"வெல்லும் சொல்" என்றொரு நிகழ்ச்சி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் தொடங்கப் பட்டுள்ளது. புதிய தலைமுறையில் தலைமை செய்தி ஆசிரியராக பணிபுரிந்த கார்த்திகை செல்வன் வழி நடத்துகின்றார்.
ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட நாளில் இனி தொடர்ந்து வரும். ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய ஆளுமை அரசியல் மற்றும் பல்வேறு தளங்களில் உள்ளவர்கள் வந்து பேசப் போகின்றார்கள்.
அண்ணாமலை - கார்த்திகை செல்வன்/ பாஜக தமிழகத்தில் தாமதமாக வளர்ந்தது / Interview- நியூஸ் 18 தமிழ்நாடு
இதில் முதல் ஆளுமையாக தமிழக பாஜக தலைவர் திரு. கு. அண்ணாமலை அவர்கள் பேசி உள்ளார்.
ஏறக்குறைய ஒரு மணி நேரம். அரசியல் காரணங்களால் இது நீக்கப்படும் அபாயம் இருக்கலாம் என்பதால் எங்கள் தளத்தில் நண்பர்கள் பதிவேற்றி உள்ளனர்.
இதில் உள்ள சிறப்பு விசயங்களை உங்களுக்குக் கீழே தருகின்றேன். இணைப்பு கீழே கொடுத்துள்ளேன்.
1. முழுமையாக அவசியமாக கேட்க பரிந்துரை செய்கின்றேன். உள்ளே இடையிடையே செய்தி சேனலில் உள்ள செய்திகள் வரும். அது சுருக்கம் மட்டுமே. அதை நகர்த்தி விட்டு அண்ணாமலை அவர்களின் பேச்சைக் கேளுங்கள்.
2. கார்த்திகை செல்வனை நான் பலமுறை கொடூரமாக விமர்சனம் செய்து உள்ளேன். ஆனால் இதில் அவர் கேட்ட கேள்வி என்பது தயவு தாட்சணியமின்றி அதே சமயத்தில் அவசியமான முக்கியமான கேள்விகள் என்று பலவற்றைக் கேட்டு உள்ளார். திமுக வின் முழு நேர ஆதரவாளர் என்பதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நைச்சியமாக நகர்ந்து வந்தாலும் இதில் அவர் கேட்டுள்ள கேள்விகள் எதுவும் இதுவரையிலும் எந்த சேனலிலும் கேட்காத கேள்விகள் ஆகும். கத்தி வைத்து இறக்கியது போல சிரித்துக் கொண்டே கேட்டுள்ளார்.
3. கார்த்திகை செல்வன் உடல் மொழி சிறப்பு. பாராட்டத் தக்கது. அண்ணாமலை அவர்கள் தவறுதலாக எடுத்துக் கொள்வாரோ என்று யோசிக்கவில்லை. அதே போல அண்ணாமலை அவர்களும் தடுமாறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இந்த பேட்டி அண்ணாமலை அவர்களின் கீரிடத்தில் ஒரு மணி மகுடம்.
4. அரங்கத்தில் பல இளைஞர்கள் அமர்ந்துள்ளனர். அழைத்து வந்தார்களா? இல்லை வேறு ஏதுவுமா? என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் அனைவரும் அண்ணாமலை அவர்கள் குத்திக் கிழிக்கும் அளவுக்குக் கேள்வி கேட்டு உள்ளனர். எதுவும் தவறு என்று சொல்லவே முடியாது. சிறப்பான முறையில் இருந்தது.
ஏன் சில வாரங்களுக்கு முன்பு முதல் முறையாக பணியில் சேர்ந்த கார்த்திகை செல்வன் தன் அபிமானமுள்ள ஒருவரை ஸ்டுடியோ அழைத்து வந்து பேட்டி எடுத்தார். அவரிடம் இந்த செட் அப் இல்லையே என்று கடைசி வரைக்கும் யோசித்துக் கொண்டே பார்த்தேன். காரணம் தெரிந்தால் சொல்லுங்கள்.
நிச்சயம் இன்று ஒய்வு தினம் தானே? கறிக்கொளம்பு, காரக்கொளம்பு, தயிர்ச்சாதம் சாப்பிட்டு விட்டுக் குட்டித் தூக்கம் போட வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒதுக்கி வைத்து விட்டு இதனை முழுமையாக கேளுங்கள் என்று பரிந்துரை செய்கின்றேன்.
கடைசியாக
தினத்தந்தி பாப்பா முதல் கார்த்திகை செல்வன் வரை அண்ணாமலை வந்து அமர்ந்தால் எப்படி இவர்களின் நியூரான்கள் துடிக்கின்றது.
நமக்கு நல்லது என்றாலும் இவரைப் போலப் பலரையும் கொண்டு வந்து குறிப்பாக முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அத்தனை பேர்களையும் கொண்டு வந்து இந்த ஆப்ரேசன் போல செய்தால் நன்றாக இருக்குமே?
அண்ணாமலை பேட்டி ஒவ்வொன்றையும் தயவு செய்து உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரை செய்யுங்கள். பார்க்கச் சொல்லுங்கள். Pls Forward/Tks.
மீதி இருப்பது குணசேகரன் (சன் நியூஸ்).
காத்திருக்கின்றேன்.
No comments:
Post a Comment