Saturday, September 04, 2021

திராவிட வெள்ளை அறிக்கை

அச்சு ஊடகம், காட்சி ஊடகம், சமுக வலைதளங்கள் என்று மூன்றும் வெவ்வேறு முகம் கொண்டது.  ஒவ்வொன்றையும் தனித் தனியாக குறிப்பிட்ட ஒன்றை மட்டுமே பயன்படுத்துபவர்களின் மனோபாவம் முற்றிலும் வித்தியாசமாகவே இருக்கும். 

உதாரணமாக என் பக்கத்து வீட்டுக் காரர் நாங்கள் வாங்கும் செய்தித் தாள்களை காலை ஒன்பது மணிக்கு வாங்கிக் கொண்டு சென்றார் எனில் மதியம் ஒரு மணி வரை ஒரு வரி விடாமல் படிக்கின்றார்.  

ஆனால் சமூக வலைதளவாசிகளின் கைவிரல்கள் தள்ளிக் கொண்டே செல்லும் பழக்குத்திற்குள் இருப்பதால் எந்த செய்திகளும் அவர்களுக்கு முக்கியமானதாகவே தெரியாது. 

அனைத்து செய்திகளும் பழைய செய்தியாகவே தெரியும் அளவிற்கு மணிக்கொரு தடவை எல்லாமே மாறிக் கொண்டே இருப்பதால் கவனச் சிதறல்களும் அதிகம்.

இதன் காரணமாகவே நீண்ட வாசிப்பின் மேல் பலருக்கும் ஆர்வம் இல்லாமல் போய்விடுகின்றது. ஆனால் நிச்சயம் நீண்ட வாசிப்பு ஆர்வத்தைக் கொண்டவர்களால் இரண்டு குணாதிசயங்கள் கைவரப் பெற்று இருப்பார்கள்.

தியானத்திற்குச் சமமான பொறுமையுடன் எதையும் கையாள்வார்கள்.

இரண்டு மூன்று மணி நேரம் வாசிக்க பழகியிருப்பவர்கள் கவனச் சிதறல் என்ற புறச்சூழல் தாக்குதலிலிருந்து தப்பிக்க கற்று இருப்பார்கள்.

முயன்று பாருங்கள்.  கடந்த ஆகஸ்ட் முழுக்க எழுதியவற்றை இதில் தொகுத்துள்ளேன். இலவசமாக வாசிக்க கீழே இணைப்பு கொடுத்துள்ளேன்.


திராவிட வெள்ளை அறிக்கை

No comments: