Thursday, January 27, 2022

73ஆவது குடியரசு தின அணிவகுப்பில்

புது தில்லியில் 73ஆவது குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற / (பெறாமல் போன) மாநில மற்றும் அமைச்சக ஊர்திகள் குறித்து பரபரப்பான, எதிர்மறை எண்ணங்கள் மட்டுமே நம்முன் வைக்கப்பட்டுள்ளன. 

இன்றைய கண்காட்சியில் இடம் பெற்ற ஊர்திகள் மூலம் சில புதிய வரலாற்றுத் தகவல்களை அறியப் பெற்றேன். 




1. விமான போக்குவரத்து துறை : சிறு நகரங்களுக்கு சேவையை விரிவு செய்யும் #UDAN திட்டம், பௌத்த வரலாற்று நகரங்களை சர்வதேச சுற்றுலாவுக்காக இணைப்பது பற்றி விவரிக்கிறது.

2. கல்வி அமைச்சக ஊர்தியில் முன் புறம் இடம் பெற்ற சாமியார்கள் மட்டும் வெட்டி பரப்பப்படுகிறது. வேதகால குருகுலக் கல்வி முதல் மெட்டா வெர்ஸ் #Metaverse வரை நமது மாற்றங்களை அது பிரதிபலிக்கிறது. 

இணையம், கற்றல், கற்பித்தல், பயிற்சி முறைகள், அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள் படம் அதில் இடம் பெற்றுள்ளது.

3. மகாராஷ்டிரா - எதிர்க்கட்சிகள் கூட்டணியுடன் ஆளும் மாநிலம்.

அங்குள்ள பல்லுயிர் பெருக்கம், மாநில உயிரனங்கள் ( நீல வண்ணத்துப்பூச்சி, அரிய வகை புலி) காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

4. குஜராத் -  நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் படையினரால் கொல்லப்பட்ட பழங்குடி இன மக்களின் சோகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட இங்கு இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது வருத்தம் தரும் செய்தி.

5. ஹரியானா - விளையாட்டுத் துறையில் அம்மாநில சாதனை. ஒலிம்பிக் பதக்க வேட்டையிலும் சரி, பாராலிம்பிக் போட்டிகளிலும் சரி அம்மாநிலம் முதன்மையான பங்களிப்பை பறைசாற்றுகிறது. 

6. அருணாச்சல பிரதேசம் - 1800களின் பின் பகுதியில் தொடங்கி 1912 வரை நடைபெற்ற பிரிட்டிஷ் மற்றும் மலைவாழ் பூர்வகுடியினர் யுத்தம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Anglo Abor (Adi) War - ஆங்லோ- அபோர் ஆதிவாசிகள் போர் என்று கூகுள் செய்தால் எத்தனை முறை மலைவாழ் இனத்தவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்தை அசாம் தேயிலை தோட்டங்களில் இருந்து விரட்டி அடித்துள்ளனர் என்று அறியலாம்.

7. தகவல் தொடர்பு அமைச்சகம் - அஞ்சல் துறையின் கடைசி கிராமம் வரையிலான அதன் சேவையை வெளிக்கொணர்ந்துள்ளது.

8. பொதுப் பணித்துறை - இந்திய சுதந்திரப் போராட்டத்தில் INA, திரு. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் மகத்தான சேவையை உருவகப்படுத்தியுள்ளது. இங்கு மேற்கு வங்க மாநில அரசியல் + ஊடகங்கள்  நேதாஜி ஓரம் கட்டப்பட்டார் என்று சொல்கின்றன. கொடுமை.

9. கடற்படை - இந்திய நீர்மூழ்கிக் கப்பல்கள் 48 மணி நேரத்திற்கு ஒரு முறை கடலுக்கு அடியில் இருந்து வெளிவர வேண்டிய தேவையே உள்நாட்டு ஆராய்ச்சி மூலம் பதினைந்து நாள்கள் வரை தாங்கும் பேட்டரி சார்ஜிங் ஆய்வு வெற்றியை பறைசாற்றுகிறது.

Air Independent Propulsion - Indian Submarines -  Naval Materials Research Laboratory செய்தியை தேடிப் படிக்கலாம்.

10. DRDO - உலகின் மிகச்சிறந்த இலகுரக விமானமங்களில் ஒன்றான தேஜாஸில் பயன்படுத்த நாமே உருவாக்கிய சென்சார்கள், ஆயுதங்கள், மின்னணு தளவாடங்கள் குறித்து சொல்கிறது.

11. சத்தீஸ்கர் - மாடுகளின் சாணத்தை அரசே கிலோ ரூ.2 க்கு வாங்கி அதனை உரமாக மாற்றி மறுசுழற்சிக்கு உதவி செய்யும் வெற்றிகரமான #Gauthan திட்டம் பற்றி கவனம் ஈர்க்கிறது.

12. கர்நாடகா - மண் பொம்மைகள் முதல் சுடு சிற்பங்கள் வரை அதன் பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் திறனைப் போற்றும் வகையில் அதன் சிறப்புகள் நிறைந்து ஊர்தி உருவாக்கப்பட்டுள்ளது. நம்மவர்கள் அங்கும் ஆஞ்சநேயரை விட பெரிய உருவமான வயதான தாயாரை மறந்து விட்டு உருட்டுவார்கள்.

13. பஞ்சாப் - எதிர்கட்சி மாநிலம். திரு. பகத் சிங், திரு. சுகதேவ், திரு. ராஜகுரு ஆகியோர் வெள்ளயரை எதிர்த்து போராடிய காட்சியும், திரு. லாலா லஜபதி ராய் சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தையும், ஜாலியன் வாலாபாக் படுகொலையையும் காட்சிப்படுத்துகிறது. 

14. கோவா - போர்த்துகீசியர்களை எதிர்த்தவர்களை சிறை வைத்த அகுவாடா #aguadafort  கோட்டையையும், அம்மாநில பூர்வகுடியினரான கும்பி இனத்தவரையும் வடிவமைத்து உள்ளது.

15. மேகாலயா - மூங்கில் வளர்ப்பு, பாரம்பரிய மஞ்சள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் வாழ்வாதாரம் உயர்ந்து வருவதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அது கோவில் உலா கிடையாதா...?

அப்புறம் :-

ஒரே தீர்வு :- ஓரே சாவு...