நமது நிதியமைச்சர் அம்மையார் மேல் எனக்குத் தொடக்கத்தில் கொஞ்சம் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. காரணம் இதுவரையிலும் நிதித் துறையில் பக்கா கிரிமினல் மட்டுமே இருந்துள்ளனர்.
குறிப்பிட்ட சிலர் மட்டுமே நாட்டுக்காக, நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டனர். ஆனால் மோடி அவர்கள் வருவதற்கு முன்பு நிலையான வருமானம் என்பதோ இப்போது மாதம் மாதம் டாண் டாண் என்று வந்து விழுந்து கொண்டிருக்கின்ற பணம் போல எதுவும் இல்லை. உருவாக்கப்படவும் இல்லை. எவரும் ஆர்வம் செலுத்தவும் இல்லை.
அடுத்தடுத்த வணிகம் சார்ந்த விசயங்களில் எந்த அரசும் முயற்சிகள் எடுக்கவும் இல்லை. மறைந்த இந்திரா காந்தி அம்மையாருக்குப் பிறகு முழுமையாக நிதியமைச்சர் (பெண்) என்று பார்த்தால் நிர்மலா சீதாராமன் அம்மையார் தான்.
பொருளாதாரம் குறித்து நீங்கள் எழுதினால், பேசினால், யோசித்தால், அது சார்ந்த ஆராய்ச்சிகளை இறங்கினால் என்னைப் போன்றவர்களுக்கு அடுத்த 24 மணி நேரம் கிர் என்று தலை சுற்றுவது போலவே இருக்கும்.
பிரதமரின் பாதையை மறிக்கலாம், அவரின் பார்வையைத் தடுக்க முடியாது!
காரணம் பல விசயங்களை உள் வாங்கி, ஒன்றோடு ஒன்று கோர்த்து, லாஜிக் புரிந்து, எதார்த்தத்தை உணர்ந்து, நிஜத்தை அறிந்து, புத்திசாலித்தனத்தை மட்டுமே பயன்படுத்தி முடிவு காண வேண்டிய துறையாகும்.
கதை, திரைக்கதை, வசனம் எதுவும் எழுத முடியாது.
ஆனால் அம்மையார் இப்போது செய்து கொண்டிருக்கின்ற பணிகளை அவ்வப்போது கொஞ்சம் வாசிப்பதுண்டு.
கடந்த 24 மாதங்களில் இந்தியா முழுக்க வழங்கப்பட்ட உணவு தானியப் பொருட்கள் முதல் மோடி உருவாக்கி இருந்த மக்கள் நலத் திட்டங்களுக்கு வழங்கிய நிதி வரைக்கும் அம்மையார் சிறப்பாகவே கையாண்டார்.
இது தவிர காங்கிரஸ் அரசு உருவாக்கிய பல திட்டங்கள் அடுத்தடுத்து திறப்பு காணும் அளவுக்கு முடுக்கி விடப்பட்டது.
நிதிப் பிரச்சனை இல்லாத காரணத்தால் எல்லாமே சுபம் என்கிற ரீதியில் மோடி அவர்கள் ராஜபாட்டை நடை நடந்து வர முடிந்தது.
68 வருடங்களில் ஓர் இன்ஞ் கூட நகராமல் இருந்த மொத்த வட கிழக்கு மாநிலங்களும் ஒரே நேர்கோட்டில் மோடி அரசு இப்போது கொண்டு வந்து சேர்ந்ததுள்ளது. சாலை மார்க்கம் மற்றும் ரயில் தடம் என்று அழகாக திட்டமிட்டபடி செய்து முடித்து உள்ளனர்.
முக்கியமாக படு கேவலமாக இருந்த இராணுவத்தினருக்குத் தேவையான பெரும்பாலான தேவைகளை மோடி அரசு செய்து முடிந்துள்ளது. இப்போது தான் இராணுவத்தினருக்கு ஒரு தன்னம்பிக்கை வரும் அளவுக்கு உள்ளது என்றால் அது மிகையில்லை. நான் மிகைப்படுத்தி எழுதவில்லை. இராணுவத்தில் பணியாற்றும் உறவு வட்டத்தில் உள்ளவரிடம் கேட்டதும், ஓய்வு பெற்றவர்கள் மூலம் அறிந்த விசயங்கள் மூலம் உணர்ந்து கொண்டேன்.
ஏன் இந்த பீடிகை?
இன்று ஒரு கட்டுரை வாசித்தேன். முழுமையாக எழுதினால் உங்களுக்கு வாசிக்க சோர்வாக இருக்கும் என்பதால் சில விசயங்கள்.....
தொற்றுநோய் காலகட்டங்களின் போது ECLGS கிரெடிட் உத்தரவாதத் திட்டம் என்பது உருவாக்கப்பட்டது.
Emergency Credit Line Guarantee Scheme (ECLS)
இந்த திட்டம் எவ்வாறு தொடங்கப்பட்டது?
13.5 லட்சம் MSME அலகுகள்,
1.5 கோடி வேலைகள்,
14% MSME கடன்கள் NPAவை (Non-performing Asset Definition) மாற்றியது
(செயல்படாத சொத்து (NPA) என்பது கடன் அல்லது முன்பணமாகும், அதற்கான அசல் அல்லது வட்டி செலுத்துதல் 90 நாட்கள்).
மே 2020 இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதிலிருந்து, 1.8 டிரில்லியன் மதிப்புள்ள MSME கடன் கணக்குகள் NPA களில் நழுவவிடாமல் காப்பாற்றப்பட்டன.
"இந்த அலகுகள் செயல்படாமல் இருந்திருந்தால், 15 மில்லியன் (ஒரு கோடியே ஐம்பது லட்சம் பேர்கள்) தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருந்திருப்பார்கள்.
அது தொற்று நோய்க் காலத்தில் அரசுக்கு பெரும் தலைவலியை உருவாக்கியிருக்கக்கூடும்.
நாட்டிலேயே நல்ல கோலம் போட்டால் ஆறு லட்சம் பரிசு
எதிர்க்கட்சிகளுக்குக் கும்மாளமாக இருந்து இருக்க வாய்ப்பு அமைந்து இருக்கும்.
மே 2020 இல், கோவிட்-19 தொற்றுநோய் இடையூறுகளுக்கு மத்தியில் இந்தத் துறைக்கு நிவாரணம் வழங்குவதற்காக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (MSMEs) அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை (ECLGS) மோடி அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
ECLG திட்டம் (மறுசீரமைப்பு உட்பட) காரணமாக கிட்டத்தட்ட 13.5 லட்சம் MSME கணக்குகள் சேமிக்கப்பட்டதாக ஒரு SBI ஆய்வு அறிக்கை மதிப்பிடுகிறது.
அத்தகைய கணக்குகளில் கிட்டத்தட்ட 93.7% மைக்ரோ மற்றும் ஸ்மால் வகையைச் சேர்ந்தவை. முழுமையான வகையில், 1.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான MSME கடன் கணக்குகள் இந்த காலகட்டத்தில் NPA க்குள் நழுவவிடாமல் சேமிக்கப்பட்டன. இது NPA ஆக இருந்து சேமிக்கப்படும் நிலுவையில் உள்ள MSME கிரெடிட்டில் 14%க்கு சமம்.
கடன் உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக 1.5 கோடி தொழிலாளர்கள் சாத்தியமான வேலையின்மையிலிருந்து காப்பாற்றப்பட்டதாக எஸ்பிஐ ஆராய்ச்சி மதிப்பிட்டுள்ளது.
மாநிலங்களில், குஜராத் மிகப்பெரிய பயனாளியாக உள்ளது,
அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் உள்ளன.
No comments:
Post a Comment