அஸ்திவாரம்

Friday, January 08, 2021

ஆவணங்கள் இன்றி பணம் தருகின்றோம்

கடன் வாங்குவது, பெறுவது குறித்து இரண்டு கருத்துக்கள் உள்ளது. ஒரு முதலாளி எப்போதும் கடன் வைத்துக் கொண்டே இருப்பார். காரணம் கேட்ட போது நான் அவர்களுக்கு இந்தக் கடன் கட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உருவாகும் போது அதிகாலையில் எழுந்து நான் உழைக்க வேண்டும் என்று என்னை நானே சுறுசுறுப்பாக மாற்றிக் கொள்கிறேன் என்றார். 

 மற்றொரு முதலாளி (இவர் தான் திருப்பூரில் எனக்குத் தெரிந்து கடன் இல்லாமல் வாழும் ஒரே நபர்) கடன் என்பது கொடூரமான விசயம். நாளை நான் இறந்து விட்டால் என் பிணத்தைப் பார்க்கும் என் வாரிசுகளுக்கு நான் யார் யாருக்கும் கடன் வைத்துவிட்டு சென்று உள்ளேன் என்பது தான் அவர்கள் மனதில் ஓடும். இதன் காரணமாகவே ஒவ்வொரு மாதமும் அனைத்தையும் கொடுத்து விடுகிறேன் என்றார். இது தொழிலில் நான் பார்த்த அனுபவம். ஆனால் தனி மனிதர்களின் வாழ்க்கையில் கடன் குறித்த அச்சம் விலகிவிட்டது. இது எனக்கு வேண்டும். கடன் என்பது தவறில்லை என்பதாக மாறிக் கொண்டே வருகின்றது. ஆசைகள் பேராசைகளாக மாறும் எல்லா விதிகளும் மாறிவிடுகின்றது. கடைசியில் சாவுக்கு அருகே அழைத்துச் செல்கின்றது.

2 comments:

  1. மிகவும் கவனம் தேவை... விளக்கம் அருமை...

    ReplyDelete
  2. ஆவணங்கள் இன்றி பணம் தருகின்றோம் -இது இன்றைய பிரச்னை. அனைவரும் இந்தப் பதிவை படிக்க வேண்டுகிறேன். காணொளியை பார்க்க வேண்டுகிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

    ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.