேண்டும் என்பது? 

தமிழக கவர்னராக இருந்த பீஷ்ம நாராயணன் சிபிஐ புலனாய்வு செய்ய வேண்டும் என்று அறிக்கை வாயிலாக தெரிவித்தார். செய்திதாள்கள் முதல் உலக மக்கள் மனங்கள் வரைக்கும் கருமையை உருவாக்கியிருந்தது.. காரணம் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றது முதல் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் என்பது புதிது. ஊடகங்கள் அவரவருக்கு தெரிந்த தெரியாத பரபரப்பு சம்பவங்களை அள்ளித் தெளித்து கோர்த்து சேவை புரிந்தார்கள். ஆனால் சிறப்பு விமானம் மூலம் வரவழைக்கப்பட்ட சோனியா, பிரியங்கா மிச்சம் மீதி தேறி இருந்த உடலையும், அக்கு வேறு ஆணி வேறாக செய்த பிரேத பரிசோதனைக்குப்பிறகு கிடைத்தவற்றை பெட்டியில் போட்டுக் கொண்டு டெல்லிக்கு கொண்டு சென்றார்கள். அன்றைய தினம் இந்த படுகொலைக்குப் பின்னால் உள்ள காரணங்கள் எவருக்கும் தெரியவில்லை. பல்வேறு யுகங்கள். இந்து மத தீவீரவாதம், சீக்கியர்களின் கோபம், காஷ்மீர் தீவிரவாதம்,சிஐஏ முதல் எந்தந்த வகையில் கற்பனைக் குதிரைகளை தட்டிவிட முடியுமோ அந்த அளவிற்கு செய்திகள் தறிகெட்டு பறந்தது.

உருவாக்கப்பட்ட புலனாய்வு குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர்கள், அதில் பங்கெடுத்து இருந்தவர்கள் முதல் இந்திய இராணுவ உயர் மட்டம், இந்திய புலனாய்வு குழுக்கள் வரைக்கும் எவருமே இதை விடுதலைப்புலிகள் இயக்கம் தான் செய்து இருக்கும் என்பதை நம்பத்தயாராய் இல்லை என்பது இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.  ஆனால் இதற்கு காரணமாக அவர்கள் அத்தனை பேர்களும் சொன்ன வார்த்தைகள் அதைவிட நிதர்சனமான உண்மை. 

" இந்தியாவை எப்போதும் சார்ந்து இருக்க வேண்டிய அவர்கள் இது போன்ற முட்டாள் தனமாக காரியத்தை செய்ய துணிச்சல் வராது " என்றார்கள். அதுவே பின்னாளில் முறைப்படியான விசாரணைக்குப் பிறகு தெரிய ஆரம்பித்த போது, தெரிய வந்த போது உருவான கருமை என்பது கலங்கிய மனமாக மாறியது. 

பிரபாகரன் மனம் என்பது எப்படி இருந்து இருக்கும் என்பது அவர் விரும்பும் இயற்கைக்கு மட்டும் தான் தெரிந்து இருக்கும்? அவர் விரும்பிப் படிக்கும் வரலாறு எதிர்காலத்தில் என்ன சொல்லும் என்பதை உணர்ந்து இருப்பாரா? 
அவரே சொல்லியிருப்பது போல் " என்னுடன் உடன் இருப்பவர்கள். பழகியவர்கள், உயிராக நான் நினைத்தவர்கள் என்று அத்தனை பேர்களும் பல்வேறு போராட்டகளத்தின் வாயிலாக நான் இழந்த போது அடையும் மனத்தளர்ச்சிக்கு அளவே இல்லாமல் இருக்கும்.  இதில் இருந்து நாம் மீண்டு வந்து தான் ஆகவேண்டும் என்று என்னைத் தேற்றிக்கொண்டு மீண்டு வருவதுண்டு". 

ஆனால் இந்த கோர நிகழ்வில் இருந்து எப்போது அவர் மனம் மீண்டு வந்தது என்பதை இறுதிவரைக்கும் சொல்லவில்லை என்பதை விட ராஜீவ் காந்தி மரணம் என்பது " துன்பியல் சம்பவம் " என்று எளிதாக நகர்ந்தது தைரியமா? மனோதிடமா? இல்லை நான் செய்தது சரிதான் என்ற.?????
நிஜமான வீரம் என்பதை வீரனாக வாழ்ந்தவர் ஏன் இந்த விசயத்தை மட்டும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியவில்லை?

Friday, March 12, 2010

வெறியின் வெற்றி சிதறிய ராஜீவ் காந்தி

சென்னையில் சிவராசன் விரும்பிக் கேட்ட இரண்டு சக்கர வாகனம் (காவாஸகி பஜாஜ்) உள்ளுர் இருந்தவர் பெயர் வைத்து வாங்கியாகி விட்டது.  இதன் மூலம் இரண்டு பலன்.  நினைத்த இடத்திற்கு விரைவாக செல்ல முடியும்.  மற்றொன்று தேவைப்படும் போது இதன் பேட்டரியை பல விதங்களிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.  இத்துடன் இலவச இணைப்பு போல் தனியாக வாங்கிய கார் பேட்டரி என்பது வயர்லெஸ் தொடர்பு இயக்குவதற்கு பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.  மனதில் வைத்திருந்தபடியே மொத்த பூர்வாங்க ஏறபாடுகளையும் முடித்தாகி விட்டது.. இலங்கை என்றால் எதற்கும் ஒத்திகை தேவையில்லை.  வெடித்து சிதறும் காட்சி உறுதியாய் ஊடகத்தில் தெரியவரும்.  இது இந்தியா.  ஓத்திகை வேண்டும் என்ற நிணைத்த சிவராசன் நந்தனத்தில் விபி சிங் பேசிய பொதுக்கூட்டத்திற்கு மே 7 (1991) இந்த ஐவர் கூட்டணியுடன் சென்றார்.

சிவராசன் எப்போதும் போல குர்தா உடையில் பத்திரிக்கையாளர் வரிசையில் அமர்ந்து இருந்தார். இதற்கென்று ஏற்கனவே நகலாக உருவாக்கப்பட்ட பல ஆங்கில தமிழ் பத்திரிக்கைகளின் முகவரி ஒட்டிய அடையாள அட்டை பையில் தயாராக இருக்கும். ஏற்கனவே பேசி வைத்திருந்த திட்டப்படி சுபா, தணு இருவரும் விபி சிங் அருகே சென்று கொண்டு போயிருந்த மாலையைப் போட வேண்டும்.  இதை நளினி புகைப்படமாக எடுக்கப்படவேண்டும்.  ஆனால் கூட்ட நெரிசலில் இருவரும் விபி சிங் அருகே மிக அருகே செல்ல முடிந்த போதிலும் அதை நளினியால் புகைப்படமாக எடுக்க முடியவில்லை.  ஆனால் அப்போது சிவராசன் நளினி மூலம் உணர்ந்து கொண்டது தமிழ்நாட்டில் எந்த பொதுக் கூட்டத்திற்கும் வரும் தலைவர்கள் அருகில் செல்ல வேண்டுமானால் அதற்கென்று தனி உழைப்பும் உள்ளுர் சாமிகளை கவனித்தும் இருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டார்,  இப்போது வருத்தப்பட்டு என்ன செய்ய முடியும்.  ஆனால் அன்றே அவர்களுக்கு உறுதியாய் தெரிந்து விட்டது.  நாம் போகும் பாதை வெற்றிப்பாதை தான்.  சந்தேகம் என்பதே வேண்டாம்.  கம்பியில்லா தகவல் தொடர்பில் ஒத்திகையின் வெற்றியை உடனடியாக சம்மந்தவர்களுக்குக்கூட தெரிவித்தாகி விட்டது.

அவர்கள் அப்போது யாழ்பாணத்தில் சொன்னது ஈழத்தவராக இல்லாவிட்டாலும் ஆபிஸர் பெண்மணி (நளினி) ஒத்துழைப்பு மிக அற்புதம் என்ற செய்தியை கடத்தியிருந்தார்கள். இனி என்ன?  நேரிடையாக மே 21 செல்ல வேண்டியது தான். மே 20 சிவராசன் சம்மந்தபட்ட மொத்த கூட்டணியினரையும் பாக்யநாதன் வீட்டுக்கு வரவழைத்து சிறிய கூட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தார்.  என்ன செய்ய வேண்டும்?  என்ன செய்யக்கூடாது? என்பதை தெளிவாக விளக்கிவிட கூட்டம் இனிதே கலைந்து விட்டது.

இந்த இடத்தில் நளினியைப் பற்றி நாம் புரிந்து கொள்ளவேண்டும்.  காரணம் நளினியை புலனாய்வு குழுவினர் கைது செய்த போது இரண்டு மாத கர்ப்பவதி. சிறையிலேயே பிறந்த குழந்தை, பின்னால் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டுருந்தவர்கள் மூலம் வெளிநாட்டுக்கு குழந்தை வளர அனுப்பப்பட்டது. வளர்ந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்க முடியாமல் சிறைக்கூடத்தில் வாடிக்கொண்டுருப்பவர். அந்த குழந்தைக்காகவே தன்னுடைய மீதி நாட்கள் நன்றாக அமையவேண்டும் என்று தன்னை ஆறுதல் படுத்திக் கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பவர். ஒரு மனித வாழ்வில் பாதி நாட்களை சிறையிலேயே கழித்தவர். தமிழ்நாட்டில் நடந்த வெடிகுண்டு வழக்குகளில் கூட எத்தனையோ அப்பாவி மக்களை கொன்றவர்கள் கூட அரசாங்க விடுமுறை முதல் மற்ற அத்தனை சலுகைகளையும் கணக்கில் கொண்டு 9 முதல் 10 வருடங்களில் வெளியே வந்துள்ளனர்.  ஆனால் இவர் இன்னமும் வெளியே வர முடியவில்லை.

வெளியே கொண்டு வர வாய்ப்பு இருந்தும், இவருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றிய கருணை கூட இவரின் கண்ணீர் வாழ்க்கையை முடிவுக்கு இன்னமும் கொண்டு வரமுடியவில்லை.  இவர் விசயத்தில் தான் வெட்டி விளக்கெணய்கள் வீரவேசமான அறிக்கை என்ற அக்கப்போர்கள் நடத்திக்கொண்டு நாங்களும் ராஜீவ் விசுவாசி, இந்திய தீவிரவாதம் என்று பொரியல் வழித் தோன்றலாக தங்களைக் காட்டிக்கொண்டுருக்கிறார்கள். முடிவு எடுக்க வேண்டியவர்கள், முடியும் என்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் கூட கருப்பு மறுபடியும் பிடித்து விடுமோ என்ற     " ராங் சென்டிமெண்ட்" வைத்துக்கொண்டு முடிவெடுக்காமல் "தேமே" என்று வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

இவர் செய்த வேலையென்பது முருகனுடன் உருவான காதல் காரணமாக வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது.  தெரிந்து அவர்களுடன் உடந்தையாக இருந்தாரே தவிர உண்மையான குற்றவாளி அல்ல.  இவர் கைதுக்குப் பிறகு தான் திட்டத்தின் அடித்தளமே புலனாய்வு குழுவினருக்கு புரிந்தது.  மேலும் பிடிபட்டவர்கள் ஒவ்வொருவரும் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல வாக்கு மூலம் கொடுத்தார்களே தவிர நளினி அளவிற்கு முழுமையாக ஒப்புவித்தவர் எவருமில்லை. அப்படியே இபிகோ சொல்லும் உடந்தைக்கு உண்டான தண்டணை என்பதை சட்டம் நிர்ணயித்ததைவிட அதிகப்படியாகவே பெற்றும் விட்டவர்.  பகலில் பட்டாசு வெடித்து கொண்டாடி காசாப்பு கடை கசாப்புக்கு கூட பாதுகாப்புக்கு என்று 33 கோடி செலவழித்துள்ளார்கள். ஆனால் இன்னமும் உள்ளே அமைதியாக வாழ்ந்து நம்பிக்கையை மட்டும் சுமந்து கொண்டு நெருப்பு நாட்களை கழித்துக்கொண்டுருப்பவர்.. தனக்கு கிடைத்த தண்டனைக் காலத்தைக்கூட வீணாக்காமல் பல பட்டய மற்றும் பட்டப்படிப்புகளை படித்து முடித்து சாதனை புரிந்தவர்.
நளினி செய்த முதல் பாவம் முருகனிடம் மனதை பறிகொடுத்தது.  முருகனால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்.  தாயிடம் இருந்து வெளியே வந்தவர் தேடிய அன்பு முருகன் மூலம் கிடைத்ததால் தன்னை மறந்தவர்.  முருகன் மேல் உருவான காதலால் சிவராசன், சுபா, தணுவுடன் பழகியவர்.  இந்த மூளைச்சலவை தான் மே 21 அன்று சிவராசன் " நீங்கள் இன்று உங்கள் அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லிவிட்டு வந்து விடுங்கள் " என்றதும் அதே போல் அரை நாள் அலுவலக விடுமுறை எடுக்க வைத்தது.  இவரின் அம்மா பத்மா செவிலியராக (NURSE) வேலைப்பார்த்தவர்.  பணிபுரிந்த மருத்துவ மனையில் புகைப்பட நிறுவனம் நடத்திக் கொண்டுருக்கும் சுபா சுந்தரம் என்ற இதில் பின்னால் வரப்போகும் பிரபல்யத்தின் மனைவி குழந்தைபேறுக்காக வந்த போது பழகிய நளினியின் அம்மா, அந்த தொடர்பு மூலம் தன்னுடைய மகன் பாக்யநாதனை 1987 தொடக்கத்தில் சுபா சுந்தரம் நிறுவனத்தில் சேர்த்து விட்டார்.  சுபா சுந்தரம் விடுதலைப்புலிகளின் ஆதரவு என்பது அணைவருக்கும் தெரிந்த ஒன்று.

அங்கு பாக்யநாதனுக்கு உருவான விடுதலைப்புலிகளின் வரிசையான தொடர்பு கடைசியில் தனியாக பிரிந்து வாழ்ந்து கொண்டுருந்த நளினி விடு வரைக்கும் கொண்டு வந்து சேர்த்தது.  விடுதலைப்புலி இயக்க தொடர்புகளை உருவாக்கியவர் சகோதரர் பாக்யநாதன்.  அதன் மூலம் நளினியின் வீட்டுக்கு உள்ளே வந்தவர் முருகன். விடுதலைப்புலிகளின் இயக்க உளவுத்துறை வேலைக்காக இலங்கையில் இருந்து வந்தவர்.  இந்த முருகன் நளினி காதல் சிவராசனுக்கு பலவிதங்களிலும் உதவியதும் உண்மை. ஸ்ரீ பெரும்புதூருக்கு நளினியை உடன் கூட்டிச் செல்லவேண்டும் என்பது சிவராசனின் பல்வேறு திட்டமிடுதலின் அடிப்படையில் கூட இருக்கலாம்.  திட்டத்தை முழுமையாக தெரிந்தவர் காரியம் முடியும் தருணத்தில் வெளியில் இருந்தால் தவறாக முடியலாம் என்ற எண்ணமாகவோ, அவர்களின் மொத்த திட்டத்தின்படி எவரையோ ஒருவர் மாட்டிக்கொள்ள வைக்க என்பதாகவும் இருக்கலாம்.  ஆனால் தொடக்கம் முதல் நளினியிடம் சிவராசன் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்று தான்.  சுபா, தணு இருவரும் திட்டம் முடியும் வரைக்கும் எவருடனும் பேசிவிடக்கூடாது.  பேசினால் அவர்களின் தமிழ்மொழி காட்டிக் கொடுத்துவிடும்.  திடீர் என்று கூட்டத்தில் எவராவது பேசும்பட்சத்தில் நளினியை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்பதாகத்தான் இருந்தது. .
                                                            நளினி மகள் அரித்ரா
மே 21 இரவு, பாக்யநாதன் அன்று இரண்டாம் ஆட்ட திரைப்படத்திற்கு சென்று விட்டார்.  முருகன் இரவு சாப்பாடு முடித்து உறங்கப் போய் விட்டார்.  ஆனால் நளினியின் விதி சுபா வாயால் பேச வைத்தது. "துரோகி ராஜீவை கொன்று இன்று தணு புதிய சரித்திரம் படைக்கப் போகிறார். நீங்களும் வாருங்களேன் " என்று சுபா அழைத்தும் சற்று கூட யோசிக்காமல் அவர்களுடன் கிளம்பினார்.  ஆனால் கிளம்புவதற்கு முன் சுபா மாட்டிவிட்ட தணுவின் உடையில் உள்ளே இருந்த புதிய வித்யாசமான ஆடைகளை பார்த்தவர். அதன் முழு வீர்யம் அப்போது உணர்ந்தாரா என்பதும்,  அதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையும் யோசிக்காமல் கிளம்பினார். இளங்கன்று பயமறியாது என்பது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு காதலுக்கு கண் இல்லை என்பதும் இந்த துக்க சரித்திரத்தின் தொடக்கமாக போய்விட்டது.

நளினி வில்லிவாக்கம் வீட்டில் இருந்து குழுவினர் கிளம்பிய நேரம் பிற்பகல் 3 மணி. நால்வரும் பாரிமுனைக்கு வந்த நேரம் 4.30,  அங்கு இவர்கள் வருகைக்காக காத்துருந்த புகைப்படம் எடுக்க தயாராய் இருந்த ஹரிபாபு பூம்புகார் கடையில் வாங்கிய சந்தன மாலையுடன் ஸ்ரீபெரும்புதூர் வந்து இறங்கிய போது நேரம் ஏறக்குறைய 7.30 (?).  ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அத்துவான பொட்டல்காடு.  செங்கல்பட்டு மாவட்டம் முதல் காஞ்சிபுரம் வரைக்கும் இன்று பரவியுள்ள வெளிநாட்டு வணிகத் தொடர்பு நிறுவனங்கள் எதுவும் வராத காலம். இவர்கள் வந்து இறங்கிய போது ஏறக்குறைய இருட்டாகத் தான் இருந்துருக்கும். கூட்டம் வந்து சேராதா என்று காத்துக் கொண்டுருப்பவர்களுக்கு வருபவர்கள் ஒவ்வொருவரும் சந்தோஷமளிப்பவர்கள் தானே. வந்த இந்த ஐவர் கூட்டணியினரை அங்கேயிருந்தவர்கள் கண்டு கொள்ள வாய்ப்பும் இல்லை..  அரை குறை இருட்டும் அப்போது இவர்களுக்கு சாதகமாகவே இருந்துருக்கும். இதற்கெல்லாம் மேல் பல தீவிரவாத அச்சுறுத்தல்கள் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அங்கு உருவாக்கப்பட்ட பாதுகாப்பு சமாச்சாரங்கள் அத்தனையும் நகைச்சுவை போலத்தான் இருந்தது.  முள்ளிவாய்க்கால் இறுதி கட்ட போருக்கு தன்னால் ஆன முழு ஒத்துழைப்பையும் வழங்கி தன்னுடைய பங்களிப்பையும் அளித்த அப்போதைய ஐ.பி உயர் அதிகாரி நாராயணன் துறை மூலம் வழங்கப்பட்ட ரகசிய அறிக்கையில் விடுதலைப்புலிகள் குறித்து எந்த புரிந்துணர்வும் உருவாக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். உள்ளே வந்ததும் தணு,சுபா,நளினி மூவரும் முதலில் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்றார்கள். சிவராசன், ஹரிபாபு வேறு பக்கம் பிரிந்து போய் விட்டனர்.

ராஜீவ்காந்தி பயணித்த விமானம் சென்னை மீனப்பாக்கம் விமான நிலையத்தை வந்து அடைந்த நேரம் 8.20,  ராஜீவ் காந்தியுடன் குண்டு துளைக்காத (?) கார்,  மீனம்பாக்கத்தை விட்டு வெளியே வந்து ராஜீவ் பயணித்த காரில் பயணம் செய்தவர்கள், வாழப்பாடி ராமமூர்த்தி, வேட்பாளர் மரகதம் சந்திரசேகர் பிரத்யோக பாதுகாப்பு அதிகாரி இவர்களுடன் பேட்டி கேட்டுருந்த கல்ப் நியூஸ், நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளர்கள்.

ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தை ஏற்பாடு செய்து மொத்த பொறுப்பையும் ஏற்றுருந்தவர் மரகதம் சந்திரசேகரின் பிரத்யோக உதவியாளர் ஏ.கே.தாஸ்.  எவரெல்லாம் ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்கப்பட வேண்டும் என்பதில் தொடங்கி, நடந்து வரும் போது அவருடன் அறிமுகப்படுத்தப்பட வேண்டியவர்கள், மாலை போட அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் என்பது வரைக்கும் மிகவும் பரபரப்பாக பட்டியல் தயாரித்து அலைந்து கொண்டுருந்தார். அதற்கும் மேலே அங்கு சேர்ந்து இருந்த கூட்டத்தை நிலை நிறுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுருந்த சங்கர் கணேஷ் இன்னிசை நிகழ்ச்சி நடந்து கொண்டுருந்தது.

ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் வந்து இறங்கியதும் திட்டமிட்டபடி சாலையின் தொடக்கத்தில் இருந்த இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட வேண்டும்.  அதனைத் தொடர்ந்து நடந்து வந்து தரையில் போட்டுருந்த சிவப்பு கம்பளம் வழியே நடந்து மேடைக்குச் செல்ல வேண்டும்.  செல்லும் போது கம்பளத்தின் ஓரத்தில் நின்று கொண்டுருக்கும் முக்கியமானவர்களை சந்திப்பதும், அவர்கள் அணிவிக்கும் மாலை மரியாதை ஏற்றுக்கொண்டு பொதுக்கூட்ட மேடையை அடையவேண்டும்.  ஓரமாக போட்டுருந்த தடுப்பு கட்டைகளுக்குப் பின்னால் பொதுமக்கள் கூட்டம்.

வேட்பாளர் மரகதம் சந்திரசேகரரின் மகள் லதா பிரியகுமார்.  இவர் உதவியாளர் பெயர் லதா கண்ணன். லதா கண்ணனின் அப்பா ஒரு கவிதை எழுதி அதனை ஹிந்தியில் மொழிபெயர்த்து வைத்திருந்ததை மகள் கோகிலா மூலம் வரும் ராஜீவ் காந்தியிடம் வாசித்துக்காட்ட சிறப்பு அனுமதி பெற்று வரிசையில் காத்து இருந்தார்கள். காத்திருந்த மொத்த 23 பேர்களில் இந்த கோகிலா தவிர மற்ற அணைவரும் ஆண்கள்.  தணு இப்போது இந்த கூட்டத்தில் இல்லை.  இந்த 23 பேர்களில் மூவர் மட்டும் மாலை போட அனுமதி பெற்றவர்கள். மற்றவர்கள் அனைவரும் உரையாடலுக்கு அனுமதி பெற்றவர்கள்.  இந்த சடங்குகளை முடித்து விட்டு ராஜீவ் காந்தி நேரிடையாக மேடைக்குச் செல்ல வேண்டும்.

உள்ளே பாதுகாப்பு பணியில் இருந்த தமிழ்நாடு காவல் துறை தலைமை அதிகாரி ராகவனுக்கோ எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டுருந்தது.  பாதுகாப்புக்காக ஈடுபட்டுருந்த காவல்துறையினரின் எண்ணிக்கை வெறும் 300 மட்டுமே.  அத்துவான காட்டில் அப்போது உருவாக்கியிருந்த திடீர் வெளிச்சம் மட்டுமே உறுதுணையாய் இருந்தது. இதுவும் திடீர் என்று நின்று போனால் கும்மிருட்டு தான்.  இதற்கிடையே தொண்டர்கள் என்ற பெயரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை குளறுபடி செய்து கொண்டுருந்தனர்.  எவரையும் திருப்திபடுத்த முடியவில்லை.  அங்கிருந்த எவருமே காவல்துறையினர் சொல்வதை கேட்கும் நிலையிலும் உத்தரவுகளுக்கு கீழ்படியும் சூழ்நிலையும் அங்கு நிலவவில்லை.

சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா தலைமைப்பொறுப்பில் பணியில் இருந்தவர். இவருக்கு மேல் அதிகாரி ராஜேந்திரன். ராஜீவ் காந்தியை சந்திக்கும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி சந்திப்பை முடித்து வைக்க வேண்டும்.  அவருக்கு அணிவிக்கும் மாலைகளை துண்டுகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட வேண்டும்.  முறைப்படி முழுமையாக அதுவும் நடக்கவில்லை.  வரிசையில் நிற்பவர்களின் பெயர்கள் சோதிக்கப்பட்டு ஆவணமாக செய்துருக்க வேண்டும். இதுவும் செய்தபாடில்லை. ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் வந்து இறங்கிய நேரம் இரவு 10.10

உள்ளே நடந்து வந்து தொடக்கத்தில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை போட்டு முடிப்பதற்குள் ஓரளவிற்கு ஓழுங்கு படுத்தியிருந்த கூட்டமும் மொத்தமும் கலைந்து அவரவர் முண்டியடித்துக் கொண்டு ராஜீவ் காந்தியை நோக்கி முன்னேறினர். பொறுப்பில் இருந்த தாஸ் கொடுத்த பட்டியலை வைத்துக்கொண்டு ஒரு சிலரை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதித்தனர். ஒழுங்குபடுத்தப்பட்ட கூட்டம் திமுதிமுமென்று திசைமாறி மொத்தமாக உருமாறியிருந்த தருணத்தை பயன்படுத்திக்கொண்டு அப்போது கவிதை படிக்க காத்திருந்த கோகிலா பின்னால் வந்து தணு நின்று இருந்தார். இந்த சந்தோஷ தருணத்தில் இருந்த கோகிலாவோ அவர் அம்மாவோ அப்போது தணுவை கவனிக்கும் சூழ்நிலை இல்லை.  தணுவுக்கு மொத்தமும் சாதகமாகி விட்டது.   ராஜீவ் காந்தி தன் அருகே வருவதற்கு காத்துக்கொண்டுருந்தார் தணு. கவனிக்கும் தூரத்தில் சிவராசன். அதற்கும் சற்று தொலைவில் சுபா, நளினி. இவர்கள் அத்தனை பேர்களையும் வேறொருவரும் அங்கு கவனித்துக்கொண்டுருந்தார். அவரை சுபா, தணு,ஹரிபாபு எவருக்குமே தெரியாது.

உடன் வந்த அயல்நாட்டு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்து முடித்து விட்டு பயணித்து வந்த காரை விட்டு இறங்கிய ராஜீவ் காந்தி அவர்களை வேறொரு காரில் அனுப்பி விட்டு நடந்தார்.  உடன் வந்த வாழப்பாடி ராமமூர்த்தி மேடையை நோக்கி முன்னேறிச் சென்று விட்டார். வந்து இறங்கிய போது வரவேற்ற கருப்பையா மூப்பனார் இந்திரா காந்தி சிலைக்கு மாலையிட்ட நிகழ்ச்சி முடிந்ததும்,  ராஜீவ் காந்தியை மரகதம் சந்திரகேசரருடன் அனுப்பி விட்டு மெதுவாக நடந்து வந்து கொண்டுருந்தார்.

ராஜீவ் காந்தியுடன் வந்து கொண்டுருந்த மரகதம் சந்திரசேகர் வரிசையில் நின்று கொண்டுந்த ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து கொண்டு வந்தார். சால்வை போட்ட தொண்டர் ஒருவர் ராஜீவ் காந்தி கையை பலமாக பற்றிக்கொண்டு விட மறுக்க அப்போதைய அந்த சூழ்நிலை சற்று தர்மசங்கடத்தை உருவாக்கியது.  அங்கிருந்த வீடியோ புகைப்படக் காரர்களுக்கு தேவைப்படும் மின்சாரம் மேடையில் இருந்து வந்து கொண்டுருந்ததால், மின்சாரம் இல்லாத சூழ்நிலையில் எவரும் இந்த நிகழ்வுகளை புகைப்படம் எடுக்க முடியாமல் கருவிகளை நிறுத்தி விட்டு அமைதியாக இருந்தனர்.

ஆண்கள் பகுதியின் அறிமுகம் முடிந்ததும் இப்போது ராஜீவ் காந்தியை பெண்கள் வரிசையாக நின்று கொண்டுருக்கும் பகுதிக்கு மரகதம் சந்திரகேசர் அழைத்து வந்து அறிமுகத்தை தொடங்கியிருந்தார்.  அப்போது நடந்த சில வித்யாசமான சம்பவம் (?) ராஜீவ் காந்தி உடன் நடந்து வந்துகொண்டுருந்த மரகதம் சந்திரசேகர் கையை மற்றொருவர் பிடித்துக்கொண்டு (?) மேடையை நோக்கி முன்னேறிக்கொண்டுந்தார்.  கவிதையை வாசித்து முடித்த கோகிலாவை தாண்டிய ராஜீவ் காந்தி தணுவை நெருங்கியிருந்தார்.  அப்போது தான் பாதுகாப்பு பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா தணுவைப் பார்க்க, பட்டியலில் இல்லாத இவரை ஒதுக்கித்தள்ள முன்னால் வர பாதி நீட்டிய சந்தனமாலையுடன் நின்ற தணுவை ஒதுக்க வேண்டாம் என்ற சாடையால் காட்டிவிட்டு அவர் போட்ட சந்தணமாலையை கழுத்தில் வாங்கிக்கொண்டார்.  அப்போது பார்க்கும் தொலைவில் நின்று கொண்டுருந்த சிவராசனை கண் ஜாடையால் நகரச் சொல்லிவிட்டு இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டில் உள்ள முதல் பொத்தனை அமுக்கிவிட்டு ராஜீவ் காந்தியை வணங்குவதுபோல் குனிய இரண்டாவது பொத்தானும் அமுக்கப்பட்டது.

நடந்த நிகழ்வுகளை படங்களாக எடுத்த ஹரிபாபு கடைசியாக எதிர்பார்த்துக் கொண்டுருந்த இந்த படத்தை எடுக்க தயாராய் பார்வையை புகைப்படக்கருவி வழியே கூர்மைப்படுத்தினார். கூட்ட நெரிசலில் சரியாக எடுக்கப்படாமல் போய்விடுமோ என்ற அச்சம் உந்திந்தள்ள இன்னும் முன்னேறி உள்ளே வர அந்த அத்துவானக்காட்டு கருமையான இருட்டு திடீர் என்று உருவான தீப்பிழம்பையும், மனித கதறல்களையும் மௌனமாக உள்வாங்கி மீண்டும் அமைதியானது. 
கத்திய கதறல்களும்,  அலங்கோலமும், சிதைந்த உடல்களும், கருகிய வாசனையும், உருக்குலைந்த சடலங்களுக்கும் இடையே ராஜீவ் காந்தி எங்கே? என்று மேடையில் இருந்த வாழப்பாடியும், நடந்து வந்து கொண்டுருந்த மூப்பனாரும் கதறிக்கொண்டு வந்து தேடத் தொடங்கினர்.

Tuesday, March 09, 2010

சிவராசன் உருவாக்கிய ஐவர் கூட்டணி

இந்தியா அமைதிபடை இலங்கையில் இருந்த போது மற்ற போராளிக்குழுக்களை விட பிரபாகரனின் விடுதலைப்புலிகள் என்ற இயக்கம் மட்டும் தனித்தன்மையோடு இருந்ததற்கு பல வைராக்கியமான காரணங்கள்  இருந்தாலும் அப்போது நடந்து முடிந்த பல நிகழ்வுகள் உள்ளேயிருந்த பல இளைஞர்களுக்கு பிரபாகரன் என்பவர் ஆதர்ஷணமாக மாறியிருந்தார் என்பதையும் மறுக்க முடியாது.  இலங்கையில் இருந்தவர்கள் மட்டுமல்லாது, புலம்பெயர்நது வாழும் தமிழர்கள் என்பவர்களோடு தமிழ்நாட்டில் கூட பிரபாகரன் என்பவர் அதற்குப் பிறகு தான் தனித்தன்மையாக தெரிய ஆரம்பித்தார்.

விடுதலைப்புலிகளின் முதல் பலம் ஊடகம்.  இயக்கம் வலுவடையத் தொடங்கிய காலம் முதல் பிரபாகரன் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆவணமாக்குவதில் மிகுந்த கவனமாக இருந்தார். பிரபாகரன் ஊடகத் தொடர்புக்கு என்று உருவாக்கியிருந்த நபர்கள் உலக ஊடகத்திற்காக மொத்த விசயங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பில் பிரபாகரன் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் அளவிற்கு மிகச் சிறப்பாக பங்காற்றிக் கொண்டுருந்தனர்.  இந்த சிறப்பு எது வரைக்கும் வந்தது என்றால்ராஜபக்ஷே ஆட்சிக்கு வந்து இப்போது விட்டத்தை வெறித்து பார்த்துக்கொண்டுருக்கும் சதுரங்க ஆட்டத்தில் அடிபட்ட பொன்சேகா தலைமைத் தளபதியாக பொறுப்பு ஏற்றும் கூட இலங்கை அரசாங்கத்தின் ஊடகத் தொடர்பு அந்த அளவிற்கு பரிதாபமாகத் தான் இருந்தது.

உள்ளே நடந்த மொத்த நிகழ்ச்சிகளையும் சாதக அம்சங்களை அளவுக்கு அதிகமான வெற்றிப் பார்வையிலும் பாதக அம்சங்களை லேசாக கோடிட்டு காட்டியும் உலக தமிழ் மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததில் தமிழ் நெட் என்ற விடுதலைப் புலிகளின் ஆதரவு தளம் முக்கிய பங்கு வகித்தது. இந்த தளத்தின் மூலம் மட்டுமே தமிழ் மக்கள் மட்டுமல்லாது செய்தியாளர்களும்  தெரிந்து கொள்ள முடிந்தது.  கோத்தபய ராஜபக்ஷே முப்படைகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும், இதை முடிவுக்கு கொண்டு வர தனித்தன்மையோடு பல புதிய விசயங்களை உருவாக்கத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் இலங்கை இராணுவம் பெற்ற வெற்றிகளை கொண்டு ஊடகம் மூலம் சர்வதேச சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.

ஊடகத்துறைக்கு சிறிதும் சம்மந்தம் இல்லாதவரை ஏறக்குறைய ஓய்வு நிலையில் இராணுவத்தில் பணியாற்றியவரை இதற்கென்று தலைமைப் பொறுப்பில் நியமித்து விடுதலைப்புலிகளின் பாணியில் ஒவ்வொன்றாக உருவாக்கத் தொடங்கினார்கள். அதன் பிறகு தான் இலங்கையின் ராணுவ வெற்றிச் செய்திகள் வெளிவரத் தொடங்கியது.  தொடக்கத்தில் என்ன தான் இலங்கை ஆட்சியாளர்கள் முயற்சித்தாலும் அவர்களால் முழுமையாக விடுதலைப்புலிகளின் இயக்கத்துடன் போட்டி முடியவில்லை என்பதும் உண்மை.  உணர்ந்தவர்கள் கடைசியாக உருவாக்கியது தான் அழிப்பு வேலை.

அந்த விசயத்தில் மற்றவர்களை விட எப்போதும் சிங்களர்களுக்னென்று சிறப்பான தகுதி அதிகம் உண்டு.  விடுதலைப் புலிகளின் ஊடக தளத்தை அழிப்பதோடு, ஆதரவாக செயல்பட்டுக்கொண்டுருக்கும் அத்தனை விசயங்களையும், நபர்களையும் களையெடுக்கத் தொடங்கினார்கள்.  அதன் பிறகு தான் ஒரு முடிவுக்கு கொண்டு வர முடிந்தது.  இதன் காரணமாகத் தான் இலங்கையின் உள்ளே இருந்த பல ஊடக மக்கள் காணாமல் போவதும், கைதும், திரும்பி வராமலேயே மேலோகம் சென்றதும் விரைவாக கோத்தபய ராஜபக்ஷே மூலம் நடந்தேறத் தொடங்கியது.

அப்போது கோத்தபய சொன்ன வாசகம் இங்கு நினைவுகூறத் தக்கத்து.  ஏறக்குறைய இரட்டைக்கோபுர தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மேல் போர் தொடுக்க ஆய்த்த ஏற்பாடுகள் தொடங்கிய போது அமெரிக்க உள்துறை அமைச்சர் காலின் பாவெல் சொன்னது போல் "எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வில்லை என்றால் நீ எங்களுக்கு எதிரியாக இருக்கிறாய் என்று அர்த்தம்". கெட்டியாக பிடித்துக்கொண்ட சர்வாதிகார மனப்பான்மை தான் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு அவரால் உருவாக்கப்பட்ட நிர்வாக கட்டமைப்பை ஒரு ஒழுங்குக் கொண்டு வர முடிந்தது.
ஆயுதப் பாதையை தேர்ந்தெடுத்த சிவகுமரன் முதல் பிரபாகரனுக்கு சமமாக வளர்ந்த எத்தனையோ பேர்கள் ஏன் தன்னுடைய ஆளுமையை செலுத்த முடியவில்லை.ஏன் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்? மற்ற இயக்கங்களை அழித்தொழிக்க விடுதலைப்புலிகளின் இயக்கம் தீவிரமாக ஈடுபட்டபோதிலும் இதையெல்லாம் மீறிய ஓரே காரணம் தன்னுடைய கொள்கையில் எப்படி பிடிவாதமாக இருந்தாரோ அந்த அளவிற்கு தானும் சுத்தமாக இருந்தார்.  பிரபாகரன் அதிகம் பேசுவதும் இல்லை. ஒய்வென்றால் குறிப்பிட்ட காலம் வரைக்கும் பிரபாகரனுக்கு புத்தக வாசிப்பு தான் அதிகபட்ச விருப்பமாக இருந்தது. பிரபாகரன் குடும்ப வாழ்க்கை வாழ்ந்தாரே தவிர அந்த வாழ்க்கையை எந்த அளவிற்கு அவருடைய சுபாவம் வாழ வைத்துருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தால் அது மிகப் பெரிய வெற்றிடமாகத் தான் இருக்கும்.  அந்த வகையில் அவருடை மனைவி மதிவதனி தான் தியாகத்தின் உச்சகட்டம். இவரைப் போலவே அந்தப்பக்கம் கோத்தபய என்பவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது எவருடனும் இரண்டு வார்த்தைகளுக்கு அதிகமாகக்கூட பேசும் பழக்கம் இல்லை. சாந்தசொரூபி என்ற அர்த்தம் அல்ல.  காரியத்தில் கண்.  இந்த பதவி என்பது அவர் விரும்பி வந்தது அல்ல.  அமெரிக்காவில் பேராசிரியர் பொறுப்பில் போய் அமைதியாக வாழ வேண்டும் என்று நினைத்தவரை வலுக்கட்டாயப்படுத்தி என்பதாகத் தான் ராஜபக்ஷ கொண்டு வந்து அமர்த்தினார்.

ஏறக்குறைய ஒரே மனோபாவத்தில் தான் இருக்கிறார்கள். இருவருக்கும் அதிக பேச்சு என்பதே கூடாது.  செயல் மட்டும் தான் முக்கியம். ஒருவருக்கு தமிழர் என்ற ஒரு இனமே உள்ளே இருக்கக்கூடாது.  இவருக்கோ தமிழர்களுக்கு ஒன்று என்றால் சிங்கள ஆட்சியாளர்கள் ஒருவர் கூட இருக்கக்கூடாது.  பிரபாகரன் பார்வையில் ஆட்சியாளர்கள் மட்டுமே.  ஆனால் கோத்தபய பார்வையில் தமிழர்கள் ஒவ்வொருவருமே பிரபாகரனாகத் தான் தெரிந்தார்கள்.

முள்ளிவாய்க்கால் போர் என்பது 2009 மே என்று நாம் அனைவருக்கும் தெரிந்து இருந்தாலும் அதன் நதி மூலம் ரிஷி மூலம் என்று பார்த்தால் அதற்கு முந்தைய மூன்று வருடங்களும் அதற்காக உழைத்துள்ளனர்.  ஏறக்குறைய ராஜபக்ஷே பதவிக்கு வந்து அமர்ந்தவுடன் அமைதி ஒப்பந்தம் என்று வாய் கிழிய பேசினாலும் அப்போதே அவர் உள்ளுற எடுத்த முடிவு அது.  கூடயிருந்த அவரின் இரண்டு தங்க கம்பிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகஸ்யம். அது குறித்து பின்னால் பார்க்கலாம்.  காரணம் ஆண்டு விட்டுப் போன மற்றவர்களை விட ராஜபக்ஷேவின் மிகப் பெரிய பலம் என்பது அவருடைய சகோரர்கள்.  ஆனால் பிரபாகரனின் மூத்த சகோதரர் இன்று வரைக்கும் ஊடகத்தால் வெளிக் கொணரப்படவேயில்லை.  அவரது பெயர் மனோகரன்.  டென்மார்க்கில் இருப்பதாக மட்டும் வெளியே தெரிகிறதே தவிர முழுமையாக விபரங்கள் இன்று வரைக்கும் எவருக்கும் தெரியாது.

பிரபாகரன் நம்பியிருந்தது தன் கருத்து ஒத்தவர்களை மட்டுமே.  அதுவும் தான் சொல்வதை கேட்பவர்களை மட்டுமே. இயக்கத்திற்கு வாழ்க்கையில் பாதிப்படைந்து, விருப்பப்பட்டு, நிர்ப்பந்தமாக என்று எத்தனை விதமான வழியில் உள்ளே வந்தாலும் இறுதியில் பலவிதமான களையெடுப்புகளுக்கு சோதனைகளுக்குப் பிறகு மட்டுமே வந்தவர்கள் இருப்பார்களா இறப்பார்களா என்பதை தீர்மானிக்க முடியும்.அவரவர் தனித்திறமையைப் பொறுத்து உருவாக்கப்பட்டட வட்டத்திற்குள் வாழ முடியும். ஆனால் இறுதிவரையிலும் பிரபாகரன் என்பவரின் தனித்தன்மை என்பது திறமையை வைத்து மட்டும் வைத்தே ஒருவரை மதிப்பிடுவது.  அடிமட்ட நிலையில் உள்ள தொடக்க போராளியாக இருந்தாலும் சரி, ஆளுமையில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி. அவர்களின் திறமை ஒன்றே மூலதனம்.
இரண்டாம் மூன்றாம் உள்வட்டத்தில் நுழைந்து தங்கள் உழைப்புகளை காட்ட வாய்ப்பு கிடைக்குமேயானால் பிரபாகரனை சந்திக்க வாய்ப்பு உருவாகலாம்.  அந்த அளவிற்கு இருக்கும் சில பேர்களின் உளவுத்துறைத் தலைவர் பொட்டு அம்மான் முக்கியமானவராக கருதப்படுகிறார்.  பிரபாகரனின் மூளை என்று சொன்னால் மிகையில்லை.  பின்னால் வரும் பல போராட்டக் களத்தில் இலங்கையின் உளவுத்துறையிலே ஊடுருவி அவர்களின் வயர்லெஸ் செய்திகளை இடைமறித்து இவர்கள் கேட்டுக்கொண்டு அதற்கு தகுந்தாற் போல் களம் மாற்றிய காட்சிகளும் உண்டு.  சிங்கள இராணுவத்தில் இருப்பவர்களே இவர்களுக்கு சாதகமான விஷயங்களை செய்ததும் உண்டு.  அவர்களின் ஊழல் ஒரு பக்கம்.  இவர்கள் மேல் கொண்டுள்ள பயம் மறுபக்கம்.  இந்த பயம் என்பது எந்த அளவிற்கு ஒவ்வொருவருக்கும் இருந்தது என்றால் சற்று வியப்பாக இருக்கும். 

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஒரு தமிழர் ஆட்சிப்பொறுப்பில் அலங்கரிக்க வேண்டிய சூழ்நிலையில் வந்தவர் லஷ்மணன் கதிர்காமர் என்ற தமிழர்.  சந்திரிகா குமாரதுங்காவின் வலது இடது கையைப் போலவே இருந்தவர்.  சந்திரிகாவே இவர் பெயரை பரிந்துரைத்தவர். சுதந்திர கால தமிழ் தலைவர்களைப் போலவே மிகுந்த புத்திசாலி. இவர் தமிழர் என்ற ஒரு நோக்கத்தை வைத்துக்கொண்டு இந்த வாய்ப்பை தட்டிபறித்து ஆட்சியை பிடித்தவர் தான் இந்த ராஜபக்ஷே.  இன்றைய விடுதலைப்புலிகளின் சர்வதேச தடைக்கு முக்கிய காரணமாக இருந்தவரும் இதை மட்டுமே மனதில் கொண்டு உழைத்தவரும் லஷ்மண் கதிர்காமர் மட்டுமே. ஆனால் இவரே தான் சாவதற்கு முன் சுட்டுக்கொல்லப்பட்டு தான் சாகப்போகின்றேன் என்று வாக்குமூலம் கொடுத்து அதன்படியே நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வரும் போது  மேலோகம் அனுப்பப்பட்டார். அவர் உருவாக்கிய சர்வதேச வலைபின்னால் பின்னால் வந்தவர்களுக்கு பலவிதங்களிலும் உதவியாய் இருந்தது.  ஆனால் இவர் உதவிய உதவிகள் சிங்களர்களுக்கு சாதகமாக இருந்ததே தவிர அவர் தமிழராக இருந்து எந்த தமிழர்களுக்கும் செய்ததாக தெரியவில்லை. இவரைப் போன்ற மிக நல்ல ஜீவன்கள் இன்றைய சூழ்நிலையில் ராஜபக்ஷே கழிப்பறையை கழுவிக் கொடுத்து பதவியை கைப்பற்ற தயாராய் இருக்கிறார்கள். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் இந்த பூமிப்பந்தில் தமிழினம் வாழ்ந்தாலும் அதே மணம் திடம் குணம் தான்.

இத்தனை திறமை உடையவர்கள் உருவாக்கிய ராஜீவ் காந்தி படுகொலை திட்டமிடுதல் என்பது சிவராசனிடம் ஒப்படைக்கும் முன்பே பாதி வடிவம் அடைந்து இருந்தது.  ஒரு வகையில் சொல்லப்போனால் சிவராசன் என்ற நபர் ஏற்கனவே உருவாகியிருந்த நிகழ்வுகளுக்கு குழுவை வழி நடத்துபவராக வந்தவர். மனித வெடிகுண்டாக மாற்றி வைத்திருந்த தணுவை கொண்டு போய் இலக்கில் சேர்க்க வேண்டிய பொறுப்புக்கு வந்தவர்.  தணுவுக்கு ஏதோ ஒன்று என்றால் உடன் வந்த சுபா.  சுபாவுக்கே ஏதோ ஒரு பிரச்சனை என்றால் சிவராசனே அந்த பொறுப்பை நிறைவேற்ற தயாராய் இருக்கக்கூடியவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சிவராசனைப்பற்றி தனியாக நிறைய நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த வகையிலும் தோல்வி என்பது விடுதலைப்புலிகளின் இயக்க அகராதி விரும்பாத வார்த்தை.

இந்த படுகொலையில் புலனாய்வு குழுவினரால் குற்றஞ்சாட்டப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 41. வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மன், அகிலா (பெண் போராளிக்குழுக்களின் தலைமை) என்ற மேல்மட்ட அமைப்பு முதல் பங்கெடுத்த சிவராசன், தணு,சுபா என்று தொடங்கி இதற்கு உறுதுணையாய் இருந்த இந்தியர்களான சுபா சுந்தரம், பாக்யநாதன், புகைப்படம் எடுத்து இறந்து போன ஹரிபாபு என்று தொடங்கிய ஒரு பெரிய கூட்டமே இருந்தது. இவர்கள் அத்தனை பேர்களும் உருவாக்கிய திட்டமிடுதல் என்பது மிகுந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தரக்கூடியது.  சிவராசனிடம் ஏப்ரல் (1991) மாதத்தில் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இதில் முழுமூச்சாக மே 2 முதல் உழைக்கத் தொடங்கினாலும் இதன் தொடர்பாக ஆண்டின் தொடக்கம் முதலே இதற்கான அஸ்திவாரத்தை உருவாக்கி இருந்தனர்.  ஆனால் அப்போது இதற்காக உழைத்துக்கொண்டுருந்தவர்கள்  எவருக்கும் இதற்காகத் தான்?  என்று எவருக்குமே தெரியாது.  பங்கெடுத்த இந்தியர்களுக்கும், விடுதலைப்புலிகளின் மற்ற உளவுப்பிரிவினருக்கும் முழுப் பரிணாமம் தெரியாது.  ஆனால் அபபோது அவர்கள் உணர்ந்தது இப்போது மிகப் பெரிய ஏதோ ஒன்று.  அந்த அளவிற்குத் தான் அவர்கள் உள் மனம் சொல்லியது.  எப்போதும் போல அவர்களின் அர்பணிப்புக்கு அந்த கேள்வியே தேவையாய் இருக்க வில்லை.

இந்த கூட்டணியில் சேர்ந்து இருந்த சுபா சுந்தரம் சென்னையில் பிரபலமான புகைப்படக்காரர்.  அவரது நிறுவனமும், அவர் பழகி வைத்துள்ள அரசியல் திரைப்படத்துறை சார்ந்த பிரபலங்களும் கணக்கில் அடங்கா. அவரைத் தெரியாதவர்கள் எவரும் இல்லை என்கிற அளவிற்கு பிரபல்யமான நபர். தொடக்க காலம் முதல் இவர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்தவர். இவர் இலங்கை சென்று பிரபாகரனை சந்தித்தும் வந்தவர்.  இவரைப் போலவே பேபி சுப்ரமணியம் என்பவர் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கென்று பலம் வாய்ந்த மக்கள் தொடர்பாளர். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

1980க்கு பிறகு சுபா சுந்தரத்திடம் வேலைக்குச் சேர்ந்த பாக்யநாதன், பேபி சுப்ரமணியடத்திடம் தொடர்பு உருவாக்கிக்கொண்டு அதன் மூலம் தமிழ்நாட்டுக்கு வரும் விடுதலைப்புலிகளிடம் நல்ல தொடர்பை உருவாக்கிக் கொண்டவர். சுபா சுந்தரத்திடம் புகைப்படக்காரராக பணியாற்றிக் கொண்டுருந்தவர் ஹரிபாபு. இவர் வாழ்க்கையும் நளினியைப் போலவே எதிர்பாராத திருப்புமுனை. அவர் வாழ்க்கை சிறைக்கு கொண்டு வந்தது. இவர் வாழ்க்கை சிட்டுக்குருவி போல் உயிர்க்குருவி மேலே பறந்து விட்டது.  என்னவொன்று காந்தியைப் பற்றி பேசும் வரைக்கும் கோட்சே என்ற பெயர் இருப்பது போல ராஜீவ் காந்தி படுகொலைப்பற்றி பேசும் போது இவரும் இவர் பயன்படுத்திய புகைப்பட கருவியும் பேசப்படும்.?

பாக்யநாதனைப் போலவே முத்து ராஜா என்பவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக இருந்தவர்.இவர் மேற்கு மாம்பலத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவோடு எடுக்கப்பட்ட வீட்டில் இருந்து செயல்பட்டுக் கொண்டுருந்தார்.  இந்த வீட்டின் ஒரு அறையைத் தான் பேபி சுப்ரமணியம் தன்னுடைய அலுவலக மற்றும் வீடாக பயன்படுத்திக் கொண்டுருந்தார். இங்கு தான் விடுதலைப்புலிகளுக்கு தேவையான பிரசுரங்கள், ஒலி ஒளி நாடா, மற்றும் அவர்கள் பிரச்சாரத்திற்கு தேவைப்படும் அத்தனை சமாச்சாரங்களும் தயார் நிலையில் இருக்கும். தேவைப்படும் சமயத்தில் இலங்கைக்கு சென்று கொண்டுருக்கும்.

சிவராசன் உள்ளே நுழையும் மே மாதத்தில் சென்னையில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு சொந்தமாக அச்சகம் மிக குறைந்து விலைக்கு பாக்யநாதனுக்கு விற்கப்பட்டது.  விடுதலைப்புலிகளின் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படவேண்டும் என்ற ஒப்புதலுடன்.  இந்த பாக்ய நாதனின் சகோதரி தான் ராஜிவ் காந்தி இறப்பு அன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தில் உள்ள நளினி.  நளினி தன் தயாருடன் வசித்து வந்த வீட்டில் இருந்து அவருடன் சண்டை பிடித்துக் கொண்டு தனியாக வெளியே வந்தார். வெளியே வந்தவரை முத்து ராஜா தன் அம்மா மற்றும் சகோதரியுடன் தங்க வைத்தார். இதன் தொடர்ச்சியாக பெண்கள் தங்கும் தங்கம் விடுதி என்று கடைசியாக வில்ல்வாக்கத்தில் ஹைகோர்ட் காலனியில் கொண்டு போய் குடியமர்த்தினார்.

நளினி வில்லிவாக்கத்தில் இருந்து அடையாறில் உள்ள அனபாண்ட் சிலிகன் பிரைவேட் லிமிட் என்ற தனியார் நிறுவனத்திற்கு (சம்பளம் மாதம் 1700) போய்க் கொண்டுந்தார்.  திமுக ஆட்சியை விடுதலைப்புலி ஆதரவு நோக்கத்தில் கலைக்கப்பட உள்ளே இருந்த விடுதலைப்புலி ஆதரவாளர்களும், தங்கியிருந்த விடுதலைப்புலிகளும் கைதாகிக் கொண்டுருந்தனர்.  இவ்வளவு கெடுபிடி அரசாங்க நிர்வாகத்திலும் விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் வந்து இறங்கி அவர்களுக்குண்டான வேலைகளை பார்த்துக்கொண்டு தான் இருந்தனர்.  இதன் தொடர்ச்சியாக இலங்கையில் இருந்து உளவுப்பிரிவில் இருந்து அழைத்து வரப்பட்ட முருகன் இந்த வட்டத்திற்குள் இருந்த நளினியை சந்தித்து நட்பாக்கிக் கொண்டார்.

ஆங்கிலம் கற்க வேண்டும் என்று சொல்லி முருகன் டுட்டோரியல் கல்லூரிக்கு போய்க்கொண்டுருந்தபோதே நளினியுடன் நெருக்கமாக பழகியதும், தான் ஒரு விடுதலைப்புலி என்ற உண்மையை நளினியிடம் சொல்லி இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த அட்டகாசங்களை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் சொல்லிச் சொல்லியே ஒரு மாதிரியாக மாற்றி வைத்திருந்தார். தனக்கு உதவியாளர் ஒருவர் தேவை என்று சொல்லி அப்போது சுபா சுந்தரத்திடம் பணிபுரிந்து கொண்டுருநத் ஹரிபாபுவை வைத்துக்கொண்டார். முருகன் நளினியுடன் வைத்திருந்த  தொடக்க நட்பு காதலாக மாறியது..  காதல் கடைசியில் கர்ப்பத்தில் முடிந்தது. கர்ப்பத்தில் முடிந்த போது திருப்பதி திருமணம் வரைக்கும் சென்றது. எப்போது சென்றார்கள்?  ராஜீவ் காந்தி இறந்த போது வேண்டுதல் நிறைவேற்றிய திருப்தி. இவர்களுக்கு வேண்டுதல் முடித்த திருப்தியும் திருமணம் நடந்த மகிழ்ச்சியும்  (?)

வீட்டை விட்டு பிரிந்து தனியாக இருந்த நளினியின் வீட்டுக்கு முருகனிடம் பேசி வைத்திருந்த படி சிவராசன் தன்னுடன் அழைத்து வந்த சுபா தணுவை நளினியுடன் சேர்ந்து தங்க வைக்க இந்த இரண்டு பெண்களையும் நளினிக்கு பிடித்து விட்டது.  இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த அத்தனை விசயங்களையும் வந்தவர்களும் புரிய வைக்க நளினி ஏறக்குறைய இலங்கை தமிழராகவே மாறியிருந்தார். முருகன்,சுபா,தணுவுடன் சுற்றிய சுற்றலில் பேசிய பேச்சின் மூலம் நளினியை மூளைச் சலவை போல் மாற்றி வைத்திருந்தனர்.

சிவராசன் குழுவினர் கோடியக்கரையில் இருந்து சென்னையின் உள்ளே வந்ததும் தொடக்கத்தில் குழுவினர் தங்குவதற்கு வீடு கொடுங்கையூரில் முத்தமிழ் நகரில் தயாராக இருந்தது. சிறப்பான ஏற்பாட்டை செய்து இருந்தவர் ஜெயக்குமார். இவர் 1990 டிசம்பர் மாதத்திலேயே இந்த வீட்டை பிடித்து வைத்து இருந்தார். ஆனால் ஜெயக்குமார் 1984 ஆம் ஆண்டு முதல் சென்னையில் இருப்பவர்.  தமிழ்நாட்டு பெண்ணான சாந்தியை மணம் செய்து கொண்டு யாழ்பாணம் சென்றவர் மறுபடியும் 1987 திரும்பி வந்து சென்னை வாசியானவர்.  இவரின் சகோதரி கணவர் ராபர்ட் பயஸ்.  இந்திய அமைதிப்படையால் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் பிடிக்கப்பட்டு சிறையில் இருந்தவர்கள். இவர்கள் இராமமேஸ்வரம் வழியாக தங்களை அகதியாக பதிவு செய்து கொண்டு உள்ளே வந்து களப்பணி ஆற்றிக்கொண்டுருப்பவர்கள்.  இந்த குடும்ப உறுப்பினர்களின் மொத்த செலவுகளையும் கவனித்துக்கொண்டவர்கள் விடுதலைப்புலிகள்.  தங்களுடைய உளவு வேலைக்காக நிக்சன் என்பவரையும் அவர்களுடன் இணைத்துவிட உருவானது நிக்சன் தலைமையிலான INTELIGENCE GROUP,
பிரபாகரனின் தொடக்க கால தோழரான கலாபதி என்பவர் போரூரில் வசித்து வந்தார். இவருடைய முக்கிய பணி அகதிகளாக வருபவர்களுக்கு வீடு பிடித்து கொடுப்பது. இதற்கு இவருக்கு உதவி செய்ய உதவியாய் இருந்தவர் மளிகைக்கடை வைத்துக் கொண்டு தனியாக தரகர் வேலை பார்த்துக்கொண்டுருந்தவர். இவர் மூலம் ஜெயக்குமார் பெயரில் எடுக்கப்பட்ட வீட்டில் இந்த உளவு மக்கள் கூடும் இடமாக இருந்தது.  சிவராசன், நிக்சன், காந்தன், ஒயர்லெஸ் ஆப்ரேட்டர் ரமணன் போன்றவர்களின் அடுத்த கட்ட ஆய்த்தப்பணிகள் இங்கிருந்து தான் உருவானது.
ஆனால் சிவராசன் உள்ளே வந்து இவர்களுடன் சேர்ந்து இருந்தாலும் தான் செய்யப்போகும் காரியம் எதையும் இவர்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. காரணம் பொட்டு அம்மன் உத்தரவின் படி இந்த திட்டம் என்பது உள்ளே களப்பணி யாற்றிக்கொண்டுருக்கும் மற்ற எவருக்கும் (?) தெரியக்கூடாது.  அந்த அளவிற்கு இந்த திட்டமென்பது ரகஸ்யமாய் பாதுகாக்கப்பட்டது.  அவர்கள் பணி தனி.  இவருடைய நோக்கம் வேறு. இயக்கத்தின் கொள்கை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றானதால் எவருக்கும் எந்த காலத்திலும் பிரச்சனைகள் வருவதில்லை.

சிவராசன் இந்த கூட்டத்தில் இருந்து வெளியேறி தனியாக தன்னுடைய திட்டத்திற்கு தொந்தரவு இல்லாத வேறு ஒரு வீடு இருந்தால் வசதியாக இருக்கும் என்று அதன் பிறகு பிடிக்கப்பட்ட கொடுங்கையூர் வீடு சிவராசனின் அலுவலகமாயிற்று. இந்த வீட்டில் ஜெயக்குமாரையும் அவர் மனைவியையும் மட்டும் அழைத்துக்கொண்டு சென்று குடும்பம் போல் வெளியே தெரியும் படி உருவாக்கி விட முதல் பிரச்சனை முடிவுக்கு வந்தது.  மேற்கொண்டு சந்தேகம் வராமல் இருக்க காபிக்கொட்டை அறைக்கும் இயந்திரத்தை விடுதலைப்புலிகளின் இயக்கம் சார்பாக அமைத்துக்கொடுக்க அதன் மூலம் தொலைபேசி இணைப்பும் வாங்க முடிந்தது.  சிறப்பான ஏற்பாடுகள் முடிந்து விட்டது.  சுபா, தணு, சுதந்திர ராஜா, ராபர்ட் பயஸ் என்று உள்கட்டமைப்பும் பிரச்சனையும் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் முருகன் மூலம் நளினி அறிமுகத்தில் இறுதியில் வில்லிவாக்கம் வந்து சேர சிவராசன், சுபா,தணு,நளினி என்ற நால்வர் கூட்டணியும் நடக்கும் நிகழ்ச்சியை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று அழைத்துச் செல்லப்பட்ட சுபா சுந்தரம் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டுருந்த ஹரிபாபு என்ற ஐந்தாவது நபரும் ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்திற்கு செல்லும் வீடாக நளினியின் வீடு அமைந்து விட்டது.

அம்மாவை விட்டு நளினி பிரிந்த போது விதி எழுதத் தொடங்கியது. முருகனை விரும்ப ஆரம்பித்த போது சிரிக்க, சுபா தணுவையும் நேசிக்க நாசப்பாதையை கொண்டு போய் காட்டி அடுத்த 20 வருடங்களை ஆள் அரவமற்ற இருட்டுக்குள் கொண்டு வந்து முடித்தும் விட்டது.