Saturday, September 25, 2021

'பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்தங்களைப் படைத்த சிற்பி பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா'

'பாரதிய ஜனதா கட்சியின்  சித்தாந்தங்களைப் படைத்த சிற்பி  பண்டிட்  தீனதயாள் உபாத்தியாயா'

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே.....

அனைவருக்கும் வணக்கம்.




பண்டிட் தீனதயாள் உபாத்தியாய அவர்களின் பிறந்தநாள் செப்டம்பர்  25 ஆம் தேதி தமிழக பாரதிய ஜனதா கட்சியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மண்டல் மற்றும் பூத்களில், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் பண்டிட் தீனதயாள் உபாத்தியாய அவர்களின் திருவுருவப் படத்தை வைத்து, மலர் மரியாதைகள் செலுத்தி, பண்டிட் தீன்தயாள் அவர்களின் உயர்ந்த சிந்தனைகளைப்  பற்றிப்  பேச இருக்கிறார்கள்.

மோடி 71 இந்தியா 75

பாரதிய ஜனதா கட்சி இப்படிப்பட்ட சித்தாந்தங்களை ஆணித்தரமாக பின்பற்றும் கட்சி. கட்சியின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், வாய் சொல்லுக்காக மட்டும் பயன்படுத்தாமல், உண்மையான வகையில் மக்களுக்காகப் பயன்படுத்தும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி.

அதனால்தான்  சமூகநீதிக்கு இடம் கொடுக்காமல், ஜனநாயகத்திற்கு இடம் கொடுக்காமல், தமிழகத்தின் ஏனைய கட்சிகளில் இருப்பது போல, இந்தக் கட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உயர்பதவிகளில் இருக்க முடியாது.  குரூப்பிசம் என்று சொல்லப்படும் தனித்தனி  குழுக்களான  செயல்பாடுகள் பாஜகவில் சாத்தியமில்லை.

அப்படிப்பட்ட உயர்ந்த சித்தாந்தங்களைக்   கட்டமைத்துத் தந்த பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்த தத்துவ சிற்பியாக திகழ்பவர் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா.

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்கள் 1951ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியைத் தொடங்கியபோது இரண்டே இரண்டு உபாத்தியாயக்கள் இருந்தால் போதும், இந்தியாவின் அரசியல் முகத்தை அடியோடு மாற்றி விடலாம் என்று பெருமிதத்துடன் கூறிய பெருமைக்குரியவர் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா.

 ”ஏகாத்ம மானவ தர்ஷன்”, என்பதே பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் ஒருங்கிணைந்த மனிதநேயக் கோட்பாடு. அதன் அடிப்படை ஆதாரத்தை இந்திய ரிஷிகளும், முனிகளும் மனித குலத்துக்கு வழங்கிய பண்டைய ஞானத்திலிருந்து பெற்றுள்ளதாகவும் அது ஆதிசங்கரரின் அத்வைத கருத்துக்களைத் தன்னுள் கொண்டுள்ளது என்றும் அன்றைய காலகட்டத்தில் அனைவராலும் போற்றப்பட்ட கருத்தாக்கமாகும்.

கடவுளின் மிக உயர்ந்த படைப்பான மனிதன், முதலாளித்துவமும், சோசலிசமும், அதன் அமைப்பு முறைகளால் ஏற்படுத்தும் தாக்கத்தால், மனிதன் தன் சொந்த அடையாளத்தை இழக்கிறான். எனவே நாம் மனிதனை அவனுடைய சரியான நிலையில் மீண்டும் நிலைநிறுத்த வேண்டும்.  மனிதன் தன்னுடைய சிறப்பை உணருமாறு செய்யவேண்டும் அவன் உள்ளார்ந்த ஆளுமையின் சிறப்பான இடத்தை அடைவதற்கு மனிதனை  ஊக்குவிக்க வேண்டும்.

பரவலாக்கப்பட்ட பொருளாதாரத்தின் மூலம் மட்டுமே இதை நிறைவேற்ற முடியும். ஆதலால் சுதேசி மற்றும் பரவலாக்கம் ஆகியன மட்டுமே தற்போதைய சூழலுக்கு ஏற்ற பொருளைப் பொருளாதாரக் கொள்கை என்று பண்டிட் தீனதயாள் உபாத்தியாய பரிந்துரைத்தார். தன் கருத்துக்களை எல்லாம் ராஷ்டிரத் தர்மா என்ற மாத இதழ் மூலமும், பாஞ்சஜன்யம் என்ற ஹிந்தி வார இதழ் மூலமும்,  சுதேசி என்ற நாளிதழ் மூலமும் அவர் எழுதி வெளியிட்டார்.

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்கள் அறிவித்த தத்துவமான அந்தியோதயா... என்னும் இறுதி மனிதன் வரை முன்னேற்றுவோம் என்ற கோஷம் 'பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்க்கைப் பாதையை மாற்றியுள்ளது.

பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் இந்தத் தத்துவத்தின் அடிப்படையிலேயே தன் திட்டங்களை எல்லாம் கடைக் கோடி மனிதனுக்கு கொண்டு செல்வதையே தன் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு பாடுபடுகிறார். தன் வாழ்நாள் முழுவதும் கலாச்சாரத்தையும் தேசியத்தையும் இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த அவர், அந்தக் கொள்கைகளைப் பாதுகாக்கவே தன் உயிரை நாட்டுக்கு தியாகம் செய்தார்.

காந்தியடிகள் பேசிய சர்வோதயா (அனைவரின் முன்னேற்றம்), சுதேசி (இந்தியமயமாக்கல்), மற்றும் கிராம ஸ்வராஜ் (கிராம சுய ஆட்சி)  போன்ற அனைத்துக் காந்திய சிந்தனைகளையும், அவருக்குப் பிறகு செயல் வடிவம் கொடுக்கப் பாடுபட்டவர் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்கள்.

பொருளாதார பலத்தால் உருவாக்கப்பட்ட சோஷியலிசமும், முதலாளித்துவமும், நம் நாட்டிற்குப் பொருந்தாது. மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் இந்த மண்ணின் மகத்துவத்தோடு, இந்த மண்ணின் மரபுகளோடு, இந்த மண்ணின் தனித்தன்மைகளோடு மண்ணின் இறை நம்பிக்கைகளோடு இயற்கையாக வளர்வதே காலங்காலமாக நடைபெற்று வருகிறது. இதுவே இந்திய நாட்டிற்கு ஏற்ற தத்துவம் என்று செப்பிய செம்மல் பண்டிட் தீனதயாள் அவர்கள் .

பாரதிய ஜனதா கட்சியின் வணிகப் பிரிவு சேர்ந்த நிர்வாகிகள் வியாபார நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் கடைகளிலும் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் திருவுருவப் படத்தை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மகிழ்ச்சி. படங்கள் செல்லட்டும். ஆனால் பண்டிட் தீனதயாள் அவர்களின் படங்களைக் கொண்டு சேர்ப்பது போல் அவரின் பாடங்களையும் கொண்டு சேருங்கள்.

அன்புச் சகோதரன்

உங்க "அண்ணா"




பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தினமும் தொண்டர்களுக்கு கடிதம் எழுதுகின்றார்.  பாஜக "ஓரே நாடு" இதழிலில் வெளியாகிக் கொண்டு இருக்கின்றது. அதனை ஒலி வடிவில் கேட்க மறக்காதீர். இதனை சொடுக்கவும். நன்றி. (ஜோதிஜி திருப்பூர்)

Listen to "'பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்தங்களைப் படைத்த சிற்பி பண்டிட்  தீனதயாள் உபாத்தியாயா' BJP Annamalai letter- 13" (Sep 25 2021)  https://anchor.fm/jothig/episodes/BJP-Annamalai-letter--13-e17sbh6 


No comments: