நடராஜன் என்றொரு மனிதர் இல்லாதபட்சத்தில் இன்று தாயம்மாவுக்கு 80 கோடி செலவில் மண்டபம் கட்ட காலம் அனுமதித்து இருக்காது. நிச்சயம் கர்நாடகாவில் அமைதியாக தன் மீதமிருந்த வாழ்க்கையை கழித்து முன்னாள் நடிகை மறைந்தார் என்று இரண்டு பத்தி காலத்தில் காணாமல் போய் இருப்பார்.
அஸ்திவாரம்
Saturday, January 30, 2021
Friday, January 29, 2021
கோவிட் தடுப்பு மருந்து மேட் இன் இண்டியா
கோவிட் என்ற தொற்று நோய்க்கு இந்திய அரசு உதவியோடு மிக விரைவாகக் கண்டுபிடிக்கப்பட்ட உள்நாட்டுத் தயாரிப்பான தடுப்பு மருந்தை வைத்துக் கொண்டு பாரதப் பிரதமர் மோடி அவர்களை பணியில் இருக்கும் மருத்துவர் தொடங்கி அல்லக்கை வரைக்கும் விமர்சனம் எழுப்புகின்றார்களே? உங்கள் கருத்து என்ன?
Thursday, January 28, 2021
தேர்தல் திருவிழா 2021
Wednesday, January 27, 2021
சசிகலா என்ற தியாகி
சசிகலா என்ற தியாகி 27 ஜனவரி 2021 சிறையிலிருந்து வெளியே வந்து உள்ளார்.
இந்திய நீதிமன்றங்களில் உள்ள ஆள் பற்றாக்குறையும், தேங்கியிருக்கும் பல லட்ச வழக்குகளும், தீர்ப்பில் உள்ள பாரபட்சமும் உச்சத்தை எட்டியுள்ள இப்போதைய காலகட்டத்தில் அடுத்த நம்பிக்கை ஊடகங்கள்.
ஆனால் நாங்கள் விளம்பரத்திற்கிடையே செய்தி என்ற பெயரில் துணுக்குகளை கோர்த்து தருவோம். மக்கள் பிரச்சனை சார்ந்த விசயங்கள் இதில் இருக்காது என்ற அவர்களின் கோட்பாடுகளை உணர்ந்த மக்கள் அதனை புறக்கணித்து தொலைக்காட்சிக்கு வந்த போது அங்கே ஏர்வாடி கும்பல்கள் கத்துவதைப் பார்த்து சீரியல்கள் போதும் என்று தமிழக குடும்பங்கள் தங்களை காப்பாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.
Tuesday, January 26, 2021
பைத்தியக்காரர்களின் பூமி
"ஒரு காட்சியின் அளவு 180 செகண்ட் அதிக பட்சம் இருக்க வேண்டும். அதாவது மூன்று நிமிடங்கள். இதுவே அதிகம் தான். இதுவே மிக நீண்டது. நான் அப்படி வைக்க மாட்டேன். குறைத்து விடுவேன். அதை நான் பார்க்கும் போது ஒரு ஷாட்டில் இருக்கும் பட்சத்தில் கோணங்களும், கதாபாத்திரங்களின் வசனம் அதற்குத் தகுந்தாற்போல அவர்களின் முகபாவனை முக்கியமாக இருக்க வேண்டும். இவை அனைத்தும் பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட வேண்டும். பார்ப்பவர்கள் அடுத்த காட்சியின் தொடக்கத்தில் அது முடிக்க வேண்டும்" என்று இயக்குநர் ஷங்கர் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
Monday, January 25, 2021
சாபத்தை சுமக்கும் ராகுல் காந்தி
சோனியா செய்த நல்ல விசயம் ஒன்று உண்டெனில் கணவர் முகத்தை மகனுக்கும் மாமியார் முகத்தை மகளுக்கும் கடத்த காரணமாக இருந்தது தான்.
ராகுல் பல சமயங்களில் அச்சு அசலாக ராஜீவ் காந்தி முகத்தை நினைவு படுத்துகின்றார். தோற்றம், நடை, உடை, பாவனை, உண்மையான எளிமை என்று எல்லா நிலைகளில் நான் பத்தடி தொலைவில் நின்று பார்த்த ராஜீவ் காந்தியை நினைவு படுத்தினார். அவரின் நேற்றைய கோவை, திருப்பூர் பயணம் பல ஆச்சரியங்களை உருவாக்கியது.
Sunday, January 24, 2021
கல்லூரிச் செல்லத் தயாராக இருப்பவர்களுக்காக
Saturday, January 23, 2021
உள்ளுணர்வு குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன?
உள்ளுணர்வு குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன?
மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகளுக்கும் இது உண்டு என்ற அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தொழில் துறையில் இருப்பவர்களுக்கு உள்ளுணர்வு மிகவும் முக்கியம். ஏற்றம், இறக்கம், வளைவு போன்றவற்றைச் சந்திக்கவிருக்கும் சமயங்களில் நிச்சயம் ஏதோவொன்று அறிகுறியாகத் தெரியும். உடனே இதனை மூடநம்பிக்கையில் வகைப்படுத்திவிட வேண்டாம். எனக்கும் இப்படி உணரும் எண்ணம் உண்டு. சில சமயம் அப்படியே நடந்தும் உள்ளது.
Thursday, January 21, 2021
அறிவு, உணர்தல், உள்வாங்குதல்.
அறிவு, உணர்தல், உள்வாங்குதல்.
இந்த மூன்றுக்கும் வித்தியாசம் தெரிந்தால் அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்காமல் தனியார்ப் பள்ளியில் கௌரவத்திற்காகப் படிக்க வைத்துக் கொண்டு, தமிழகக் கல்வித் தரம் பாழ்பட்டு நிற்கின்றது என்று பூபாளம் இசைக்கும் நண்பர்களுக்குப் புரியும்.
Wednesday, January 20, 2021
மதிப்புமிகு சாந்தா அம்மையாருக்கு அஞ்சலி
Sunday, January 17, 2021
எம்.ஜி.ஆர். - ஜெ. ஜெயலலிதா: 1970 - 2016 Tamil Nadu Political History
இன்று முதல் இலவசவாசிப்பில்
பகிர்ந்து கொள்ளுங்கள்.
(இந்தியா)
எம்.ஜி.ஆர். - ஜெ. ஜெயலலிதா: 1970 - 2016 Tamil Nadu Political History eBook: JothiG, ஜோதிஜி, Ganesan, Jothi: Amazon.in: Kindle Store http://amzn.to/3bUgAxI
(வெளிநாடு)
Amazon.com: எம்.ஜி.ஆர். - ஜெ. ஜெயலலிதா: 1970 - 2016 Tamil Nadu Political History eBook: JothiG, ஜோதிஜி, Ganesan, Jothi: Kindle Store http://amzn.to/3bMZIJi
Saturday, January 16, 2021
ஆல் பாஸ் முதல் அரியர் மாணவர்கள் வரை
Thursday, January 14, 2021
தமிழர் திருநாள் வாழ்த்துகள் 2021
இன்று கொண்டாடிய பொங்கலில் எந்தச் சுவராசியமும் இல்லை. ஆனால் எனக்குக் கிடைத்த தின்பண்டங்கள் மிக அதிகம். நான் ஒரு மெது வடை விரும்பி. கூடவே காரச்சட்னி இருந்தால் போதும். அந்தக் காரமும் கண்ணிலிருந்து நீர் வரும் அளவிற்கு இருந்தால் மனமெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும். மகள்கள் என்னை வினோதமாக வேடிக்கை பார்ப்பார்கள்.
பூமி என்றொரு படத்தை இன்று பார்த்தேன். பத்து நிமிடங்களுக்கு மேல் என்னால் உட்கார முடியவில்லை. ஜெயம் ரவியின் 25 ஆவது படம். தமிழ் நடிகர்களுக்கு தங்களை சமூக ஆர்வலராகப் படத்தில் மட்டும் காட்டிக் கொள்ள ஆசை. களத்தில் வர அச்சம். கையிலிருந்து காசு எடுத்துச் செலவழிக்க அதை விடப் பயம் அதிகம் இருப்பதால் இது போன்ற படங்கள் தமிழ்நாட்டில் அடுத்த பத்தாண்டுகள் ஆனாலும் நிற்கப் போவதில்லை.
காங்கிரஸ் குறித்து இனம் புரியாத வெறுப்பு இருந்தாலும் இந்தப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. ராகுல் ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம், தேனி, கம்பம், மதுரை பக்கம் பொண்ணு எடுத்துக் கட்டினால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்.
வாழ்க்கை அதிர்ஷ்டம் என்ற தங்கத் தட்டை வாரி வழங்கினாலும் திறமையும் உழைப்பும் இல்லாவிட்டால் என்னவாகும்? என்பதற்கு இந்தப்படம் சாட்சி.
நான் எழுதுவதற்குக் காரணம் ராஜாராமன் என்பதனை பலமுறை பதிவு செய்துள்ளேன். அவருடைய மென்பொருள் இல்லாவிட்டால் நான் எழுதுவதை நிறுத்திவிடுவேன். அவருக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று பலமுறை யோசித்துள்ளேன். இப்போது கிடைத்துள்ளது. என்று வாழ்த்துகள்.
என் எழுத்துப் பயணத்தை மாற்றியதில் சீனிவாசனுக்குப் பங்குண்டு. ஆனந்தவிகடன் இந்த வருடம் அவருக்குச் சிறப்புச் செய்துள்ளது. என் வாழ்த்துகள். தை மாதத்தில் என் நெஞ்சுக்கு நெருக்கமான இருவரையும் உச்சி முகர்ந்து வாழ்த்துவதில் பெருமிதம் அடைகின்றேன்.
தம்பி ஒருவர் என்ன அண்ணே யூ டியூப் என்றால் இப்போது பரபரப்பான செய்திகளைப் போட்டுப் பல ஆயிரம் பார்வையாளர்களைத் தட்டிக் கொண்டு போவது தான் வாடிக்கை. நீங்க என்ன வேறு பாதையில் போய்க் கொண்டு இருக்குறீங்க? உங்களை மாற்றிக் கொள்ளலாமே? என்று கேட்டார். பத்து நிமிடப் பேச்சு. அரை மணி நேரம் மகள் அதனை யூ டியூப் க்காக மாற்றுவது என்பது மிகச் சாதாரணமாக விசயமாக மாறிவிட்டது.
இது 18 முதல் 25 வயதுக்குள் இருப்பவர்களுக்காக மட்டுமே. அது போன்ற வயதில் இருப்பவர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள். 100 பேர்கள் பார்த்தால் போதும் என்றேன். என் அடுத்த தலைமுறை உணர்ந்தால் போதும் என்றேன்.
மகள் விஜய் ரசிகை. கொரானா காலத்தில் மாஸ்டர் படம் பார்க்க திரையரங்கத்திற்கு அனுமதியில்லை என்றவுடன் கர்புர் என்று கோபத்துடன் அம்மாவைச் சுற்றிக்கொண்டு இருக்கின்றார். தொடர்ந்து ட்விட்டரில் கல்வி அமைச்சர் மற்றும் முதலமைச்சரிடம் பள்ளி திறப்பது குறித்து தினமும் எழுதிக் கொண்டேயிருந்தேன். வருகின்ற 19 ஜனவரி 2021 12 மற்றும் 10 ஆம் வகுப்பிற்கு மட்டும் பள்ளி வகுப்புகள் தொடங்கப்படுகின்றது.
மகிழ்ச்சி.
அனைவருக்கும் தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
Wednesday, January 13, 2021
மொழியும் எழுத்தும் அண்ணன் தங்கை பாசம்
Monday, January 11, 2021
பணம் இனி தேவையில்லை
Sunday, January 10, 2021
மாட்டிக் கொண்டால் மீள வழியில்லை
ஆவணங்கள் இன்றி பணம் தருகின்றோம்
6 வயது 11 லட்சம் - வீபரித விளையாட்டு
Saturday, January 09, 2021
எது பாதை? எது இலக்கு?
அதிகக் கட்டணம், நடுத்தரக் கட்டணம் உள்ள தனியார்ப் பள்ளிகள், தனிப்பட்ட நபர்களின் முயற்சியில் நன்றாக நடந்து கொண்டிருக்கின்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நாங்கள் சம்பளம் மட்டும் வாங்கத் தான் இந்தப் பணியில் சேர்ந்தோம்? என்று அக்கறையின்றி ஆசிரியப் பணியில் இருக்கும் ஜந்துகள் இருக்கும் பள்ளிகள் என்று எல்லாப் படிக்கட்டுகளும் இப்போது ஒன்றாக மாறியுள்ளது.
Friday, January 08, 2021
ஆவணங்கள் இன்றி பணம் தருகின்றோம்
Wednesday, January 06, 2021
6 வயது 11 லட்சம் - வீபரித விளையாட்டு
Tuesday, January 05, 2021
2020 மின்னூலாக
2020 இறுதியில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது.
இன்று முதல் இலவசமாக வாசிக்க
நினைவுக் குறிப்புகளை குறைந்தபட்சம் வருடந்தோறும் எழுதிப் பாருங்கள். வழித்தடத்தை நினைத்துப் பார்க்க உதவும்.
#இலவசமாக வாசிக்க
#2020
Monday, January 04, 2021
ஆதிக்கம் செலுத்திய ஐந்து விசயங்கள்
Friday, January 01, 2021
அண்ணா - கலைஞர்: 1967 - 2018 Tamil Nadu Political History
2021