நானும் தமிழக அரசியல் வரலாற்றை எழுதுவதற்கு முன்பு, அதற்காகத் தகவல் திரட்டி முரண் நகை, முரண்பாடுகள், எதிர்மறை நியாயங்கள் போன்றவற்றை ஒன்றோடு ஒன்று சேர்த்து மாலையாகப் பார்த்த பின்பு கருணாநிதி என்ற பிம்பத்தின் பின்னால் உள்ள அனைத்து விதமான தகவல்களும் எனக்குத் தெரியவந்தது.
தான் ஆதிக்கச் சாதி இல்லை. எனவே ஆதிக்கச் சாதியில் இருக்கும் அடிப்படை விசயங்களை ஒழித்து விட வேண்டும். அதனை மக்கள் நலன் என்ற பெயரில் என்கிற ரீதியாக மாற்ற வேண்டும். உள்ளுற தனக்கான கட்டிங் களை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்படித்தான் திராவிட அரசியல் என்ற அசிங்கப் பயணம் அண்ணாவிற்குப் பிறகு தொடங்கியது.
அண்ணா அரசுப் பணத்தைக் களவாடியதாக எங்கும் குறிப்புகள் இல்லை.
ஆனால் 2000க்குப் பிறகு அரசு எந்திரங்களில் உள்ளவர்களைத் தனக்குச் சாதமாக வைத்துக் கொள்வது என்பதில் தொடங்கி, நீதிமன்றம் மற்றும் கல்வித்துறை மற்றும் ஊடகத் துறையினரைத் தனக்காக மட்டுமே செயல்பட வைப்பது போன்ற வித்தைகளை வைத்து ஒரு பெரிய மாபியா கும்பலை சென்னை முதல் கன்யாகுமரி வரைக்கும் வளர்த்து அதனை அரசு ஊழியர்கள் என்ற பெயரில் அரசுப் பணத்தை அவர்களுக்கு வழங்கிய பெருமை அண்ணாருக்கு உண்டு.
தமிழகத்தில் 1990 க்குப் பிறகு ஊடகங்கள் போக்கு மாறத் துவங்கியது. அச்சு ஊடகங்களை காட்சி ஊடகங்கள் ஆக்ரமிக்கத் தொடங்கியது. 2000 க்குப் பிறகு சமூக வலைதளங்கள் ஊடகங்களின் இடத்தை பிடிக்கத் தொடங்கியது.
2010 க்குப் பிறகு ஊடகங்களை சமூக வலைதளங்கள் ஆக்ரமித்து இல்லாமல் ஆக்கி விட்டது. இப்போது ஒவ்வொரு ஊடகங்களின் உயிரும் ஊசலாடிக் கொண்டு இருக்கின்றது.
திரு. ஜா. ராஜகோபாலன் திமுக எப்படி ஊடகங்களை கையாண்டது என்பதனைப் பற்றி ...........
No comments:
Post a Comment