திமுக என்ற கட்சிக்கு அரசியல் செய்வதற்கு ஆயுதம் என்பது பொருட்டல்ல. ஒரு சமயம் மொழி முன்னிறுத்தப்படும். மற்றொரு சமயம் அதுவே சமூகநீதியாக மாறும். நிதி என்பது சரி பார்க்கப்படும் போது சுதி மாறும். இது கருணாநிதி காலத்து அரசியல்.
ஆனால் அவர் மகன் காலத்தில் இதையே இவர்கள் நம்புவது ஆச்சரியமாக உள்ளது. இப்போது பேரன் வேறு வரிசையில் வந்து நிற்கின்றார். தமிழகம் நம் கைக்கு வந்து விடும் என்று உறுதியாகவே நம்புகின்றார். வயதான அமைச்சர்கள் முதல் வயது குறைந்த தோழர்கள் வரைக்கும் அடுத்த முதல்வர் நீங்கள் தான் என்று சொல்லியே இப்போது ஒத்திகை இல்லாத நாடகம் போலவே நடந்து வருகின்றது.
திமுக என்ற கட்சி பதவிக்கு வந்து 250 நாட்களுக்கு மேலாகி விட்டது. என்ன தமிழகத்தில் மாற்றம் நடந்துள்ளது?
கிறிஸ்துவ மத நிறுவனங்களில் வாழும் பங்குத் தந்தையர்களின் எல்லையில்லா அதிகாரம் விரிவு படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் அதிகாரம் தமிழக அரசின் அதிகாரவர்க்கத்திற்குள் படிப்படியாக ஊடுருவி கொண்டிருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் பயமில்லாமல் மதமாற்றம் விரைவு படுத்தப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் இந்த விசயத்தில் ஒரே அணியில் உள்ளது என்பதனை நீங்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்து மண்டையை உடைத்துக் கொள்ளத் தேவையில்லை.
முக்கியமான கிறிஸ்துவப் பிரிவுகள் (பிராட்டஸ்டண்ட், கத்தோலிக், சிஎஸ்ஐ, பெந்தகோஸ்தே) எத்தனை சதவிகிதம் உயர்ந்துள்ளது என்பது இன்று வரையிலும் புரியாத புதிராகவே உள்ளது.
கை வைக்கவே பயப்படும் வெடிகுண்டு போலவே ஒவ்வொரு அரசியல்வாதிகளும் இதைக் கையாள்கின்றார்கள். எப்போது தேர்தல் வருகின்றதோ அதற்குத் தகுந்தாற் போல அந்தந்த பகுதியில் உள்ள பங்குத் தந்தைகளிடம் ஆசீர்வாதம் வாங்குவது முதல் காசு கொடுத்து ஓட்டுக்களை விலை பேசுவது வரைக்கும் வெளிப்படையாகவே நடந்து வருவதால் தமிழகத்தில் பல இடங்களில் கிறிஸ்துவம் என்பது பெரும்பான்மை யினராகவே உள்ளனர்.
இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் உண்டான முக்கியமான வித்தியாசம் என்னவெனில் கிறிஸ்துவம் அதிகாரம் இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் இண்டு இடுக்கு விடாமல் அத்தனை இடங்களில் பரவி இருப்பதோடு மக்களுக்குச் செய்திகளைக் கொண்டு செல்லும் ஊடகத்தையே தங்கள் கைக்குள் வைத்திருப்பதும் இங்கே மிகப் பெரிய சவால் என்பதாகவே பார்க்கப்படுகின்றது.
கடந்த 30 வருடத்தில் கிறிஸ்துவம் இரண்டு தலைமுறைகளை உருவாக்கி வைத்துள்ளது. இவர்கள் உருவாக்கும் ஒவ்வொன்றும் அடுத்த ஒரு முழுத் தலைமுறையையும் பாதிக்கும் தன்மை கொண்டது.
மாற்ற முடியாது. மறுக்க முடியாது.
ஆனால் இவற்றை விட இங்கே இப்போது முக்கியமான பிரச்சனை என்னவெனில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், சாதாரண பொதுமக்கள் வரைக்கும் இவர்கள் இந்து பெயரில் வாழும் பெந்தேகொஸ்தே வா? அல்லது இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் சபைக்கு கட்டுப்பட்டவர்களா?
சபை வழங்கும் பணத்தைத் தங்கள் தொழிலில் முதலீடு செய்து நன்றியுடன் இருப்பவர்களா?
வெளியே அரிதாரம் பூசி உள்ளே அழுக்கோடு வாழும் சபையின் மைந்தர்களா?
எவரையும் உங்களால் இன்றைய சூழலில் கண்டு பிடிக்க முடியாது.
கணிக்கவே முடியாது.
இவ்வளவு பெரிய வலைபின்னல் கொண்ட கிறிஸ்துவ மாபியா கூட்டத்தை எதிர்த்துத் தான் அண்ணாமலை அவர்கள் களம் இறங்கியுள்ளார்.
இன்று டெல்லி முதல் கன்யாகுமரி வரைக்கும் ஒற்றை மனிதன் எழுப்பி குரல் மாபியா கும்பலைக் கலங்க வைத்துள்ளது.
பாம்புக்குப் பயந்து கொண்டு தூரத்திலிருந்து கொண்டு பலவிதமான கதைகள் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
முதல் முறையாக அண்ணாமலை புற்றுக்குள் கைவிட்டு பாம்பின் தலையைக் கெட்டியாக பிடித்துத் தூக்கிக் காட்டியுள்ளார்.
பாம்பு கதறுவதை விட அதனை வளர்த்தவர்களின் கண்ணீர் தான் பார்க்க கொடுமையாக உள்ளது.
அடுத்த சில வாரங்களில் கோமாளியின் கூடாரத்தில் உள்ள குட்டி பாம்புகள் எத்தனை? வெளியே வரப் போகின்றது என்பதனை நாம் பார்க்கப் போகின்றோம்.
ஒரு வேளை சிபிஐ கைக்கு இந்த வழக்கு சென்றால் அய்யாதுரையின் ஆட்டம் அடித்தளம் வரைக்கும் அதிரக்கூடிய வகையில் இருக்கும்.
அண்ணாமலை அவர்களின் செயல்பாடுகள் எப்படியிருக்கும் என்பதனை இவர்கள் இனி மேல் தான் பார்க்கப் போகின்றார்கள் என்பதனை உணரும் நாள் மிக அருகில்.
காத்திருப்போம்.
2 comments:
விரைவில் பிரியாணி ஈயப்படும்...!
முயற்சி வெற்றியடையட்டும்.
Post a Comment