கருணாநிதி திமுகவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரத் தொடங்கியது அண்ணாதுரை காலத்திலேயே தொடங்கிவிட்டது.
ஈவேகி சம்பத் - அண்ணாதுரை மோதல், வேலூர் பொதுக்குழுவில் சம்பத்தின் சட்டை கிழிப்பு, பிறகு சென்னையில் சம்பத் உண்ணாவிரதம், திருச்சியில் கண்ணதாசன் மீது செருப்பு வீச்சு... இவற்றை கண்ணதாசனின் "வனவாசம்" மூலம் அறியலாம்.
பிறகு கழக "ஆதரவாளர்கள் பேரவை"- ஒன்று நடத்தி சம்பத்துக்கும்- அண்ணாதுரைக்கும் சமரச முயற்சி...
தப்பித் தவறி இந்த சமரசம் ஏற்பட்டுவிடவே கூடாது - ஈவேகி சம்பத் வெளியேற்றப்பட வேண்டும் என்பதில் குறியாக இருந்தவர் கருணாநிதி!
காரணம் சம்பத்துடன் நின்ற கண்ணதாசன், கோவை செழியன், கண்ணப்பா வள்ளியப்பா, சென்னை மாவட்டச் செயலாளர் நீலமேகம்... போன்ற பலரும் கழக அணிகள் மத்தியில் மிகுந்த செல்வாக்குள்ளவர்கள்.
இவர்கள் எல்லாரும் வெளியே(ற்)றி விட்டால் மீதமிருக்கும் அடிப்பொடிகளை வைத்துக் கட்சியைத் தன் கைக்குள் வைத்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டார் கருணாநிதி!
சம்பத் மற்றும் ஆதரவாளர்கள் வெளியேறிய பிறகு அண்ணாதுரையை முழுக்க முழுக்க தனது "வளையத்துக்குள்" வைத்துக் கொண்டார் கருணாநிதி!
அப்போதிருந்த திமுக கட்சி அமைப்பு மாவட்டங்களின் எண்ணிக்கையும் குறைவு! மாவட்டத்துக்கு மாவட்டம் தனது "முரட்டு பக்தர்களையே" மாவட்டச் செயலாளராகக் கொண்டுவந்து தனது கைப்பிடியில் வைத்திருந்தார் கருணாநிதி!
திருச்சி - அன்பில் தர்மலிங்கம்; தஞ்சை - மன்னை நாராயணசாமி; மதுரை- மதுரை முத்து (அன்றைய மதுரை மாவட்டம் என்பது இன்றைய மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கியது), சேலம்;- வீரபாண்டி ஆறுமுகம், திருநெல்வேலி - தூத்துக்குடி பெரியசாமி... என்று மாவட்டச் செயலாளர்/ முக்கியப் பொறுப்பாளர் என்ற நிலையில் வைத்தார்!
மேலுக்கு - "அண்ணா! அண்ணா!"- என்று உருகினாலும் தங்கக் கூண்டில் வைக்கப்பட்ட கிளியாகத்தான் அண்ணாதுரையே இருந்தார்!
கருணாநிதி கண்ணசைவு இல்லாமல் அந்த மாவட்டச் செயலாளர்கள் அண்ணாவையே தங்கள் பகுதிக்கு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய மாட்டார்கள்! மேலோட்டமாகப் பார்ப்பவருக்கு இந்த நுட்பமான வலைப்பின்னல் தெரியாது.
தாங்கள் குறிப்பிடும் 1972 காலம் - கருணாநிதி 1971 ல் பிரமாண்ட மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்த காலம்! டெல்லியில் இவருக்கு நெருக்கமான இந்திரா காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த காலம்!
இப்போது கருணாநிதியின் டில்லி Connections பற்றி கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அண்ணாதுரை 1967 ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது தென்சென்னை MP ஆகத்தான் ஜெயித்து இருந்தார். (அப்போது சட்டமன்றம் & நாடாளுமன்றம் 2 க்கும் ஒரே நேரத்தில் தேர்தல்)
பிறகு முதல்வராகப் பதவி ஏற்றதும் தனது தென்சென்னை MP பதவியை ராஜினாமா செய்தார்!
அந்த இடைத்தேர்தலில் முரசொலி மாறனைப் போட்டியிட வைத்து வெற்றிகரமாக MP ஆக்கினார் கருணாநிதி!
எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டதும் நாஞ்சில் மனோகரன் வெளியேறினார்.
ஒரு லைன் க்ளியர்!
பிறகு இரா.செழியன், ஜி.விஸ்வநாதன் என்று திமுகவுக்கு நல்ல பெயர் வாங்கித் தந்த "பார்லிமெண்டேரியன்" களை ஒவ்வொருவராகக் கட்சியை விட்டு வெளியேறும் சூழலை உண்டுபண்ணி - டெல்லியில் திமுகவின் முகமாக "முரசொலி" மாறனைக் கொண்டுவர கருணாநிதி காய் நகர்த்திய காலம் 1972 முதல் தொடங்கியது!
•••••••••••••••
இருமொழிக் கொள்கை என்பதனை கடந்த சில வாரங்களாக கோமாளிக்கூட்டம் கூறிக் கூத்தாடிக் கொண்டு இருக்கின்றது. இது போன்ற சமயங்களில் நான் இருக்கும் ஊரில் என் முன்னால் நடந்து கொண்டிருக்கும் சமூக மாறுதல்களை ஒரு கணம் யோசித்துப் பார்ப்பேன். அதன் பொருட்டே இன்று தினமலரில் விளம்பரம்.
அதாவது கால் பக்கம் அளவில் ஒரு பக்கமாக முழுமையாக ஹிந்தி மொழியில் மட்டும் வட இந்தியப் பத்திரிக்கைகள் போலத் தமிழ் மொழி பத்திரிக்கையான தினமலரில் விளம்பரம் கொடுத்து இருக்கின்றார்கள்.
கொடுத்தவர்கள் வட இந்தியாவிலிருந்து வந்து இங்கே துணைத் தொழில்கள், நேரிடையான தொழில்கள் நடத்திக் கொண்டு இருக்கும் சிறு குறு தொழில் அதிபர்கள். அவர்கள் இந்தி மொழியில் வாசிக்கத் தெரிந்தவர்களின் பார்வைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்துள்ளார்கள்.
அவர்கள் தமிழர்களை வேலைக்கு எடுக்க விரும்புவதில்லை. அது போலத் தமிழ் மொழி பேசும் மண்ணின் மைந்தர்களும் இந்தி வாலாக்கள் என்றால் விருப்பமாகவும், நம்மவர்கள் என்றால் கொஞ்சம் யோசித்துச் செயல்பட வேண்டிய நிலையில் தான் இருக்கின்றார்கள்.
காரணம் நம்மவர்கள் செய்யக்கூடிய காரியங்கள் அப்படியுள்ளது. முழுமையாக அனைவரையும் குற்றம் சொல்ல முடியாத போதும் கூட இது நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகின்றது என்பது தான் உண்மை.
இதன் காரணமாக நம்மவர்கள் நடத்தும் நிறுவனங்களில் உனக்கு இந்தி மொழி பேசத் தெரிந்தால் வேலை என்பதனை முழுத் தகுதியாக வைத்து இப்போது வேலைக்கு எடுக்கின்றார்கள். அப்போது தான் இந்தி வேலையாட்களை வைத்து வேலை வாங்க முடியும்.
நமக்கு பார்த்தவுடன் அதிர்ச்சி ஆச்சரியம் வியப்பு எது வேண்டுமானாலும் உருவாகலாம். ஆனால் எதார்த்த சமூக மாற்றங்களை உணர மறுத்தால் நாம் தான் முட்டாள் என்று அர்த்தம்.
காரணம் ஆட்சியில் இருக்கும் கோமாளியும் சரி, சுற்றியுள்ள சொறி நாய்களும் சரி இன்று வரையிலும் இந்த மொழியை வைத்து நமக்கு தொடர்ந்து விளையாட்டு காட்டிக் கொண்டே இருக்கின்றார்கள். குலைக்கும் ஒவ்வொரு நாயும் நாலைந்து பள்ளிகள் வைத்து கல்லா கட்டிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.
ஒரு மொழி அழியும் போது, அழிக்கப்படும் போது அங்கு நிலவும் கலாச்சாரம், பண்பாடு முற்றிலும் புறக்கணிக்கப்படும் என்பது பொதுவான உண்மை. ஆனால் இவர்கள் ஹிந்தியை எதிர்த்தார்கள். உள்ளே நுழைய விடாமல் தடுத்தார்கள்.
ஆனால் தமிழ் மொழி வளர என்ன செய்தார்கள்?
ஒன்றுமே செய்யவில்லை.
இதன் விளைவு இன்றைய 12 ஆம் மாணவர்கள் (தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள்) 85 சதவிகித மாணவ மாணவியர்களுக்குத் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளும் சரி வரப் பேச எழுதத் தெரியாது. வராது.
அதிலும் தனியார்ப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவியர்கள் படித்த ஹிந்தி மொழியும் பேச எழுதத் தெரியாது.
மீதம் உள்ள 15 சதவிகிதம் விதிவிலக்கு.
இன்று புழங்கும் தமிழ் மொழி என்பது உச்ச கட்ட கேவலமான மொழி. காரணம் இவர்களின் பணத்தாசையின் விளையாக செயற்கையாக உருவாக்கப்பட்டது. இப்படித்தான் மாணவர்கள் இங்கே இருக்க வேண்டும் என்று இவர்களே விரும்புகின்றார்கள். பீகார் போலவே கேள்வி கேட்க கூடாது. அறிவு முழுமையாக தேவையில்லை. பகுத்தறிவு வேண்டாம். ஆனால் இவற்றை மேடைப் பேச்சியில், அறிக்கையில் கடைசி வரைக்கும் குறிப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இது தான் இவர்களின் நோக்கம்.
இதை நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி.
இப்போது 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு நடந்து வருகின்றது. வீட்டிலிருந்து எழுத வேண்டும். பள்ளி திறந்தவுடன் கொண்டு போய் கொடுக்க வேண்டும். மகள்களின் வாட்ஸ்அப் உரையாடல்கள், ஆசிரியர்களுடன் பேசிய வகையில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் கலந்து கொண்டது என்று எல்லா வகையிலும் கடந்த சில வாரங்களாக கவனித்தது என்னவெனில் பத்து முதல் 12 வரைக்கும் பயிலும் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களின் முழுமையாக தமிழ் எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள் பத்து சதவிகிதம் கூட இருக்க மாட்டார்கள்.
தள்ளித் தள்ளி கடைசியில் இங்கே கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர்.
பாடப் புத்தகத்தில் எந்த இடத்தில் உள்ளது என்பதனையும் ஸ்கெட்ச் வைத்துக் குறித்து அனுப்பிய பின்பு கஷ்டப்பட்டு இவ்வளவு எழுதனுமா? என்று ஒரு கேங் மாணவிகள் குரூப் கேட்கின்றது?
இது தான் நம் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி. இப்படித்தான் இவர்கள் வெற்றிகரமாக உருவாக்கி வைத்து உள்ளனர். அரசு பள்ளிக்கூடம் என்றாலே ஒதுக்கி வைத்தவர்கள் வாழுமிடமாக மாற்றி வைத்து விட்டனர்.
தமிழர்கள் உடல் உழைப்புக்கு மேம்பட்ட வேலைக்குச் செல்ல விரும்புகின்றார்கள். வட இந்தியர்கள் உடல் உழைப்பு சார்ந்த வேலைக்கு எளிதாக உள்ளே வந்து விடுகின்றார்கள் என்று நாம் நம்பிக் கொண்டு இருக்கின்றோம்.
வட இந்தியத் தொழிலாளர்களை வைத்துத்தான் பெரும்பாலான நிறுவனங்கள் வேலை வாங்க விரும்புகின்றார்கள்.
காரணம் கடந்த 25 ஆண்டுகால தமிழக அரசியல் சூழல் சமூகத்தைப் பெரிய அளவில் பாதித்து உள்ளது. மாற வேண்டும் என்று நினைக்கும் சாதாரணக் குடிமகன் கூட நாம் மாறத் தேவையில்லை என்பதாகவே அவன் விரும்பிய வண்ணம் வாழ விரும்புகின்றான். அப்படித்தான் வாழ்கின்றான்.
இது சார்ந்த காரணத்தை இங்கே எழுத விரும்பவில்லை.
1 comment:
எண் என்ப ஏனைய எழுத்து என்ப...
எண் அனைத்தையும் தீர்க்கும்...
Post a Comment